என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Appreciation Certificate"
- காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
- ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 3 எதிரிகளை விரைந்து கைது செய்த ஆத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 6 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 51 காவல்துறையினர் மற்றும் நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்து சிறப்பாக பணியாற்றிய உதவி அரசு வழக்கறிஞர் ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டுசான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இதன்படி, ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை கொலை செய்து தங்க நகைகளை பறித்து சென்ற வழக்கில் எதிரியை 24 மணி நேரத்தில் கைது செய்து திருடி சென்ற 11½ சவரன் தங்க நகை மற்றும் ரூ.18,400-ஐ ஆகியவற்றை கைப்பற்றி எதிரியை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்த ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன், தூத்துக்குடி நடமாடும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் கலா லட்சுமி, உதவி ஆய்வாளர்கள் முத்துராஜா, எபனேசர் மற்றும் தலைமை காவலர் கிருஷ்ணன் ஆகியோர், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள 120 டன் பொட்டாசியம் உரத்தை கடத்திச் சென்ற வழக்கில் 2 எதிரிகளை அதிரடியாக கைது செய்த முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர், தலைமை காவலர்கள் சதீஷ்குமார், அருணாச்சலம், முதல் நிலை காவலர் செல்வின் ராஜா மற்றும் தனிப்பிரிவு காவலர் ஜான்சன் ஆகியோர்,
ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 3 எதிரிகளை விரைந்து கைது செய்த ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா, ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலர் முருகேஷ்பாபு மற்றும் திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் சுந்தர்ராஜ் ஆகியோர், கோவில்பட்டி நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 18 சி.சி.டி.வி. காமிராக்கள் மற்றும் 36 சாலை தடுப்புகளை புதிதாக வைத்து திறம்பட போக்குவரத்து விதிமுறைகளை சீர்செய்த கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், தலைமை காவலர் ஸ்டீபன் இளையராஜா, முதல் நிலை காவலர் பால்ராஜ் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் எதிரிகள் மற்றும் சாட்சிகளுக்கு அதிக அளவில் அழைப்பாணைகளை சார்பு செய்த ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில்குமார் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும் மற்றும் 6 காவல் ஆய்வாளர்கள் உட்பட 51 காவல்துறையினர் மற்றும் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உதவி அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
நிகழ்சியின்போது, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்கா ணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் உதவி போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.
- மதுரையில் குடியரசு தினவிழாவில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்.
- சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
மதுரை
மதுரை மாநகர காவல்படையினர் பயிற்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக
74-வது குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தேசிய கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மேலும் 37 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 21 ஆயிரத்து 868 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், 217 காவல் துறை அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் பதக்கங்க ளையும், சிறப்பாக பணியாற்றிய 75 காவல் துறை அலுவலர்களுக்கும், அரசு துறைகளை சார்ந்த 250 அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்க ளையும் கலெக்டர் வழங்கினார்.
விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்ஷு நிகம், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளிகளில் கராத்தே பயிற்சி நடந்தது.
- அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
கோத்தகிரி,
தமிழக விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதனை முன்னிட்டு கோத்தகிரி உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பில் நீலகிரி மாவட்ட சோரின்ட்ரியூ கராத்தே பள்ளி, தூரிகை அறக்கட்டளை, கருவி அறக்கட்டளை மற்றும் மனிதனை நேசிப்போம் அறக்கட்டளை இனைந்து கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளில் கராத்தே பயிற்சி நடந்தது. இதில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா கோத்தகிரி புயல் நிவாரண கூடத்தில் நடந்தது. விழாவுக்கு நீலகிரி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் மணிகண்டராஜ் தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சரவணக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சேகர், தாத்தையன், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, மாவட்ட துணை தலைவர் சுரேஷ், சரத்பாபு, கவுதம், வெங்கடேஷ், சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையத்துக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- விழாவில் பலர் கலந்து கொண்டனர்.
தேனி:
தமிழகத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதமமந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் 5வது ஆண்டு தொடக்க நாளையொட்டி இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிக்கு பாராட்டு சான்றிதழ், பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். விழாவில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையத்துக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழை தேனி நட்டாத்தி நாடார் உறவின்முறை செய லாளர் கமலக்கண்ணனிடம் கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.
இதேபோல் கம்பம் ஆஸ்பத்திரிக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டு இருக்கும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்க ளுக்கு சான்றிதழ்களும், பய ன்பெற்ற பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரிமளாச்செல்வி, மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலர் ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- விழுப்புரத்தில் தேசிய மருத்துவர்கள் தின விழா சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
- முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைந்த பிரதான் மந்திரி காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உயிர்காக்கும் சேவையினை சிறப்பான முறையில் மேற்கொண்டனர்.
விழுப்புரம்:
தேசிய மருத்துவர் தினத்தினை யொட்டி மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் மருத்து வர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மோகன், முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைந்த பிரதான் மந்திரி காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உயிர்காக்கும் சேவை யி னை சிறப்பான முறையில் மேற்கொண்ட மரகதம் மருத்து மனையின் மருத்து வர் தியாகராஜன் மற்றும் விழுப்புரம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் பணிபுரியும் டாக்டர் கவாஸ்கர் ஆகியோரை கவுர வித்து பாராட்டுச் சான்றி தழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முண்டி யம்பாக்கம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி, துணை முதல்வர் சங்கீதா, இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) பொற்கொடி, நிலைய மருத்துவ அலுவலர் (பொ) வெங்கடேசன், விழுப்புரம் நலப்பணிகள் இணை இயக்குநர், அலுவலக தேசிய நலக்குழும ஒருங்கிணைப்பு அலுவலர் ரகுநாத், விழுப்புரம் நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவ லக நிருவாக அலுவலர் ஸ்ரீதர், மாவட்ட காப்பீட்டுத் திட்ட மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன், மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலர் இளங்கோவன் மற்றும் மாவட்ட காப்பீட்டுத் திட்ட விஜிலன்ஸ் அலுவலர் உலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்