என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "A car"
- இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர்
- அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
குனியமுத்தூர்,
கோவை ராமநாதபுரம் பழைய சுங்கத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்.
இவர் சிட்கோ பகுதியில் சொந்தமாக நிறுவனம் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவர் தினமும் தனது காரில் தனது நிறுவனத்திற்கு சென்று வருவது வழக்கம். இவரிடம் டிரைவராக சுந்தராபுரம் கே.வி.கே. நகரை சேர்ந்த பால்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இன்று காலை ஆரோக்கியராஜ் வழக்கம் போல தனது காரில் சிட்கோவில் உள்ள நிறுவனத்திற்கு சென்றார். அங்கு பணிகளை பார்வையிட்ட அவர் மீண்டும் மதியம் 12.15 மணியளவில் நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். காரை டிரைவர் பால்ராஜ் ஓட்டி வந்தார்.கார் சிட்கோ ஆர்ச் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது.
சிறிது நேரத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது. கார் சென்று கொண்டிருந்த போதே தீ பிடித்ததால் டிரைவர் காரை சாதுர்யமாக இயக்கி சாலையோரம் நிறுத்தி விட்டார்.
பின்னர் காரில் இருந்த ஆரோக்கியராஜ் மற்றும் பால்ராஜ் ஆகியோர் கதவை திறந்து கொண்டு வெளியில் ஓடி வந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்க ப்பட்டது.கார் தீ பற்றி எரிவதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் தீபிடித்து எரிந்து கொண்டிருந்த கார் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ பிடித்து எரிந்த காரை பார்வையிட்டு காரை மீட்டனர். மேலும் இது தொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் தீ பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவையில் இன்று காலை சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
- டீசல் டேங்கில் புகை வந்ததால், டிரைவர் காரை நிறுத்தினார்
- கோத்தகிரி பகுதியிலும் வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது.
அரவேனு,
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தட்டப்பள்ளம் அருகே மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி சென்ற மாருதி கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
.
கார் தட்டப்பள்ளம் அருகே வந்த போது வாகனத்தின் டீசல் டேங்கில் இருந்து புகை வந்துள்ளது. உடனே காரை டிரைவர் நிறுத்தியுள்ளார். காரில் தீ மளமளவென பரவி தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு மற்றும் போலீஸ் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் காரில் பற்றிய தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.
இதனைபோல, கோத்தகிரி நகர் பகுதியில் டானிங் டன் பகுதியில் சக்தி தியேட்டர் பின்புறம் பாரத் என்பவரது வீட்டில் மின்கசிவு காரணமாக தீ பற்றி எரிவதாக கோத்தகிரி போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலையடுத்து தீயணைப்பு துறையுனர் மின்கசிவு ஏற்பட்ட வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர் .
இந்த 2 தீ விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பாலாஜி தனது மனைவி, தம்பியுடன் மாமனார் வீட்டில் இருந்து கிளம்பி தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டி ருந்தார்.
- கார் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் உள்ள ஒரு சுவற்றில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (29).இவருக்கும் நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி பகுதியை சேர்ந்த டாக்டர் பாலாஜி (30) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் பாலாஜி தனது மனைவி சுகன்யா மற்றும் தம்பி வெங்கட்ரா மணன் ஆகியோருடன் நேற்று காரில் பாரப்பாளையம் பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு வந்தார்.
பின்னர் மாலை பாலாஜி தனது மனைவி, தம்பியுடன் மாமனார் வீட்டில் இருந்து கிளம்பி தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டி ருந்தார். காரை பாலாஜி ஓட்டி வந்து கொண்டிருந்தார்.
கொடுமுடி அருகே உள்ள சோளகாளிபாளையம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் உள்ள ஒரு சுவற்றில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பாலாஜி, சுகன்யா மற்றும் பாலாஜி தம்பிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவ சமாக அவர்கள் உயிர் தப்பினர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சை க்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பெருந்துறை சிப்காட் அருகே கார் வந்து கொண்டு இருந்த போது அங்கு ரோட்டோரம் நின்று இருந்த லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோதியது.
- இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை சிப்காட்டில் இருந்து பிஸ்கெட்டுகள் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு ஒரு லாரி சென்றது. அப்போது டிைர வர் வினாயக மூர்த்தி (49) லாரியை சிப்காட் அருகே ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார்.
அப்போது பெருந்துறை-கோவை ரோட்டில் மோட்டார் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்க்கும், பெருந்துறை பாண்டியன் நகரை சேர்ந்த நந்தகுமார் (28), நசியனூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (29), புங்கம்பாடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (34), ஈரோடு, சம்பத் நகரை சேர்ந்த மணிவண்ணன் (27) ஆகிய 4 பேர் கோவை செல்வதற்காக ஒரு காரில் வந்தனர்.
காரை நந்தகுமார் ஓட்டினார். அப்போது அந்த கார் பெருந்துறை சிப்காட் அருகே வந்து கொண்டு இருந்த போது அங்கு ரோட்டோரம் நின்று இருந்த லாரியின் பினபுரம் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் நந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். மேலும் கார்த்திகேயன், சுரேஷ்குமார், மணி வண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்