என் மலர்
நீங்கள் தேடியது "abhishekam"
- நேற்று முன்தினம் வரை ரூ. 1500 செலுத்தி செய்யப்பட்ட அபிஷேக கட்டணம் தற்போது ரூ.3000.
- தங்கரத புறப்பாடு கட்டணம் 1201-ல் இருந்து 2000 ஆக உயர்ந்துள்ளது.
சுவாமிமலை:
அறுபடைவீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிநாதசுவாமி கோவிலில் அபிஷேகம் அலங்காரம் மற்றும் தங்கரத புறப்பாடு போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு பக்தர்கள் சேவா கட்டணம் செலுத்தி தரிசனம் செய்து தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.
இவ்வாறு இதுவரை பக்தர்கள் செலுத்தி வந்த சேவா கட்டணங்களை 100 சதவீதம் உயர்த்தி நேற்று முதல் அமலுக்கு வருவதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் வரை ரூ. 1500 செலுத்தி செய்யப்பட்ட அபிஷேக கட்டணம் தற்போது ரூ. 3000 எனவும், சண்முகார்ச்சனை கட்டணம் ரூ.3000-த்தில் இருந்து ரூ.6000, திரிசதை கட்டணம் ரூ.3000-த்தில் இருந்து 6000, பக்தர்கள் விரும்பி செய்யக்கூடிய நேர்த்திக்கடன்களில் முக்கியமானதான சந்தன காப்பு அலங்காரம் ரூ. 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும், சுற்றுக் கோயில் அபிஷேக கட்டணம் ரூ. 300-ல் இருந்து 600 ஆகவும் உயர்தத்ப்ப–ட்டுள்ளது.
இதேப்போல் தங்கரத புறப்பாடு கட்டணம் 1201-ல் இருந்து 2000 ஆகவும், சகஸ்ரநாமம் ரூ.100 லிருந்து 1000 ஆகவும், முத்தங்கி 500 லிருந்து 1000 ஆகவும் உபநயன கட்டணம் 500-ல் இருந்து 1000 ஆகவும், காது குத்துதல் கட்டணம் ரூ. 50 லிருந்து ரூ.500 ஆகவும், சிறப்பு வழி கட்டணம் ரூ.50 லிருந்து விசேஷ காலகட்டங்களில் மட்டும் ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு கடந்த ஏழு ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை தற்பொழுது உயர்த்தி உள்ளார்கள்.என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகவலை கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்கின்ற சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது.
- சுவாமிநாதசாமிக்கு சிறப்பு அபிஷேகமும் சண்முகார்ச்சனையும் நடைபெற உள்ளது.
சுவாமிமலை:
அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 24-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, அணுகையுடன் தொடங்கியது. வருகிற 4 - ந் தேதி வரை விழா நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சண்முகருக்கு 108 சங்காபிஷேகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு தாயார் மீனாட்சி அம்மனுடன் ஸ்ரீ சண்முக சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுக சூரன் ஆகியோரை வதம் செய்கின்ற நிகழ்சியும் தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்கின்ற சூரசம்ஹார நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவீதி வழியாக ஸ்ரீ சண்முகர் உலா வந்து கோயிலை வந்தடைந்தார்.
விழாவில் இன்று காலை சண்முகர் காவேரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று இரவு தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளன. பின்னர் மூன்று நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் விழா நடைபெற உள்ளது.
மேற்படி நாட்களில் ஸ்ரீ சுவாமிநாத சாமிக்கு சிறப்பு அபிஷேகமும் சண்முகார்ச்சனையும் நடைபெற உள்ளது .
இதனை காண வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடாக பக்தர்கள் வந்து செல்வதற்கு பேருந்து வசதி, கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, முதியோர் மற்றும் ஊனமுற்றோர் எளிதில் கீழ்ப்பிரகாரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் வண்ணம் தெற்கு ராஜகோபுரத்தில் இருந்து சாய்வு தளம் அமைத்து சக்கர நாற்காலியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் மதியம் கல்கண்டு பால் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலைத்துறை கோவில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் கண்காணிப்பாளர், பணியா ளர்கள் செய்திருந்தனர்.
- வருகிற 3-ந் தேதி பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம்.
- வருகிற 12-ந் தேதி வேலை நாளாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா பெரிய கோவில் வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
வருகிற 2-ந் தேதி மங்கள இசையுடன் விழா தொடங்கி கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெறுகிறது.
3-ந் தேதி பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் , ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு வருகிற 3ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதில் சதய விழா நாளான 3-ந் தேதி (வியாழக்கிழமை) தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அன்றைய தினத்துக்கு பதிலாக வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறைகளுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள்.
- 48 வகையான வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம்.
தஞ்சாவூர்:
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மேலும், இக்கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.
இக்கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று சதய விழாவாக கொண்டாடப்பட்டும். அதன்படி, இந்த ஆண்டு 1037-வது சதய விழா நேற்று முன்தினம் மங்கள இசையுடன் தொடங்கியது.
தொடர்ந்து கருத்தரங்கம், பட்டிமன்றம், சொற்பொழிவு நிகழச்சிகள் நடந்தது.
விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை 7 மணிக்கு சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் புத்தாடைகள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறைகளுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து யானை மீது வைத்து ராஜவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
அதன் பின்னர் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு திரவியபொடி, மஞ்சள் பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட 48 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
பின்னர் பெருவுடையார்-பெரிய நாயகி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், இரவு ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது.
- குந்தவை நாச்சியார் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம் அருகே உள்ள நாதன் கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் உள்ள ராஜராஜசோழன் சகோதரி குந்தவை நாச்சியார் சிலைக்கு ராஜராஜசோழன் சதய விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மாமன்னன் ராஜராஜசோழனின் சகோதரி குந்தவை நாச்சியார் பழையாறையில் இருந்தபோது தினமும் நாதன்கோவிலில் உள்ள ஜெகநாத பெருமாளை உச்சிகால பூஜையின் போது சுரங்கப்பாதை வழியாக வந்து தரிசனம் செய்து சென்றதாக கூறப்படுகிறது. குந்தவை நாச்சியாரின் பக்தியைப் போற்றும் வகையில் இக்கோவிலில், அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜராஜசோழனின் சதய விழாவையொட்டி நாதன்கோவிலில் உள்ள குந்தவை நாச்சியார் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- திருவாசக முற்றோதல் தொடர்ந்து இடைவிடாமல் ஐந்து மணி நேரத்துக்கு நடைபெற்றது.
- வில்லாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு வில்லாயி அம்மன் கோவிலில் உலக நன்மைக்காக ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
காசவளநாடு நமச்சிவாய அருள்நெறி சபை மற்றும் தஞ்சாவூர் அப்பர் தமிழ் மன்றம் இணைந்து வில்லாயி அம்மன் சன்னதியில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியை இன்று காலை தொடங்கினர்.
முதலில் விநாயகர் வணக்கத்துடன் ஏழு திருமுறைகளையும் பாடினர்.
காலை தொடங்கிய திருவாசக முற்றோதல் தொடர்ந்து இடைவிடாமல் ஐந்து மணி நேரத்துக்கு நடைபெற்றது.
முற்றோதல் நிகழ்வில் அப்பர் தமிழ் மன்றத்தின் நிறுவனர் ஆசிரியை புவனசுந்தர லட்சுமி, முனைவர் திருநாவுக்கரசர் மற்றும் காச வளநாடு நமச்சிவாய அருள்நெறி சபை நிர்வாகிகள் ஆர். தர்மராஜ், கோவிந்தராஜ், டி. செந்தில்குமார் உள்ளிட்டார் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து வில்லாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வடக்குப்பொய்கை நல்லூரில் கோரக்க சித்தர் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.
- கோரக்க சித்தருக்கு பால், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ள கோரக்கச்சித்தர் பீடம் ஐப்பசி பரணி விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
18 சித்தர்களில் முதன்மை சித்தரான, கோரக்கச்சித்தர் போகரின் அறிவுரைப்படி நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.
அதன்படி வடக்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ள கோரக்கச்சித்தர் பீடத்தில் ஐப்பசி பவுர்ணமி விழா மற்றும் பரணி விழா அன்னாபிஷேக நிகழ்ச்சியுடன் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து ஆலயம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, கோரக்கச் சித்தருக்கு பால், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் வெளி நாட்டினர் கலந்துகொண்டு கோரக்கச் சித்தருக்கு தீபம் ஏற்றி வணங்கினர்.
- மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்தனர்.
- மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா திருவாய்மூர் கிராமத்தில் ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் திருப்பணிகள் அனைத்தும் முடிந்ததை முன்னிட்டு நேற்று குடமுழுக்கு நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்து கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
அப்போது புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீ வீரஆஞ்சநேயர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதில் திருவாய்மூர் கிராம மக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபட்டனர்.
- மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.
இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் நாமக்கல் மட்டும் இன்றி பிற மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- நெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்து நிற்பார்கள்.
- ஐயப்பன் கோவிலில் மிக அதிகமாக கிடைப்பது நெய்தான்.
சபரிமலைக்கு சென்றதும் கோவிலின் அருகில் இருக்கும் பஸ்ம குளத்தை ஒட்டிய குழாய்களில் நீராட வேண்டும். இருமுடி கட்டைப்பிரித்து நெய்த் தேங்காயை உடைத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அபிஷேகம் செய்ய கிளம்ப வேண்டும். நெய் அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது பெற வேண்டும்.
அபிஷேகம் செய்த நெய்யை பாத்திரத்தில் ஊற்றி புரோகிதர் பக்தருக்கு கொடுப்பார். இந்த நெய் ஒரு புனிதமான மருந்து என்பதால் பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வருவர்.
மகரபூஜை அன்று நெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்து நிற்பார்கள். இந்த ஒரு நாள் மட்டும்தான் காலை முதல் மதியம் வரை தொடர்ந்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடக்கும்.
ஐயப்பன் கோவிலில் மிக அதிகமாக கிடைப்பது நெய்தான். பக்தர்கள் கொண்டு சென்ற நெய்யை தீவட்டி எரிப்பதற்கும், விளக்கு எரிப்பதற்கும் கொடுத்து விடுகிறார்கள்.
அப்பம், அரவணை ஆகியவை தயாரிக்கவும் நெய்யே பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருந்தும் மீதி வரும் நெய்யை நூற்றுக்கணக்கான டின்களில் அடைத்து அதை விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள்.
- குழந்தைப்பேறுவேண்டி கன்னிகா பூஜை நடந்தது.
- சாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதும் சுமார் 1,200 ஆண்டு மிகப் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாக விளங்கும் காமாட்சி அம்மன் உடனாய ஏகாம்பரேசுவரர் கோவில் உள்ளது. கோவிலில் எஸ்.பி.பட்டினம், சோழகன் பேட்டை, ரெகுநாத சமுத்திரம் மற்றும் 10 கிராம மண்டக படிதார்கள், மதுரை ஆலவாய் அருட்பணி மன்றம் சார்பில் சுவாமி, அம்மனுக்கு 108 மூலிகை பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனையொட்டி 100-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் நடராஜர் சுவாமியுடன் திருமுறை வேத பாராயணங்கள் முழங்க வீதி உலா சென்று வந்தனர். ருத்ர ஜெப வேத பாராயணங்கள் முழங்க சிறப்பு யாக வேள்விகள் நடை பெற்றது. தொடர்ந்து சுவாமி அம்மனுக்கு 108 மூலிகை பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் கோ பூஜையும் குழந்தை பேறு கிடைக்க வேண்டி கன்னிகா பூஜையும் நடைபெற்றது.
அப்போது குழந்தை பேறு வேண்டுதல்களுக்காக திருமணமான பெண்கள் கன்னிப் பெண்களுக்கு பாத பூஜை செய்து மஞ்சள், குங்குமம், போன்ற பொருட்களை வழங்கி வழிபட்டனர். தொடர்ந்து சாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் சாமி-அம்பாளுக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சாமி சன்னதியில் சிவனடியார்களுக்கு கிராமத்தார்களின் மரியாதை வழங்கும் நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை யொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. பூஜைகளை ஆலய குருக்கள் சபரிகிரீஸ்வர குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர்.
நிகழ்ச்சியில் திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார் மற்றும் சுற்றுவட்டார கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மதுரை ஆலவாயர் அருட்பணி மன்றத்தினர் சுந்தரபாண்டிய பட்டினம், சோழகன் பேட்டை, ரெகுநாத சமுத்திரம் மற்றும் 10 கிராம மண்டகப்படிதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
- பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
- சூரிய பகவானுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி திருக்கோலக்காவில் ஓசை நாயகி அம்மன் உடனாகிய தாளபுரீஸ்வரர் சாமி கோவில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவில் தீர்த்த குளத்தில் நீராடி சூரிய பகவான் சுவாமியுடன் எழுந்தருளும் நிகழ்வு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் இரண்டாவது ஞாயிறு சூரிய புஷ்கரணி விழாவாக நடைபெற்று வருகிறது.
அதன்படி நிகழாண்டு சூரிய புஷ்கரணி விழாவையொட்டி விநாயகர், தாளபுரீஸ்வரர் சுவாமி, ஓசை நாயகி அம்மன், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர்கள் அலங்காரத்தில் மூஞ்சூர், காமதேனு, ரிஷப, மயில் வாகனங்களில் சூரிய புஸ்கரணிக்கு எழுந்தருளினர்.
அங்கு சூரிய பகவானுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.