என் மலர்
நீங்கள் தேடியது "A Rasa"
- வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆ.ராசாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.
- ஆ.ராசா உள்பட 3 பேர் ஜனவரி 10-ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியதாக ஆ.ராசா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ. டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
இதற்கிடையே, ஆ.ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகள் உள்பட 16 பேர் மீது கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ம் தேதி அன்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
அதாவது, 1999-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தது முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி கூடுதலாக ரூ.27.92 கோடி அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியது.
இதனடிப்படையில் ஆ.ராசா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடந்தது. டெல்லி, சென்னை, திருச்சி, நீலகிரி, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 2ஜி வழக்கில் கிடைத்த சில ஆவணங்கள் அடிப்படையில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. சோதனையின் போது வருமான வரி கணக்குகள், சொத்து ஆவணங்கள், நிதிநிலை அறிக்கைகள் மற்றும் நிலையான வைப்பு ரசீதுகள் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆவணங்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை தற்போது முடிவிற்கு வந்துள்ளது. 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுமார் 7 ஆண்டுகள் ஆன நிலையில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஆ.ராசா உள்பட 3 பேர் ஜனவரி 10-ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
- திருநெல்வேலியில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழாவில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டார்.
- கலைஞரின் திட்டமில்லாமல் தமிழகத்தில் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.
புகழ்பெற்ற பெரிய பதவிகளில் இருப்பவர்களை பார்த்து சில நேரங்களில் கேட்பதுண்டு. இந்த பதவிக்கு நீங்கள் வந்திருக்காவிட்டால் என்னவாக ஆகி இருப்பீர்கள் என்று. அதற்கு அவர்கள் ஏதாவது ஒரு பதிலை சொல்ல கேட்டிருப்போம். தற்போது அதில் இருந்து வித்தியாசமாக ஒரு விசயத்தை ஆ.ராசா கணித்து உள்ளார். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தேசிய பா.ஜனதா மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் இந்த பதவிக்கு எப்படி வந்தார்கள். இந்த பதவிக்கு வந்திருக்காவிட்டால் என்னவாக இருந்திருப்பார்கள் என்பதுதான் அவரது கணிப்பு.
திருநெல்வேலியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்று தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசும்போது கூறியதாவது:-
கலைஞரின் திட்டமில்லாமல் தமிழகத்தில் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கலைஞரின் பேனா முனை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் கவுண்டர் சமுதாயத்தை சேர்க்கவில்லை என்றால் அண்ணாமலை ஆடு மேய்த்து இருப்பார். ஐ.பி.எஸ். அதிகாரி ஆகி இருக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி வெல்லமண்டி வைத்திருப்பார். வானதி சீனிவாசன் கூடை வேய்ந்திருப்பார் என்றார்.
- தெக்கலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி மயக்கம் அடைந்த நிலையில் கிடந்தார்.
- சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவினாசி:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நீலகிரி எம்.பி.,யும், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா கோவை வந்திருந்தார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளையும் முடித்து விட்டு கடைசியாக அவிநாசியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கோவை விமான நிலையம் நோக்கி சென்றார்.
அப்போது தெக்கலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி மயக்கம் அடைந்த நிலையில் கிடந்தார். உடனே காரை நிறுத்திய ஆ.ராசா எம்.பி., உடனடியாக தனது காரிலேயே வாலிபரை ஏற்றி கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் மயக்கமடைந்த அந்த வாலிபருக்கு உடனிருந்து சிறப்பு சிகிச்சை அளிக்க தன்னுடன் பயணித்த மருத்துவர் கோகுல் என்பவரையும் அனுப்பி வைத்ததோடு இளைஞருக்கு வழங்கப்பட உள்ள சிகிச்சை முறை குறித்தும் மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசினார். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் பி.வெங்கடேசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
- விவகாரம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க திருச்சி மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் ஆ.ராசா அருந்ததியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் பி.வெங்கடேசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
புகார் குறித்து விசாரித்த தேசிய பட்டியலினத்தவர் ஆணையம், இந்த விவகாரம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க திருச்சி மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
- அமித்ஷா உள்பட பா.ஜனதாவில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் வாருங்கள்.
- சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான் அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை வீராம்பட்டினத்தில் கருணாநிதி சிலையை முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-
கருணாநிதி தனது அறிவால், ஆற்றலால், தியாகத்தால், உழைப்பால் தமிழக முதல்-அமைச்சராக இந்திய அரசியலுக்கு ஆற்றியுள்ள பங்கு ஏராளம். அவர் எத்தனையோ பிரதமர், ஜனாதிபதிகளை உருவாக்கியுள்ளார்.
அகில இந்திய அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் கருணாநிதியின் பங்கு அதிகம்.
சனாதனம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நான் புதுவையிலிருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சவால் விடுகிறேன்.
அமித்ஷா உள்பட பா.ஜனதாவில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் வாருங்கள். டெல்லியில் திறந்த வெளியில் விவாதிப்போம். தி.மு.க சார்பில் நானும் பேசுகிறேன்.
நாங்கள் சனாதனம் வேண்டாம் என போராடியதால்தான் தமிழிசை கவர்னர், வானதி சீனிவாசன் வக்கீல், அண்ணாமலை ஐ.பி.எஸ் அதிகாரியாக ஆனார்கள்.
சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான் அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ளார். இல்லாவிட்டால் வேறு வேலைக்கு சென்றிருப்பார்.
மோடியை விட அமித்ஷாவை விட பா.ஜனதாவில் உள்ள அனைத்து அமைச்சர்களையும் விட ஆர்.எஸ்.எஸ்.சில் இருப்பவர்களை விட வெள்ளையர்கள் நல்லவர்கள், நாணயமானவர்கள், யோக்கியமானவர்கள். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டின் பிரதமர் இங்கு வந்து, எங்கள் அரசு உங்களுக்கு பாவம் செய்துவிட்டது என கூறி மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார்.
ஆனால் மணிப்பூரில் 200-க்கும் மேற்பட்டவர்களை கொன்றுவிட்டு, பழங்குடியினத்தை சேர்ந்த இளம்பெண்களை ஆடைகள் இல்லாமல் அழைத்து சென்று காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டனர்.
இதை நியாயப்படுத்தும் அங்குள்ள முதல்-அமைச்சரை பாராளுமன்றத்தில் மோடி, அமித்ஷா பாராட்டுகின்றனர். ஊழலும், மதவாதமும் வளர்ந்து கொண்டிருக்கிற இந்த ஆட்சியை தூக்கி எறிய நாம் எல்லோரும் உறுதியேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- திராவிட விழுதுகள் ஊழல் அழிப்பு, பலதார மணம் எதிர்ப்பு, லஞ்ச ஒழிப்பு என்று ஒரு சின்ன கூட்டமாவது போடுவார்களா?
- தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு சீரழியும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
சென்னை:
சனாதன தர்மத்தை டெங்கு, கொரோனாவுடன் ஒப்பிட்டு அதை ஒழிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சனாதன தர்மம் எய்ட்ஸ், தொழுநோய் போன்றது என்று விமர்சித்தார்.
இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி கூறியதாவது:-
இளவரசருக்கு டெங்கு, கொரோனா... ஆ.ராசாவுக்கு எய்ட்ஸ், தொழுநோய் பொருத்தம்தான். அட மாநாடு வேணாம்யா... திராவிட விழுதுகள் ஊழல் அழிப்பு, பலதார மணம் எதிர்ப்பு, லஞ்ச ஒழிப்பு என்று ஒரு சின்ன கூட்டமாவது போடுவார்களா?
பிடிக்காத விஷயத்தை தானே எதிர்க்க முடியும். தேர்தலுக்கு தேர்தல் இந்த மாதிரி எதையாவது பேசுவார்கள். தேர்தலுக்கு முற்றிய சனாதனிகளிடம் போய் நிற்பார்கள். அவர்களின் கூட்டணி தலைவர்கள் கூட இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
காலை தந்தை (மு.க.ஸ்டாலின்) 1000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக மகிழ்ச்சி அடைந்தார். மாலையில் தனயன் சனாதனத்தை ஒழிப்பேன் என்கிறார். இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்?
தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு சீரழியும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். முதலில் அதை ஒழித்துவிட்டு வரட்டும். அப்போது முதல் ஆளாக நானே கைதட்டி வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்துக்கள் என்ற பெயரால் உயர் சாதி மக்கள் மட்டும்தான் இருக்க முடியும்.
- பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறாது. அதிபர் ஆட்சியாக மாறிவிடும்.
தி.மு.க. எம்.பி. ஆ. ராசா ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குப் பிறகு தப்பித்தவறி பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் அரசமைப்பு சட்டம் இருக்காது. நீதிமன்றங்கள் இருக்காது. பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறாது. அதிபர் ஆட்சியாக மாறிவிடும்.
இந்துக்கள் என்ற பெயரால் உயர் சாதி மக்கள் மட்டும்தான் இருக்க முடியும். தாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத்தப்படவரோ, மிகவும் பிற்படுத்தப்பட்டவரோ, ஒரு இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ, ஜைன மதத்தை சார்ந்தவரோ, புத்த மதத்தை சார்ந்தவரோ, ஏன் சீக்கிய மதத்தை சார்ந்தவரோ முழு உரிமையுடன் வாழ முடியாது என்ற சூழ்நிலையை மோடி கொண்டு வந்துள்ள திட்டத்தை நிறைவேற்றுவார்கள்.
இவ்வாறு தெரிவித்தார்.
- கூட்டத்தினர் மத்தியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
- நீலகிரி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பிரசாரம் செய்தார்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பொதுமக்களுக்கு மத்தியில் பேசும்போது, நீலகிரியில் போட்டியிடும் ஆ.ராசாவுக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனால் கூட்டத்தினர் மத்தியில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது தி.மு.க நிர்வாகிகள், உதயசூரியன் சின்னம் என்பதை நினைவுபடுத்தினர். பின்னர் சுதாரித்து கொண்ட செல்வப்பெருந்தகை, நீலகிரி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பிரசாரம் செய்தார். தொடர்ந்து அவர் திறந்தவேனில் நின்றபடி பொதுமக்களுக்கு மத்தியில் பேசியதாவது:-
இந்த நாட்டில் அமைதி நிலவவும், ஜாதி-மத கலவரத்தை தடுத்து நிறுத்தவும் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பொறுப்பு உண்டு. அவற்றை எல்லாம் நீங்கள் தடுத்து நிறுத்தி நாட்டை மேன்மைப்படுத்த வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆ.ராசா நீலகிரி தொகுதியில் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாரோ, அதைவிட 2 மடங்கு அதிகம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.
மேலும் உங்கள் பகுதிக்கு ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு வரஉள்ளார். கொடுப்பவர்களுக்கும், எடுப்பவர்களுக்குமான தேர்தலில் கொடுப்பவராக ராகுல்காந்தியும், எடுப்பவராக மோடியும் உள்ளனர். எனவே திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- திராவிட கொள்கை ஏன் தேவை என்பதை பாஜகவினர் உணர வேண்டும்.
- அதானி குழும முறைகேடு பற்றி கேள்வி எழுப்பிய போதும் பதில் சொல்ல மோடிக்கு முதுகெலும்பு இல்லை.
குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்களவையில் ஆ. ராசா பேசினார். அப்போது, எமர்ஜென்சி குறித்த பாஜக உறுப்பினர்களின் பேச்சுக்கு ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.
அப்போது அவர் உரையாற்றியதாவது:-
240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக பெரும்பான்மை எப்படி என்று கூறமுடியும்.
அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியதற்காக பலமுறை இந்திரா காந்தி மன்னிப்பு கேட்டார். அவசரநிலையை தற்போது பாஜக அரசின் செயல்பாட்டுடன் ஒப்பிட முடியாது.
பாஜக அரசு நினைப்பதை அவர்களாக சொல்வதில்லை. குடியரசுத் தலைவர் சபாநாயகர் மூலம் சொல்கிறார்.
8 முறை பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.
பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம். பாசிச கொள்கை உடைய பாஜக, எமர்ஜென்சி பற்றி பேச அருகதை இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்துக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் 40 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கி உள்ளனர்.
திராவிட கொள்கை ஏன் தேவை என்பதை பாஜகவினர் உணர வேண்டும்.
8 கோடி மக்களின் பிரதிநிதியாக உள்ள தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானத்தை மத்திய அரசு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் அவரவர் செய்து கொண்டிருக்கும் வேலையையே செய்ய வேண்டும் என்ற கொள்கையை பாஜக வலியுறுத்துகிறது.
பெரியாரின் திராவிட மண்ணில் இருந்து வந்துள்ளேன். எனது முன்னோர் வேலை தேடி இலங்கை சென்றனர். ஆனால் இன்று நான் ராகுலுடன் அவையில் இருக்கிறேன். அதற்கு காரணம் பெரியார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசத்துக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் 10 இடங்களை இந்தியா கூட்டணிக்கு வழங்கி உள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபையில் நீட் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வு மூலம் மெரிட், மேனேஜ்மெண்ட், பேமண்ட் என 3 -பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நிறுவனங்களின் லாபம் மீதான வரியை 33%-லிருந்து 20%ஆக குறைத்துவிட்டது மோடி அரசு. பொதுத்துறை நிறுவனங்களை விற்பதன் மூலம் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை 2 பேர் வாங்குகிறார்கள், 2 பேர் விற்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களை விற்று வேலைவாய்ப்பை பறிப்பதன் மூலம் இடஒதுக்கீட்டையும் மறைமுகமாக ஒழிக்கிறீர்கள்.
முகலாயர்கள் அந்நியர்கள் என்றால், ஆரியர்களும் அந்தியர்கள்தான். முகலாயர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றால், ஆரியர்களும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்தான்.
அதானி குழும முறைகேடு பற்றி 50 நாட்கள் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பிய போதும் பதில் சொல்ல மோடிக்கு முதுகெலும்பு இல்லை.
ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து பதில் சொல்ல பிரதமருக்கு முதுகெலும்பு இல்லை. முழுக்க முழுக்க ஊழலில் ஊறியது பாஜக அரசுதான்.
அரசியலமைப்பை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என முழங்கியவர்கள், பிரதமரானவுடன் அதை எடுத்து வணங்கினார்கள்.
அரசியல் சாசன சபையில் உயர்சாதியினர்தான் அமர்ந்திருக்கின்றனர் என்று சைமன் கூறினார். பாஜக அரசியல் சட்டத்தை பின்பற்றுவதும் இல்லை, மதிப்பதும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆர்.எஸ்.எஸ்.யை சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் என்ன பங்கு வகித்தார்கள்?
- இந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடாக அறிவித்து கொண்டது.
மக்களவையில் அரசியலமைப்பு குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் திமுக எம்.பி. ஆ. ராசா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் டாக்டர் ராதாகிருஷ்ணன், சர்தார் வல்லபாய் படேல், நேரு, சரோஜினி நாயுடு உள்ளிட்ட பலர் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
ஆனால், உங்களின் (பாஜக) முன்னோடிகளான ஆர்.எஸ்.எஸ். இந்து மகா சபாவை சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் என்ன பங்கு வகித்தார்கள்?
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் அரசியலமைப்பு சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறியிருக்கிறீர்கள் மதச்சார்பின்மை உட்பட..
ஆனால் அரசியல் சாசன பதவியின் 2-ம் இடத்தில் இருப்பவர் முன்பு ஒரு மாநாட்டில் அரசியலமைப்பு சாசனத்தின் அடித்தளத்தை மாற்ற விரும்புகிறோம் என்று கூறினார்.
உங்கள் கட்சியில் தலைவர் ஒருவர் மக்களவை தேர்தலுக்கு முன்பாக நாங்கள் 400 இடங்களை வென்றால் இந்த நாட்டை இந்து நாடாக மாற்றுவோம் என்று தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டம் தொடர்பான ஒரு வழக்கை 1973 ஆம் ஆண்டு 13 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. அதன் தீர்ப்பு 1500 பக்கங்களில் உள்ளது. அந்த தீர்ப்பை நான் பலமுறை சட்ட மாணவராக இருந்தபோது படித்திருக்கிறேன்.
அரசியலமைப்பு சட்டத்தில் நீங்கள் பல திருத்தங்கள் செய்யலாம். ஆனால் அதன் அடித்தளத்தை நீங்கள் மாற்றக்கூடாது. அந்த வழக்கின் சாராம்சத்தை நான் குறிப்பிடுகிறேன். அரசியலமைப்பில் 6 முக்கிய கூறுகள் உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். 1. ஜனநாயகம் 2. மதச்சார்பின்மை 3. நாட்டின் சட்டம் 4. சமத்துவம் 5. கூட்டாட்சி 6. பாரபட்சமில்லாத நீதித்துறை. இந்த 6 கூறுகளும் பாஜகவின் ஆட்சியில் ஆபத்தில் உள்ளது. அதற்கு எதிராகத்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.
மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகியவை அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டது. அது தான் உங்களில் கைகளிலிருந்து இந்த நாட்டை காப்பாற்றி கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்து கொண்டது. இந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடாக அறிவித்து கொண்டது. ஆனால் இப்போது இப்படிப்பட்ட தீய சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவார்கள் என்று அம்பேத்கர் நினைக்கவில்லை" என்று தெரிவித்தார்.
பாஜகவை தீய சக்தி என்று ஆ. ராசா குறிப்பிட்டதற்கு பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து பாஜகவை தீயசக்தி என்று ஆ ராசா குறிப்பிட்ட வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுமென்று அவைத்தலைவர் தெரிவித்தார்.
- மத்திய அரசின் இசைக்கு நடனமாடுகிற நடிகராக நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் இருக்கிறார்.
- இந்திய நாட்டிற்கு காவி வண்ணம் பூசுவதற்கு ஒரு நல்ல பெயிண்டராகவும் பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவர் செயல்படுகிறார்.
வக்பு வாரிய திருத்த மசோதா பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா பாராமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. இந்த குழு ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் இடம் பிடித்திருந்துள்ளனர்.
இந்த குழு மத தலைவர்கள், பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கருத்துகளை கேட்டது. குழுவில் உள்ள எம்.பி.க்களும் பல்வேறு பரிந்துரைகளை தெரிவித்தினர்.
இந்த நிலையில் 44 மாற்றங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும், இதில் 14 மாற்றங்களுக்கு இந்த குழு ஒப்பந்தல் வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள். வழங்கிய பல்வேறு பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
14 மாற்றங்களை ஏற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் வாக்கெடுப்பு ஜனவரி 29-ந்தேதி நடைபெறும் எனவும், ஜனவரி 31-ந்தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மெஜாரிட்டி வாக்கு என்ற அடிப்படையில் 14 பரிந்துரைகள் ஏற்கப்பட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாற்றங்களை முன்வைத்தனர். அவைகள் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. அவர்களுடைய திருத்தங்களுக்கு ஆதரவாக 10 வாக்குகளும், எதிர்த்து 16 வாக்குகளும் பதிவாகின" என ஜெகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார்.
இந்த கமிட்டியில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தலைவர் மீது குற்றம்சாட்டினர். டெல்லி தேர்தல் கண்ணோட்டத்தோடு மசோதாவை விரைவில் நிறைவேற்ற முயற்சி செய்கிறார் என மக்களவை உறுப்பினர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தனர்.
கூட்டத்தின்போது ரகளையில் ஈடுபட்டதாக 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாற்றம் தொடர்பான பரிந்துரைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய நேரம் தரப்படவில்லை எனவும் புகார் அளித்தனர்.
இந்நிலையில், வக்பு வாரிய மசோதாவிற்கு பாராமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்ததை கண்டித்து டெல்லியில் எம்.பி. ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "மத்திய அரசின் இசைக்கு நடனமாடுகிற நடிகராக நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் ஜகதாம்பிகா பால் இருக்கிறார். இந்திய நாட்டிற்கு காவி வண்ணம் பூசுவதற்கு ஒரு நல்ல பெயிண்டராகவும் பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவர் செயல்படுகிறார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தது நாடாளுமன்றக் கூட்டுக்குழு.
இஸ்லாமியர்களின் 60% சொத்துக்களை பறிக்கவே, வக்பு சட்டத்திருத்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்ற துடிக்கிறது பாஜக அரசு. அதற்கு உடந்தையாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவை மத்திய அரசு பயன்படுத்துகிறது. வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்" என்று தெரிவித்தார்.
- 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுமார் 7 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியதாக ஆ.ராசா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ. டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
இதற்கிடையே, ஆ.ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகள் உள்பட 16 பேர் மீது கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி அன்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
அதாவது 1999-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தது முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஆ.ராசா தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி கூடுதலாக ரூ.27.92 கோடி அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.
இதனடிப்படையில் ஆ.ராசா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடந்தது. டெல்லி, சென்னை, திருச்சி, நீலகிரி, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
2ஜி வழக்கில் கிடைத்த சில ஆவணங்கள் அடிப்படையில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. சோதனையின் போது வருமான வரி கணக்குகள், சொத்து ஆவணங்கள், நிதிநிலை அறிக்கைகள் மற்றும் நிலையான வைப்பு ரசீதுகள் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆவணங்கள் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுமார் 7 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
வருமான ஆதாரங்களில் இருந்து 579 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.