என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "all parties"
- பஸ் நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றுவதற்கு மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும்.
- அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் மாநகர புதிய பஸ் நிலையம் செல்வதற்கு அதிக தூரம் இருப்பதால் பஸ் நிலையத்தை எம்.புதூருக்கு மாற்றுவதற்கு மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட திருமணத்தை திரும்ப பெற வேண்டும். கடலூர் மாநகராட்சிக்கு அளித்துள்ள வல்லுனர் குழு அறிக்கை தவறான தகவலை கொடுப்பதால் திரும்ப பெற வேண்டும். கொண்டங்கி ஏரி அருகில் பஸ் நிலையம் அமைத்ததால் சுற்றுச்சூழல் மாசுபடும். கலெக்டர் அலுவலகம் அருகே வெள்ள அபாய பகுதி என கூறி பஸ் நிலையம் அமைப்பதை தடுக்க கூடாது.
புதிய பஸ் நிலையம் அமைக்க பொருத்தமான இடம் கிடைக்கும் வரை தற்போது உள்ள பஸ் நிலையத்தை நவீனப்படுத்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் குளோப், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரஹீம், அனைத்து குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர் மருதவாணன், தலைவர் வெங்கடேசன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் மன்சூர், அனைத்து பொது நல அமைப்புகளின் செயலாளர் ரவி, பொது நல அமைப்பு தலைவர் திருவரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் அமர்நாத் மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் நாகராஜ், எழுத்தாளர் சங்க மாவட்ட செயலாளர் பால்கி, தமிழ்நாடு மீனவர் பேரமைப்பு தலைவர் சுப்புராயன், தனியார் பஸ் பேருந்து தொழிலாளர் சங்க தலைவர் குரு ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- திருப்பூர் மாநகராட்சியினர் மூலம் நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன.
- பணிகள் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகு மேற்படி சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.
அவினாசி :
அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டையாம்பாளையம் முதல் வேலாயுதம்பாளையம் வழியாக பூலக் காட்டுப்பாளையம் பைபாஸ் வரையிலான சாலையின் நடுவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாநகராட்சியினர் மூலம் நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகு மேற்படி சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.
இந்த சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன .பள்ளி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் இதில் பயணிக்க வேண்டி உள்ளது.
சாலையில் தினமும் பலரும் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். இது குறித்து பலமுறை நேரிலும் டெலிபோன் மூலம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.தினமும் விபத்து நடக்கும் இச்சாலை குறித்து நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பது வருந்ததக்கது.எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டுகிறோம் என அனைத்து கட்சியினர் இணைந்து கூட்டாக கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.
- இரண்டு மாதங்களாக தொடர் திருட்டு நடைபெறுவது அச்சமளிக்கிறது.
அவிநாசி :
அவிநாசி இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.இதில் முத்துசாமி, ஈஸ்வரமூர்த்தி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), கோபாலகிருஷ்ணன் (காங்கிரஸ்), பெருமாள் (ம.தி.மு.க.,), ராசுவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), ராஜ்குமார் (கொ.ம.தே.க.,),
இந்திய கம்யூனிஸ்டு சண்முகம், சுப்பிரமணியம், ஷாஜகான், செல்வராஜ், யாசின் பங்கேற்றனர்.காலை மற்றும் மாலையில் அவிநாசி அரசு பெண்கள் பள்ளி முன்பு மகளிர் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் திருட்டு நடைபெறுவது அச்சமளிக்கிறது. போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- நாங்குநேரியில் மாவட்ட மருத்துவமனை அமைக்க கோரி பல்வேறு தரப்பினர், பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நாங்குநேரியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
களக்காடு:
நாங்குநேரியில் மாவட்ட மருத்துவமனை அமைக்க கோரி, அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுநல அமைப்பினர் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் போரட்டக் குழு அமைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக களக்காட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கிருஷ்ணன் (இந்திய கம்யூனிஸ்டு), ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.), ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் ஜெயராமன், வேல்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் செல்வராஜ், பா.ஜ. ஒன்றிய தலைவர் ராமேஸ்வரன், நகர தலைவர் கணபதி, சேர்மன்துரை, ம.தி.மு.க.வை சேர்ந்த பேச்சிமுத்து, துரைஅழகன், அ.ம.மு.க.ஒன்றிய செயலாளர் ராஜசேகர், மாரியப்பன், காங்கிரஸ் முத்துகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் பூலுடையார், புரட்சி பாரதம் நெல்சன், நாம் தமிழர் செல்வின் மற்றும் ச.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் நாங்குநேரியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
திருவாரூர்:
தமிழர் தன்மான பேரவை சார்பில் முள்ளிவாய்க்கால் பேரழிவு 10-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.
கூட்டத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் ஜெயராமன் கலந்து கொண்டு பேசினார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும். கருத்து தெரிவித்தால் மட்டும் போதாது. களத்தில் இறங்கி போராட வேண்டும். மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மூலம் 2013-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து வருகிறது. ஆனால் மத்திய அரசு , காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை காவிரி டெல்டாவில் 3 சுற்றுகளாக செயல்படுத்த போகிறார்கள். புதுச்சேரிக்குட்பட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறிவிட்டார். ஆனால் தமிழக அரசு தனது நிலைப்பாடு பற்றி இதுவரை தெளிவாக கூறவில்லை. இந்த பிரச்சினையின் தீவிரத்தை அறியாமலேயே பலர் அமைதியாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.
2016-க்கு முற்பட்ட அனைத்து கிணறுகளும் ஒற்றை உரிமத்தின் கீழ்கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்படியானால் ஓட்டுமொத்த காவிரிபடுகையும் காணாமல் போய்விடும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட மத்திய அரசை கேட்டு கொள்கிறோம். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு பேராசிரியர் ஜெயராமன் கூறினார்.
பாகூர்:
கிருமாம்பாக்கத்தை அடுத்துள்ள பிள்ளையார் குப்பம் மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் த.மா.கா. நிர்வாகியை அக்கட்சி தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது, அமைச்சர் கந்தசாமி, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் விக்னேஷ் மருத்துவ கண்காணிப்பாளர் நிர்மல்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏம்பலம் தொகுதியில் வளர்ச்சி பணிகள் முறையாக நடந்து வருகிறது. வளர்ந்து வரும் தொகுதியாக ஏம்பலம் உள்ளது. புதுவை மாநில அரசுக்கு எனது பாரட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். கஜா புயல் சோகமான நிகழ்வு, அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, விவசாயிகளுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
புதுவையில் முதல்- அமைச்சரும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒத்த கருத்தோடு இணைந்து நிவாரண பணிகளை மேற்கொண்டனர். அதனடிப்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வுக்கான நம்பிக்கையை அளித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இது போன்ற நல்ல பணிகளை, புதுவை அரசு பல தரப்பட்ட மக்களுக்கும் தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
புதுவை மாநில மக்களின் நம்பிக்கையை பெற்று உணர்வுகளை புரிந்து கொண்டு, ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு ஏற்றவாறு தடைகளை எல்லாம் தாண்டி மக்கள் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.
மத்திய ஆளும் கட்சிக்கு எதிராக அகில இந்திய அளவில் மெகா கூட்டணி உருவாகும் சூழல் வெளிப்படையாக தெரிகிறது. இது மேலும், பலமடையும் என்பது எனது கருத்து. அதிகாரப்பூர்வமாக எல்லா கட்சிகளும் கூட்டணி அறிவிக்கும்போது, நாங்களும் அப்போது அறிவிப்போம்.
அமைச்சர் கந்தசாமி, நான் இங்கு வருவது அறிந்து மரியாதை நிமிர்த்தமாக என்னை சந்தித்தார். இதில், கட்சியும் இல்லை, அரசியலும் இல்லை. ஒரு குடும்ப நட்பு தான் வேறு ஒன்றும் இல்லை. இடைத்தேர்தல் நிலைபாடு குறித்து எல்லா கட்சிகளும் தங்களின் நிலைபாடுகளை அறிவிக்கும் போது, எங்களின் முடிவு குறித்து அறிப்போம்.
இவ்வாறு ஜி.கே. வாசன் கூறினார். #gkvasan
திருப்பூர் 1-வது வார்டு தண்ணீர்பந்தல் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க, தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர்.
திருப்பூர் 1-வது வார்டுக்குட்பட்ட தண்ணீர்பந்தல் காலனியின் பிரதான சாலையான கொச்சி-மீன்கரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் புதிய டாஸ்மாக் கடை ஒன்று திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சாலை மிகவும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையாகும். மேலும் அருகில் கருப்பராயன், கன்னிமான் மற்றும் ஆதிபராசக்தி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் உள்ளன.
மேலும் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இந்த சாலை வழியாக மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். டாஸ்மாக் கடை இந்த பகுதியில் திறக்கப்பட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலை உள்ளது.
இதனால் இந்த பகுதியில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கான முயற்சியை கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
இதுகுறித்து பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்துவது எதிர்க்கட்சிகளின் குறிக்கோளாக உள்ளது. இந்த நிலையில் கட்சி தலைவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார். #MallikarjunKharge #Congress
சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை, அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழர் பேரவை சார்பில் பழ.நெடுமாறன், தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதை அறிந்து தீக்குளித்து இறந்த ஜெகன்சிங் உருவ படத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-
தமிழகத்தின் நலன் காக்க அறவழியில் போராடிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது ஒரு கண் துடைப்பு நாடகமாகும். தமிழர்களின் நலனுக்காக செயல்பட வேண்டிய தமிழக அரசு அறவழியில் போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கொன்றுள்ளது. ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், இந்தி திணிப்பு போன்ற தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு குறியாக உள்ளது. இதற்கு துணையாக மாநில அரசு செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மாசுகட்டுப்பாட்டு வாரிய உத்தரவை வைத்து தான் தமிழக அரசு மூடியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, சட்டமன்றத்தில் அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடந்தது. இதில் பலர் உயிர் இழந்தனர்.
இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர். துப்பாக்கி சூட்டுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நேற்று நடந்தது.
இன்றும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.
துப்பாக்கி சூட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கத்தினர் இன்று கடை அடைப்புப் போராட்டம் நடத்தினார்கள்.
நாளை பஸ்கள், ரெயில்கள் வழக்கம்போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயுதப்படை போலீசாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். #sterliteprotest
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடியூரப்பாவை முதல்வராக பதவி ஏற்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. கர்நாடக விவகாரத்தில் மத்திய அரசு தவறாக நடந்து கொள்கிறது. நாட்டில் ஜனநாயகத்தை அழிப்பதற்கு மத்திய அரசு விரும்புகிறது.
கவர்னரை சந்தித்து எங்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பது தொடர்பான பட்டியலை அளித்தேன். ஆனால் எங்களை ஆட்சியமைக்க அவர் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லாதோருக்கு ஆட்சி அமைக்க அவர் வாய்ப்பு அளித்துள்ளார். மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் அளித்துள்ளார். நம் நாட்டில் இதுபோல நடந்திருப்பது இதுதான் முதல்முறை.
கவர்னர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்தது வியாபாரம் பேசுவதற்கு வழிவகுக்கும். அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. எம்.எல்.ஏ.க்களை மிரட்டுவதற்கும், நிர்பந்தம் அளிப்பதற்கும் தான் விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனந்த்சிங்குக்கு எதிராக வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இதனால் அமலாக்கத்துறையை கொண்டு அவரை மிரட்டுகிறது. அனந்த்சிங்குடன் நான் பேசவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் தான் இதை என்னிடம் தெரிவித்தார். எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களையும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மூலம் மத்திய அரசு மிரட்டுகிறது.
பா.ஜனதா அல்லாத கட்சிகள் இந்த விவகாரத்தில் கரம் கோர்க்க வேண்டும். இதற்கான முயற்சியை எனது தந்தை தேவேகவுடா முன்னெடுக்க வேண்டும். மாநில கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்களை அவர் ஒருங்கிணைக்க வேண்டும்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோர் பா.ஜனதாவுக்கு எதிராக இணைய வேண்டும்.
தேசத்தின் பாதுகாப்பை அவர்கள் பாதுகாக்க வேண்டும். தங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை மறக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்