என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Army Officer"
- நடக்க முடியாமல் வலியில் தள்ளாடியபடி நேற்று காலை 11.30 மணியளவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வந்துள்ளார்.
- அந்தரங்க வீடியோவை காட்டி என்னை மிரட்டி ஹோட்டலுக்கு வரவழைத்தார்.
மத்தியப் பிரதேசத்தில் பெண்ணை பலாத்காரம் செய்து அந்தரங்க உறுப்பில் கண்ணாடித் துண்டை திணித்து கொடுமை படுத்திய ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோர் நகரில் AB சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அசாமில் பணியில் உள்ள சஞ்சய் யாதவ் என்ற ராணுவ அதிகாரி [நாயக்] தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக வங்கி மேனஜராக பணியாற்றிவரும் கவுசல்யா என்ற திருமணமான 35 வயது பெண் நடக்க முடியாமல் வலியில் தள்ளாடியபடி நேற்று காலை 11.30 மணியளவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வந்துள்ளார்.
அவரை உடனே மருத்துவமனைக்கு போலீஸ் சென்று அனுமதித்துள்ளனர். கவுசல்யா தனது புகாரில், ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவ் ஒரு வருடம் முன் மோவ் [Mhow] பகுதியில் பணியில் இருந்தபோது கேன்டீன் அட்டை தந்து உதவியபோது அவரை நான் அறிவேன். அவர் அசாமுக்கு மாற்றலான பின் தற்போது தான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்த சஞ்சய், அந்தரங்க வீடியோ ஒன்றை காட்டி என்னை மிரட்டி ஹோட்டலுக்கு வரவழைத்தார்.
அங்கு அறையில் வைத்து என்னை பாலியல் தொல்லை செய்த அவர் எனது அந்தரங்க உறுப்பில் கண்ணாடித் துண்டை நுழைக்க முயன்றார். அங்கிருந்து தப்பித்து தான் வந்ததாக தெரிவித்திருந்தார். கவுசல்யாவின் புகாரை அடுத்து ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவ் உடனடியாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையே மருத்துவமனையில் கவுசல்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- 'அமரன்' படம் உருவாக்கப்பட்டு உள்ளது.இதன் படப்பிடிப்புகள் புதுச்சேரியில் 30 நாள் தொடர்ச்சியாக நடந்தது.
- இந்த படத்தில் எதிரிகளுடன் சிவகார்த்திகேயன் மோதும் துப்பாக்கி சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் 21 - வது படமாக 'அமரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இதனை தயாரிக்கிறது.
கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்த்' என்கிற ராணுவ அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அவர்களை எதிர்த்து தாக்குதல் நடத்திய, 'ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் ராஜ்புத் ரெஜிமெண்ட்'பிரிவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் தலைமை தாங்கினார்.அப்போது, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டைத் தாக்கி, அது தீப்பற்றி எரிந்ததும் தப்பியோடிய பயங்கரவாதிகளில் இருவரை முகுந்த் கொன்றார்.
இதைத் தொடர்ந்து, தப்பியோடி வேறு வீட்டில் பதுங்கிய மற்ற பயங்கரவாதிகள் மீதும் முகுந்த் தாக்குதல் நடத்தினார். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதி சுட்டதில் முகுந்த் உடலில் குண்டு பாய்ந்தது.
இதில் வீர தீரத்துடன் போராடி 3- வது பயங்கரவாதியை அவர் சுட்டுக் கொன்றார். அதை தொடர்ந்து காயம் அடைந்த முகுந்த் வரதராஜனும் உயிரிழந்தார். அவரது வீர மரணத்தை போற்றும் வகையில் அவருக்கு 'அசோக சக்ரா விருது' வழங்கப்பட்டது.
எனவே இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு'அமரன்' படம் உருவாக்கப்பட்டு உள்ளது.இதன் படப்பிடிப்புகள் புதுச்சேரியில் 30 நாள் தொடர்ச்சியாக நடந்தது. மீதி படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இந்நிலையில் 'பிரேமலு' மலையாள படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகர் ஷியாம் மோகன் (ஜேகே ஆதி) தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அமரன்' படத்தில் இணைந்து உள்ளார். அவர் ஒரு முக்கிய சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளார்.
இதை தொடர்ந்து 'அமரன்' படம் கூடுதல் பலம் பெற்று வருகிறது. இந்த படத்தில் எதிரிகளுடன் சிவகார்த்திகேயன் மோதும் துப்பாக்கி சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராணுவ அதிகாரி நேற்று அவரது வீட்டிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்.
- மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினரால் ராணுவ அதிகாரி மீட்கப்பட்டார்.
இம்பால்:
மணிப்பூரில் கடந்தாண்டு மே மாதம் இனக்கலவரம் ஏற்பட்டது. இதனால் அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் பயங்கரவாதிகளை எளிதில் அடையாளம் காண மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, கோன்சம் கேடா சிங் என்ற ராணுவ அதிகாரி நேற்று அவரது வீட்டிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்.
ஒடிசா மாநிலத்தில் தற்போது பணிபுரித்து வரும் இவர் விடுமுறைக்காக சொந்த ஊரான மணிப்பூருக்கு வந்துள்ளார். இவரது கடத்தல் தொடர்பாக கோன்சமின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்தக் கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில், கொன்சம் கேடா சிங் நேற்று மாலை பத்திரமாக மீட்கப்பட்டார். மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் அவர் மீட்கப்பட்டார். கடத்தல் சம்பவம் குறித்து மணிப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே மணிப்பூரில் ராணுவ வீரர்கள், காவல் அதிகாரிகள் அல்லது அவர்களது உறவினர்கள் என யாரேனும் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- திருமங்கலத்தில் ராணுவ அதிகாரி வீட்டில் நகை-வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்டது.
- பூட்டியிருந்த வீட்டில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமங்கலம்
திருமங்கலம் காமராஜர் வடபகுதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் சுரேஷ்(வயது42). இவர் ராணுவ அதிகாரியாக அருணாச்சலபிரதேசத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் வசிக்கும் அவரது அண்ணன் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் பூட்டிக்கிடந்த அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து ஈரோட்டில் இருந்து தனது வீட்டுக்கு திரும்பிய சுரேஷ், தன்னுடைய வீட்டில் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு போனது குறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் வீட்டில் புகுந்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய மர்ம நபர்கள் யார்?உள்ளூரை சேர்ந்தவர்களா? அல்லது வெளியூர் கொள்ளை கும்பலா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைள் மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். பூட்டியிருந்த வீட்டில் நடந்துள்ள இந்த திருட்டு சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த மாதம் 16-ந் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- ஆன்லைன் பொதுத்தேர்வு நாடு முழுவதும் 176 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர் :
இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு குறுகிய கால ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்யும் திட்டமாக அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து அக்னிபாத் திட்டத்தின் கீழ் இளைஞர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுகளும் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது அந்த தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல்களை தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ராணுவத்தின் சார்பில் விழிப்புணர்வாக எடுத்துக் கூறப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் இந்திய ராணுவ ஆட்சேர்ப்பில் மாற்றங்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் மோகனா வரவேற்றார். இதில் ராணுவத்தின் கோவை ஆட்சேர்ப்பு இயக்குனர் பரத்வாஜ் கலந்து கொண்டு, ராணுவத்தில் ஏன் சேர வேண்டும் என்றும், அதன் மூலமாக ஏற்படும் பயன்கள் குறித்தும் பல்வேறு தலைப்புகளில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்புக்கான முறை மாற்றப்பட்டுள்ளது. இதன்படி சி.இ.இ. என்கிற பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் முதற்கட்ட தேர்வு நடைபெறும். கடந்த மாதம் 16-ந்தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். சி.இ.இ. என்னும் ஆன்லைன் பொதுத்தேர்வு நாடு முழுவதும் அடுத்த மாதம் 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 176 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக இருக்கும். இந்த தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களையும் என்ற இணையதளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். என்றார்.
இதன் பின்னர் நிருபர்களுக்கு பரத்வாஜ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:& இந்திய ராணுவப்படையில் சேவையாற்ற வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். அக்னிபாத் திட்ட தேர்வுகள் முன்பு மருத்துவம், உடற்தகுதி தேர்வுகளின் அடிப்படையில் வைக்கப்படும். ஆனால் தற்போது இணையத்தில் தேர்வு வைக்கப்பட்டு, அதில் தேர்வானவர்களுக்கு அதன்பின்னர் இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது.இந்திய ராணுவத்தின் இணையதளத்தில் பதிவு செய்து ரூ. 150 கட்டணம் செலுத்தி தேர்வில் பங்கேற்கலாம். இது தொடர்பான பல்வேறு கையேடுகள் கிடைக்கப்பெறுகிறது. அதேபோல் விண்ணப்பிக்கும் இணையதளத்திலும் பல்வேறு தகவல்கள் உள்ளன. அதனை பங்கேற்பவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தேசிய மாணவர் படை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு. ராணுவத்தில் சேர்த்துவிடுவதாக யாராவது பணம் கேட்டால் அதனை புகாராக தர வேண்டும். அது போன்று ஏதேனும் தகவல் இருந்தால் எங்களுக்கு புகார் அளிக்கலாம்.அவர்கள் உங்களை தவறாக வழிநடத்தக்கூடும். இதை யாரும் நம்ப வேண்டாம். இது முழுக்க முழுக்க உங்கள் திறனுடன் தான் தேர்வு செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ராணுவத்தில் சேர்வது மற்றும் அதனால் என்னென்ன பயன்கள் உள்ளன என்பது பற்றி மாணவர்களுக்கு விளக்கப்படம் மூலமாக எடுத்துக் கூறப்பட்டது. இதில் ராணுவ ஆட்சேர்ப்பு துறையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்