search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrange"

    • ஏழை-எளியோரின் நலன் கருதி கட்டணமில்லா தொலைபேசி எண்: 1100 நம்பரும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • அடுத்த 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வாயிலாக மேல்முறையீட்டு மனுவை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள், விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டதற்கான காரணங் களை அறியும் வகையில் ஊட்டி கலெக்டர் அலுவ லகம், ஊட்டி, குன்னூர், கூடலூரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் ஊட்டி, குந்தா, குன்னுார், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் தாசில்தார் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு உதவிமையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பிரத்யேக அலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    எனவே நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான விவரங்களை அறியலாம்.

    மேலும் ஏழை-எளியோரின் நலன் கருதி கட்டணமில்லா தொலைபேசி எண்: 1100 நம்பரும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்களையும் வாடிக்கையாளர்கள் தொடர்புகொள்ளலாம்.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நிராகரிகப்பட்டவர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வாயிலாக மேல்முறையீட்டு மனுவை பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற்றவர்கள் டெபிட் கார்டு மட்டுமின்றி ரூபே கார்டு மூலமாகவும் பணம் எடுக்கலாம்.

    வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட வங்கியில் கடனுதவி பெற்றிருந்தாலும், அரசு வரவு செய்த உரிமைத்தொகையில் பணம் எடுக்கக்கூடாது.

    பயனாளிகளின் வங்கி கணக்கில் இருந்து எக்காரணம் கொண்டும் பணம் திரும்ப எடுத்துக்கொள்ளப்படாது என நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்து உள்ளார்.

    குமாரபாளையத்தில் தாலுகா அலுவலக கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தப்பட்டது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தாலுகா அலுவலகம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தொகை வாடகையாக கொடுக்கப்பட்டு மக்கள் வரி பணம் வீணாகி வருகிறது. 

    மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகி கோப்புகள் வீணாகி வருகிறது என்று புகார் கூறப்பட்டது. இதைதொடர்ந்து புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.   இந்த பணி முழுமையாக முடிவடையவில்லை. இதனால் தாலுகா அலுவலக பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தப்பட்டது. 

    இதுபற்றி  தாசில்தார் தமிழரசி கூறுகையில், குமாரபாளையம் தாலுகா அலுவலகம் கட்டுமான பணி பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  நிதி பற்றாக்குறையால் கட்டுமான பணி நிறைவுபெறாமல் உள்ளதாக கூறப்படுகிறது. நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் பணிகள் தொடரும். பணிகள் முழுமையாக முடிந்த பின் தாலுகா அலுவலகத்தை எங்களிடம் ஒப்படைப்பார்கள் என்றார்.

    இந்நிலையில் புதிய தாலுகா அலுவலகம் விரைவில் செயல்பட உள்ளது பற்றி  தகவல் தெரிந்ததும், தாலுகா அலுவலக பகுதியில் ஜெராக்ஸ், டீ, பேக்கரி, கடைகள் மற்றும் இ-சேவை மையங்கள் தொடங்க பலர் மும்முரமாக உள்ளனர்.
    • கரபுரநாதர் கோவிலில் 2006-ம் ஆண்டுக்கு பின் தற்போது கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
    • இப்பணி 6 மாதத்தில் முடிக்கப்படும். அதற்கு பின்கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் அருகே உத்தம சோழபுரத்தில் பழமையான பெரிய நாயகி சமேத கரபுரநாதர் கோவில் உள்ளது. ராவணன் சகோதரன் கரதூசனன், ஆயிரம் ஆண்டு தவம் செய்து அக்னிபிரவேசம் செய்யும் நேரத்தில் "நில்' என்ற அசரீரி வாக்கு கேட்டு நின்றான். இறைவன் கரதூசனனுக்கு காட்சி அளித்தார். அப்போது இறைவனுக்கு கரதூசனன் பூஜை செய்ததால், "கரபுரநாதர்' என்ற பெயர் வழங்கப்படுகிறது.

    இந்த கோவில் முகப்பு வாயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயில் அருகே ஒளவை சிலை நிறுவப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே பெரிய ஒளவையார் சிலை ஆகும். இந்த கோவிலின் பழமையும், வரலாற்று சிறப்பும், இலக்கியங்களில் பெற்ற இடம் பெருமைக்கு பெருமை சேர்ப்பதாய் அமைந்துள்ளன.

    குணசீலன் என்ற சிறுவன் கரபுரநாதர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தான். லிங்கம் உயரமாக இருந்ததால் சிறுவனால் மாலை போட முடியவில்லை. இதனால் சிறுவன் கதறி அழுது இறைவனை வேண்டுகிறான். அப்போது கரபுரநாதர் எழுந்தருளி, சிறுவன் உயரத்திற்கேற்றவாறு லிங்கத்தை சாய்த்து கொடுத்தார். அதனால் தான் இன்றும் இந்த கோவிலில் உள்ள லிங்கம் ஒரு புறம் சாய்ந்தவாறு உள்ளது.

    இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்டஇந்த கோவிலில் திருப்பணி நடத்தி குமாபிசேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி இன்று காலை பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்காக நேற்று கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் காலை 5 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் காலை 9 மணிக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் வீரபாண்டி டாக்டர் மலர்விழி, பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர், முன்னாள் வேளாண்துறை அமைச்சர் உதவியாளர் சேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

    கரபுரநாதர் கோவிலில் 2006-ம் ஆண்டுக்கு பின் தற்போது கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்காக திட்ட மதிப்பீடு தயாரித்து,சேலம் மண்டல இந்து சமய அற நிலையத்துறை இணை கமிஷனரிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

    திருப்பணியின்போது ராஜகோபுத்தில் உள்ள சிலைகளை மராமத்து செய்து வண்ணம் பூசப்படும். சன்னதி விமானம் மராமத்து செய்து வண்ணம் பூசப்படும். திருப்பணி 80 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது. இப்பணி 6 மாதத்தில் முடிக்கப்படும். அதற்கு பின்கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னையில் பெண் டாக்டரிடம் சங்கிலி பறித்த கொள்ளையனை பிடித்து கொடுத்த வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக் வேலை கிடைத்துள்ளது.
    சென்னை:

    சென்னையில் பெண் டாக்டரிடம் சங்கிலி பறித்த கொள்ளையனை பிடித்து கொடுத்த வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக் வேலை கிடைத்துள்ளது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார்.

    சென்னை அண்ணாநகர் டி பிளாக்கில் வசிப்பவர் டாக்டர் அமுதா (வயது 50). கடந்த ஏப்ரல் மாதம் 17-ந்தேதி தனது கிளினிக்கில் டாக்டர் அமுதா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சிகிச்சை பெறுவதுபோல் வந்த ஒருவர் திடீரென்று கத்தியைக்காட்டி மிரட்டினார்.

    டாக்டர் அமுதாவின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். அதிர்ச்சியடைந்த டாக்டர் அமுதா கூச்சல் போட்டுக்கொண்டே கொள்ளையனை விரட்டிச் சென்றார். அப்போது அங்கு வந்த சூர்யா என்ற இளைஞர் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையனை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தார்.

    பின்னர் அந்த கொள்ளையன் அண்ணாநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அந்த கொள்ளையன் திருவள்ளூர் மாவட்டம் கண்டிகையை சேர்ந்த ஜானகிராமன் (26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, 10 பவுன் சங்கிலியையும் மீட்டனர்.

    கொள்ளையனை பிடித்த சூர்யாவை தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார். சூர்யா தனக்கு வேலை இல்லை என்றும், ஆனால் ஏ.சி.மெக்கானிக் தொழில் தெரியும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் கூறினார்.

    உரிய வேலை வாங்கித்தருவதாக சூர்யாவுக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி நேற்று நிறைவேற்றப்பட்டது.

    கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஏற்பாட்டின்பேரில் சென்னை டி.வி.எஸ். நிறுவனத்தில் சூர்யாவுக்கு ஏ.சி.மெக்கானிக் வேலை கிடைத்தது. இதற்கான பணி நியமன ஆணையை டி.வி.எஸ். நிறுவனத்தின் பொது மேலாளர் சீனிவாசன் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் சூர்யாவிடம் நேற்று வழங்கினார்.

    மேலும், சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்து எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் சேர்மன் ரவிபச்சமுத்து ரூ.1 லட்சம் வழங்கினார். சென்னை டவர்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் சூர்யாவுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. இதுதொடர்பான வங்கி காசோலைகளும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் முன்னிலையில் சூர்யாவிடம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் ஜெயராம், சாரங்கன், இணை கமிஷனர் விஜயகுமாரி, அண்ணாநகர் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் ஆகியோரும் கலந்து கொண்டனர். 
    ×