search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aptitude Test"

    • 10-ந் தேதி நடக்கிறது
    • அறிவியல் விழிப்புணர்வு தேர்வு நடத்தப்படுகிறது.

    புதுச்சேரி:

    இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் சார்பில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான தேசிய அறிவியல் விழிப்புணர்வு தேர்வு நடத்தப்படுகிறது.

    கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேர்வில் புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களைச் சேர்ந்த 1,800 பள்ளி மாணவர்கள் எழுதினர். இதில் 130 மாணவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர்.

    மாநில அளவிலான திறனறிவு தேர்வு வருகிற 10-ந் தேதி புதுவை ராஜீவ்காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடக்கிறது.

    இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் தேசிய அளவிலான முகாமிற்கு தகுதி பெறுவார்கள். தேசிய அளவில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும்.

    தேர்வை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அருண் நாகலிங்கம் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடத்துகின்றனர்.

    • 9 மற்றும் 10-ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும்.
    • கல்வியாண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

    திருப்பூர்:

    அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த நடப்பு (2023 - 24) கல்வியாண்டு முதல் தமிழக முதல்வர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.9 மற்றும் 10-ம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் இரு தாள்களாக தேர்வு நடத்தப்படும்.

    ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம் பெறும், முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம் பெறும்.முதல் தாள் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரண்டாம் தாள் மதியம் 2மணி முதல் மாலை 4 மணி வரையும் நடக்கும். நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடை பின்பற்றி 500 மாணவர்கள், 500 மாணவிகள் வீதம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ஆயிரம் வீதம், கல்வியாண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

    நடப்பாண்டுக்கான தேர்வு செப்டம்பர் 23-ந் தேதி தேர்வு நடக்கும். பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 18-ந் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டண தொகையாக 50 ரூபாய் சேர்த்து மாணவர் பயிலும் பள்ளித்தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதுார் நெடுவயல் ஸ்ரீசிவசைலநாத நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 2022-23-ம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி கணேஷ்ராம், அச்சன்புதுார் பேரூராட்சி மன்ற தலைவா் டாக்டா் சுசிகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். தலைமைஆசிரியா் சுதாநந்தினி வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி பள்ளியின் சார்பில் தேசிய திறனாய்வு தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் தலைமைஆசிரியா் கார்த்திக்கேயன், வெள்ளத்துரை, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் தம்புசாமி, மணிகண்டன் மற்றும் இசக்கித்துரை, இசக்கி, சந்திரன், அருட்செல்வம், உள்பட பலா் கலந்து கொண்டனா். மேலும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம், தலைமைஆசிரியா், ஆசிரியா்கள் சார்பாகவும் பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியா் பிரபாகரன் நன்றி கூறினார்.

    • ஸ்ரீகுமரன் கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் கனிஷ்கா ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
    • 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு திறனாய்வு தேர்வை மிக ஆர்வத்துடன் எழுதினர்.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி ஸ்ரீகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஸ்ரீ குமரன் கல்விக் குழுமத்தின் தலைவர் மணி தலைமை தாங்கினார். ஸ்ரீகுமரன் கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் கனிஷ்கா ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ஸ்ரீகுமரன் சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஜெயமுரளி தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்று பேசினார். இத்தேர்வில் ஊட்டி, கோத்தகிரி மற்றும் திருப்பூர் சுற்றுவட்டாரப் பள்ளிகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு திறனாய்வு தேர்வை மிக ஆர்வத்துடன் எழுதினர்.

    இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம் 2 மாணவர்களுக்கும், 2-ம் பரிசாக தலா ரூ.7 ஆயிரத்து 500 மூன்று மாணவர்களுக்கும், 3-ம்பரிசாக தலா ரூ.5 ஆயிரம் 5 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. பரிசுத் தொகையை ஸ்ரீ குமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ராமகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ குமரன் சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஜெயமுரளியும் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். முடிவில் தமிழாசிரியை தமிழரசி நன்றி கூறினார்.

    • அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறனறித் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
    • தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திறனறித் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அதன்படி, விழுப்புரத்தில் 20 தேர்வு மையங்களில் 5,765 மாணவர்களுக்கும், திண்டிவனத்தில் 13 தேர்வு மையங்களில் 3,492 மாணவர்கள் என மொத்தம் 33 தேர்வு மையங்களில் 9,257 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

    • திறனறி தேர்வுக்கு 8ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிகல்வி துறை தெரிவித்துள்ளது.
    • தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் காலத்தில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்

    பெரம்பலூர்:

    2022-23 ஆம் கல்வியாண்டிற்கு தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு சார்பில் வருகிற பிப்ரவரி மாதம் 25ந்தேதி தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு (என்.எம்.எம்.எஸ்.) நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் காலத்தில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும். எனவே பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் (ஜனவரி) 20ந்தேதிக்குள் https://dge1.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வு கட்டண தொகை ரூ.50ஐ தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் அடுத்த மாதம் 24ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை https://dge1.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால், பள்ளிகள் திறந்தவுடன் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • ஆசிரியரின் உதவியுடன் நன்றாக பயிற்சி செய்ததால் தேர்வில் வெற்றியடைய முடிந்தது
    • இரு ஆண்டுக்கு உதவித்தொகை கிடைப்பதால் உதவியாக இருக்கும் என்றார்.

    திருப்பூர் : 

    பிளஸ் 2 வகுப்புகளில் அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது.அதில் 10-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் அடிப்படையில் அனைத்து வினாக்களும் கேட்கப்பட்டன. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அனைவருக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் 2 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தமிழ்மொழி திறனாய்வுத் தேர்வின் முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதில் 2.50 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் இவர்கள் அனைவருக்கும் தலா 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கருவலூர் அரசு பள்ளி மாணவி தமிழ்ச்செல்வி 89 மதிப்பெண் பெற்றும், இதே பள்ளியை சேர்ந்த செல்வி ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். இதுதவிர மாவட்ட அரசு பள்ளி அளவில் தமிழ்ச்செல்வி முதலிடம் பிடித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் உடுமலை லூர்து மாதா மெட்ரிக் பள்ளி மாணவி நேத்ரா 96 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாமிடத்தில் உள்ளார்.

    மாநில அளவில் தேர்வான, தமிழ்ச்செல்வியை, கருவலூர் பள்ளி தலைமை ஆசிரியர் சத்யபாமா, உதவி தலைமை ஆசிரியர் பிரபாவதி, தமிழாசிரியர் ஆனந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மாணவி தமிழ்ச்செல்வி கூறுகையில், தமிழ் பாடம் மிகவும் பிடித்த பாடம். ஆசிரியரின் உதவியுடன் நன்றாக பயிற்சி செய்ததால் தேர்வில் வெற்றியடைய முடிந்தது. வெற்றி பெற்றது மகிழ்ச்சி. தொடர்ந்து இரு ஆண்டுக்கு உதவித்தொகை கிடைப்பதால் உதவியாக இருக்கும் என்றார்.

    • பள்ளி மாணவ- மாணவிகள் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தி கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வி ஆண்டு முதல் தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தர–விட்டுள்ளது.
    • அதன்படி இந்த தேர்வை அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்த உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இங்கு மாணவ- மாணவிகள் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் பள்ளி மாணவ- மாணவிகள் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தி கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வி ஆண்டு முதல் தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வை அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்த உள்ளது.

    இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் 2 வருடங்களுக்கு வழங்கப்படும். எனவே அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, மாணவ- மாணவிகள் வருகிற 22-ந்தேதி முதல் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறும், தமிழ்நாடு அரசின் 10-ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும் என கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×