search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anti-Hindi"

    • தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே எம்.பி. ஆவார்
    • நிகழ்ச்சி நிரல் முழுவதும் இந்தியில் அச்சிடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்தார் சிவா

    இந்திய பாராளுமன்றத்தின் 5-நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

    அவை நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கவும், அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கோரவும், ஆளும் பா.ஜ.க.வால் நேற்று ஒரு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார்.

    இதனையொட்டி, காலை பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் "கஜ துவார்" பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தங்கர் தலைமை வகித்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் தி.மு.க.வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டார். தி.மு.க.வின் சார்பில் மாநிலங்களவைக்கு 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிவா கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நிகழ்ச்சி நிரல் அவருக்கு வழங்கப்பட்டது. அதில் உள்ளடக்கம் முழுவதும் இந்தியிலேயே இருந்தது. இதனை எதிர்த்த சிவா, இந்நிகழ்ச்சி நிரலை கிழித்து எறிந்துவிட்டார்.

    அவரை போலவே பல எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ராஜ்நாத் சிங், எதிர்காலத்தில் ஆங்கிலத்திலும் உள்ளடக்கம் இடம் பெறும் என உத்தரவாதம் அளித்தார்.

    பாராளுமன்றம் கூட்டப்பட்டிருப்பதன் அவசியம் குறித்து பேசிய திருச்சி சிவா, "பா.ஜ.க.வினர் எதையோ மறைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அது என்னவென்று தெரிய வேண்டும். அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் என்ன நடக்கிறது என தெரியாமல் இருந்த சூழ்நிலை இதற்கு முன் என் அரசியல் வாழ்வில் நான் பார்த்ததில்லை, என தெரிவித்தார்.

    • பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் பேட்டி
    • 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில்பாஜக பட்டியல் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.இதில் கலந்துகொண்ட பட்டியல்அணி மாநில தலைவர் தடா பெரியசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பட்டியல் இன மக்களுக்காக பாஜக அரசு செய்த சாதனைகளை பட்டியல் இன மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இலவச வீடு போன்ற திட்டங்கள் மோடி தந்துள்ளார்.

    பட்டியலின மக்களுக்காக பல்வேறு சாதனைகளை பாஜக அரசு செய்துள்ளது. திராவிட மாடல் எனக் கூறிக்கொள்ளும் திமுக அரசு பட்டியல் சமுதாய மக்களுக்கு துரோகம் செய்கிறது.

    சமூகநீதி பேசும் இவர்கள் பட்டியல் சமுதாயத்திற்கு எதிராக நடக்கிறார்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிறப்பு கூர்நிதியை நடைமுறைப்படுத்தாமல் உள்ளனர்.

    பட்டியலின மக்களுக்கான சிறப்பு கூர் நிதி திட்டத்தை முறையாக பயன்படுத்த வேண்டும்.திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை பஞ்சமி நிலத்தை மீட்போம் என்றார்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பஞ்சமி நிலத்தை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

    இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒரு போலி நாடகம். இந்தி அவர்களுக்கு மட்டும் தேவையாக உள்ளது‌ஆனால் ஏழை எளிய பொதுமக்களை இந்தி கற்க விடாமல் தடுக்கின்றனர்.

    திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் தமிழ் பேசினால் அபராதம் விதிக்கப்படுகிறது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு தமிழே தெரியாது. ‌2026-ம் ஆண்டு தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜ.க. மாவட்ட தலைவர் மனோகரன் பொதுச் செயலாளர் ஜெகன் மற்றும் பட்டியல் அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×