search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "a.rasa"

    • நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி அவரை கண்டித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது
    • ஆர்ப்பாட்டத்தின் போது ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி அவரை கண்டித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    அகில பாரத அய்யப்பா சேவா சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அகில பாரத அய்யப்பா சங்க செயலாளர் கதிர்வேல் ஆறுமுகம், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் வன்னிய ராஜன், சாரதி ராம் அறக்கட்டளை நிறுவனர் ராமநாதன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், சைவ சித்தாந்த பேரவை தலைவர் திருமலை வேலு, சைவ சித்தாந்த சபை தலைவர் சண்முகவேல் ஆவுடையப்பன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராஜா, நகர தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

    தென்னிந்திய செங்குந்த மகாஜன துணைத் தலைவர் மாரிமுத்து, பா.ஜனதா மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், கோமதி அம்பிகை மாத சங்க அமைப்பாளர் பட்ட முத்து, ஆர்.எஸ்.எஸ். மாவட்ட அமைப்பாளர் கோபால், சைவ சித்தாந்த சபை செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கண்டன உரை ஆற்றினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தின் போது ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அகில பாரத அய்யப்பா சேவா சங்க பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அந்தோணி ராஜ், நகர இளைஞரணி தலைவர் விக்னேஷ், மகளிர் அணி தலைவி மகேஸ்வரி, நிர்வாகிகள் மாரிமுத்து, அருண், சுப்பிரமணியன், இந்து முன்னணி நகரத் தலைவர் சங்கர் மற்றும் பெண்கள், ஆடித்தவசு மண்டகப்படிதாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    • சிவசேனா வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
    • இந்துக்கள் மீதும் இந்து சம்பிரதாயங்கள் மீதும் வன்மத்தை விதைத்து வரும் ராசாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்துக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவுக்கு சிவசேனா வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பொது நிகழ்ச்சிகளிலும் அரசியல் மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் தொடர்ந்து இந்துக்கள் மீதும் இந்து சம்பிரதாயங்கள் மீதும் வன்மத்தை விதைத்து வரும் ராசாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை குறைந்தது 3மாதம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாராளுமன்ற சபாநாயகரை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • அரசு நிதிநிலை அறிக்கையில் அவினாசி நகரில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டும் கோரிக்கையை தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.
    • நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடி சொன்ன பொய்கள் அம்பலமாகும் என்று ஆ.ராசா எம்.பி., பரபரப்பு குற்றச்சாட்டு,

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி போலீஸ் நிலையம் அருகில் வணிகவளாகம் அமைப்பதற்கு பூமிபூஜை நடந்தது இதில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து அவினாசி இஸ்மாயில் வீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துவைத்து பேசுகையில், இந்த ஆண்டு அரசு நிதிநிலை அறிக்கையில் அவினாசி நகரில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டும் கோரிக்கையை தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். இந்த வணிக வளாகம் தரைதளத்துடன் 2 மாடிகள் அமைய உள்ள இந்த வணிக வளாகத்தில் 36 கடைகள் வர உள்ளது. இது பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.

    இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அக்னி பாத்திட்டத்தின் ஒரு முகம்தான் மக்களுக்கு தெரிந்துள்ளது. கோரமுகம் வேறுவிதமானது.அது விரைவில் வெளிவரும். அதை முறியடிக்க கூடிய அனைத்து ஆற்றலும் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உள்ளது.விரைவில் அது பற்றி நாடாளுமன்றத்தில் எப்படிப்பட்ட நிலைப்பாடு எடுப்போம் என்பதை முதல்வர் அறிவுறுத்துவார்.

    சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை எவ்வளவு, சராசரியாக வளரும் நாடுகளில் என்ன விலை, இந்தியாவில் என்ன விலை என்பதை வெப்சைட்டில் தேடிப்பார்த்தால் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடி சொன்ன பொய்கள் அம்பலமாகும் என்றார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் இல.பத்மநாபன், அவினாசி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, அவினாசி நகர செயலாளர் கே.சி.பொன்னுசாமி, பேரூராட்சி தலைவர் பொ. தனலட்சுமி, செயற்குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தலின் நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆ.ராசா சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
    நீலகிரி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நீலகிரி தொகுதியின் திமுக வேட்பாளராக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஆ.ராசா, 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். 

    இதையடுத்து அப்பகுதியின் திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
    ×