search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Animosity"

    • இதே பகுதியை சேர்ந்த சுப்பையனுக்கும் சின்னசாமிக்கும் இடையே மனை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • மற்ற 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே முன்விரோதம் காரணமாக தந்தை- மகனை தாக்கிய3 பேர் மீது புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சாரங்கபாணி(48). இதே பகுதியை சேர்ந்த சுப்பையனுக்கும் சின்னசாமிக்கும் இடையே மனை தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 3 -ந் தேதி சின்னசாமி தனக்கு சொந்தமான வீட்டுமனையில் வீடு கட்டுவதற்காக குழி தோண்டி பில்லர் போடுவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த சுப்பையன் மகன் வல்லரசு(20), கிருஷ்ணமூர்த்தி மகன்கள் தரணிசெல்வன்(22)நிதிஷ்குமார்(19) ஆகியோர் சின்னசாமி, அவரது மகன் சாரங்கபாணி இருவரையும் அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சின்னசாமி, சாரங்கபாணி இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து சாரங்கபாணி,48; புதுப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நிதிஷ்குமாரை கைது செய்தனர். மற்ற 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • முன்விரோத தகராறு காரணமாக இருவ ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • குமரவேல் உட்பட 2 பேர் திடீரென்று பழனி வேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த தியாக வல்லி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 47). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமர வேலுக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று முன்விரோத தகராறு காரணமாக இருவ ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது குமரவேல் உட்பட 2 பேர் திடீரென்று பழனி வேலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த பழனி வேல் கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற் றோர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டுக்கோட்டை பெரிய தெரு தனியார் வங்கி அருகில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
    • சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திலேயே கார்த்தி, வீரமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணா ம்புக்கார தெருவை சேர்ந்தவர் காத்தாடி ராஜா (வயது 52) பூ வியாபாரி . இவர் பட்டுக்கோட்டை பெரிய தெரு தனியார் வங்கி அருகில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். மேலும் இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி (37), வீரமணி (27) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் இன்று காலை தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள தனியார் மண்டபம் அருகே ராஜா நின்று கொண்டிருந்தார். அங்கு காலை நேரம் என்பதால் ஏராளமான பொதுமக்களும் நின்றிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த கார்த்தி, வீரமணி முன்விரோதத்தை மனதில் கொண்டு ராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி கார்த்தி, வீரமணி ஆத்திரம் அடைந்து அரிவாளால் காத்தாடி ராஜாவை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த காத்தாடி ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காத்தாடி ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த 1 மணி நேரத்திலேயே கார்த்தி, வீரமணியை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் கூடிய இடத்தில் நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிரதீப் பலியானார்.
    • முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தை குதிரைக்கட்டி தெருவை சேர்ந்தவர் பிரதீப் (வயது23). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், பிரதீப் வீட்டில் இருந்து வெளியே வரவழைத்தனர்.

    அப்போது மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாள் மற்றும் ஆயுதங்களால் திடீரென பிரதீப்பை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிரதீப் பலியானார்.

    இருந்தாலும் ஆத்திரம் அடங்காத மர்மநபர்கள் தாங்கள் வைத்து இருந்த ஆயுதங்களால் அவருடைய முகத்தை சிதைத்தனர். இதனால் உருவமே தெரியாத அளவுக்கு அவரது முகம் சிதைந்துவிட்டது. பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சத்யா என்பவர் மனோஜ்குமார் வீட்டின் அருகே குப்பைகளை கொட்டினார்.
    • 2 பேர் சேர்ந்து மனோஜ்குமாரின் மனைவி நந்தினியை திட்டி தாக்கிடினர்.

     கடலூர்:

    கடலூர் அருகே உள்ள கே.என். பேட்டையை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவர்கள் இடையே முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று மணிகண்டன் மனைவி சத்யா என்பவர் மனோஜ்குமார் வீட்டின் அருகே குப்பைகளை கொட்டினார். இதனால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சத்யா மற்றும் 2 பேர் சேர்ந்து மனோஜ்குமாரின் மனைவி நந்தினியை திட்டி தாக்கிடினர். இதனை விலக்க சென்ற அதே பகுதியை சேர்ந்த குமுதா, சோனியா, மனோஜ்குமார் ஆகியோரும் தாக்க ப்பட்டனர். இதுகுறித்து திருப்பாதி ரிபுலியூர் போலீசார் 3 பேர் மீது வழக்குபதிந்து உள்ளனர். 

    • இரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
    • சிவகுரு மற்றும் 4 பேர் மூதாட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் புருக்கீஸ் பேட்டை சேர்ந்தவர் ரேவை (வயது 70). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சிவகுரு மற்றும் சிலர் பணம் கடனாக வாங்கினர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று சிவகுரு மற்றும் 4 பேர் மூதாட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

    இதில் மூதாட்டி ரேவை மற்றும் விஜயலட்சுமி ஆகிய 2 பேருக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் மூதாட்டி ரேவை கொடுத்த புகாரின் பேரில் சிவகுரு மற்றும் 4 பேர் மீதும், ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மூதாட்டி ரேவை மற்றும் 6 பேர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன் விரோத தகராறில் பெண்ணை தாக்கிய கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.
    • சுய உதவி குழுவில் பணம் எடுப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே அரியந்தக்கா கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் மனைவி சிவகாமி(வயது37). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த தங்கதுரை மனைவி அலமேலு(32) என்பவருக்கும் மகளிர் சுய உதவி குழுவில் பணம் எடுப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.சம்பவத்தன்று மாலை அலமேலுவும், அவரது கணவரும் சேர்ந்து சிவகாமியை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாாின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலமேலு, தங்கதுரை ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • முருகன் வீட்டில் இருந்த சென்ட்ரிங் சீட்டை அதே பகுதிைய சேர்ந்த நித்திஷ்,சதிஷ், சக்தி, மற்றும் வினோத்குமார் எடுத்து விற்று விட்டனர்.
    • முருகன் மனைவி தட்டி கேட்டபோது அவர்கள் அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 42)இவரது வீட்டில் இருந்த சென்ட்ரிங் சீட்டை அதே பகுதிைய சேர்ந்த நித்திஷ், (22) சதிஷ், (27) சக்தி, மற்றும் வினோத்குமார் எடுத்து விற்று விட்டனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.

    சம்பவத்தன்று முருகன் வீட்டில் இல்லாத சமயத்தில் நித்திஷ், சதிஷ், சக்தி, ஆகியோர் முருகனின் வீட்டின் கேட்டை உடைத்தும் பொருட்களை சேதப்படுத்தினர். இதனை முருகன் மனைவி தட்டி கேட்டார். உடனே அவர்கள் அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து முருகன் கொடுத்த புகாரின்பேரில், வடலூர் போலீ சார்வழக்கு பதிவுசெய்து.நித்திஷ், சதிஷ், ஆகியோர்களை கைது செய்தனர்.  

    • சம்பவத்தன்று இரு தரப்பினருக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மோதலாக மாறியது.
    • 4 பேர் மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு பெரிய நரிமேடு சேர்ந்தவர் இந்திரா (வயது 40). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 25). சென்னை ஆயுதப்படை போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இரு தரப்பினருக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மோதலாக மாறியது.

    இந்த மோதலில் இருதரப்பை சேர்ந்த இந்திரா, அண்ணாதுரை, செல்வி, முத்துராமன் ஆகிய 4 பேர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் இந்திரா கொடுத்த புகாரின் பேரில் சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரபாகரன், முத்துராமன், செல்வி, பூமாதேவி ஆகிய 4 பேர் மீதும், செல்வி கொடுத்த புகாரின் பேரில் வைத்தியநாதன், செல்வி, சதீஷ், சித்ரா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன் பிரச்சினை ஏற்பட்டு இருந்தது.
    • இரு தரப்பினையே பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பு ஆனது. ஒருவருக்கொருவர் கல்லால் தாக்கி கொண்டார்கள்

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த செந்தில் (வயது 38), ஆனந்தி, (32), குடும்பத்தினருக்கும், மணிகண்டன் (40), ராதா (35), முருகேசன் குடும்பத்தினருக்கும், நிலத்தில் உள்ள பாதை சம்பந்தமாக இரு குடும்பத்தினர் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன் பிரச்சினை ஏற்பட்டு ராதா தரப்புக்கு பாதை வேண்டாம் என்று சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று ராதா நிலத்துக்கு முன் உள்ள பாதயை திருத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் செந்தில் நிலத்திற்கு முன்னால் உள்ள பாதையை திருத்தியதால் ராதா குடும்பத்தை சேர்ந்தவர்கள் நிலத்திற்கு செல்ல வழி இல்லாமல் திருத்துகிறாயே என்று எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது இதனால் இரு தரப்பினையே பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பு ஆனது. ஒருவருக்கொருவர் கல்லால் தாக்கி கொண்டார்கள். இதனால் செந்தில், ஆனந்தி, மணிகண்டன், ராதா, ஆகியோர் காயம் அடைந்தார்கள். இதனால் இரு தரப்பினரும் கல்லால் அடித்துக் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாக இரு தரப்பினரும் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

    ×