என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "aid"
- பிலிப்பைன்சில் யாகி புயல் உருவானது.
- இந்தப் புயல் வியட்நாமை கடுமையாக தாக்கியது.
புதுடெல்லி:
பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. இதில் வியட்நாமில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இதேபோல், யாகி புயலால் மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 74 பேர் பலியாகினர். புயலால் பாதிப்பு அடைந்த அரசுகளுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா இரங்கல் தெரிவித்தது.
இதற்கிடையே, புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர், வியட்நாம், லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபரேஷன் சத்பவ் திட்டம் மூலம் இந்தியா நிவாரண பொருள்களை அனுப்பி வைத்தது.
இந்நிலையில், யாகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மியான்மருக்கு ஆபரேஷன் சத்பவ் திட்டம் மூலம் இரண்டாவது கட்டமாக 32 டன் நிவாரண பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இதில் ஜெனரேட்டர், தற்காலிக டென்ட், சூரிய விளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்கள் அடங்கும் என தெரிவித்துள்ளது.
- தலைவர்களின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
- மூன்று ஆண்டுகளில் மானியங்கள் மற்றும் கடன்கள் இரண்டும் இந்த தொகுப்பில் அடங்கும்.
பொருளாதார அழுத்தம் மற்றும் மோதல்கள் மற்றும் அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் ஆகியவை ஐரோப்பியக் கரைகளுக்கு அதிக குடியேற்றங்களைத் தள்ளக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில் பணப் பற்றாக்குறை உள்ள எகிப்துக்கு 8 பில்லியன் டாலர் உதவிப் பொதியை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெனெ் மற்றும் பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்திரியா, சைப்ரஸ் மற்றும் கிரீஸ் தலைவர்களின் வருகையின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எகிப்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கெய்ரோவில் உள்ள ஐரோப்பிய யூனியன் மிஷன் படி, "அரபு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கான அடுத்த மூன்று ஆண்டுகளில் மானியங்கள் மற்றும் கடன்கள் இரண்டும் இந்த தொகுப்பில் அடங்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- பாகிஸ்தானியர்கள் அடிப்படையில் பெருமை, வைராக்கியம் மற்றும் திறமை கொண்டவர்கள்
- உலகின் எந்த சக்தியாலும் நம் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. உணவு, மின்சாரம் மற்றும் எரிசக்தி உட்பட அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் அங்கு மக்கள் திண்டாடி வருகின்றனர். வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வருகிறது.
நிலைமையை சரி செய்யும் முயற்சியில் அந்நாடு பல உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது.
சமீபத்தில் உலக நாணய நிதியம் (IMF) விதித்திருக்கும் நிபந்தனைகள் அனைத்திற்கும் சம்மதித்து பல ஆயிரம் கோடி கடன் பெற்றிருக்கிறது. தனது நட்பு நாடான சீனாவிடமிருந்து கூடுதலாக சுமார் ரூ.5 ஆயிரம் கோடி ($600 மில்லியன்) கடனையும் பாகிஸ்தான் பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் ராணுவ தலைவர் சையத் அசிம் முனிர், சுயசார்புடைய நாடாக பாகிஸ்தான் மாற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கானேவால் மாதிரி விவசாயப் பண்ணை (Khanewal Model Agriculture Farm) திறப்பு விழாவில் பேசிய சையது கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தானியர்கள் அடிப்படையில் பெருமை, வைராக்கியம் மற்றும் திறமை கொண்டவர்கள். தற்போது உள்ள பிச்சை எடுக்கும் எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும். அல்லா, அனைத்து ஆசீர்வாதங்களையும் பாகிஸ்தானுக்கு அளித்துள்ளார். உலகின் எந்த சக்தியாலும் நம் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது.
ஒரு மாநிலம் ஒரு தாயைப் போன்றது. மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான உறவு, அன்பும் மரியாதையும் கொண்டது. பாதுகாப்பும் பொருளாதாரமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை மற்றும் இன்றியமையாதவை. பாகிஸ்தான் ராணுவம் தனது நாட்டிற்கு சேவை செய்வதில் பெருமிதம் கொள்கிறது.
ராணுவம் தனது பலத்தை மக்களிடமிருந்து பெறுவதுபோல் மக்களும் ராணுவத்தால் பலம் பெறுகின்றனர். தற்போது நிலவும் நெருக்கடியில் இருந்து பாகிஸ்தான் மீளும் வரை ராணுவம் ஓயப்போவதில்லை. நாடு விவசாய புரட்சியை சந்திக்கும். சிறு விவசாயிகள் பயன்பெறவும், பசுமை முயற்சிகளின் நோக்கத்தை பரப்பவும் நவீன தரத்திற்கு ஏற்ற மாதிரி பண்ணைகள் நாடு முழுவதும் நிறுவப்படும்.
இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜூலை நிலவரப்படி, அந்நாடு சீனாவிற்கு திருப்பி தர வேண்டிய கடன் உட்பட, மொத்த கடன் ரூ.20 ஆயிரம் கோடி ($2.44 பில்லியன்) ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
- தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
சேலம்:
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
அதன்படி தமிழகத்தில் 2022-2023ம் கல்வியாண்டிற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான என்எம்எம்எஸ் தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரி- 25ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இத்தேர்விற்கான விண்ணப்பங்களை வரும் 26-ம் தேதி முதல் ஜனவரி 20-ம் தேதி வரை, https://dgel.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து, மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமை யாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் . இதற்கான கடைசி நாளாக ஜனவரி 24-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- உளவுத்துறையில் சிறப்பான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
- தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம்:
இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்குவது போல இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி கலவரம் மாநில உளவுத்துறை தோல்வியையே காட்டுகிறது. இதனால் உளவுத்துறையில் சிறப்பான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
பெரியார் கல்லூரியில் வினாத் தாளில் தாழ்த்தப்பட்ட சாதி எது என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட தலைவர் பெரியசாமி உட்பட பலர் உடன் இருந்தனர்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் வக்கீல் விசாகன் ராஜா ஏற்பாட்டில் எழும்பூர், சேப்பாக்கம், துறைமுகம் பகுதிகளில் 68 இடங்களில் கட்சி கொடியேற்றப்பட்டு 680 மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
680 முதியோருக்கு வேட்டி-சேலை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் எழும்பூர் பகுதி செயலாளர் பூங்கா ரமேஷ், சேப்பாக்கம் பகுதி செயலாளர் செந்தில் நாதன், துறைமுகம் பகுதி செயலாளர் ஸ்பாட் ராஜா உள்பட மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மத்திய சென்னை மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் ஏற்பாட்டில் மாவட்டம் முழுவதும் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு சீருடை மற்றும் ஏழைகள், முதியோருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
கோவில்களில் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் கோவிந்தன், வில்லிவாக்கம் பகுதி செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான பிரபு, அண்ணாநகர் பகுதி நிர்வாகிகள் முத்துகுமார், தனசேகர், கோபிநாத், ராஜம்பாள் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வடசென்னை மாவட்ட செயலாளர் ப.மதிவாணன் ஏற்பாட்டில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு சீருடை, கல்வி உதவி தொகை, முதியோர், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சி.எம்.ரவிச்சந்திரன், திரு.வி.க.நகர் பகுதி செயலாளர் அரி, பெரம்பூர் பகுதி செயலாளர் எம்.வேல்முருகன், கொளத்தூர் பகுதி செயலாளர் அலெக்சாண்டர் உள்பட மாவட்ட, பகுதி, வட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சி.ஆனந்தன் ஏற்பாட்டில் வடபழனி முருகன் கோவிலில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் ஆதரவற்ற முதியோருக்கு உணவு, உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு சீருடை, கல்வி, உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சைதை அகமது, கூத்த பிரான், புண்ணியமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் ரத்தினம், ராஜ்குமார், மருவை சுப்பு, பிரஸ் பாஸ்கர், நித்யா பாரதி மற்றும் மாவட்ட, வட்ட இணை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி பி.பிரபாகரன் ஏற்பாட்டில் முதியோர் இல்லங்களுக்கு சென்று காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆதரவற்ற பெண்களுக்கு தையல் மிஷின், நிதி உதவி, சுய உதவி குழு பெண்களுக்கு நிதி, மாணவ-மாணவிகளுக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் நாராயணன், விஸ்வநாதன், முருகேசன், சுப்பிரமணி, பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார், நாராயணன், செல்வ ஜோதி லிங்கம், சூரியா, ரமேஷ், கலா, செல்வம், முருகன் மற்றும் மாவட்ட பகுதி வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்