search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aradhana"

    • பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா 2-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா 2-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    கந்த சஷ்டி விழா 2-ம் நாளை முன்னிட்டு பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், நன்செய் இடையாறு ராஜா சாமி கோவிலில் உள்ள ராஜாசாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோவில், மோகனூர் பாலசுப்பிரமணிய சாமி கோவில் மற்றும் கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெரு மானுக்கு கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே சேமங்கி மாரியம்மன் கோவில் உள்ளது.
    • மங்களநாதர் சிலைகள் வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடை பெற்றது.

    வேலாயு தம்பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே சேமங்கி மாரியம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே கமலாம்பிகை உடனமர் அருள்நிறை மங்களநாதர் சிலைகள் வைக்கப்பட்டு அதற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடை பெற்றது.

    சிறப்பு அபிஷேக ஆராதனையை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக தீர்த்தக்குடங்களுடன் கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து கமலாம்பிகை உடனமர் அருள் நிறை மங்களநாதர் சாமிகளுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கமலாம்பிகை உடனமர் மங்களநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    • இக்கோவிலில் 10-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
    • ஏகாதச ருத்ர ஜப ஹோம அபிஷேக ஆராதனை நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கடுவெளி கிராமத்தில் மங்களாம்பிகா சமேத ஆகாசபுரீஸ்வரர் தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 10-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.

    இன்று காலை கணபதி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மூல மந்திர , காயத்திரி மந்திர ஹோமங்கள், பூர்ணாஹூதி, மங்களாம்பிகை சமேத ஆகாசபுரீஸ்வரருக்கு ஏகாதச ருத்ர ஜப ஹோம அபிஷேக ஆராதனை நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை திருக்கல்யாணம் உற்சவம் , சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.

    • சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா தொடங்கியது.
    • ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானசசஞ்சரே எனபாடி இறைவன் அம்பிகையை எந்த நேரமும் வழிபாடு செய்து ஆண்-பெண் தோற்றத்துடன் கூடிய மகான் சதசிவ பிரம்மேந்திராள். இவரது ஜீவசமாதி கரூர் அருகே நெரூரிலும், மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலிலும் உள்ளது. இவருக்கு தனி சன்னதியும் உள்ளது. ஆண்டு தோறும் சதாசிவ பிரம்மேந்திராள் இசைஆராதனை விழா மானாமதுரையில் 2 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழா இன்று காலை தொடங்கியது. இதில் இந்தியா முழுவதும் உள்ள கர்நாடக இசை கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்த உள்ளனர். கர்நாடக இசைக் கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் நினைவை போற்றும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது.

    முதல் நாள் விழா மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மகாலில் காலை முதல் வேதபாராயணம், உஞ்சவ்விருத்தி, தீபாராதனை மற்றும் வாய்ப்பாட்டு, பூஜைகள், புல்லாங்குழல், பாட்டு நடந்தது. வீணை, வயலின் போன்ற இசை கச்சேரிகளை கர்நாடக இசைக் கலைஞர்கள் நடத்தினர். மாலையில் இசைக் கலைஞர்களுக்கு ஆராதனை கமிட்டி சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. மறுநாள் (30-ந் தேதி) ஆனந்த வல்லி அம்மன் கோவிலில் உள்ள சதாசிவ பிரம்மேந்திராள் சன்னதியில் பூஜை, விருத்தி, குரு உஞ்சவ் விருத்தி, அஞ்சலி, கோஷ்டி கானம், விக்னேசுவர பூஜை, வடுக பூஜை உள்ளிட்டவை நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது.
    • இயேசுவின் சொரூபத்தை பக்தர்கள் மத்தியில் கொண்டு சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட உயிர் நீத்த தினமான புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து கலை அரங்கத்தில்பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் இறை வார்த்தை வழிபாடு,சிறப்பு கூட்டு திருப்பலி நிறை வேற்றப்பட்டது.

    சிலுவையில் அறை யப்பட்ட இயேசுவின் சொரூ பத்தை பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்கு தந்தைகள் முத்தமிட்டனர்.

    அதைத்தொடர்ந்து இயேசுவின் சொரூபத்தை பக்தர்கள் மத்தியில் கொண்டு செல்லும் போது பக்தர்கள் முத்தமிட்டு வழிபட்டனர்.

    • சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • நாளை 5-ம்தேதி சாமி மலைக்கோவிலுக்கு திரும்ப உள்ளது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். இங்கு அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமைந்த கட்டு மலைக்கோயிலாகும். இத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் முருக பக்தர்களுக்கு 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிகட்டுகளாக இருந்து சேவை செய்வதாக ஐதீகம். மேலும் இத்தலத்தில் தான் முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை, குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்பதும் வரலாறு எனவே இத்தலத்தில் முருகப்பெருமான் சுவாமியே நீ என்றும் சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார். இத்தகைய சிறப்பு பெற்ற நான்காம் படைவீடான சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா ஜனவரி 26 கொடியேற்றத்துடன் துவங்கியது.

    வள்ளி தெய்வானை சமேத சண்முகசுவாமி சிறப்புமலர் அலங்காரத்தில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்–வரருடன் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேலுடன் கூடிய யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கும் கோபுர ஆர்த்தி செய்யப்பட்டது,

    இதனை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

    கடந்த ஜனவரி 30-ம் தேதி இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நடைபெற்றது தைப்பூச அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இன்று 4-ம் தேதி காலை 11 மணியளவில் காவிரியில் தீர்த்தவாரி நடைபெற்றது பின்னர் இரவு கொடிஇறக்கம் செய்யப்பட்டு, 5-ம் தேதி சுவாமி மலைக்கோயிலுக்கு திரும்ப உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் உபய தாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • ஆராதனை விழா அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • இதில் இசைக் கலைஞா்கள் பஞ்சரத்ன கீா்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்த உள்ளனா்.

    தஞ்சாவூர்:

    சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர். இவர் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார். அங்கே அவருக்கு சமாதி உள்ளது. ஆண்டுதோறும் இங்கு ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு ஸ்ரீ சத்குரு தியாகராஜா சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், நிறைவு நாளான ஜனவரி 11-ம் தேதி காலை பஞ்சரத்ன கீா்த்தனைகள் வைபவம் நடைபெற உள்ளது. இந்த வைபவத்தில் ஏராளமான இசைக் கலைஞா்கள் பஞ்சரத்ன கீா்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்த உள்ளனா்.

    இதையொட்டி, திருவையாறு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆஸ்ரம வளாகத்தில் பந்தல்கால் நடும் விழா இன்று நடைபெற்றது.

    விழாவில் ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்ஸவ சபை தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. தலைமை தாங்கி பந்தல்கால் நட்டு வைத்தார். முன்னதாக தியாகராஜர் சமாதியில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நாகரத்னம்பாள் சமாதியிலும் வழிபாடு நடத்தப்பட்டது.

    இந்த விழாவில் அறங்காவலர்கள் சந்திரசேகர மூப்பனார், சுரேஷ் மூப்பனார், கணேசன், பஞ்சநதம், டெக்கான் மூர்த்தி, சுந்தரம், அரித்துவாரமங்கலம் பழனி வேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், பொருளாளர் கணேஷ், உதவி செயலாளர்கள் கோவிந்தராஜன், அருண், பாபநாசம் அசோக்ரமணி, ராஜகோபாலன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×