என் மலர்
நீங்கள் தேடியது "AAP"
- 'ஐ லவ் மணீஷ் சிசோடியா' என்ற பெயரில் பிரசார இயக்கத்தை உருவாக்கியிருப்பதாக பாஜக குற்றச்சாட்டு
- வாட்ஸ்அப் பார்வேர்டு தகவல்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் எழுதிய கடிதங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.
புதுடெல்லி:
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கல்வி உட்பட 18 இலாகாக்களை தன் வசம் வைத்திருந்த சிசோடியா, தன் மீதான நடவடிக்கையை தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார். கைது நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், மணீஷ் சிசோடியாவுக்கு ஆதரவு திரட்டும் விதமாக டெல்லி அரசுப் பள்ளிகளில் 'ஐ லவ் மணீஷ் சிசோடியா' என்ற பெயரில் பிரசார இயக்கத்தை உருவாக்கி வருவதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது. சிசோடியாவை கைது செய்தபிறகும், டெல்லி அரசு கல்வி என்ற பெயரில் தனது மோசமான அரசியலை நிறுத்தாமல், பள்ளிக் குழந்தைகளை அதில் ஈடுபடுத்தும் அளவிற்கு சென்றுள்ளது. இது வருத்தமளிக்கும் விஷயம் என பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் விமர்சித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் மணீஷ் சிசோடியாவுக்கு ஆதரவாக பிரசார இயக்கம் நடைபெறுவதாக கூறி புகைப்படங்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் எழுதிய கடிதங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. இதை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற செயல்களில் எந்த ஒரு அரசு துறையும், அரசு ஊழியர்க்கும் ஈடுபடவில்லை. அது பாஜகவின் வேலை, என கூறப்பட்டுள்ளது.
- மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.
போபால்:
டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய பிரதேசத்தில் 20 ஆண்டுகளாக அவர்கள் (பா.ஜ.க.வினர்) ஆட்சி செய்தனர். அவர்களுக்கு மாற்றாக ஆம் ஆத்மி வந்துள்ளது. அடுத்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. பிரச்சனைகளை எதிர்கொள்ளும். ஆம் ஆத்மியைப் பார்த்து மோடிஜி (பிரதமர்) அச்சமடைந்து உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் வரும் நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் அனைத்து 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும்.
டெல்லியில் கல்வி பிரிவில் ஆம் ஆத்மி கட்சி புரட்சி செய்துள்ளது. எந்தவொரு கட்சியும், உங்களது குழந்தைகளுக்கு கல்வி வாக்குறுதி அளித்து வாக்கு கேட்கவில்லை. அவர்களுக்கு அதில் விருப்பமும் இல்லை.
டெல்லி, பஞ்சாப் போன்று மத்திய பிரதேசத்திலும் இலவச மின்சாரம் வழங்கப்படும். மொஹல்லா கிளினிக்குகளை தொடங்கி இலவச சிகிச்சை அளிக்கப்படும். எங்களுக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்திற்கு வர ஒரு வாய்ப்பு வழங்குங்கள். நாங்கள் கூறியவற்றை செய்யவில்லை எனில், அடுத்து வாக்கு கேட்டு உங்களிடம் நான் வரமாட்டேன்.
ஒருவர் அரசியல் பேரம் பேசி எம்.எல்.ஏ.வை வாங்குகிறார்கள் என கூறுவார்கள். மற்றொருவர் எம்.எல்.ஏ.வை வாங்க தயாராவார்கள். மொத்த தேர்தல் நடைமுறையையே அவர்கள் மாற்றி வைத்துள்ளனர். அரசியலமைப்பையே சந்தைகடையாக ஆக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
- மெகுல் சோக்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ரெட்-கார்னர் நோட்டீசை இண்டர்போல் அமைப்பு ரத்து செய்துள்ளது.
- மெகுல் சோக்சி ஆன்டிகுவா குடியுரிமை பெறுவதற்கு இந்திய அரசு தடையில்லாச் சான்றிதழை வழங்கியது.
புதுடெல்லி:
வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிரவ் மோடி லண்டனில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆன்டிகுவா நாட்டில் தஞ்சம் பெற்றார். ஆன்டிகுவாவில் கடந்த 2018-ம் ஆண்டு குடியுரிமையும் பெற்றார். தேடப்படும் நபர்களை நாடு கடத்துதல் தொடர்பாக இந்தியா மேற்கொண்ட நாடுகளின் ஒப்பந்த பட்டியலில் ஆன்டிகுவா இல்லை. எனினும், அவரை நாடு கடத்துதல் தொடர்பான முயற்சிகளில் இந்திய விசாரணை முகமைகள் ஈடுபட்டன. மெகுல் சோக்சிக்கு எதிராக இண்டர்போல் சார்பில் ரெட்-கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், மெகுல் சோக்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ரெட்-கார்னர் நோட்டீசை இண்டர்போல் அமைப்பு ரத்து செய்துள்ளது. இது இந்திய விசாரணை அமைப்புகளுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
மெகுல் சோக்சி விஷயத்தில் மத்திய பாஜக அரசு மீது ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா குற்றம்சாட்டி உள்ளார். தப்பியோடிய மெகுல் சோக்சிக்கு சிவப்பு கம்பள மரியாதை அளித்து அவரை காப்பாற்ற பாஜக முயற்சிப்பதாக ராகவ் சத்தா கூறியிருக்கிறார்.
மெகுல் சோக்சி ஆன்டிகுவா குடியுரிமை பெறுவதற்கு இந்திய அரசு தடையில்லாச் சான்றிதழை வழங்கியது. அதேபோல் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் அவருக்கு எதிராக உறுதியான ஆதாரங்களை வழங்கத் தவறியதால், அவரது பெயர் ரெட் கார்னர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும் ராகவ் சத்தா தெரிவித்தார்.
- பிரதமரின் பட்டச்சான்றிதழ் பிரச்சினையை எழுப்பியவுடன், ஒட்டுமொத்த பா.ஜனதாவினரும் அதிர்ந்துள்ளனர்.
- விசாரணை நடத்தப்பட்டால், பிரதமர் மோடியின் பட்டச்சான்றிதழ் ‘போலி’ என்று அம்பலமாகி விடும்.
புதுடெல்லி :
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் ஐகோர்ட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
இந்நிலையில், அவரது ஆம் ஆத்மி கட்சி எம்.பி.யும், தேசிய செய்தித்தொடர்பாளருமான சஞ்சய்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் என்று அமித்ஷா கடந்த 2016-ம் ஆண்டு ஒரு சான்றிதழை காண்பித்தார். அதில், 'யுனிவர்சிட்டி' என்ற ஆங்கில வார்த்தையின் எழுத்துகள் 'யுனிபர்சிட்டி' என்று தவறாக உள்ளது. அது போலி என்பதற்கு அதுவே ஆதாரம்.
பிரதமர் மோடியே கடந்த 2005-ம் ஆண்டு குஜராத்தில் பேசுகையில், பள்ளிக்கல்விக்கு பிறகு தன்னால் மேல்படிப்பு படிக்க முடியவில்லை என்றார். அவர் எம்.ஏ. படித்திருந்தால், அப்படி பேசியது ஏன்?
பிரதமரின் பட்டச்சான்றிதழ் பிரச்சினையை எழுப்பியவுடன், ஒட்டுமொத்த பா.ஜனதாவினரும் அதிர்ந்துள்ளனர். சான்றிதழ் போலி இல்லை என்று நிரூபிக்க போராடுகின்றனர்.
விசாரணை நடத்தப்பட்டால், பிரதமர் மோடியின் பட்டச்சான்றிதழ் 'போலி' என்று அம்பலமாகி விடும். பின்னர், தேர்தல் கமிஷனுக்கு தவறான தகவல் அளித்து மோசடி செய்ததாக அவர் தனது எம்.பி. பதவியை இழப்பார்.
அத்துடன், தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் அவர் இழந்து விடுவார். இதுதான் தேர்தல் கமிஷன் விதிமுறை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறையில் உள்ள குளியலறையில் சத்யேந்தர் ஜெயின் இன்று திடீரென விழுந்தார். உடனடியாக அவரை சிறை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை சிறையின் குளியலறையில் விழுந்ததில் அவரது முதுகெலும்பில் அடிபட்டது. இந்த காயத்திற்காக அவர் சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இன்று பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது இடுப்பில் பெல்ட் அணிந்து மிகவும் பலவீனமாக காணப்படுகிறார். அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து சுமார் 35 கிலோ வரை உடல் எடை குறைந்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ளார்.
சத்யேந்தர் ஜெயின் ஆதரவாளர்களும் கட்சி தொண்டர்களும் அவரது உடல்நிலை குறித்து கவலையை தெரிவித்துள்ளனர். மேலும் அவரை கொல்ல பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதில் அளித்துள்ளது. கைது செய்யப்படுவதற்கு முன்பு சத்யேந்திர ஜெயின் அதிக உடல் எடையுடன் இருந்ததாகவும், இப்போது எடை குறைந்து சரியான அளவில் இருப்பதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.
- பேரணியில் சுமார் 1 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அவசர சட்டத்திற்கு எதிராக கெஜ்ரிவால் நாடு முழுவதும் ஆதரவு திரட்டினார்.
புதுடெல்லி:
டெல்லியில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நீடிக்கிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது என்றும், ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் கூறியது. டெல்லி அரசுக்கு பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் உள்ளன. குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கே உள்ளது எனவும் தெரிவித்தது.
இந்த தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது. அதாவது, குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் வகையில், நிரந்தரமாக தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ) உருவாக்குவதற்காக இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஆம் ஆத்மி கட்சி, மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அவசர சட்டத்திற்கு எதிராக கெஜ்ரிவால் நாடு முழுவதும் ஆதரவு திரட்டினார். பாராளுமன்றத்தில் அவசர சட்டத்தை தோற்கடிக்கவும் அவர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரமாண்டமான பேரணி நடத்தப்பட உள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்கள் அந்தந்த தொகுதிகளில் இருந்து ஆதரவாளர்களுடன் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். பேரணி காலை 10 மணிக்குத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரணியின் நிறைவில் ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்தில் முதல்வர் கெஜ்ரிவால் உரையாற்றுகிறார்.
இந்த பேரணியில் சுமார் 1 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரீனா குப்தா தெரிவித்துள்ளார். இதனால் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் ராம்லீலா மைதானத்திலும், மைதானத்தை சுற்றியும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மைதானத்தின் நுழைவு வாயில்களில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட உள்ளனர். மைதானத்திற்குள் வருபவர்கள் அனைவரும் சோதனை செய்யப்படுவார்கள்.
- அசோக் கெலாட் மக்களுக்காக உழைத்திருந்தால் விளம்பர போஸ்டர் எதற்கு
- டெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து ஆம் ஆத்மி ஆட்சிதான்
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ராஜஸ்தானிலும் ஆதிக்கம் செலுத்த ஆம் ஆத்மி கட்சி விரும்புகிறது. இதற்கு முன்னோட்டமாக பஞ்சாப் மாநில முதல்வருடன் இணைந்து நேற்று ராஜஸ்தானில் கெஜ்ரிவால் பேரணி நடத்தினார்.
நேற்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆம் ஆத்மி ஆட்சியை டெல்லி மற்றும் பஞ்சாபில் யாராலும் 50 வருடத்திற்கு வீழ்த்த முடியாது. நீங்கள் வரும் தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அப்படி செய்தால் ராஜஸ்தானில் இருந்தும் எங்களை 50 வருடத்திற்கு யாராலும் நீக்க முடியாது என்ற வகையில் சேவைகள் செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்போம்.
நாங்கள் இங்கே வரும்போது, அசோக் கெலாட் போஸ்டர்கள் கங்காநகர் முழுவதும் மற்றும் இந்த மைதானத்திலும் ஒட்டப்படிருந்ததை பார்த்தோம். அவர் கடந்த 5 வருடம் மக்களுக்காக உழைத்திருந்தால், இந்த போஸ்டர்கள் தேவையிருந்திருக்காது.
பேரணியின்போது சிலர் இங்கே வந்து நாற்காலிகளை தூக்கி எறிந்து சேதப்படுத்தினர். இதெல்லாம் கோழைத்தனம். அசோக் கெலாட் 5 வருடம் ஏதும் செய்யவில்லை. இதனால் ஆம் ஆத்மியின் பேரணிகளை அழிக்க முயற்சிக்கிறார்கள்.
இவ்வாறு தெரிவித்தார்.
- ஒருமித்த கருத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாமல் அதை செயல்படுத்த முடியாது.
- இந்த பிரச்சினையில் பெரிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
பொது சிவில் சட்டம் அவசியம் என்று தெரிவித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜாபியத் உலமா-இ-ஹிந்த் ஆகிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி இந்த சட்டத்திற்கு ஆதரவாக உள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சந்தீப் பதக் கூறியதாவது:-
கொள்கை அளவில் நாங்கள் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தின் 44வது பிரிவு நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறது. ஆனால் இது அனைத்து மதங்களுடனும் தொடர்புடையது என்பதால், இந்த பிரச்சினையில் பெரிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அனைத்து மதத்தினரிடம் இருந்தும், அரசியல் கட்சியினரிடம் இருந்தும் ஆலோசனைகளை பெறவேண்டும். ஒருமித்த கருத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாமல் அதை செயல்படுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
2024 பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்டம் என்ற ஆயுதத்தை பாஜக கையில் எடுத்துள்ள நிலையில், ஆம் ஆத்மி தலைவரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவருக்கு ஒரு சட்டம் இருந்தால் வீட்டை ஒழுங்காக நடத்த முடியாது, அதுபோல்தான் இரண்டு சட்டங்களில் நாடு இயங்க முடியாது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
- ஜூலை 5ம் தேதி, 70 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவசரச் சட்டத்தின் நகல்கள் எரிக்கப்படும்.
- மத்திய அரசின் நடவடிக்கையானது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் செயல் என ஆம் ஆத்மி அரசாங்கம் கூறியது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூலை 3ம் தேதி, மத்திய டெல்லியில் உள்ள அவரது ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில், மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற அவசர சட்டத்தின் நகலை எரிப்பார் என்று அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.
செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரும், டெல்லி அமைச்சருமான சௌரப் பரத்வாஜ் கூறியதாவது:
கருப்பு அவசரச் சட்டம் மூலம் டெல்லியை சட்டவிரோத கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனை எதிர்த்து, ஜூலை 3ம் தேதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேபினட் அமைச்சர்கள் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்சி அலுவலகத்தில் கருப்பு அவசரச் சட்டத்தின் நகல்களை எரிக்க வேண்டும். பிறகு, ஜூலை 5ம் தேதி, 70 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவசரச் சட்டத்தின் நகல்கள் எரிக்கப்படும். அதற்கு பிறகு, ஜூலை 6 முதல் ஜூலை 13 வரை, டெல்லியின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அவசரச் சட்டத்தின் நகல்கள் தீ வைத்து எரிக்கப்படும். கட்சியின் 7 துணைத்தலைவர்களும் டெல்லியின் ஒவ்வொரு பகுதியிலும் அவை எரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில், அக்கட்சியின் 7 துணைத் தலைவர்களான திலீப் பாண்டே, ஜர்னைல் சிங், குலாப் சிங், ஜிதேந்தர் தோமர், ரிதுராஜ் ஜா, ராஜேஷ் குப்தா மற்றும் குல்தீப் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டெல்லியின் காவல்துறை, பொது ஒழுங்கு மற்றும் நிலம் உள்ளிட்ட சேவைகளின் கட்டுப்பாட்டை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் மே-11 அன்று உச்சநீதிமன்றம் ஒப்படைத்தது. உச்ச நீதிமன்றத்தின் மே-11 தீர்ப்புக்கு முன்னர் டெல்லி அரசாங்கத்தின் அனைத்து அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பணியிடமர்த்தல் அதிகாரங்கள், டெல்லி லெப்டினன்ட் கவர்னரின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.
டெல்லியில் ஐ.ஏ.எஸ். (IAS) மற்றும் டானிக்ஸ் (DANICS) அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும், பணியமர்த்துவதற்கும் அதிகாரத்தை உருவாக்குவதற்கான ஒரு அவசரச் சட்டத்தை மே 19 அன்று மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசு கொண்டு வந்த இந்த அவசர சட்டம், குரூப்-ஏ அதிகாரிகளுக்கு எதிராக இடமாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைக்க வழி செய்கிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது, சேவைக் கட்டுப்பாடு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் செயல் என ஆம் ஆத்மி அரசாங்கம் கூறியது.
ஜூன் 11ம் தேதி இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக அக்கட்சி ஒரு மகா பேரணியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- துணை முதல்-மந்திரியாக அஜித்பவார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
- சகன் புஜ்பாலும் மந்திரிசபையில் சேர்க்கப்பட்டார்.
மும்பை :
மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அஜித்பவார், சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசின் மந்திரி சபையில் இணைந்ததுடன் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் டுவிட்டரில் கூறியதாவது:-
நாட்டின் மிகப்பெரிய ஊழல் ஆதரவாளர் பிரதமர் நரேந்திர மோடி. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு பிரதமர் உத்தரவாதம் அளித்த 2 நாட்களுக்கு பிறகு, மகாராஷ்டிராவில் சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசாங்கத்தில் துணை முதல்-மந்திரியாக அஜித்பவார் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் சகன் புஜ்பாலும் மந்திரிசபையில் சேர்க்கப்பட்டார். இன்று அனைத்து டி.வி. சேனல்களும் பிரதமர் மோடியை கண்டிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிகாரிகளை நியமிப்பதில் ஆளுநர்- முதல்வர் இடையே மோதல்
- உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கிய நிலையில் மத்திய அரசு அவரச சட்டம்
டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கும் கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் அதிகம் என மத்திய அரசு கூறுகிறது.
அதிகாரிகள் உள்பட பல விசயங்களில் ஆளுநர் தலையிடுவதால் இதை எதிர்த்து கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றத்தில் அதிகாரிகளை நியமனம் செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் அளித்தது.
டெல்லி அரசின் அதிகாரத்தை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. வருகிற மழைக்கால கூட்டத்தொடரில் அதை நிறைவேற்ற இருக்கிறது.
இதற்கிடையே, டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா டெல்லி மின்சாரத்துறை ஒழுங்குமுறை ஆணையம் இயக்குனராக ஓய்வு பெற்ற நீதிபதி குமாரை நியமித்தார்.
கடநத 21-ந்தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இன்னும் குமார் அந்த பதவியில் பொறுப்பேற்கவில்லை. நேற்று பதவி ஏற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் மின்சாரத்துறை மந்திரி அதிஷி அலுவலகத்திற்கு வரவில்லை. தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வர இயலவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் குமார் பதவி ஏற்க முடியாமல் போனது.
இந்த நிலையில், இன்று குமார் பதவி ஏற்கவேண்டும். அதிஷி உடல்நிலை சரியில்லை என்றால், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என ஆம் ஆத்மிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், அந்த கடிதத்தில் ஜனாதிபதி கடந்த 21-ந்தேதி குமாரை நியமித்து ஆணை பிறப்பித்த போதிலும், டிஜிட்டல் உலகத்தில் இன்னும் அதை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி இதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை.
தனது முன்னிலையில் பதவி பொறுப்பை ஏற்றுக்கொள்ள குமாருக்கு அதிஷி கடிதம் எழுதியிருந்தார். ஆனால் நேற்று பதவி ஏற்க இருக்கும் நிலையில் அதிஷி அலுவலகம் வரவில்லை.
- யமுனை ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் டெல்லி நகரில் வெள்ளம் புகுந்தது
- டெல்லியின் முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொது சேவைகள் ஸ்தம்பித்தன
வட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. குறிப்பாக டெல்லி, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், அரியானா மாநிலங்களில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
யமுனை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் யமுனை ஆற்றில் வெள்ளம் அதிகரித்தது. அரியானா மாநிலத்தில் யமுனை ஆற்றில் கட்டப்பட்டுள்ளது ஹத்னிகுண்ட். அதிக நீர்வரத்தால் ஹத்னிகுண்ட் தடுப்பணை திறந்து விடப்பட்டது.
டெல்லியில் மழை குறைந்த நிலையிலும் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டெல்லியில் பெரும்பாலான பகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் கடுமையான போக்குவரத்து உள்ளிட்ட பொதுசேவைகள் ஸ்தம்பித்தன.
முக்கியமான சாலைகளில் நீர் ஓடியதால் பெரும் ஆபத்தான நிலை ஏற்பட்டது. தற்போது இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துள்ளது. நீர் வடிந்து சகஜ நிலை ஏற்பட்டு வருகிறது. இதற்கு இடையே டெல்லியின் முக்கிய பகுதிகள் உள்ள நீரை சுத்திகரித்து செய்து யமுனை ஆற்றுக்கு கொண்டு செல்லும் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதால், யமுனை ஆற்றின் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. தற்போது அந்த கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரியானை அரசை பயன்படுத்தி பா.ஜதனா டெல்லியில ஒரு சில இடங்களை மூழ்கடிக்க வேண்டுமென்றே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டு தவறானவை. ஒரு லட்சம் கனஅடிக்கும் அதகமாக நீர்வரத்து இருக்கும்போது, யமுனை ஆற்றின் மற்ற இடத்திற்கு தண்ணீர் திறந்து விட இயலாது என அரியானா அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல் மற்றும் பொது தொடர்பு துறை சார்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் மத்திய நீர் ஆணையம் வழிகாட்டு நெறிமுறையின்படி ஒரு லட்சத்திற்கும் அதிகமான கனஅடி நீர் வருகையின்போது மேற்கு யமுனை அல்லது கிழக்கு யமுனை கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட முடியாது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், அரியானா முதல்வரின் நீர்ப்பாசனத்திற்கான ஆலோசகர் தேவேந்திர சிங், ஹத்னிகுண்ட் தடுப்பணையில் ஒரு லட்சத்திற்கும் அதிக கனஅடி தண்ணீர் வரும்போது, பெரிய பாறைகள் காரணமாக மேற்கு யமுனை மற்றும் கிழக்கு யமுனை கால்வாயில் தண்ணீரை வெளியேற்ற முடியாது எனத் தெரிவித்தார்.
அது தடுப்பணையின் கட்டமைப்பை சேதப்படுத்தலாம். ஆகவே, கால்வாய்களுக்கான முதன்மை ரெகுலேட்டர் வாயில்கள் மூடப்பட்டிருந்தன. பக்கவாட்டு ரெகுலேட்டர் வாயில்கள் திறக்கப்பட்டு தண்ணீர் யமுனை ஆற்றில் விடப்பட்டன.'' எனத் தெரிவித்துள்ளது.