என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Arulasi"
- மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் தரிசனம் செய்தனர்.
- செவ்வாய் பகவான் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
சீர்காழி:
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அலக்ஷி என்பவர் தலைமையில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்கிரைன் நாடுகளைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் தமிழக கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீகத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக தமிழகத்தில் உள்ள சிவாலயங்கள் மற்றும் நவகிரக ஆலயங்களில் தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த கோபிநாத் என்பவர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் தரிசனம் செய்தனர்.
பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு வந்த வெளிநாட்டு பக்தர்கள் விநாயகர், செல்வமுத்துக்குமார சுவாமி, வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்பாள் மற்றும் செவ்வாய் பகவான் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
அப்போது அவர்கள் காயத்ரி மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்களை சப்தமாக சொல்லி சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு எழுந்தருளிய தருமபுரம் ஆதீனம் 27- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் வெளிநாட்டு பக்தர்கள் அருளாசி பெற்றனர்.
தொடர்ந்து அவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் விபூதி பிரசாதம் வழங்கியதுடன், தெய்வ வழிபாட்டு முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது கொள்ளிடம் குழந்தைகள் நல மருத்துவர் முருகேசன், சீர்காழியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மார்கோனி ஆகியோர் உடன் இருந்தனர்.
- பூஜையை சூரியனார் கோவில் ஆதீனம் நடத்தி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
- ஏராளமான பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் தஞ்சாவூர் வடக்கு வாசல் கேசவதீஸ்வரர் உடன் உறை ஞானாம்பிகை சமேத கோவிலில் உள்ள வட பத்திரகாளி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடை பெற்றது.
பூஜையை சூரியனார் கோவில் ஆதீனம் நடத்தி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்
விழா தஞ்சாவூர் மாவட்ட தலைவர் சுப்பிமணியன் தலைமையில் நடை பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருக்கோவில்கள் கூட்ட மைப்பின் தேசிய தலைவர் சந்திரபோஸ்பெருமாள், தமிழ்மாநில முதன்மை செய லாளர் ஆதிநெடுஞ்செழியன் , டாக்டர் பழனிகுமார், கண்ணன், கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் மகேந்திரன், பொருளாளர் கோவிந்தராஜ், மாவட்ட துணை தலைவர் சம்பத் , மாவட்ட துனைசெயலாளர் மோகன், மையகுழு உறுப்பினர் ராஜா , மாநகர தலைவர் பாலாஜி , மாநகர செயலாளர் ஸ்ரீ மதுரா குருப்ஸ் மணி மாநகர செயற்குழு உறுப்பினர்கள் மேலவீதி சிங்காரம், வடக்கு வாசல் கண்ணன், ராஜா அவர்களும் கலந்து கொண்டனர்.
இதில் பெருந்திரளான பக்தர்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.
- வைத்தீஸ்வரன் கோவிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் சாமி தரிசனம் செய்தார்.
- அவருக்கு தருமபுரம் ஆதீனம் கோவில் பிரசாதங்கள் வழங்கினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் அமைந்துள்ள வைத்தியநா தசுவாமி கோவிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற்றார்.
அவருக்கு தருமை ஆதீனம் கோவில் பிரசாதங்களை வழங்கினார்.
- 26-ந்தேதி 4-ம் மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
- வேளாக்குறிச்சி ஆதீனம் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமரு கலில் ஆமோதள நாயகி சமேத ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 23-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவக்ரஹ மற்றும் லட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, 24-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும், இரவு பூர்ணாஹுதி, தீபாராதனையும், 25-ம் தேதி 2-ம் மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், இரவு பரிவார முகூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம், பூர்ணாஹுதியும், 26-ந்தேதி 4-ம் மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, நேற்று (27-ந்தேதி) காலை 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அடுத்தாக கடம் புறப்பாடு நடைபெற்று விமானங்கள் மற்றும் ராஜ கோபுரங்கள் கும்பாபிஷேகம் மற்றும் மூலமூர்த்திகள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில், திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குரு மகா சன்னிதானம் திருப்புகலூர் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, மாலை மகாபிஷேகம், தீபாராதனையும், இரவு ஆமோதள நாயகி ரத்தினகிரீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- பல்வேறு கோவில்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.
- சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
காஞ்சிபுரத்தை சேர்ந்த சிவபக்தர் ஸ்ரீலஸ்ரீ மணிவ ண்ணன் சாது ஆண்டு முழுவதும் பல்வேறு கோவில்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.
அதன்படி, ஆண்டிற்கு ஒரு முறை சீர்காழி பகுதிக்கு ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி வீட்டிற்கு வருகை புரிவார்.
இதனிடையே கடந்த ஆண்டு சாது இறந்ததையடுத்து சீர்காழி அருகே பனமங்கலம் பகுதியில் மார்கோனி தனது சொந்த செலவில் இடம் வாங்கி சாதுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டு அதன்மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வந்தது.
இதனிடையே மண்டலாபிஷேக பூர்த்தி அடைந்ததை யொட்டி சாது அடக்கம் செய்யப்பட்ட பகுதி சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி, ராஜசேகர், மோகன், பாலமுருகன் உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்