search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abhishegam"

    • மதியம் அம்பாளுக்கு அபிஷேகமும், கஞ்சிவார்த்தலும், அன்னதானமும் நடைபெற்றது.
    • மாலை அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரமும், அன்னதானமும் நடைபெற்றது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தால் நடத்தப்படும் ஆழ்வான்கோவில் தெரு, ஜோதி மாரியம்மன் கோவிலின் 3-ம் ஆண்டு அபிஷேக, ஆராதனை விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு சர்க்கரை படித்துறையில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின், அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், மதியம் அம்பாளுக்கு அபிஷேகமும், கஞ்சிவார்த்தலும், அன்னதானமும் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை அன்னபூரணி அலங்காரமும், அன்னதானமும் நடைபெற்றது.

    விழாவில் கோபால கிருஸ்ணன், சீனுவாஸ்சன், சேதுராமன், சங்கத்தலைவர் கீர்த்திவாசன், துணைத்தலைவர் சுரேஷ், செயலாளர் சுரேஷ், பொருளாளர் அபிஷேக் முரளி, நிர்வாக கமிட்டி தலைவர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவிளக்கு பூஜை, பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்று.
    • அக்னிசட்டி, காவடி, அலகு காவடி எடுத்து வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் மேலக்கொட்டையூர் மாரியம்மன் கோவிலில் மார்கழி திருவிழாவையொட்டி கணபதி ஹோமம் அதனை தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி சிறப்பு மண்டகப்படி நடைபெற்றது.

    இந்த கோவிலில் மார்கழி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் தொடர்ந்து கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாண்டு மார்கழி திருவிழாவையொட்டி மாவிளக்கு பூஜை பூச்சொரிதல் விழா நடைபெற்று.

    முக்கிய நிகழ்ச்சியான இன்று புறவழிச்சாலையில் காவேரி கரையிலிருந்து கொட்டும் மழையில் நாதஸ்வர மேளதாளங்கள் தாரை தப்பட்டையுடன் பால்குடம் வேல் சக்தி கரகம் அக்னிசட்டி காவடி அலகு காவடி எடுத்து முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது.

    தொடர்ந்து மாரியம்மன்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்த சந்தன காப்பா அலங்கார மும் அம்மனுக்கு கஞ்சி வார்த்தலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    இரவு 7 மணி அளவில் ஸ்ரீ அழகு நாச்சியம்மன் உற்சவர் ரிஷப வாகனத்தில் பதினெட்டாம்படி கருப்புசாமி வேலு மாரியம்மன் சக்தி கரகமும் சக்தி கரகமும் மேளதாளம் புழங்க இன்னிசைக் கச்சேரியுடன் வீதி உலா நடைபெறுகிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கிராம நாட்டாமைகள் ஊர் பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர். 

    • காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை.
    • சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை.

    சீர்காழி:

    கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் ரங்கநாயகி உடனாகிய பாலவடரங்கநாதர் கோயில் உள்ளது.

    இந்த கோவிலில் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பால வடரங்கநாதர் மற்றும் ரங்கநாயகிக்கு காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து அங்குள்ள ஆஞ்சநேயர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் கோவில் அர்ச்சகர் ரமேஷ்ஐயர் செய்திருந்தார்.

    • துர்க்கை அம்மனுக்கு பால், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்படும்.
    • சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

    இக்கோவிலில் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமை மிகவும் விஷேசமானதாகும்.

    அன்று துர்க்கை அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
    • சங்கல்பம் மேற்கொண்டு சுவாமிக்கு ஆராதனைகள் செய்யப்பட்டது.

    திருவையாறு:

    திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தில் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு நேற்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. குடும்ப நன்மைக்காகவும், பொருளாதார மேன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், தேச அமைதிக்காகவும், முன்னோர்களின் ஆசி வேண்டியும் சங்கல்பம் மேற்கொண்டு சுவாமிக்கு ஆராதனைகள் செய்யப்பட்டது.

    பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குருமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.

    ×