என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "A group of activists"
- பெத்தநாயக்கன் பாளையத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது.
- தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நடத்தி வருகிறார்.
சேலம்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நடத்தி வருகிறார்.
செயல்வீரர்கள் கூட்டம்
அந்த வகையில், சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நாளை (22-ந் தேதி ) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார். அதற்காக இன்று இரவு நாமக்கல்லில் இருந்து சேலம் வருகிறார்.
அமைச்சர் உதயநிதிஸ்டா லினுக்கு மாவட்ட எல்லை யான மல்லூர் அருகே தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இளைஞரணியினர் திரளாக பங்கேற்கிறார்கள். தொடர்ந்து சேலம் வரும் அவர் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்குகிறார்.
நாளை ( 22 -ந் தேதி) காலை 10 மணியளவில் சீலநாயக்கன்பட்டியில் நடைபெறும் தி.மு.க. இளை ஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து சிறப்புரையாற்றுகிறார்.
இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி மற்றும் மாவட்ட செயலா ளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வ கணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், இளைஞரணி அமைப்பா ளர்கள் அருண்பிரசன்னா, வீரபாண்டி பிரபு, மணிகண்டன் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணியினர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
இளைஞரணி செயல்வீ ரர்கள் கூட்டம் முடிந்ததும், பெத்தநாயக்கன் பாளையத்தில் இளைஞரணி மாநில மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அப்போது மாவட்ட செயலாளர் மற்றும் மாநாட்டு வழிகாட்டு குழுவினருடன் ஆேலாசனை நடத்துகிறார். பின்னர் அவர் காரில் கிருஷ்ணகிரி புறப்பட்டு செல்கிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையெட்டி அவர் செல்லும் வழிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
- தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கத்தில் நடைபெற்றது.
- பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள் கூட்டம் திருப்பூரில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தளபதி அரங்கத்தில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்
கூட்டத்துக்கு அவைத்தலைவர் ஜெயரா மகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான இல.பத்மநாபன் முன்னி லை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பேசினார்.
ஆலோசனை
தி.மு.க. ஆட்சியின் சாதனைகளையும், நலத்திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது, வரைவு வாக்கா ளர் பட்டியலை சரிபார்ப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
- 28 ஆயிரம் பேருக்கு ரூ.600 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி வடக்கு மாவட்ட அவை தலைவர் அம்பிகாபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்ரீரங்கம் பழனியாண்டி, திருச்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், பாரதிய ஜனதா கட்சியினர் தி.மு.க. ஆட்சி நடத்துவது சரியில்லை என குறை கூறி வருகின்றனர். ஒருபுறம் கடுமையான நிதி நெருக்கடி, மறுபுறம் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொண்டு தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியினை தமிழக மக்களுக்கு வழங்கி வருகிறார், தி.மு.க. கூட்டணி சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினரான பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து சிறிதளவும் நன்றி இல்லாமல் அதனை மறந்து இடையிலேயே விலகிவிட்டார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரிவேந்தரைப் போல இல்லாமல் தி.மு.க. கட்சிக்கு விசுவாசியாக உள்ள ஒரு நபரை தேர்வு செய்து, 12 ஆண்டு காலமாக உழைத்த நமது கட்சி செயல் வீரர்கள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் முனைப்புடன் செயல்பட வேண்டும். பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் முசிறி காவேரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைத்து முசிறியில் இருந்து துறையூரை அடுத்த சிங்களாந்தபுரம் வரை உள்ள ஏரிகளுக்கு காவிரி நீரை குழாய் மூலம் கொண்டு சென்று நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வருகிற 29-ந்தேதி திருச்சியில் நடைபெறும் அரசு விழாவில் 3500 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.90 கோடி மதிப்பீட்டில் கடன் உதவியும், 28 ஆயிரம் பேருக்கு ரூ.600 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும் மணப்பாறையில் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் புதிய எந்திரம் ஒன்றையும் தொடங்கி வைக்க உள்ளார். ஆகவே தமிழக முதல்வருக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்க்கும் கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முசிறி ஒன்றிய செயலாளர்கள், நகர, பேரூர் கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை வழங்கினர்
- 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் கீழ்பென்னாத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
அவைத்தலைவர் ரவி (எ) இளஞ்செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார்.
தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, துணைத்தலைவர் வாசுகி ஆறுமுகம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சி.கே.பன்னீர்செல்வம், நகர செயலாளர் சி.கே. அன்பு, முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு, பேராசிரியர் அன்பழகன் அவர்களின் பிறந்தநாளின் நூற்றாண்டு நிறைவு விழாவை கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், இளைஞர் அணி மற்றும் உறுப்பினர் சேர்க்கை சேர்ப்பது குறித்தும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி பேசினார்.
மாவட்ட துணை செயலாளர் செங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மு.பெ.கிரி கலந்துகொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், செயல்படுவது குறித்தும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி பேசினார்.
முன்னதாக, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள், மறைந்த தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் திருவுருவப்படங்களுக்கு மாலைகள் அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி குப்புசாமி தீர்மானங்களை வாசித்தார். ஒன்றிய துணை செயலா ளர்கள் சிவக்குமார், பரசுராமன், செல்வமணி, பொருளாளர் சுப்பராயன், மாவட்ட பிரதிநிதிகள் தேவேந்திரன், இளங்கோ, தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், மகளிர்குழு அணி நித்தியா, ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், ஊராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கீழ்பென்னாத்தூர் ஒன்றிய துணை செயலாளர் சோமாஸ்பாடி சிவக்குமார் நன்றி கூறினார்.
- கடந்த கடந்த 2020-ம் ஆண்டு மீன்வளத்துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது
- சென்னை துறைமுக பராமரிப்பு பணிக்காக ரூ.98 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஊட்டி
மீன் பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள துறை மத்திய இணை மந்திரி சஞ்சீவ் பல்யான் நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
நான் தற்போது தான் முதல்முறையாக நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளேன். கடந்த கடந்த 2020-ம் ஆண்டு மீன்வளத்துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் ரூ.1,565 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. சென்னை துறைமுக பராமரிப்பு பணிக்காக ரூ.98 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது முழுவதும் மத்திய அரசின் நிதி ஆகும்.
இதேபோல் மத்திய அரசு நிதி மூலம் சென்னையில் கடல்வாழ் தாவரங்களுக்காக புதிய பூங்கா அமைக்கப்பட உள்ளது. கொரோனா காலகட்டத்தின் போது ஒரு லட்சத்து 75 ஆயிரம் மீனவர்களுக்கு ரூ.25 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் உள்ள மிகப் பெரிய தொண்டு நிறுவனமாகும். மக்கள் நலனுக்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உழைப்பதால், அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
படுகர் இன மக்களை எஸ்.டி. பிரிவில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி தேயிலை விலை குறைவாக இருப்பதால் பாதுகாப்பு துறை மூலம் தேயிலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் செக்சன் பிரிவு பகுதியில் உள்ள 7000 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பு, கழிப்பறை, கியாஸ் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார். எனவே இந்த பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆ.ராசா எம்.பி.யின் பேச்சு எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட பா.ஜ.க. தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிர்வாக ஆலோசனை கூட்டத்தில்மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பரமேஸ்வரன், நளினி, குமார், மண்டல தலைவர் பிரவீன், மண்டல பொதுச்செயலாளர் சுரேஷ், கார்த்தி, ராஜேந்திரன், மற்றும் கதிர்வேல், பாலகுமார், முருகேசன், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்