என் மலர்
நீங்கள் தேடியது "L Murugan"
- கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் 11 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மீது தமிழக மக்கள் எந்த அளவு பாசம், அன்பு வைத்துள்ளார்கள் என்பதை 2 நாள் நிகழ்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.
திருச்செந்தூர்:
மத்திய மந்திரி எல்.முருகன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி நேற்று தூத்துக்குடியில் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரூ.17 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் சென்றுள்ளார். குலசேகரன்பட்டினத்தில் மட்டும் 986 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறு ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து அங்கிருந்து ரோகிணி என்ற சிறிய வகை ராக்கெட் ஏவப்பட்டுள்ளது. இந்தியா இன்று விண்வெளி துறையில் மிகப்பெரிய சரித்திரம் படைத்து கொண்டிருக்கிறது. விண்வெளியில் உலகில் எந்த நாடும் செல்ல முடியாத பகுதிக்கு இந்தியாவின் சந்திராயன்-3 சென்று சாதனை படைத்துள்ளது.
இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சந்திராயன்-3 விண்கலம் ரூ.560 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. சுமார் 1,000 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ள குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மூலம் தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.

இதே போல் வ.உ.சி. துறைமுக விரிவாக்க பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் 11 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையம், துறைமுகம், ரெயில் நிலைய மேம்பாடு, ரெயில் மின்மயமாக்க பணிகள், 9 புதிய ரெயில் பாதைகள், அம்ரித்-2 திட்டத்தின் கீழ் 34 ரெயில் நிலையங்கள் மேம்பாடு என பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
வருகிற 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும். அதற்காக உட்கட்டமைப்பு மேம்பாடு வளர்ச்சி திட்டங்கள் செய்யப்பட வேண்டும். இந்தியாவில் 80 கோடி பேருக்கு மாதம் 5 கிலோ அரிசி மற்றும் பருப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் தமிழகம் வருகை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மீது தமிழக மக்கள் எந்த அளவு பாசம், அன்பு வைத்துள்ளார்கள் என்பதை 2 நாள் நிகழ்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.
என் மண் என் மக்கள் யாத்திரை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். வெற்றிவேல் யாத்திரை மூலம் 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றோம். இந்த யாத்திரை மூலம் புதுச்சேரி உள்ளிட்ட 40 எம்.பி. தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
மீன்வளத்தை பெருக்கவும் மாற்று தொழில் செய்யவும், மீனவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். இதுவரை 65 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மீனவர்களுக்காக 38 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ஒதுக்கியது பா.ஜனதா அரசு.
இதுக்கு முந்தைய அரசு வெறும் ரூ.4 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. பா.ஜ.க. தான் 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மீனவர்களுக்காக மட்டுமே ரூ.1,800 கோடி கொடுத்துள்ளது.
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் இந்தியர் ஒவ்வொருவருக்கும் கவுரவமாக கருதப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்ததாக அதிகாரிகள் பதில் அளித்தது மேலும் வருத்தமளிக்கிறது.
- மத்திய மந்திரியையும் இப்படிக் கேவலப்படுத்தினால், நம் மாநிலத்தில் உள்ள சாமானியர்களின் நிலை என்ன?
சென்னை:
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியதால் அங்குள்ள முருகன் கோவிலுக்கு இந்து அமைப்பினர் செல்வதற்கு போலீசார் தடை விதித்திருந்தனர்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்ற மத்திய மந்திரி எல்.முருகனை போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது எல்.முருகன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன் பிறகு அவரை கோவிலுக்குள் செல்வதற்கு போலீசார் அனுமதித்தார்கள். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 17-ந்தேதி அன்று மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருகை தந்த மத்திய மந்திரி எல்.முருகனின் பாதுகாப்பை தமிழக போலீசார் தவறாகக் கையாண்டு வழிபாட்டுத் தலத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதை தமிழக பா.ஜ.க. சார்பில் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
மத்திய மந்திரி எல்.முருகன் சுப்பிரமணிய சுவாமி கோவில், காசி விஸ்வநாதர் மலைக்கோவில் ஆகிய இரு தலங்களுக்கும் வருகை தரும் பயணத் திட்டத்திற்கு தமிழக போலீசாரிடம் முன் அனுமதி பெற்றிருந்தும், கோவிலின் நுழைவு வாயிலில் போலீசார் குவிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
மேலே குறிப்பிட்டுள்ள கோவில்களுக்கு உடனடியாக செல்ல தடை விதிக்கப்பட்டது குறித்து மத்திய மந்திரி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, அவரை கோவிலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்ததாக அதிகாரிகள் பதில் அளித்தது மேலும் வருத்தமளிக்கிறது.
இதில் சர்ச்சைக்குரிய விஷயம் என்னவென்றால், ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள ஒரு கட்டத்தில் அவர் விரும்பிய இடத்தில் வழிபடும் உரிமையைப் பறிக்கும் வகையில் போலீசாருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை அப்பட்டமாகப் பயன்படுத்தியதே ஆகும்.
தமிழகத்தில் சமீபகாலமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் நடக்கும் குற்றச்செயல்களால் ஏற்கனவே பீதியில் இருக்கும் பொதுமக்களிடையே இது கடுமையான சந்தேகத்தை எழுப்புகிறது.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும், மத்திய மந்திரியையும் இப்படிக் கேவலப்படுத்தினால், நம் மாநிலத்தில் உள்ள சாமானியர்களின் நிலை என்ன?
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
மத்திய மந்திரி எல்.முருகனுக்கு இன்று பிறந்தநாள் ஆகும்.
இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பா.ஜனதா கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பல்வேறு இடங்களில் அவரது பிறந்த நாளையொட்டி கட்சியினர் நலத்திட்ட உதவிகள் மற்றும் கேக் வெட்டி இனிப்பு வழங்கினார்கள்.
பிரதமர் மோடி, மத்திய மந்திரி எல்.முருகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தேசத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் தங்களின் அர்ப்பணிப்பு இளைஞர்களை ஊக்குவிக்கிறது. நீங்கள் நல்ல உடல் நலத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்” என தெரிவித்து உள்ளார்.
- அகிம்சையின் மறு உருவமாக அன்பு, மனித நேய சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்த தேசத் தந்தை காந்தியின் ஜெயந்தியில் அவரை வணங்கி அஞ்சலி செலுத்துவோம்.
சென்னை:
காந்தி ஜெயந்தியையொட்டி மத்திய மந்திரி எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற நாமக்கல் கவிஞர் வரிகள் உரைக்கும் அகிம்சையின் மறு உருவமாக அன்பு, மனித நேய சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்த தேசத் தந்தை காந்தியின் ஜெயந்தியில் அவரை வணங்கி அஞ்சலி செலுத்துவோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் என்.ஐ.ஏ.வை தவறுதலாக பயன்படுத்தியதாக சொல்லி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க. தேச பாதுகாப்பில் விளையாட கூடாது.
- தேசத்தினுடைய பாதுகாப்பு, நாட்டினுடைய பாதுகாப்பு குறித்து நாட்டின் ஏஜென்சிகளின் அளித்த ஆதாரங்களை கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுத்து கைது செய்திருக்கிறார்கள்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இரண்டு நாளாக தமிழகம் முழுவதும் குறிப்பாக கோவை, திண்டுக்கல், மேட்டுப்பாளையம், திருச்சி, பொள்ளாச்சி, தாம்பரம், ஈரோடு போன்ற பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் இந்து இயக்கத்திற்காக வேலை செய்கின்ற நிர்வாகிகள், அவர்களுடைய வீடுகள், வாகனங்கள், தொழில் செய்யும் பகுதிகளை குறி வைத்து கடுமையான தாக்குதல்களை ஒரு கும்பல் நடத்திக்கொண்டு இருக்கிறது. இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசாங்கம் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த செயல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கேட்டுக்கொள்வதுடன், இரண்டு நாட்களுக்கு முன்னால் நாடு முழுவதுமே என்.ஐ.ஏ. சோதனையானது நடைபெற்றது. அந்த சோதனையில் தேசத்துக்கு எதிராக, இந்த நாட்டினுடைய பாதுகாப்புக்கு எதிராக, இந்த நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிற, பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால் தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் என்.ஐ.ஏ.வை தவறுதலாக பயன்படுத்தியதாக சொல்லி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க. தேச பாதுகாப்பில் விளையாட கூடாது. தேசத்தினுடைய பாதுகாப்பு, நாட்டினுடைய பாதுகாப்பு குறித்து நாட்டின் ஏஜென்சிகளின் அளித்த ஆதாரங்களை கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுத்து கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் பலவிதமான ஆதாரங்களை கைப்பற்றி உள்ளனர்.
இப்படி இருக்கும் பட்சத்தில் தி.மு.க. ஒரு தவறான ஓட்டு வங்கி அரசியலை செய்யக்கூடாது. தேச பாதுகாப்பு முக்கியம். பா.ஜ.க. மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்த சகோதரர்கள் மீது நடக்கின்ற தாக்குதல் மீது தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கே: பா.ஜ.க.வினர் மீதான தாக்குதலில் யாரையேனும் சந்தேகப்படுகிறீர்களா?
ப: நன்றாகவே தெரியும், யாராக இருக்க கூடும் என்று. இது தமிழக காவல் துறையின் பொறுப்பு. தீவிரமாக விசாரித்து யார், யார் இதில் தொடர்பு உள்ளது என்று அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 95 சதவீதம் முடித்துள்ளாக ஜே.பி.நட்டா சொல்லியுள்ளாரே?
ப: நேற்று தெளிவாக சொல்லி உள்ளார். 95 சதவீதமான ஆரம்ப கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளது என்று தான் கூறினார். அதாவது அப்ரூவல், லோன் ஏஜென்சி, கையெழுத்திடுவது, கூடுதல் நிதி கொடுக்கும் நிறுவன வேலைகள் இது போன்ற ஆரம்ப கட்ட பணிகள் 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன என்று தெளிவாக சொல்லி உள்ளார். இதில் தேவையில்லாமல் சிலர் அரசியல் செய்யக்கூடாது.
புரிந்து கொள்ளாமல் வெற்று விளம்பரத்திற்காக அங்கு சென்று போட்டோ போடுவதை தவிர்க்க வேண்டும். தமிழக மானத்தை தயவு செய்து காப்பாற்றுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கே: ஆ.ராசாவின் கருத்துக்களுக்கு பா.ஜ.க. என்ன சொல்கிறது, இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லையே?
ப: வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆ.ராசா போன்ற மூன்றாம் கட்ட பேச்சாளர்கள் தி.மு.க.வில் வெற்று விளம்பரத்துக்காக பேசுவது என்று நினைத்துக் கொண்டு, இந்து மக்களை கீழ்த்தரமாக அவமதித்திருப்பதை மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். அதற்காக நீலகிரியில் மிகப்பெரிய அளவில் கடையடைப்பு நடைபெற்றுள்ளது. மக்கள் அவர்களுக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுப்பார்கள்.
தேர்தலின் போது நாம் வெற்றிவேல் யாத்திரை நடத்தினோம். அப்போது தி.மு.க. வேலை (வேல்) பிடித்தார். நம்முடைய இப்போதைய முதலமைச்சர் அன்று பயந்து கொண்டு வேலை பிடித்தார். ஓட்டுக்காக இந்து மக்களை ஏமாற்றும் செயலை தி.மு.க. நிறுத்திவிட்டு, இந்துக்களின் மனதை புண்படுத்தும் செயலையும் நிறுத்திவிட்டு, ஆக்கப்பூர்வமான வளர்ச்சி என்ன. இந்த நாடு எப்படி வளர்ச்சி அடைய வேண்டும். தமிழகம் எப்படி வளர்ச்சி அடைய வேண்டும்.
இந்து மக்களை புண்படுத்தும் செயல்களை தி.மு.க. நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களது மனதை புண்படுத்தினால் நிச்சயமாக தக்க பாடம் புகட்டுவார்கள்.
கே: ராகுல் காந்தியின் நடைபயணம் பற்றி உங்களது கருத்து?
ப: ஆரம்பத்திலேயே தோல்வியுற்றுள்ளது. அவர் கேரளாவினுள் சென்றபோது கோவாவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் வெளியே சென்றுவிட்டனர். காஷ்மீர் செல்வதற்குள் காங்கிரஸ் கட்சியே காணாமல் போய் விடும்.
கே: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை தடை செய்வதாக செய்திகள் வருகிறதே?
ப: இதற்கு நான் பதில் கூற முடியாது. உள்துறை அமைச்சகம் இதற்கான நடவடிக்கையை எடுக்கும்.
கே: ஆல் இந்தியா ரேடியோவின் செய்திப்பிரிவு திருச்சியில் உள்ளது. விவசாயிகள், மீனவர்கள் இதை வைத்துதான் பயன் பெறுகிறார்கள். இதனை சென்னைக்கு மாற்றுவதாக தகவல் வெளியாகிறதே?
ப: திருச்சி வானொலி எந்த நேரத்திலும் மாற்றப்படாது. வதந்திகளை நம்ப வேண்டாம்
கே: ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த, கோவை மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே?
ப: வன்கொடுமை தடுப்பு சட்டம் எந்த இடத்தில் முறையாக பயன்படுத்தப்பட வேண்டுமோ அங்கு தான் பயன்படுத்த வேண்டும். நான் எஸ்சி கமிஷன் துணை தலைவராக தமிழகத்தில் பணியாற்றியுள்ளேன். யார் மீது எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டுமோ அவ்வாறு பயன்படுத்துவது இல்லை. தி.மு.க. தலைவர் இந்து மக்களை கொச்சையாக பேசுவார். அவர் பேசியது தவறு என்று பேசியவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தமிழக அரசாங்கம் எந்த அளவு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளையும் பொதுமக்களையும் மற்றும் கேள்வி கேட்பவர்களையும் எப்படி சட்டங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கே: பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விரைவில் தி.மு.க.வில் இணைவார் என்ற செய்தி வெளியாகி வருகிறதே?
ப: யூகங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது.
கே: பா.ஜ.க.வின் பட்டியல் அமைப்பாக இருக்கட்டும், நீங்களாக இருக்கட்டும், ஆ.ராசாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவில்லை என்று அதிருப்தி உள்ளதே?
ப: ஆ.ராசாவுக்கு பதிலடி பட்டியல் அணி தான் கொடுக்க வேண்டும் என்பது கிடையாது. இது மக்களின் பிரச்சனை. இந்து மக்களின் பிரச்சனை. ஒட்டுமொத்த கட்சியினரும் இதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறோம். அனைத்து மக்களும் சேர்ந்து இதற்கு பதில் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருமுருகன்பூண்டி தனியார் ஓட்டலில் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்தார்.
- எல்.முருகன், மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்து கூறியதுடன், அதனை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.
அனுப்பர்பாளையம்:
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று திருப்பூர் மாநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கோவையில் இருந்து திருப்பூர் வந்த அவருக்கு அவிநாசியில் பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து திருமுருகன்பூண்டி தனியார் ஓட்டலில் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்தார். அப்போது எல்.முருகன், மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்து கூறியதுடன், அதனை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
பின்னர் திருப்பூரில் நடைபெற்று வரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து பாளையக்காடு நல்லூர் மண்டலத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி அன்னதானம் மற்றும் மகளிருக்கு சேலை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவிநாசி ரோடு ஆர்.கே.ஓட்டலில் தொழில்துறையினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் பங்கேற்ற ஆடை உற்பத்தியாளர்கள், நூல், பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை மேற்கொண்டார். கூட்டம் முடிந்ததும் முருகம்பாளையம் சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து கோவை புறப்பட்டு சென்றார்.
- பாவூர்சத்திரம் அருகே இணை மந்திரி கார் சென்ற போது கட்சித்தொண்டர்களை கண்டதும் மெதுவாக சென்றது.
- பின்னால் சென்ற கட்சி நிர்வாகிகள் காரும், பாதுகாப்புக்காக சென்ற போலீசாரின் காரும் ஒன்றன்பின் ஒன்றாக மோதியது.
தென்காசி:
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 307-வது பிறந்தநாளையொட்டி தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவல் உள்ள நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதற்காக மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் ஆலங்குளம் வழியாக சென்றார்.
பாவூர்சத்திரம் அருகே இணை மந்திரி கார் சென்ற போது கட்சித்தொண்டர்களை கண்டதும் மெதுவாக சென்றது.
அப்போது பின்னால் சென்ற கட்சி நிர்வாகிகள் காரும், பாதுகாப்புக்காக சென்ற போலீசாரின் காரும் ஒன்றன்பின் ஒன்றாக மோதியது.
இதில் கட்சி நிர்வாகி ஒருவரின் கார் பலத்த சேதம் அடைந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் வ.உ.சி.யின் 150-வது பிறந்த தினம் வருவது மேலும் சிறப்பு வாய்ந்தது.
- பிரதமர் விடுத்த அழைப்பின்படி, வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.
சென்னை:
சென்னை தனியார் கல்லூரியில் நடந்த ஒரு விழாவில், தென் இந்திய ஆய்வு கல்வி மையம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'ஓலம்' காணொலியை மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று வெளியிட்டார். இதனை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பெற்றுக்கொண்டார்.
விழாவில் எல்.முருகன் பேசியதாவது:-
கடந்த 8 ஆண்டுகளில் நம்நாடு அடைந்துள்ள வளர்ச்சியை அனைவரும் கண்கூடாக காண முடியும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி கப்பலை இயக்கிவர் வ.உ.சி. அவரின் தற்சார்பு கனவை இன்று பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிகொண்டு இருக்கிறார்.
75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் வ.உ.சி.யின் 150-வது பிறந்த தினம் வருவது மேலும் சிறப்பு வாய்ந்தது. பிரதமர் விடுத்த அழைப்பின்படி, வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சென்னை மாநகராட்சி மூலம் அண்ணாநகரில் சுயநிதி திருவிழா நடக்கிறது.
- தெருவோர வியாபாரிகள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ரூ.10 ஆயிரம் வழங்கும் சுயநிதி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
சென்னை:
மத்திய மந்திரி எல்.முருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
44-வது சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் முதல் காய் நகர்த்தும் நிகழ்வை நேற்று மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்.
செஸ் தோன்றிய தமிழ் மண்ணில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது தமிழர்களுக்கு பெருமை.
நேற்று அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடி மாணவர்களுக்கு பட்டம் வழங்கியது அண்ணா பல்கலைக் கழகத்தின் வரலாற்று மைல்கல் ஆகும்.
தமிழகத்துக்கு பிரதமர் மோடி கடந்த மே மாதம் 26-ந் தேதி வந்தார். அப்போது ரூ.5000 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 2 மாதத்திற்கு பிறகு மீண்டும் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வை நடத்த சென்னை வந்தார்.
75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்த தருணத்தில் குக்கிராமத்தில் பிறந்த பழங்குடியின சகோதரி ஜனாதிபதி பதவியில் அமர்ந்துள்ளார். ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 3 நாட்கள் வீடுகள் தோறும் மூவர்ண தேசிய கொடியை ஏற்றும் இயக்கம் தொடங்க இருக்கிறோம். இந்த மூவர்ண கொடியை தமிழகத்தில் வீடுகள் தோறும் ஏற்றி சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து அவர்களின் மகிமையை இன்றைய சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நாடுமுழுவதும் 24 ஆயிரம் கிராமங்களில் 4 ஜி அலைவரிசையை கொடுக்க இருக்கிறோம். தமிழகத்தில் இணையதள வசதி இல்லாத 534 கிராமங்களுக்கு 4ஜி அலைவரிசை வழங்கப்பட இருக்கிறது.
இந்த திட்டத்துக்கு ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் 4 ஜி சேவை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எனவே இனி கிராமங்கள் தோறும் இணையதள வசதி கிடைக்க உள்ளது.
சென்னை மாநகராட்சி மூலம் அண்ணாநகரில் சுயநிதி திருவிழா நடக்கிறது. தெருவோர வியாபாரிகள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ரூ.10 ஆயிரம் வழங்கும் சுயநிதி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் தமிழகத்தில் 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். தற்போது மேலும் 75 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 45 ஆயிரம் பேருக்கு இன்று மாலை தலா ரூ.10 ஆயிரம் சுயநிதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர், தமிழக முதல்வரின் முயற்சியால்தான் செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடைபெறுகிறது.
- செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடப்பது நமக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடங்கி வைத்தார்.
விழாவில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இணை மந்திரி எல் முருகன், தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய மத்திய இணை மந்திரி எல் முருகன், பிரதமர் நரேந்திரமோடி, 2 மாதங்களுக்கு முன்பு இதே சென்னையில் இருந்து பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்ததாக தெரிவித்தார்.
44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு தமிழகத்தில் நடப்பது நமக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு என்றும், பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் முயற்சியால்தான் செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தில் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி விளையாட்டையும், விளையாட்டு வீரர்களையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
நாட்டின் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் வேளையில், பழங்குடியினத்தை சேர்ந்த திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவராக்கி 75 வருடங்களில் நிகழாத சாதனையை பிரதமர் செய்துள்ளார் என்றும், ஐ. நா. சபையில் 'யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பிரதமர் பேசியதும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதி இருக்கை உள்பட பல்வேறு நிகழ்வுகளில் தமிழ் மொழியை உலக அரங்கிற்கு பிரதமர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் எல்.முருகன் குறிப்பிட்டார்.
- மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரி எல்.முருகனை அழைத்தது சர்ச்சைக்குரியதாகி உள்ளது.
- என்.ஐ.டி. கல்லூரியில் 25 சதவீதம் புதுவை மக்களுக்கு கிடைக்க உறுதி செய்துள்ளேன்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தும் பணியை கவர்னர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர், கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்று முதல் 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று இந்தியா முழுவதும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே அரசு மூலம் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டாலும், பிரதமர் அறிவிப்பு மக்களை ஊக்கப்படுத்தி ஊசி போட வரவழைக்கும்.
பிரதமர் ஊக்கத்தினால் தான் கொரோனாவை எதிர்கொண்டோம். மக்கள் பாதிக்கக்கூடாது என்று ஊக்கப்படுத்தி வருகிறார். கொரோனா பாதிப்பு அதிகமாவதால் பூஸ்டர் தடுப்பூசி நம்மை பாதுகாக்கும்.
புதுவை முழுக்க 75 பள்ளிகளை பார்க்க திட்டமிட்டு ஒவ்வொரு பள்ளியாக செல்கிறேன். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ திறமையாளர்கள் உள்ளனர். அரசு பள்ளியை மேம்படுத்த முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்துள்ளேன். பள்ளிக்கு நேரடியாக செல்வதால் பல விஷயங்கள் தெரிகின்றன.
புதிதாக அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தைத்து சீருடை தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் வினியோகம் செய்ய ஆரம்பித்துள்ளோம். மாணவர் பஸ் நிதித்துறையில் ஆலோசனை நடந்து வருகிறது.
அரசு பள்ளியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடுநிலை, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் அரசு பள்ளியை நோக்கி வர ஆரம்பித்துள்ளது இது மகிழ்ச்சியான விஷயம். அவர்களது நம்பிக்கைக்கு ஏற்ப அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, தனியார் பள்ளிகளை விட அதிகமாக நல்ல நிலைமைக்கு வர பணிகள் செய்யப்படும்.
தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது.
கவர்னர்கள் எல்லோரும் வேந்தர்களாக, அந்தந்த கல்வி நிலையங்களை மேம்படுத்த பணியாற்றுகிறார்கள். அரசும், கவர்னரும் கலந்து ஆலோசிக்க வேண்டும். வேந்தர்களாக இருப்பதற்கே கவர்னருக்கு உரிமையில்லை என்ற வழிவகை செய்யக்கூடாது.
கல்வியை மேம்படுத்ததான் கவர்னர்கள் முயற்சி செய்கிறார்கள். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரி எல்.முருகனை அழைத்தது சர்ச்சைக்குரியதாகி உள்ளது. இன்னொரு மாநில கவர்னராக இருந்தாலும், தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் கருத்து கூறுகிறேன்.
பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து உழைத்து மந்திரியான அவரை அழைத்தது மாணவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும். அதை அரசியலாக்க எடுத்துக்கொள்ளாமல், மத்திய-மாநில அரசை சார்ந்தோர் கவர்னருடன் இணைந்து பட்டமளிப்பு விழாக்களை குழந்தைகளுக்கு வழிகாட்டும் விழாக்களாக கொண்டு செல்லவேண்டும். இதில் அரசியல் ஏதும் இல்லை. அந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் உரிமை இருக்கிறது.
ரெட்டியார்பாளையம் சாலை விபத்தில் குழந்தை இறந்தது வருத்தமளிக்கிறது. மிகுந்த மனவேதனை அடைந்தேன். வாகன நெரிசல் சரிசெய்யப்படும். குழந்தைகளை அழைத்து செல்லும் போது எச்சரிக்கை தேவை.
சாலையை விரிவுப்படுத்துவதும், சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற மக்களும் உதவ வேண்டும். புறவழிச்சாலை பணிகள் தொடர்பாக விசாரிக்கிறேன். தவறுகள் சரி செய்யப்படும். உயிரிழப்புகளை அனுமதிக்க முடியாது. அரசு மூலம் எடுக்க வேண்டிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்.
என்.ஐ.டி. கல்லூரியில் 25 சதவீதம் புதுவை மக்களுக்கு கிடைக்க உறுதி செய்துள்ளேன். புதுவை மத்திய பல்கலைக்கழகத்திலும் புதுவை மாணவர் ஒதுக்கீடு தொடர்பாக துணைவேந்தரிடம் விசாரிக்கிறேன். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு தமிழகத்தில் தருவதைப்போல் புதுவையில் தருவது தொடர்பான கோப்பு நிலுவையில் இருப்பது பற்றி விசாரிக்கிறேன்
இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.
- ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் விவகாரம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
காரைக்கால்:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்த மத்திய தகவல் ஒலிபரப்புப்புத்துறை இணை மந்திரி எல். முருகன் நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும், இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். ஆன்லைன் சூதாட்ட விவகாரம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதை தடை செய்வது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை ஆய்வு செய்த மத்திய இணை மந்திரி, மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர், மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.