என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Arable lands"
- கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நீர் மாசுபட்டு விவசாயம், குடிநீர் ஆதாரம், சுற்றுச்சூழல் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்,
- தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறி இந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காங்கயம்:
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் மூலம் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கரூர் வரை சாலையோரமாகவும், விவசாயம் இல்லாத நிலங்கள் வழியாகவும் இரும்பு குழாய் பதித்து எரிவாயு மற்றும் குருடு ஆயில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையம் கிராம பகுதியில் நிலத்தின் கீழ் ஏற்கனவே செல்லும் இரும்பு குழாயில் இருந்து புதிதாக பெங்களூரு, தேவனகொந்தி வரை 360 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக குழாய் பதித்து ஆயில் கொண்டு செல்ல பாரத் பெட்ரோலிய நிறுவனம் திட்ட அறிக்கையை தயார் செய்து உள்ளது.
அதன்படி இந்த குழாய் முத்தூர் அருகே சாந்தலிங்கபுரம், நம்பகவுண்டன்பாளையம், மலையத்தாபாளையம் பகுதி கீழ்பவானி பாசன விவசாய விளைநிலங்களில் சுமார் 10 அடி ஆழத்தில் 45 அடி அகலத்தில் குழிதோண்டி குழாய் பதித்து மேட்டுக்கடை வரை கொண்டு சென்று பின்னர் மீண்டும் சாலையோரத்தில் பெங்களூரு வரை கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் வேளாண் நிலம் பாதிக்கப்படும் என்றும், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நீர் மாசுபட்டு விவசாயம், குடிநீர் ஆதாரம், சுற்றுச்சூழல் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும், தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறி இந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முத்தூர் பகுதி விவசாய விளை நிலங்களை ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி. ஆய்வு செய்தார். அப்போது கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் எம்.பி.யிடம் மாற்று வழியாக சாந்தலிங்கபுரத்தில் இருந்து சாலையோரம் வழியாக குழாய் பதித்து ந.கரையூர் ஓடை பாலம் வரை கொண்டு செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட அ.கணேசமூர்த்தி எம்.பி. இதுபற்றி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்த நிலையில் பாரத் பெட்ரோலிய நிறுவன திட்ட தலைமை அதிகாரி ராபின் மற்றும் என்ஜினீயர்கள் குழுவினர் முத்தூர் கீழ்பவானி பாசன பகுதியில் குழாய் வழியாக ஆயில் கொண்டு செல்லப்பட உள்ள கீழ்பவானி பாசன விளை நிலங்களை நேரில் பார்வையிட்டனர். அப்போது எம்.பி. மற்றும் கீழ்பவானி பாசன விவசாயிகள் விளை நிலங்கள் வழியாக குழாய் பாதிக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்றுப்பாதையில் குழாய் அமைத்து ஆயில் கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனப்பகுதி எல்லையில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் அமைந்துள்ளன.
- காட்டுப்பன்றிகள் இனப்பெருக்கம் காரணமாக அவை கிராமங்கள் வரை வர துவங்கியுள்ளன.
உடுமலை:
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனப்பகுதி எல்லையில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள நிலங்களில் நிலக்கடலை, தென்னை, மா, மொச்சை உள்ளிட்ட பல்வேறு விவசாய சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகின்ற ன. வனத்திலிருந்து வெளியேறும் காட்டுப் பன்றிகள்,யானை,மான் கூட்டம் விளைநிலங்களில் தொடர் சேதம் ஏற்படுத்தி வருகிறது. நிலக்கடலை, பொச்சை பயிர்களில் செடிகளை முழுமையாக அழித்து பொருளாதார சேதம் ஏற்படுத்தி வருகின்றன.
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப் பன்றிகள் கூட்டம் மழை நீர் ஓடைகளில் பதுங்கி இரவு நேரங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துவதால் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர்.
வல்லக்குண்டாபுரம், ஜல்லிக்கட்டு,கொங்கு ரார்குட்டை, பருத்தியூர், மானுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தொல்லையால் விவசாயிகள் சாகுபடியை கைவிடும் நிலைக்குகூட தள்ளப்பட்டுள்ளனர்.
காட்டுப்பன்றிகள் இனப்பெருக்கம் காரணமாக அவை கிராமங்கள் வரை வர துவங்கியுள்ளன. பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வரும் காட்டு பன்றிகளை மீண்டும் வனப்பகுதியில் விரட்ட வேண்டும். அவற்றை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் போராட்டமும்நடந்தது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வனவிலங்கு களால் சாகுபடி பாதிக்கும் போது நிவாரணம் வழங்க வனத்துறையினர் காலதாமதம் செய்கின்றனர். மேலும் பாதிப்புக்கும் வனத்துறை வழங்கும் நிவாரணத்திற்கும் சம்பந்தமே இல்லை. எனவே கிராம விவசாயிகளை உள்ளடக்கி மன உரிமை குழு கூட்டங்களை குறிப்பிட்ட இடைவெளியில் நடத்த வேண்டும். விவசாயிகளிடம் கருத்து கேட்டு அதற்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு உடு–ம–லை–யை–ய–டுத்த பெரி–ய–கோட்டை, தாரா–பு–ரம் சாலை உள்–ளிட்ட பகு–தி–களில் நூற்–றுக்–க–ணக்–கான ஆடு–கள் மர்ம விலங்–கு–க–ளால் கடித்–துக் குத–றப்–பட்–டன.இதன் தொடர்ச்–சி–யாக கடந்த சில மாதங்–க–ளாக உடு–மலை, மடத்–துக்–கு–ளம் பகு–தி–களில் மீண்–டும் ஆடு–கள், கன்–று–கள் உள்–ளிட்–டவை கடித்து குதறி கொல்–லப்–பட்டு வரு–கின்–றன. இதனை தொடர்ச்–சி–யாக கண்–கா–ணித்து வரும் வனத்–து–றை–யி–னர், கால்–ந–டை–களை வேட்–டை–யா–டும் மர்ம விலங்–கு–கள் வன விலங்–கு–கள் இல்லை என்–பதை உறு–திப்–ப–டுத்–தி–யுள்–ள–னர். மடத்–துக்–கு–ளத்–தை–ய–டுத்த சாம–ரா–யப்–பட்டி உள்–ளிட்ட ஒரு–சில பகு–தி–களில் கூட்–ட–மாக வரும் நாய்–கள் மனி–தர்–க–ளின் கண் முன்னே ஆடு–களை வேட்–டை–யா–டி–யுள்–ளது. மேலும் அவை மனி–தர்–க–ளை–யும் கடிக்–கத் துரத்–தி–யுள்–ளது. இந்–த–நி–லை–யில் துங்–காவி அரு–கி–லுள்ள மலை–யாண்–டிப்–பட்–டி–னம் பகு–தி–யில் பொன்–னுச்–சாமி, ஈஸ்–வ–ர–சாமி ஆகிய விவ–சா–யி–க–ளின் தோட்–டத்–துக்–குள் நள்–ளி–ர–வில் நுழைந்த நாய்–கள் 2 ஆடு–களை கடித்–துக் கொன்–றுள்–ளன.தொடர்ச்–சி–யாக ரத்த வேட்–டை–யாடி வரும் நாய்–க–ளைப் பிடிக்க நட–வ–டிக்கை எடுக்க வேண்–டும் என்–பது விவ–சா–யி–க–ளின் கோரிக்–கை–யாக உள்–ளது.
- சீமைக் கருவேலம் மரங்கள் வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும்.
- ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது.
திருத்துறைப்பூண்டி:
தமிழக முதலமைச்சருக்கு திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-
சீமைக் கருவேலம் மரங்கள் வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும். மெக்சிகோ, கரிபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்கா போன்றவற்றை தாயகமாகக் கொண்டவை.
பயிர்களுக்கு வேலியாகவும், சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950 களில் ஆஸ்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இது இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த 60 ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது. இந்த முள்மரம், அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது,
கேரளாவில் இவை வேறோடு பிடுங்கியெறியப்பட்டு இவை வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது.
தமிழகத்தில், இவை விளை நிலங்களில் 25 விழுக்காட்டிற்கு மேல் வளர்ந்து வேளாண்மையே தொடரா வண்ணம் நிலத்தைப் பாழ்படுத்தியிருக்கிறது.
இதனைக் கட்டுப்படுத்த அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.
எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி, தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது.
இவை ஆழமாக வேர் விட்டு உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் தண்ணீர் செல்வதை தடைசெய்கிறது.
இதைப்போல் இதன் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கின்றன.
இதன் வெப்பத்தால் மழையின் அளவை வெகுவாக குறைத்துள்ளது. மற்ற மரங்கள் போல் ஆக்ஸிஜனை வெளியிடுவதில்லை.
எனவே கருவேல மரங்களை மாவட்டந்தோறும் அரசு துறைகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகளை கொண்ட மக்கள் இயக்கம் மூலம் தொடர் அழிப்பு பணி செய்தால் மட்டுமே முற்றிலுமாக அழிக்க முடியும்.
எனவேஇதை அழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெரிய உருவம் கொண்ட காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதத்தை விட காட்டுப்பன்றிகள் ஏற்படுத்தும் சேதமே அதிகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
- விளைநிலத்தை சுற்றிலும் வண்ண வண்ண சேலைகளை கட்டி வைத்து வேலி போன்று அமைத்து பயிர்களை பாதுகாத்து வருகிறார்கள்.
வடவள்ளி:
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் உள்ள மக்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்து வருகிறார்கள்.
தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. சின்னவெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் பயிரிட்டு வருகிறார்கள். இதுதவிர குறுகிய கால பயிர்களான கீரை வகைகள், பூக்கள், மக்காசோளம் உள்பட பல்வேறு வகையான பயிர்களையும் விவசாயிகள் பயிரிடுகின்றனர்.
தற்போது தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 120 நாள் பயிரான மக்காசோளம் தை மாதம் அறுவடை செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
குறிப்பாக 50-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கூட்டமாக புகுந்து மக்காசோள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பெரிய உருவம் கொண்ட காட்டு யானைகள் ஏற்படுத்தும் சேதத்தை விட காட்டுப்பன்றிகள் ஏற்படுத்தும் சேதமே அதிகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளுக்கு நிரந்தர தீர்வு காணுமாறு பலமுறை வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் கூறினர்.
இந்த நிலையில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் காட்டு பன்றிகள் புகுவதை தடுக்கும் விதமாக விளை நிலத்தை சுற்றிலும் வண்ண வண்ண சேலைகளை கட்டி வைத்து வேலி போன்று அமைத்து பயிர்களை பாதுகாத்து வருகிறார்கள். இதன் மூலம் காட்டுப்பன்றி தொல்லை சற்று குறையும் என எதிர்பார்க்கிறார்கள்.
- பரமத்தி வட்டாரத்தில் கிராம பஞ்சாயத்துகளில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றிட திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
- குறைந்த பட்சம் ஒரு தொகுப்பிற்கு 8 விவசாயிகள் பயனாளிகளாக இருத்தல் வேண்டும்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் வில்லிபாளையம், பிள்ளைகளத்தூர், நல்லூர் மற்றும் இருட்டணை ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றிட திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பு வரை ஒரு தொகுப்பாகவும் 15-35 ஏக்கர் நிலப்பரப்பு வரை 2-வது தொகுப்பாகவும் ஏற்படுத்தலாம். மேலும் இத்திட்டத்திற்கு தேவையான தகுதிகள் தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்தாக இருக்க வேண்டும். தரிசு நில தொகுப்பின் பரப்பு தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் ஒரு தொகுப்பிற்கு 8 விவசாயிகள் பயனாளிகளாக இருத்தல் வேண்டும். பயனாளிகள் அக்கிராம பஞ்சாயத்துகளிளோ அல்லது அருகில் உள்ள கிராமத்திலோ குடியிருப்போராக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தை பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்ள பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
- நம்பி இனி பயனில்லை என்று விவசாயிகளும், விளைநிலங்களை விற்று விடுகின்றனர்.
- குழந்தைகளை உயர் கல்வி படிக்க வைப்பதுடன் விவசாயத்தை பற்றி சொல்லிக்கொடுப்பதில்லை.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 1.92 லட்சம் எக்டரில் சாகுபடி பரப்பு உள்ளது. இவற்றில் பிரதானமாக தென்னை, கரும்பு, நெல், பல்வேறு வகையான காய்கறி வகைகள், பயிறு வகைகள் விவசாயிகளால் பயிரிடப்பட்டு வருகின்றன.ஆனால்விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள கிராமங்களில் பருவமழை பொய்த்து விடுவதால் விளைநிலங்கள் தரிசாக உள்ளன.
இதனை நம்பி இனி பயனில்லை என்று விவசாயிகளும், விளைநிலங்களை விற்று விடுகின்றனர்.குறிப்பாக ரோட்டை ஒட்டிய விளைநிலங்களில், தொழிற்சாலைகள், வணிகக்கடைகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பயன்பாட்டிற்கு விற்கப்படுகிறது.சிலர் விவசாயத்தை கைவிட்டு கோழிப்பண்ணை மற்றும் தென்னை நார் தொழிற்சாலைகளில் ஈடுபடுகின்றனர். எனவே கிராமப்புற இளைஞர்கள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த குறுந்தொழில்களில் ஈடுபடும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:-
தண்ணீர் பற்றாக்குறை, உர விலை உயர்வு, பருவ மழை பொய்த்தல், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமை போன்ற பல காரணங்களால் சிலர் விவசாயத்தை கைவிடுகின்றனர்.அதிலும் பலர் தங்களது குழந்தைகளை உயர் கல்வி படிக்க வைப்பதுடன் விவசாயத்தை பற்றி சொல்லிக்கொடுப்பதில்லை.இதன் காரணமாக ஆண்டுதோறும் பல 100 ஏக்கரில் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. விவசாய காரணங்களைத்தவிர, வேறு காரணங்களுக்காக விவசாய நிலத்தை விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது.விவசாயத்துக்கு தேவையான இடுபொருள், உரம், தண்ணீர், மின்சாரம் மிக குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஏழை விவசாயிகளுக்கு எளிய வகையில் கடன் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்