search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advertising banners"

    • விளம்பர பேனர்கள் அமைப்பதில் லட்சக்கணக்கில் பணம் புரள்கிறது.
    • கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தடுக்க முடியும்.

    சென்னை:

    விளம்பர பேனர்களால் ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடுமுழுவதும் எழுந்துள்ளது. மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விளம்பர பேனர் விழுந்த தில் 14 பேர் உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னையிலும் கடந்த 2019-ம் ஆண்டு விளம்பர பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம் பெண் பரிதாபமாக இறந்தார். அந்த சம்பவத்தால் விளம்பர பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டும் தடை விதித்ததுடன் தீவிரமாக கண்காணிக்கும் படியும் உத்தரவிட்டது.

    இதனால் கொஞ்சம் குறைந்த விளம்பர பேனர்கள் மீண்டும் அதிக ரித்து விட்டன. இது நல்ல வருமானம் கொழிக்கும் தொழிலாக இருப்பதால் பலர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களுக்கு அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் செல்வாக்கு இருப்பதால் அவர்கள் எதையும் கண்டு கொள்வதில்லை.

    ெசன்ைன மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்கள எதுவும் முறை யான அனுமதி பெறவில்லை.

    மும்பை சம்பவத்தை தொடர்ந்து சென்னையிலும் அனுமதி இல்லாத விளம்பர பேனர்களை அகற்றும்படி சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உத்தர விட்டுள்ளார்.

    விளம்பர பேனர் வைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறியதாவது:-

    விளம்பர பேனர்கள் அமைப்பதில் லட்சக்கணக்கில் பணம் புரள்கிறது. எவ்வொரு ஏரியாவை பொறுத்தும் வியூவை பொறுத்தும் விளம்பர பேனர் கட்டணங்கள் மாறும். வீடு மற்றும் கட்டட உரிமையாளர்களிடம் பேனர் வைப்பதற்கு அனுமதி பெறுவர்கள் அதற்ேக அட்வான்ஸ் ரூ.5 லட்சம் வரை கொடுக்கி றார்கள்.

    இதுதவிர மாதாந்திர கட்டணமும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

    விளம்பரம் செய்ய முன் வரும் நிறுவனங்களிடம் 10 நாள், 15 நாள் ஒரு மாதம் என்ற அடிப்படையில் கட்டணம் பெறுவார்கள்.

    சில இடங்களில் இருபக்கமும் பேனர் வைப்பார்கள். ஆனால் ஒரு பக்கத்துக்கு மட்டும் அனுமதி வாங்கி இருப்பார்கள். கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதை தடுக்க முடியும் என்றார்.

    • அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது
    • 3 நாட்களுக்குள் விளம்பர பேனர்களை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது

    ஈரோடு

    பொது இடங்களில் விளம்பர பேனர்களை வைக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை வகுத்து ள்ளது. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்பு நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வணிக நிறுவ னங்கள், மருத்துவ மனைகள், பொது இடங்களில் மாநகராட்சி அனுமதியின்றி விளம்பர பேனர்கள், பிளக்ஸ் பேனர்கள், ஒளிரும் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.

    இதில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், ஒளிரும் விளக்குகளை அகற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

    நோட்டீஸ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 3 நாட்களுக்குள் விளம்பர பேனர்களை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அதில் தெரிவித்துள்ளது. 3 நாட்களுக்குப் பிறகும் அவற்றாவிட்டால் மாநகராட்சியின் மூலம் அகற்றப்பட்டு அதற்கான செலவு தொகை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
    • போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது

    செங்கம்:

    செங்கம் நகரில் பல்வேறு இடங்களில் போக்கு வரத்திற்கு இடையூறாக விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு விளம்பர பேனர்கள் மீது தடை விதித்துள்ள நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி மெயின் ரோடு, போளூர் ரோடு, மில்லத் நகர், மேலப்பாளையம், தாலுகா ஆபிஸ், சார்பதிவாளர் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் வணிக மற்றும் அரசியல் கட்சி விளம்பரங்கள் விளம்பர பேனர்கள் வைக்கப்ப ட்டுள்ளது.

    இதனால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாமல் விபத்துக்கள் ஏற்படும் சூழலும். தமிழக அரசு விளம்பர பேனர்களுக்கு தடை விதித்துள்ளது.

    பேனர்கள் வைத்து சில நாட்காளக பேனர்களை அகற்ற அதிகாரிகள் முன் வரவில்லை எனவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்படும். விளம்பர பேனர்களை கண்டும் காணாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    எனவே செங்கம் நகர் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஊர் பெயர் பதாகை,வழிகாட்டி பதாகைகளை மறைக்கும் வகையில் தனியார் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
    • நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்தினர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் திருச்சி -கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.இந்தநிலையில் வெள்ளகோவில் அருகே உள்ள ஒத்தக்கடை என்ற இடத்தில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த ஊர் பெயர் பதாகை,வழிகாட்டி பதாகைகளை மறைக்கும் வகையில் தனியார் கல்வி நிறுவனங்களின் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

    தகவலறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த கல்வி நிறுவன விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்தினர். இச்செயலை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளை பாராட்டினர்.

    • தேசிய நெடுஞ்சாலை செல்வதால் எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை நெடுஞ்சாலை துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞசாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும், மேலும் நகரின் மையப்பகுதியில் காவல் துறை அலுவலகங்கள், அரசுமருத்துவமனை, வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ள பகுதியில் இந்த தேசிய நெடுஞ்சாலை செல்வதால் எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

    மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாநில நெடுஞ்சாலைகள் இணைகின்றது. அதிக வாகன போக்குவரத்து நெரிசல் காரணமாக பல்லடத்தில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றது.

    வாகன ஓட்டிகள் கவனத்துடன் ஓட்டி விபத்துக்களை தவிர்க்கும் வண்ணம், பல்லடத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முக்கிய ரோடுகளில் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து விதிகளை பின்பற்றுவோம், வாகனத்தை முந்துவதில் கவனம் தேவை, ஹெல்மெட் அணிவோம் விபத்தை தவிர்ப்போம், செல்போன் பேசிக் கொண்டு வாகனங்களை ஓட்ட வேண்டாம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு, போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை நெடுஞ்சாலை துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

    • தமிழக அரசு போக்குவரத்து விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தி, அபராத கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
    • அரசு கொண்டுவந்த புதிய போக்குவரத்து விதிமுறைகளை தொடர்ந்து பல்லடம் பகுதியில் தினசரிசுமார் 25 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது.

    பல்லடம்:

    பொது மக்கள் சாலைகளில் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, காரில் செல்கையில் சீட் பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும், போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன. இருந்தும் அவற்றை பின்பற்றாமல் சிலர் செய்யும் விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன .

    இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு போக்குவரத்து விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தி, அபராத கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது குறித்து பல்லடத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் குறித்து விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இது குறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு கூறியதாவது:-

    தமிழக அரசு போக்குவரத்து விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தி, அபராத கட்டணத்தை உயர்த்தி உள்ளது.அந்த வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய், ஹெல்மெட் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ஆயிரம் ரூபாய், உள்ளிட்ட பல்வேறு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

    அரசு கொண்டுவந்த புதிய போக்குவரத்து விதிமுறைகளை தொடர்ந்து பல்லடம் பகுதியில் தினசரிசுமார் 25 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது. குறிப்பாக ஹெல்மட் அணியாமல் வந்து அபராதம் செலுத்துவோர் அதிக அளவில் உள்ளனர். எனவே ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி,பல்லடத்தில் ஆங்காங்கே விளம்பர பதாகைகள் வைத்துள்ளோம். பொதுமக்கள் அரசின் போக்குவரத்து விதிகளை பின்பற்றி, தங்களது விலைமதிப்பில்லாத உயிரை காப்பாற்றிக்கொள்ளவும் அபராதங்களை தவிர்க்கவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திண்டிவனம் நேரு வீதி, செஞ்சி ரோடு காந்தி சிலை ஆகிய இடங்களில் உள்ள விளம்பர பதாகை அகற்றும் பணி நடந்தது.
    • நகராட்சி குப்பை அள்ளும் வாகனங்களில் எடுத்துச்சென்றனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் ஏ.எஸ். பி. அபிஷேக் குப்தா மேற்பார்வையில் திண்டிவனம் நகராட்சி யில்,சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள விளம்பர பதாகைகள் மற்றும் திண்டிவனம் நேரு வீதி செஞ்சி ரோடு காந்தி சிலை ஆகிய இடங்களில் உள்ள விளம்பர பதாகை அகற்றும் பணி, நடந்தது. நேற்று மாலை, தொடங்கி இரவு, வரை நீடித்தது.

    இதில் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்ட ர்ஆனந்தராசன் நகராட்சி பணியாளர்கள் பதாகைகளை அகற்றி, நகராட்சி குப்பை அள்ளும் வாகனங்களில் எடுத்துச்சென்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் அனுமதியின்றி விளம்பரம் பதாகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    தமிழகத்தில் காடுகள், மலைகள் மற்றும் சாலைகளில் பேனர்கள் மற்றும் விளம்பரங்கள் வைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #LSPolls #BanOnBanners
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் விளம்பரங்கள் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் பிரசாரம் மற்றும் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இந்நிலையில், இயற்கை வளங்களை பாதிக்கும் வகையில் விளம்பரங்கள் செய்வதை தடுக்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.



    அவர் தனது மனுவில், “இயற்கை வளங்களான மலைகள், குன்றுகள், பாறைகள், மரங்கள் மற்றும் அரசு சொத்துகளான நெடுஞ்சாலை பாலங்கள், சுவர்கள், ரெயில் பாலங்களில் அரசியல் கட்சியினர், வணிக நிறுவனங்கள், மத அமைப்புகள் தங்களது விளம்பரங்களை செய்கின்றனர். இதனால் அவற்றின் இயற்கை அழகு கெடுவதுடன், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். நடைபாதைகளை மறைத்தும் சாலையோரங்களிலும் சாலைகளின் நடுவிலும் விளம்பர போர்டுகளை வைக்கின்றனர். தற்போது தேர்தல் நேரம் என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும்.” என கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. அதன்படி தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் பதில் மனு மற்றும் மனுதாரரின் கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    நீதிபதிகள் தங்கள் உத்தரவில், இயற்கை வளங்களான மலைகள், காடுகள் மற்றும் சாலைகளில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிப்பதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். #LSPolls #BanOnBanners
    தினத்தந்தி செய்தி எதிரொலியாக இரவோடு இரவாக ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் உள்ள பதாகைகள் அகற்றப்பட்டன.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான செய்தி தினத்தந்தியில் நேற்று முன் தினம் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவோடு இரவாக ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் உள்ள பதாகைகள் அகற்றப்பட்டன.

    இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக நன்றி தெரி வித்தனர். மேலும் சாலை ஓரங்களில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கடைக்காரர் களால் ரோட்டிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

    தீபாவளி பண்டிகை முடியும் வரை கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    விளம்பர பேனர்கள் வைப்பதற்கு அனுமதி அளிக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதாவை, சட்டசபையில் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார். #AdvertisingBannersBill
    சென்னை:

    தமிழகத்தில் விளம்பர பலகைகள் வைப்பதில் விதிமீறல்கள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பாக பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டன. பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைப்பதற்கான உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு புதிய விதிமுறைகளை உருவாக்கியது. ஆனால் அதை சரியாக செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    இந்நிலையில், பேனர்களை வைக்க அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை சட்டசபையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி இன்று தாக்கல் செய்தார்.

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பேனர்கள், விளம்பர பலகைகள் வைப்பதற்கு உரிமம் தர இந்த மசோதா வகை செய்கிறது. மேலும், விளம்பர பலகைகளை நிறுவுவதற்கான உரிமக் கட்டணத்தை உயர்த்தவும், விதிமீறல்களில் ஈடுபட்டால் தண்டனையை உயர்த்தவும் இந்த மசோதா வழிவகுக்கிறது. இந்த மசோதாவிற்கு ஆரம்ப நிலையிலேயே திமுக எதிர்ப்பு தெரிவித்தது. #AdvertisingBannersBill
    ×