என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "andal temple"
- ஆடிப்பூர தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
- சூடிக்கொடுத்த நாச்சியார் என்ற சிறப்பு பெற்ற திருத்தலம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் இந்த திருத்தலமும் ஒன்று. மங்களாசாசனம் பெற்ற கோவில்களில் ஒன்றான இந்த கோவிலில் தான், ஆண்டாளுக்கு 'சூடிக்கொடுத்த நாச்சியார்' என்ற சிறப்பு பெயர் கிடைக்கப்பெற்றது.
இங்குள்ள மூலவர் வடபத்ரசயனர் (ரெங்கமன்னார்). இவர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரு சேர காட்சி அளிப்பது இந்த தலத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் விழாக்கள் நடைபெற்றாலும், ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா 12 நாட்கள் மிகவும் கோலாகலமாக நடைபெறும்.
கொடியேற்றுவதற்கு 2 நாட்கள் முன்னதாகவே ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த தேரோட்ட திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 10-ம் தேதி (சனிக்கிழமை) நிறைவடைகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் எந்த அளவிற்கு பிரசித்தி பெற்று விளங்குகிறதோ, அந்த அளவிற்கு இவ்வாலயத்தின் தேரும் பல்வேறு சிறப்புகளை பெற்று விளங்குகிறது.
தேரோட்டத்திற்கு 45 நாட்களுக்கு முன்னதாகவே, தேரை தயார்படுத்தும் பணி, அலங்கரிக்கும் பணி தொடங்கி விடும். இந்த ஆண்டு தேரில் உள்ள பழைய வடங்கள் அகற்றப்பட்டு புதிய வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பொதுவாக அனைத்து கோவில்களிலும் சுவாமி, அம்பாளுக்கு தனித்தனியாக தேர் இருக்கும். ஆனால் ஆண்டாள் கோவிலில் பெருமாளும், அம்பாளும் ஒரு சேர மணக் கோலத்தில் காட்சி அளிப்பார்கள். அதனால், இவ்வாலயத்தில் ஒரே ஒரு தேர்தான்.
அதில்தான் ஆண்டாளும், ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் எழுந்தருளுகின்றனர். இது வேறு எங்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு ஆகும். மணக்கோலத்தில் வீற்றிருக்கும் ஆண்டாளை தரிசித்தால், நற்பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
ஆண்டாள் கோவில் தேரில் ராமாயணம், மகாபாரதத்தில் வரும் காட்சிகள் பல சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன. அதேபோல ஆண்டாளின் வாழ்க்கை வரலாறு, 64 கலைகள் குறித்த சிற்பங்கள் அனைத்தும் இந்த தேரில் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த தேர் 94 அடி உயரம் கொண்டது. தேரில் 4 சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சக்கரமும் 1 டன் எடை கொண்டது. பழங்காலத்தில் இந்த தேருக்கு 9 மரச் சக்கரங்கள் இருந்தன. ஆனால் தற்போது 4 இரும்பு சக்கரங்கள் உள்ளன.
தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய தேர் இதுவாகும். தேரோட்டத்தை முன்னிட்டு மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து பரிவட்டம் வருவது வழக்கம்.
பழங்காலத்தில் இவ்வாலயத்தின் தேரோட்டம் ஆடி மாதத்தில் தொடங்கி ஐப்பசி மாதம் வரை நடந்துள்ளது. சுமார் 4 மாதங்கள் கழித்து தான், தேர் நிலைக்கு வந்துள்ளது. அந்த நான்கு மாத காலமும், ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் குறையாமல் இருக்கும் என்பதுதான் உச்சபட்ச சிறப்பு.
அதுபோல முன்காலத்தில் சுற்றுவட்டார கிராமத்தில் எங்கு இருந்து பார்த்தாலும் தேர் தெரியுமாம். இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, ஆடிப்பூர கொடியேற்றம் நடைபெறும் அன்றே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைவார்கள்.
ஆண்டாள் கோவிலை சுற்றியுள்ள மண்டபங்கள், நந்தவனங்களில் குடும்பத்துடன் தங்குவார்கள். கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தர்கள், அப்படியே ஆங்காங்கே தங்கி இருந்து தினமும் நடைபெறும் சுவாமி வீதி உலாவில் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்வர்.
பின்னர் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுப்பர். தேர் நிலைக்கு வந்த பிறகுதான் அனைவரும் தங்களின் ஊருக்கு புறப்பட்டுச் செல்வார்கள். இது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு வழக்கமான நிகழ்வுதான். அந்த வகையில் இந்த ஆண்டு 15 ஆயிரம் பக்தர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
விழாவின் ஆரம்ப நாள் முதல் தேரோட்டம் வரை, அதாவது 9 நாட்கள் இங்கு தங்கியிருக்கும் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதனை 'ததீயாராதனம்' என்று அழைப்பர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தோரோட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
பெருமாள் அருகில் கருடாழ்வார்
பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும், பெருமாள் சன்னிதிக்கு எதிரில் தான் கருடாழ்வார் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் பெருமாளுக்கு அருகில், அவரை வணங்கியபடி கருடன் காட்சி தருகிறார்.
சூடிக்கொடுத்த நாச்சியார்
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையானது, வருடத்தில் ஒரு முறை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது அங்குள்ள பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. மதுரையில் நடைபெறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் போது கள்ளழகருக்கும் இந்த மாலை சாற்றப்படுகிறது.
அதேபோல தினமும் வடபத்ரசயனருக்கும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஆண்டாளுக்கு 'சூடிக்கொடுத்த நாச்சியார்' என்ற பெயர் ஏற்பட்டது.
- உற்சவரான பெருமாள், பேண்ட்- சட்டை அணிந்து காட்சி தருகிறார்.
- காலில் செருப்பும் அணிந்திருக்கிறார்.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் மூலவரான ரெங்கமன்னார் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார். தாயார் ஆண்டாள் என்ற திருநாமத்துடனும், கோதைநாச்சி என்ற பெயருடனும் அருள்பாலிக்கிறார். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 90-வது தலமாக திகழ்கிறது.
இவ்வாலயத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே. இங்குள்ள உற்சவரான பெருமாள், பேண்ட்- சட்டை அணிந்து காட்சி தருகிறார்.
திருவில்லிபுத்தூரில் உள்ள ரெங்கமன்னார், வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடது கையில் செங்கோல், இடுப்பில் உடைவாள் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். காலில் செருப்பும் அணிந்திருக்கிறார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ராம்கோ சேர்மன் பதவி ஏற்றார்.
- முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் புதிய அறங்காவலர்களாக ராம்கோ சேர்மன் வெங்கட் ராமராஜா, ராம்குமார் வரதராஜன், உமாராணி, நளாயினி, மனோகரன் ஆகி யோரை தேர்வு செய்து தமிழக அரசின் அறநிலை யத்துறை அறிவித்தது. அதன் பிறகு அறங்காவ லர்கள் குழு கூட்டம் நடை பெற்றது. இந்தக்கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவராக ராம்கோ சேர்மன் வெங்கட்ராமராஜா தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் இந்து அறநிலை யத்துறை இணை ஆணை யாளர் செல்லத் துரை, உதவி ஆணையாளர் வளர் மதி, நிர்வாக அதிகாரி முத்துராஜா, ஆய்வாளர் முத்து மணிகண்டன், இளைஞர் அணியை சேர்ந்த ஆர்.வி.கே. துரை, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் காளிமுத்து, நகர் மன்ற சேர்மன் தங்கம் ரவி கண்ணன், துணை சேர்மன் செல்வமணி, மாவட்ட அரசு வக்கீல் திருமலையப்பன், வத்திராயிருப்பு யூனியன் சேர்மன் சிந்து முருகன், ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகம், முனியாண்டி, மம்சாபுரம், உதயசூரியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். புதிய அறங்காவலர் குழுவினருக்கு முக்கிய பிரமுகர்கள் பொன் னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
- ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மைதானத்திலும் நிறுத்திக்கொள்ளலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை நடைபெறும் ஆண் டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்திற்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக குற்றத்த–டுப்பு நடவடிக்கையாக தேர் பவனி வரும் பாதையான 4 ரதவீதிகள், கோவில் உட்பு–றம், வெளிப்பிரகாரம் மற் றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 150 அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்கள்,
உயர் கட்டிடங்களில் பைனாக்குலர், நவீன கேம–ராக்கள் பொருத்தியும், உயர் கண்காணிப்பு கோபு–ரங்கள் அமைத்தும், காவல் துறையி–னர் டிரோன் கேமராக்களை பறக்கவிட்டும் அதன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு குற்ற நடவடிக்கைகளை தடுக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
தேரோட்டத்தை முன் னிட்டு மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் வாகனங்கள் நாளை (22-ந்தேதி) காலை 5 மணி முதல் கிருஷ்ணன்கோவில், பாட் டக்குளம் விலக்கில் இருந்து மல்லி, ஸ்ரீவில்லி–புத்தூர் ரெயில்வே பீடர் ரோடு, தாலுகா அலுவலகம் மார்க் கமாக வந்து திருப்பாற்கடல் வழியாக ராஜபாளையம் செல்வதற்கும்,
ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் எம்.பி.கே.–புதுப்பட்டி விலக்கில் இருந்து மம்சாபுரம், கம்மாப் பட்டி, ஆத்துக்கடை ஜங் ஷன், ராமகிருஷ்ணா–புரம், கிருஷ்ணன்கோவில் வழியாக மதுரை செல்லவும், சிவகாசியில் இருந்து ராஜ–பாளையம் செல்லும் வாக–னங்கள் மல்லி, ஸ்ரீவில்லி–புத்தூர் ரெயில்வே பீடர் ரோடு, தாலுகா அலுவலகம் மார்க்கமாக வந்து திருப் பாற்கடல் வழியாக ராஜபா–ளையம் செல்லவேண்டும்.
மேலும் மதுரையில் இருந்து வரும் அரசு பயணியர் பேருந்துகள் ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் சந்திப்பு, பஸ் நிலையம் வந்து பின்னர் சின்னக்கடை பஜார் வழியாக ராமகிருஷ் ணாபுரம், சர்ச் சந்திப்பு, செங்குளம் விலக்கு, என்.ஜி.ஜி.ஓ. காலனி, திருப்பாற் கடல் வழியாக ராஜபாளைம் செல்லவேண்டும்.
ராஜபாளைத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்து–கள் எம்.பி.கே.புதுப்பட்டி விலக்கில் இருந்து மம்சா–புரம், கம்மாப்பட்டி, ஆத் துக்கடை ஜங்ஷன், பேருந்து நிலையம் வந்து பின்னர் சின்னக்கடை பஜார் வழி–யாக ராமகிருஷ்ணா–புரம், கிருஷ்ணன்கோவில் வழி–யாக மதுரை செல்லவேண் டும்.
வாகன நிறுத்துமிடங்கள்
மேலும் தேரோட்டத்திற்கு மதுரையில் இருந்து வரும் பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூ–ரில் உள்ள மங்காபுரம் பள்ளி மைதானம், கான் வென்ட் பள்ளி மைதானம், ஜி.கே.பர்னிச்சர் வடக்கே உள் மைதானம், ராஜபாளை–யத்தில் இருந்து வரும் வாகனங்கள் பெரியகு–ளம் கண்மாள் சுற்றியுள்ள காலி–யிடங்களிலும், சிவகாசியில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மைதானத்திலும் நிறுத்திக் கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
- ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 9-ம் நாள் விழாவான ஜூலை 22-ம் தேதி காலை 8.05 மணிக்கு திரு ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் ஜூலை 22-ந் தேதி நடைபெறுகிறது.
108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகும். ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது இந்த ஸ்தலம். இங்கு ஆண்டு தோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டம் ஜூலை 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான கொடி யேற்றம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ ஆண்டாள் - ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டது. அதன் பின் 16 வண்டி சப்பரத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிப்பட்டம் ஊர்வல மாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடை பெற்றது. இன்று இரவு 16 வண்டி சப்பரத்தில் ஆண் டாள் ரெங்கமன்னாருடன் எழுந்தருளி வீதி உலா வருகிறார். வருகிற 17-ந் தேதி ரெங்கமன்னார் கோவர்த்த னகிரி கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்தி லும் எழுந்தருளுகின்றனர். 18-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனமும், அன்று இரவு 5 கருட சேவையும், 20-ம் தேதி ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவையும் நடைபெறுகிறது. 9-ம் நாள் விழாவான ஜூலை 22-ம் தேதி காலை 8.05 மணிக்கு திரு ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.
இதன் ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்து ராஜா, தக்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
- மாடத்தின் அடிப்பகுதியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டு உள்ளது.
- மார்கழி நோன்பு இருந்த ஆண்டாள் தனது தோழியரை எழுப்புவது போன்ற பொருளில் 30 பாசுரங்கள் பாடினாள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 48-வது திருத்தலமாகும். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதலாவதாக திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரும், 2-வதாக உள்ள திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடிய ஆண்டாளும் அவதரித்த தலம் இது.
இந்த கோவில் இரு பெரும் பகுதிகளாக அமைந்துள்ளது. வடகிழக்கில் இருப்பது வடபெருங்கோவிலுடையான் என்ற ஸ்ரீவட பத்ரசாயி கோவில். தென்மேற்கில் இருப்பதுதான் ஆண்டாள் கோவில்.
சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே இக்கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. நாச்சியார் திருமாளிகை எனப்படும் ஆண்டாள் கோவில் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.
துளசி மாட சிறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார், வடபத்ரசாயி (சுயம்பு) ஆகிய 3 பேரும் அவதரித்த பெருமை கொண்டது என்பதால், இந்த கோவிலை 'மும்புரி ஊட்டிய தலம்' என்கின்றனர். இக்கோவிலின் முதல் பிரகாரத்தில் லட்சுமி ஹயக்ரீவர் ஓவிய வடிவில் அருள் பாலிக்கிறார். கல்வியில் சிறந்து விளங்க இவரிடம் வேண்டி கொள்கிறார்கள்.
ஆண்டாள் அவதரித்த துளசி தோட்டத்தில் ஆண்டாளுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. சன்னதியின் முன்னால் துளசிமாடம் உள்ளது. இதில் இருக்கும் மண்ணை பக்தர்கள் சிறிதளவு எடுத்து கொள்கிறார்கள்.
இந்த மண்ணை வீட்டில் வைத்தால் தேவையான நேரத்தில் செல்வம் கிடைக்கும் என நம்புகின்றனர். சிலர் இந்த மண்ணை நெற்றியிலும் பூசி கொள்கிறார்கள்.
மாடத்தின் அடிப்பகுதியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டு உள்ளது. மார்கழி நோன்பு இருந்த ஆண்டாள் தனது தோழியரை எழுப்புவது போன்ற பொருளில் 30 பாசுரங்கள் பாடினாள். அவ்வாறு தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஆண்டாள் சன்னதி விமானத்தில் உள்ளன. இதற்கு 'திருப்பாவை விமானம்' என்று பெயர்.
திருமணத்தடை நீங்குகிறது
ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழி 143 பாடல்கள் கொண்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.
கிழக்கு நோக்கி இருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் வாழ்க்கையில் எல்லாமே நலமாகும் என்பர். அதன்படி இவளிடம் வேண்டிக்கோள்பவை அனைத்தும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருமணமாகாத பெண்கள் துளசி மாலை வாங்கி வந்து ஆண்டாளுக்கு சாத்தி வணங்கி, பின் அதனை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு அருகில் இருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வருகிறார்கள். தொடர்ந்து, கிணற்றை எட்டிப் பார்த்து விட்டு பின் மீண்டும் ஆண்டாளை வழிபடுகிறார்கள்.
இவ்வாறு வழிபடுகிறவர்களுக்கு கோவில் சார்பில் வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கருவறையை சுற்றியுள்ள முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. மேலும் கண்ணாடி மாளிகை, மாதவிபந்தல், வித்தியாசமான ஆஞ்சநேயர்சிலை, மன்மதன், ரதி சிலைகளும் உள்ளன.
ஆண்டின் 12 மாதங்களும் இங்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. இதில் 10-ம் நாளான சித்ரா பவுர்ணமி அன்று மதுரையில் அழகர் ஆற்றில் இறங்குவதுபோல் ஆண்டாள் - ரங்கமன்னார் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வைகாசி மாதம் வசந்த கால உற்சவ திருவிழா நடக்கிறது.
ஆனி மாதம் ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வாருக்கு உற்சவ திருவிழாவும், ஆடிப்பூரமும், மார்கழி மாதத்தில் பகல் பத்து, ராபத்து என 20 நாட்கள் திருவிழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவை தவிர, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களிலும் திருவிழா நடக்கிறது.
அமைவிடம்
மதுரையில் இருந்து 74 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பகுதியில் இருந்து வருபவர்கள் ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி வழியாக ஸ்ரீவில்லிபுத்தூரை சென்றடையலாம்.
நடைதிறப்பு நேரம்
காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.
தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்க...
ஆண்டாளின் பக்திக்கு பெருமையளித்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அவளை தன்னுடன் ஏற்றுக் கொண்டார். இதை உணர்த்தும் விதமாக இங்கு நடக்கும் ஆடித்திருவிழாவின் 7-ம் நாளில் ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் ரெங்கமன்னார் காட்சி தருவார். இந்த ஊரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. இந்த அரிய காட்சியை தரிசிக்கும் தம்பதியர் இடையே மேலும் ஒன்றுமை பலப்படும் என்கிறார்கள்.
- ஆண்டாள் கோவிலில் சுக்கிரவார ஊஞ்சல் சேவை நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
108 வைணவத் திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். இங்கு ஆடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி, மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம், பங்குனி திருக்கல்யாணம் உள்ளிட்ட திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். மேலும் ஆண்டு முழுவதும் பல்வேறு வைபவங்கள் நடைபெறும். அதில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னாருக்கு நடைபெறும் ஊஞ்சல் சேவை பிரசித்தி பெற்றது.
அதன்படி வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று சுக்கிர வார ஊஞ்சல் சேவை நடந்தது. சர்வ அலங்காரத்தில் ஆண்டாள்- ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிய ளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள்கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- ஆண்டாள் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது.
- 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் திருவேங்கமுடையான் சன்னதியில் ஆண்டாள்-ரங்கமன்னார் எழுந்தருளுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகாசி மாத கோடை வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சந்தனகாப்பு சாற்றப்பட்டு, புஷ்ப ஆடை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்பின் மாடவீதிகள் வழியாக சென்று நாடக சாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் கோவில் தெப்பத்தில் ஆண்டாள்-ரங்கமன்னார் எழுந்தருளினர்.
அங்கு ஆண்டாள் பெயரில் இயற்றப்பட்ட கோதாஸ்துதி பாசுரம் பாடப்பட்டு, ஆண்டாள்-ரங்மன்னார் தெப்பத்தை வலம் வந்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் திருவேங்கமுடையான் சன்னதியில் ஆண்டாள்-ரங்கமன்னார் எழுந்தருளுகின்றனர்.
- வழிகாட்டி உதவியுடன் ஆண்டாள் கோவிலை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் ஏற்பாட்டை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுலா வழிகாட்டி உதவியுடன் கூடிய சுற்றுலாவை கலெக் டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். இந்த சுற்றுலா வில் பங்கேற்கும் சுற்றுலா பயணிகளுக்கு ஆண்டாள் கோவில் ஸ்தல வரலாறு மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து சுற்றுலா வழிகாட்டி யின் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு விளக்கங்கள் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
10 பேர் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி என்ற நடைமுறையில் இது செயல்படுத்தப்படுகிறது. சுற்றுலாவிற்கான கட்டண தொகையாக ஒரு சுற்றுலா பயணிக்கு ரூ.100 வீதம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு மாவட் டங்கள் மற்றும் மாநிலங்க ளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பயனடைவார் கள்.தொடக்க விழா நிகழ்ச்சி யில் சுற்றுலா அலுவலர் அன்பரசு மற்றும் செயல் அலுவலர் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி திருவிழா நாளை தொடங்குகிறது.
- 10 நாட்கள் நடைபெறும் பகல் பத்து உற்சவம் ஜனவரி 1-ந் தேதி வரை நடக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ேகாவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மார்கழி திருவிழா நாளை (23-ந் தேதி) பகல் பத்து நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
அன்றைய தினம் மாலை 5மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் ஆண்டாள் பிறந்த வீட்டிற்கு வருகின்றனர். அங்கு அவருக்கு பச்சை காய்கறிகள் பரப்பி வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பிறந்த வீட்டிற்கு வந்த ஆண்டாள் வேதபிரான் பட்டர் திருமாளிகையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதன் பிறகு பகல்பத்து மண்டபத்திற்கு செல்கிறார். 10 நாட்கள் நடைபெறும் பகல் பத்து உற்சவம் ஜனவரி 1-ந் தேதி வரை நடக்கிறது. 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதை தொடர்ந்து ராப்பத்து திருவிழா தொடங்குகிறது.
11-ந் தேதி வரை ராப்பத்து உற்சவம் ராப்பத்து மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் ஆண்டாள்,ரெங்கமன்னார் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஒவ்வொரு நாட்களிலும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். வருகிற 7-ந் தேதி பிரியாவிடை உற்சவம் நடைபெறுகிறது.
உச்சநிகழ்ச்சியாக மார்கழி நீராட்ட எண்ணெய் காப்பு உற்சவ விழா 8-ந் தேதி எண்ெணய் காப்பு மண்டபத்தில் தொடங்குகிறது. இந்த விழா 15-ந் தேதி வரை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
- 108 வைணவத் திருத்தலங்களில் இந்த கோவில் முக்கியமான திருத்தலமாகும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
108 வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முக்கியமான திருத்தலமாகும். இங்கு ஆண்டுதோறும் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோவில் முன்புறமும், பெரிய பெருமாள் சன்னதி பெரிய கோபுரம் வாசல் முன்பும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் திருக்கார்த்திகையை முன்னிட்டு நேற்று 2 இடங்களிலும் சொக்கபானை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக ஆண்டாள் கோயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க, சர்வ அலங்காரத்தில் ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய பெருமாள் ஆகியோர் சப்பரங்களில் எழுந்தருளினர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை நடைபெற உள்ள ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை அனுப்பி வைக்கப்பட்டது
- பட்டு வஸ்திரங்கள் மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது
திருச்சி:
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும், தொண்டு செய்து அவருக்கு மனைவியானாள். ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் என்பதால் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்தமும், உறவும் மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்து வந்தது. எனினும் பல காரணங்களால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது.
பின்னர் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிப்புத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை நடத்து வருகிறது.
இந்த ஆண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடக்கிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கள சீர்வரிசை பொருட்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
இதையொட்டி நேற்று மாலை பட்டு வஸ்திரங்கள் மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
பின்னர் கோவில் அர்ச்சகர் சுந்தர்பட்டர் பட்டுவஸ்திரங்களை கோவில் யானை ஆண்டாள் மீது அமர்ந்து எடுத்து வர, திருச்சி மண்டல இணைஆணையர் செல்வராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் மங்களப் பொருட்களை கையில் ஏந்தியும், தலையில் சுமந்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
இன்று காலை 6 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் இந்த மங்கலப்பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோவில் நிர்வாகனத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை (1-ந்தேதி) நடைபெறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தில் தேரில் எழுந்தருளுவார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்