search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ACHIEVE"

    • அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • இதில் 8 தங்கப்பதக்கங்கள், 6 வெள்ளி பதக்கங்கள், 4 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 18 பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.

    விளாத்திகுளம்:

    கோவா மாநிலம் வாஸ்கோடாகாமாவில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தமிழ்நாட்டிலிருந்து விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ-மாணவிகள் கட்டா பிரிவு, சண்டை பிரிவில் பங்கேற்றனர். இதில் 8 தங்கப்பதக்கங்கள், 6 வெள்ளி பதக்கங்கள், 4 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 18 பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.

    சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ-இந்திய நிறுவன தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார் நடுவராக செயல்பட்டார்.

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்று பதங்கங்களை வென்ற மாணவ- மாணவிகளை அம்பாள் வித்யாலயா பள்ளி நிர்வாகி மாா்கண்டேயன் எம்.எல்.ஏ., பள்ளி தாளாளர் வீமராஜ், செயலாளர் சுப்பா ரெட்டியார், பள்ளி இயக்குனர் இந்திரா ராமராஜு, பள்ளி முதல்வர் ஆபிரகாம் வசந்தன் மற்றும் கராத்தே பயிற்சியாளர் முத்துராஜா ஆகியோர் பாராட்டினர்.

    • ஒரு மணி நேரம் யோகா செய்து மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மேலூர்

    மேலூர் நாடார் திருமண மண்டபத்தில் ஸ்ரீ சாய் பிரம்மரந்த யோகாலயம் மற்றும் புதிய சோழன் அமைப்பு சார்பில் உடலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் யோகா பயிலும் மாணவ-மாணவிகள் ஒன்றாக இணைந்து ஒரு மணி நேரம் இடைவிடாமல் ஆனந்த பத்மாசனம் யோகா செய்து சாதனை படைத்தனர்.இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் தலைவர் ராஜா மகேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சிவயோகி சிவசண்முகம் குருஜி மற்றும் மேலூர் டாக்டர் சூர்ய பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நடுவர்களாக சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் நீலமேகம் நிமலன், பொதுச்செயலாளர் ஆர்த்திகா நிமலன், தென் மண்டல தலைவர் சுந்தர், மண்டல தலைவர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீ சாய் பிரம்மரந்த யோகாலயத்தின் ஒருங்கிணைப்பாளர் சரவண பாண்டியன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.

    இதில் 50 மாணவர்கள் பங்கேற்றனர். சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • மர்காஷியஸ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நாசரேத் வட்டார அளவிலான தடகளப் போட்டியை குரு கால்பேரி டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி நடத்தியது.
    • ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி 17 வயதிற்குட்பட்ட பிரிவு நீளம் தாண்டுதலில் ஜெனிஷா செல்வி முதலிடம் பிடித்தார்.

    சாத்தான்குளம்:-

    மர்காஷியஸ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நாசரேத் வட்டார அளவிலான தடகளப் போட்டியை குரு கால்பேரி டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி நடத்தியது. இதில் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி 17 வயதிற்குட்பட்ட பிரிவு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பிரின்சி ரூபியா 2-ம் இடமும், 17 வயதிற்குட்பட்ட பிரிவு நீளம் தாண்டுதலில் ஜெனிஷா செல்வி முதலிடமும், 17 வயதிற்குட்பட்ட பிரிவு குண்டு எறிதல் போட்டியில் மார்கஸ் 2-ம் இடமும், 19 வயதிற்கு உட்பட்ட பிரிவு வட்டு எறிதல் போட்டியில் செல்வமுத்து 2-ம் இடமும், அஸ்வின் ஜெபர்சன் குண்டு எறிதல் போட்டியில் 3-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் நோபிள் ராஜ், இயக்குநர் டினோ மெலினா ராஜாத்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, உடற்கல்வி ஆசிரியர் அந்தோணி ஜான் சைமன் பிரிட்டோ ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்

    • நீட் நுழைவுத் தேர்வில் புஷ்பலதா வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் முயற்சியிலே அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • நீட் தேர்வில் மிக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன், பள்ளியின் முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    நெல்லை:

    நீட் நுழைவுத் தேர்வில் புஷ்பலதா வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் முயற்சியிலே அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    எஸ்.ஹரிஷ் 680 மதிப்பெண்கள் பெற்றுப் பள்ளியில் முதலிடத்தையும், தேசிய தர வரிசையில் 713-வது இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளார். என்.எம்.லட்சுமி காயத்ரி 676 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ம் இடத்தையும்,  665 மதிப்பெண்கள் பெற்று எஸ்.சாக்கேத்தராமன் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

    650 மதிப்பெண்ணிற்கு மேல் 4 மாணவர்களும்,600 மதிப்பெண்ணிற்கு மேல் 6 மாணவர்களும், 550 மதிப்பெண்ணிற்கு மேல் 11 மாணவர்களும் 500க்கு மேல் 19 மாணவர்களும் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இம்மாணவர்கள் அனைவரும் தங்களது முதல் முயற்சியிலேயே இம்மதிப்பெண்களைப் பெற்றுச் சாதனை புரிந்துள்ளனர்.

    நீட் தேர்வில் மிக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன், பள்ளியின் முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    • பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளர்
    • சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள்

    கரூர்:

    சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி இறுதி பொதுத்தேர்வில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள்அபார சாதனை புரிந்து கரூர் மாவட்டத்திற்கு தேசிய அளவில் பெருமை தேடித் தந்துள்ளனர்.

    10ம் வகுப்பு பொதுத்தே–ர்வில் மாணவி அக்ஷியா 500 க்கு 497 மதிப்பெண் மற்றும் கணிதம், அறிவியலில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் சாதனை புரிந்துள்ளார். மேலும் மாணவர் ஹரிஸ் குமார் 500 க்கு 489 மதிப்பெண் மற்றும் கணிதம், அறிவியலில் 100 க்கு 100 மதிப்பெண்ணும், மாணவி ரிதன்யா 500 க்கு 482 மதிப்பெண்ணும், மாணவி சம்யுக்தா 500 க்கு 478 மதிப்பெண்ணும், மாணவர் தீபக், ராகுல், மற்றும் மாணவி திவ்யா ஆகியோர் 500 க்கு 476 மதிப்பெண்ணும், பிரதிக்ஷா சமூக அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணும், வித்யாபிரியா தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெ–ண்ணும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

    12ஆம் வகுப்பு பொது–த்தேர்வில் அறிவியல் பாடப்பிரிவில் மாணவி தக்ஷின்யா 500 க்கு 488 மதிப்பெண் மற்றும் ஐ.பி பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளார். கலை பாடப்பிரிவில் மாணவிகள் அஸ்வதி, சுவாதிகா 500 க்கு 483 மதிப்பெண் மற்றும் வணிகவியலில் 100/100 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். அறிவியல் பாடப்பிரிவில் மாணவி சிந்துஜா 500 க்கு 467 மதிப்பெண் மற்றும் இயற்பி–யல் மற்றும்வேதியி–யலில் 100 க்கு 100 மதிப்பெ–ண்ணும் மாணவர் லோகேஷ் 500 க்கு 479 மதிப்பெண் மற்றும் ஐ.பி பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்ணும், மாணவர் முகேஷ் 500 க்கு 466 மதிப்பெண் மற்றும் வேதியியலில் 100 க்கு 100 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர் தேசிய கேலோ இந்தியா டென்னிஸில் தங்கப்பதக்கமும், முதல–மைச்சர் கோப்பை டென்னிஸ் போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்று கரூருக்கு பெருமை சேர்த்த மாணவி ஜனனி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் 500 க்கு 449 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்து–ள்ளார்.

    சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி இறுதி பொதுத்தேர்வில் தேசிய அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், அவர்கள் வெற்றிக்கு உறுது–ணை–யாக இருந்த பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன், முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, ஒருங்கிணைப்பாளர் ஜெர்லின் கிரிஸ்டல் மற்றும் இருபால்ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இவ்விழாவிற்குபள்ளி–யின் தாளாளர் மோக–னரங்கன் தலைமை தாங்கி–னார் . செயலர் பத்மாவதி மோகன–ரங்கன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இவ்விழாவில் சாதனை புரிந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பொன்னா–டையும் பரிசும் வழங்கி கௌரவிக்க–ப்பட்டனர்.

    ×