search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Advocacy"

    • கமுதியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
    • கூட்டத்தில் ஒன்றிய தலைவர் வலியுறுத்தினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போல் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணிமேகலை முன்னிலை வகித்தார்.மேலாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ் பேசுகையில், மழை காலம் தொடங்கிவிட்டன. ஆனால் போதுமான மழை பெய்யவில்லை. விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கிராமப்பகுதிகளில் காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகிறது. கமுதி யூனியனில் 30 பேரை சுகாதார பணியாளர்களாக நியமனம் செய்துள்ளோம். அவர்கள் வீடு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் டெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணிகளை வார்டு கவுன்சிலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.

    • வக்கீலை மிரட்டி மோட்டார் சைக்கிள் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
    • இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மேலேந்தல் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(வயது22). வக்கீலான இவர் சம்பவத்தன்று மேலேந்தல் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் அரிவாளை காட்டி மிரட்டி தினேஷின் மோட்டார்சைக்கிள், செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம் நாராயணன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் பறிப்பில் ஈடுபட்ட வீரசோழனை சேர்ந்த அபிஷேக் என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • வெளிநாட்டில் இருந்து பண உதவிகள் வருகிறதா? என கேட்டு வக்கீலிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்து வருகிறது.
    • மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல், போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

    மதுரை

    மதுரை அண்ணா நகரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் என்பவர் போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

    அதில், "நாட்டை துண்டாடும் வகையில் சில தேச விரோத சக்திகள் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் நலனுக்காக செய ணல்படுத்தப்படும் 'அணு உலை', 'அக்னி பாத்' உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் அந்த திட்டங்களை செயல்படுத்துவதில், வீண் காலதாமதம் ஏற்படுகிறது.

    நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த தேச விரோத சக்திகளின் பின்னணியில் வெளிநாட்டு சதி உள்ளதாக தெரிகிறது. இவர்கள் உடனுக்குடன் பலரையும் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்து கின்றனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் நெட்வொர்க் உள்ளது.

    பொதுமக்களை மூளை சலவை செய்து நாட்டிற்கு எதிராக போராட தூண்டுகின்றனர். இந்த அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கோடி கணக்கில் சட்ட விரோதமாக பணம் வருகிறது. தேசத்தை துண்டாடும் நோக்கத்தில் இத்தகைய அமைப்புகள் வெளி நாட்டு சக்திகளுடன் கை கோர்த்து செயல் பட்டு வருகின்றனர்.

    எனவே இத்தகைய தேச விரோத சக்திகளின் பின்னணியை ஆராய்ந்து, அவர்களுக்கு வெளி நாட்டிலிருந்து வரும் பண பரிவர்த்தனையை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நேரில் ஆஜராகும்படி வக்கீல் முத்துக்குமாருக்கு சமன் அனுப்பினர். அதன்படி அவர் சி.பி.சி.ஐ. டி சிறப்பு புலனாய்வு பிரிவு முன்பாக ஆஜர் ஆனார். அப்போது அவரிடம் சிபிசிஐடி போலீஸ் டிஎஸ்பி வினோதினி விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து வக்கீல் முத்துக்குமார் புகார் மனு தொடர்பான சகல ஆதாரங்களையும் டிஎஸ்பி வினோதினியிடம் ஒப்படைத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார், குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளிடம் விசா ரணை நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர்.

    ×