என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "alagiri"
- முதலமைச்சரின் ராஜினாமாதான் அவர்களின் நோக்கம்.
- மதுவற்ற தமிழகம் தான் வளர்ச்சி நிறைந்த, வலிமை மிக்கதாக இருக்கும்.
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவிலில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவாதத்திற்குரியது. காங்கிரசை பொறுத்தவரை மதுவிலக்கு என்பதில் உறுதி யாக உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க., கட்சிகள், கள்ளக்குறிச்சி மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கிறீர்களா அல்லது அந்த மரணத்தை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அரசியல் செய்கிறீர்களா என்பது தெரியவில்லை.
இந்த கட்சிகள் தங்களின் மது கொள்கையை வெளிப்படுத்த மறுக்கின்றன. இந்த கட்சிக்காரர்கள் எல்லாம் அந்த ஊரில் மது விற்பனை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அழகிரி, ஸ்டாலினை வீழ்த்த மதுவை கையில் எடுத்திருக்கிறார்கள். முதலமைச்சரின் ராஜினாமாதான் அவர்களின் நோக்கம். பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மக்கள் மீது இல்லை. இந்த அரசு நீடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மதுவற்ற தமிழகம் தான் வளர்ச்சி நிறைந்த, வலிமை மிக்கதாக இருக்கும்.
தவறு செய்தவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். குற்றவாளிகளை பாதுகாக்க வில்லை. குற்றத்தை நியாயப்படுத்தவில்லை. சரியான பாதையில் அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. எனவே இந்த அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும் என்கின்ற கருத்தை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அழகிரி கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், கட்சி தலைமை அவரை கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடத்தினார் மு.க.அழகிரி. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி மதுரை ஆதீனம் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலினும், அழகிரியும் இணைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.
‘சோபியா கைது செய்யப்பட்டிருக்க கூடாது, அவரை அழைத்து பேசியிருக்க வேண்டும். தமிழிசை சத்தம் போட்டது இயல்பு தான், அவர் அவரின் கடமையை செய்திருக்கிறார்’ என்றும் மதுரை ஆதீனம் தெரிவித்தார். #MaduraiAdheenam
மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அவரது மகன் மு.க.அழகிரி இன்று (புதன்கிழமை) தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி நடத்த இருக்கிறார். இந்த பேரணிக்கு சென்னை மாநகர போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பை வகித்த மு.க.அழகிரி, சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை அவர் தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தி.மு.க.வில் சேர அவர் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்தன.
கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அமைதியாக இருந்து வந்த மு.க.அழகிரி, கடந்த மாதம் 13-ந்தேதி தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, நிருபர்களுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரி, “எனது அப்பாவிடம் வந்து ஆதங்கத்தை தெரிவித்தேன். அது என்ன என்பது உங்களுக்கு இப்போது தெரியாது. கருணாநிதியிடம் உண்மையாக விசுவாசம் கொண்ட தொண்டர்கள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள்” என்று அதிரடியாக கூறினார்.
இந்தநிலையில், மதுரையில் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய மு.க.அழகிரி, சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5-ந்தேதி (இன்று) அமைதி பேரணி நடத்த இருப்பதாகவும், அதில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவித்தார்.
பேரணி இன்று நடைபெறும் நிலையில், முன்னேற்பாடுகளை செய்வதற்காக நேற்று முன்தினமே மு.க.அழகிரி மதுரையில் இருந்து சென்னை வந்தார். அவரது சார்பில், அமைதி பேரணிக்கு போலீசாரிடம் அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்டது. போலீசாரும் அதற்கு அனுமதி அளித்துவிட்டனர்.
திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி தொடங்குகிறது. இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக அவரது ஆதரவாளர்களும் வெளியூர்களில் இருந்து வந்துள்ளனர்.
இந்தப் பேரணி வாலாஜா சாலை வழியாக, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைகிறது. அங்கு, மு.க.அழகிரி மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். மேலும், தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்து முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
மு.க.அழகிரியின் அமைதி பேரணியை தொடர்ந்து, வழிநெடுக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மு.க.அழகிரியின் ஆதரவாளர்களின் வாகனங்களும் எங்கெங்கு நிறுத்த வேண்டும் என்ற தகவலும் முன்கூட்டியே அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #Alagiri #DMK
சென்னிமலை:
தி.மு.க.வில் உள்ள எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்க ஈரோடு மாவட்டத்தில் அழகிரி ஆதரவாளர்கள் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பெருந்துறை சுகுணா சக்தி என்கிற சக்திவேல் செயல்படுகிறார். தி.மு.க.வில் கருணாநிதி இறந்த பின்பு நடந்த செயற்குழுவில் அழகிரிக்கு அழைப்பு இல்லாமல் இருப்பது இன்னும் அழகிரியை கட்சியில் சேர்க்காமல் இருப்பது அழகிரி ஆதரவாளர்கள் மட்டத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
அடுத்த மாதம் 5-ந் தேதி கருணாநிதி சமாதியில் அழகிரி தலைமையில் ஆதரவாளர்கள் திரண்டு ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் மும்மராக நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் இருந்தும் கணிசமான தொண்டர்களை அழைத்து செல்ல சத்தம் இல்லாமல் ஒருங்கிணைப்பு வேலை நடக்கிறது.
ஈரோடு மாவட்ட தி.மு.க.,வை பொறுத்த அளவில் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைப்பது, மாஜி மாவட்ட செயலாளர் ராஜா அணியில் இருந்து தற்போது விலகி இருப்பவர்களை பார்த்து அழகிரி அணிக்கு இழுக்கும் வேலை தொடங்கி விட்டது.
சென்னிமலை அப்பாய் செட்டியார் வீதியில் உள்ள தனியார் கடையில் அழகிரி ஆதரவாளர்கள் கூட்டம் மிக ரகசியமாக நடந்ததுள்ளது. இதில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் அழகிரி அணியில் தீவிரமாக செயல்படும் பெருந்துறை அருகே வசிக்கும் சுகுணா சக்தி என்ற சக்திவேல் கலந்து கொண்டுள்ளார்.
அவர் பேசும்போது, ‘‘அழகிரி அண்ணன் சொல்லி விட்டார் அஞ்சலி கூட்டத்திற்கு நமது மாவட்டத்தில் இருந்து குறைந்தது 10 பஸ்களில் செல்ல வேண்டும். ஒதுங்கி உள்ள நிர்வாகிகள் மற்றும் லோக்கல் எதிர் கோஷ்டியினர் என்று பலரிடமும் சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வருங்காலத்தில் தி.மு.க., அரியணை ஏற வேண்டும் எனில் அழகிரி அண்ணனால் தான் முடியும்’’ என பேசி உள்ளர்.
அதே போல் கொடுமுடி, பெருந்துறை, மொடக்குறிச்சி பகுதிகளிலும் ரகசிய கூட் டம் நடந்துள்ளது.
இது குறித்து சுகுணா சக்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘இப்போது எதுவும் பேச முடியாது. உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் விரைவில் விடை தெரியும். அழகிரியின் பலம் மெரினாவில் நிரூபிக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.ரகசிய கூட்டம் நடத்தவில்லை. தி.மு.க.வில் உள்ள எனது நண்பர்களை தான் சந்தித்து வந்தேன்’’ என்றார். #dmk #alagiri
கடந்த மாதம் 28-ந்தேதி கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டதுடன், மூச்சுவிடவும் திணறினார். இதனால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலை முதலில் தேறியது. நேற்று மீண்டும் உடல்நிலை கவலைக்கிடமானது. உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது, மு.க. அழகிரி, கனிமொழி, டி.ஆர்.பாலு, முரசொலி செல்வம், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருணாநிதி கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் அவரது குடும்பத்தினர் முதலமைச்சரை திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #KarunanidhiHealth #MKStalin #StalilnMeetsCM
தி.மு.க தலைவர் கருணாநிதி காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வயது மூப்பின் காரணமாக அவரது உடல்நிலையில் அடிக்கடி மாறுதல்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2 நாட்களாக கருணாநிதியின் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டதையடுத்து, இன்று காலை அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள தொண்டர்கள், கழக நிர்வாகிகள் என அனைவரும் காவிரி மருத்துவமனைக்கு வருவதும், தொலைப்பேசியில் தொடர்பு கொள்வதுமாக இருந்தனர். மேலும், கருணாநிதியை சந்திக்க அவரது மனைவி தயாளு அம்மாள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் காவிரி மருத்துவமனை வந்தடைந்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே பரபரப்பு அதிகமானது.
இந்நிலையில், காவிரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட மு.க அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக தலைவர் கருணாநிதி உடல் நலத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். #Karunanidhi #MKAlagiri #KauveryHosipital #DMK #GetWellKarunanidhi
தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி நாட்டில் தி.மு.க தொண்டர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று இரவு திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து பரவிவரும் வதந்திகளால் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்திலும், கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையிலும் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது மருத்துவமனையில் இருந்து கிளம்பிய அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கருணாநிதி நன்றாக இருப்பதாகவும், உடல்நலம் தேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையை அடுத்து, தற்போது மு.க அழகிரியின் இந்த கருத்து தொண்டர்களிடையே உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. #DMK #Karunanidhi #KauveryHospital #GetWellKarunanidhi #MKAlagiri
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்