என் மலர்
நீங்கள் தேடியது "Akshay Kumar"
- நடிகை ரிச்சா சதாவின் பதிவு வருத்தமளிப்பதாக அக்ஷய் குமார் தெரிவித்திருந்தார்.
- தற்போது அக்ஷய் குமாரை விமர்சித்து பிரகாஷ் ராஜ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பாலிவுட்டில் ராம் லீலா, சாக் அண்ட் டஸ்டர், மசான் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிச்சா சதா. இவர் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த இந்திய ராணுவ வீரரின் பதிவிற்கு "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)" என கமெண்ட் செய்திருந்தார்.

ரிச்சா சதா
இந்த கமெண்ட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து ரிச்சா சதாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்ததையடுத்து தனது பதிவிற்கு வருத்தம் தெரிவித்து ரிச்சா சதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அக்ஷய் குமார்
இதனிடையே நடிகர் அக்ஷய் குமார், ரிச்சா சதாவின் "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwaan says hi)" என்ற பதிவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து "இதைப் பார்க்கையில் வருத்தமளிக்கிறது. நமது ஆயுதப்படைகளுக்கு நன்றியின்றி இருக்கக் கூடாது. அவர்கள் இருப்பதால்தான் நாம் இன்று இருக்கிறோம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

பிரகாஷ் ராஜ்
இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ், "உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை அக்ஷய் குமார். உங்களை விட நடிகை ரிச்சா சதா சொன்னது நம் நாட்டுக்கு பொருத்தமாக இருக்கிறது" என அக்ஷய் குமாரை விமர்சித்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Didn't expect this from you @akshaykumar ..having said that @RichaChadha is more relevant to our country than you sir. #justasking https://t.co/jAo5Sg6rQF
— Prakash Raj (@prakashraaj) November 25, 2022
- இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார், 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'சூரரைப் போற்று'. இத்திரைப்படம் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 'சூரரைப் போற்று' திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

சூரரைப் போற்று
2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்தியிலும் இயக்கி வருகிறார். 'சூரரைப் போற்று' சூர்யாவின் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

சுதா கொங்கரா - ஜி.வி.பிரகாஷ்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் படத்தின் பாடல்கள் ரெக்கார்ட் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இயக்குனர் சுதா கொங்கராவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#SooraraiPottru Hindi songs recording on progress … coming up with fresh songs for it … super excited @Sudha_Kongara @akshaykumar @Suriya_offl @Abundantia_Ent @rajsekarpandian pic.twitter.com/7sZf4vUBIt
— G.V.Prakash Kumar (@gvprakash) December 27, 2022
- தமிழில் ‘2.0’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார்.
- அக்ஷய் குமாருக்கு எதிராக பலரும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.
தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் வருகிற மார்ச் மாதம் அக்ஷய்குமார் சில நடிகைகளுடன் வட அமெரிக்கா சென்று கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். இதனை விளம்பரப்படுத்த உலக உருண்டையின் இந்திய வரைபடத்தில் செருப்பு காலுடன் நிற்பதுபோன்று புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

அதில் கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலம் வட அமெரிக்க ரசிகர்களை 100 சதவீதம் சந்தோஷப்படுத்த இருக்கிறோம், தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார். தற்போது இந்த புகைப்படத்துக்கு வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
"இப்படி காலில் செருப்பு போட்டுக்கொண்டு இந்திய வரைபடம் மீது நிற்பது நியாயமா? நமது நாட்டை கவுரப்படுத்துங்கள். அவமதிக்க வேண்டாம். நீங்கள் செய்த வேலைக்கு இந்தியர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று கண்டித்து உள்ளனர். இது வலைத்தளத்தில் பரப்பரப்பாகி உள்ளது.
- நடிகர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.
- இவர் தற்போது செல்பி திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளார்.
தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது இவரது நடிப்பில் தயாராகி உள்ள 'செல்பி' இந்தி படம் திரைக்கு வருகிறது. மலையாளத்தில் பிருதிவிராஜ் நடித்து வெற்றிபெற்ற 'டிரைவிங் லைசென்ஸ்' படத்தின் இந்தி ரீமேக் ஆக இது தயாராகி உள்ளது. செல்பி படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இந்தப்படத்தை அக்ஷய்குமார் வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அதாவது அவர் கையில் செல்போனை வைத்துக்கொண்டு 3 நிமிடங்களில் ரசிகர்களுடன் 184 செல்பி புகைப்படங்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகர் ராக் 3 நிமிடங்களில் 105 செல்பி எடுத்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. அவரது சாதனையை அக்ஷய்குமார் முறியடித்துள்ளார். இந்த சாதனையை ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்து உள்ளார்.
- இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார்.
- இவரின் படங்கள் தோல்வி அடையாததற்கு தானே பொறுப்பேற்று கொள்வதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார், கேத்ரீனா கைப் நடித்த 'சூர்யவன்ஷி' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருகின்றன. கடந்த ஆண்டு வெளியான 'ரக்ஷா பந்தன்', 'சாம்ராட் பிரித்விராஜ்' ஆகிய படங்கள் வசூலில் பின்தங்கியது. 'ராம்சேது' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், படத்தின் பட்ஜெட்டை விட குறைவான வசூலையே பெற்றது.

அக்ஷய் குமார்
அக்ஷய் குமார் நடிப்பில் அண்மையில் 'செல்பி' திரைப்படம் வெளியானது. இந்த படம் முதல் நாளில் ரூ.2.50 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தனது படங்களின் தொடர் தோல்வி குறித்து அக்ஷய் குமார் மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் அவர் பேசியதாவது, "இப்படி நடப்பது எனக்கு முதன்முறையல்ல. என்னுடைய திரைப்பயணத்தில் ஒரே நேரத்தில் 16 தோல்விப்படங்களை கொடுத்திருக்கிறேன். ஒரு காலத்தில் 8 படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளன.

அக்ஷய் குமார்
படங்கள் வெற்றி பெறாததற்கு நான் தான் காரணம். எனது தவறு தான் காரணம். பார்வையாளர்கள் மாறிவிட்டனர். நானும் மாற வேண்டிய தேவை எழுந்துள்ளது. நாம் நம்மை மாற்றியாகவேண்டும். மீண்டும் தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பார்வையாளர்கள் வழக்கமானதைத் தாண்டி வேறொன்றை எதிர்பார்க்கிறார்கள். தொடர்ந்து படங்கள் தோல்வியடைகிறது என்றால் நாம் மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதற்கான அலராம் தான் அது. நான் மாற முயல்கிறேன். இப்போதைக்கு என்னால் செய்ய முடிந்தது அதுதான். படம் ஓடவில்லை என்றால் அதற்கு காரணம் ரசிகர்கள் அல்ல. காரணம் எனது விருப்பத்தேர்வு தான். ஒருவேளை எனது படங்களில் சரியான அம்சங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம்." இவ்வாறு அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
- இயக்குனர் ராஜ் மேத்தா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘செல்பி’.
- இப்படத்தில் நடிகர் அக்ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகி வெளியான திரைப்படம் 'செல்பி'.

செல்பி
மலையாளத்தில் பிருதிவிராஜ் நடித்து வெற்றிபெற்ற 'டிரைவிங் லைசென்ஸ்' படத்தின் இந்தி ரீமேக் ஆக உருவான இப்படத்தை ராஜ் மேத்தா இயக்கினார். மேலும், இந்த படத்தில் இம்ரான் ஹாஷ்மி, நுஷ்ரத் பருச்சா, டயானா பென்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

செல்பி
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாள் வசூலாக ரூ.2.55 கோடியை மட்டுமே வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், 'செல்பி' திரைப்படம் வெளியாகி 14 நாட்கள் கடந்ததையடுத்து தற்போது வரை உலக அளவில் ரூ.21.85 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இந்திய அளவில் ரூ.16 கோடியை படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அக்ஷய் குமார் படங்களில் முதல் நாள் வசூலில் மிக குறைந்த வசூலை பெற்ற திரைப்படமாக 'செல்பி' உள்ளது.
- இயக்குனர் சுதா கொங்கரா ‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்தாண்டு ஓடிடி-யில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் கதையானது ஏர் டெக்கான் விமானத்தின் நிறுவனரான கே.ரா.கோபிநாத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் மாறன் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இதையும் சுதா கொங்கரா தான் இயக்கி வருகிறார். அதேபோல் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

சூரரைப்போற்று இந்தி ரீமேக் போஸ்டர்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. டைட்டில் வெளியாகும் முன்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
We are ready for take off! ✈️
— Akshay Kumar (@akshaykumar) March 21, 2023
Production No. 27 (Untitled) releases in theatres worldwide on 1st September, 2023. #RadhikaMadan@SirPareshRawal@Sudha_Kongara #Jyotika@Suriya_offl @vikramix @rajsekarpandian @Abundantia_Ent@2D_ENTPVTLTD@CaptGopinath@sikhyaent@gvprakash pic.twitter.com/OW9NjKkmAy
- பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு வந்து சென்றதை தொடர்ந்து மாலத்தீவு அமைச்சரின் எக்ஸ் பக்க பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது
- மாலத்தீவுக்கு எதிராக லட்ச தீவை புகழ்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் திரை பிரபலங்கள்
இந்தியாவில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 2ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து அந்த பயணம் குறித்த அனுபவத்தை புகைப்படங்களுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார். இதனைத்தொடர்ந்து, இந்தியா மாலத்தீவை குறிவைத்துள்ளது என சர்ச்சைக்குரிய வகையில் மாலத்தீவு அமைச்சர் பதிவிட்டிருந்தார்.
இதன் எதிரொலியாக, திரை பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்கு எதிராக லட்ச தீவை புகழ்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துகளை அனுப்பும் மாலத்தீவைச் சேர்ந்த முக்கிய பொது நபர்களின் கருத்துக்களைக் கண்டேன். அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாட்டுக்கு இப்படிச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் அவர்களிடம் நல்லவர்களாக இருக்கிறோம். அதேசமயம் இப்படியான வெறுப்பை நாம் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? என பதிவிட்டிருந்தார். மேலும், நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அதன் அழகை வியந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால், கண்ணியம் மிகவும் முக்கியமானது. இந்திய தீவுகளை ஆராய்ந்து நமது சொந்த சுற்றுலாவை ஆதரிப்போம்" என தெரிவித்திருந்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டூல்கர் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "சிந்துதுர்க் பகுதியில் எனது 50வது பிறந்தநாளை கொண்டாடி 250 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நாம் கேட்பதை விட அதிகமாக கொடுக்கக்கூடியது இந்த கடல் நகரம். அற்புதமான விருந்தோம்பலுடன் இணைந்த அழகிய இடங்கள் நினைவுகளின் பொக்கிஷத்தை நமக்கு கொடுத்துச் செல்லும். இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்
நடிகர் சல்மான் கான், "லட்சத்தீவின் அழகான சுத்தமான மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளில் நமது பிரதமர் நரேந்திர மோடியைப் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. இதன் சிறப்பான அம்சம் என்னவென்றால், அது இந்தியாவில் உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகை ஷ்ரத்தா கபூர், "பழமையான அழகிய கடற்கரையையும், உள்ளூர் கலாசாரத்தையும் உள்ளடக்கிய லட்சத்தீவில் எனது விடுமுறை நாட்களை செலவழிக்க ஆவலாக உள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.
- நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இந்திய நாட்டின் குடியரசு தினத்தை தங்கள் பாணியில் உற்சாகமாக கொண்டாடினர்.
- நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.
நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜோர்டான் நாட்டில் பிரபல பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் குடியசு தின விழாவை உற்சாகமாக கொண்டாடினார். 'படே மியான் சோட்மியான்' படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் தற்போது நடந்து வருகிறது.
இந்த படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இந்திய நாட்டின் குடியரசு தினத்தை தங்கள் பாணியில் உற்சாகமாக கொண்டாடினர்.
ஜோர்டான் நாட்டு கடற்கரையில் இருவரும் இன்று அதிகாலை பெரிய அளவிலான மூவர்ண கொடியை கையில் ஏந்தியவாறு உற்சாகமாக ஓடி, குடியரசு தினவிழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர். பின்னணியில் ஒலிக்கும் வந்தே மாதரம் பாடலுடன் ஜோர்டான் கடற்கரையில் இருவரும் ஓடியவாறு எடுக்கப்பட்ட வீடியோ நாட்டின் தேச உணர்வைத் தூண்டுவதாக அமைந்தது.
இந்த வீடியோவை 'எக்ஸ்' தள பக்கத்தில் அக்ஷய் குமார் பகிர்ந்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.
- டைட்டில் டிராக் பாடலை அனிருத் ரவிச்சந்தர் மற்றும் விஷால் மிஷ்ரா பாடியுள்ளனர்.
- வாஷூ பக்னானி தயாரிக்கும் இந்த படம் ஏப்ரலில் வெளியாகிறது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் "படே மியன் சோட்டே மியன்." இதன் டைட்டில் டிராக் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அபுதாபியின் ஜெராஷ்-இல் உள்ள மிக அழகிய ரோமன் தியேட்டர் பின்னணியில் படமாக்கப்படும் முதல் பாடல் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
டைட்டில் டிராக் வெறும் பாடல் என்பதோடு, 100-க்கும் அதிக நடன கலைஞர்களுடன் பிரமாண்டமாக தயாராகிறது. டைட்டில் டிராக் பாடலை அனிருத் ரவிச்சந்தர் மற்றும் விஷால் மிஷ்ரா பாடியுள்ளனர். இதற்கு பாஸ்கோ - சீசர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

ரசிகர்கள் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் வகையிலான இந்த பாடல் வரிகளை இர்ஷாத் கமில் எழுதியுள்ளார். சகோதரத்துவத்தை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் பாடலாக இது இருக்கும். ஏ.ஏ.இசட். ஃபிலிம்ஸ் சார்பில் வாஷூ பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் இணைந்து படே மியன் சோட்டே மியனை வழங்குகின்றன.
இந்த படத்தை அலி அப்பாஸ் சாஃபர் இயக்கியுள்ளார். வாஷூ பக்னானி தயாரிக்கும் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.
- இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது.
- ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர்.
சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும் டி10 தொடர் இந்தியாவில் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் ஐஎஸ்பிஎல் என்கிற பெயரில் நடத்தபடுகிறது. இந்த போட்டி 10 ஓவர்களை கொண்டது. இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது.
மார்ச் 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கினர்.
இந்த தொடரின் முதல் போட்டியில் அமிதாப் பச்சன் அணியும் அக்ஷய் குமார் அணியும் மோதுகின்றனர். இதன் தொடக்க விழாவில் சச்சின், ராம் சரண், சூர்யா, அக்ஷய் குமார் ஆகியோர் உலக அளவில் பிரபலமான நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஐ.பி.எல். துவக்க விழா தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
- முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 டி20 கிரிக்கெட் தொடர் உலகம் முழுக்க பிரபலமான கிரிக்கெட் தொடர் எனலாம். கிரிக்கெட் உலகில் அதிக ரசிகர்களை கொண்ட தொடராக ஐ.பி.எல். பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல். சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். துவக்க விழா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மார்ச் 22-ம் தேதி நடைபெறும் ஐ.பி.எல். துவக்க விழா தொடர்பான தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன.

2024 ஐ.பி.எல். தொடரின் துவக்க விழா சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் ஏ.ஆர். ரகுமான், சோனு நிகம், டைகர் ஷெராஃப், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து இந்த சீசனின் முதல் போட்டி துவங்கும். அதன்படி 2024 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது.