என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM Money"

    • சுப்ரீம் கோர்ட்டில் வங்கிகள் மேல்முறையீடு செய்தன.
    • உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

    புதுடெல்லி:

    கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம், அசாம் மாநிலத்தில் ஒரு வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக ஏமாற்றி, ஒருவரிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் நடந்தது. பத்திரிகையில் அச்செய்தியை பார்த்த அசாம் ஐகோர்ட்டு, தானாக முன்வந்து அதை வழக்காக எடுத்துக் கொண்டது. ரிசர்வ் வங்கி, சம்பந்தப்பட்ட வங்கி, மத்திய அரசு, அசாம் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

    போலீஸ் டி.ஜி.பி. தாக்கல் செய்த பதில் மனுவில், அனைத்து வங்கி ஏ.டி.எம்.களின் பாதுகாப்புக்கு ஒரு செயல்திட்டத்தை முன்வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, அதை அமல்படுத்துமாறு மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஏ.டி.எம்.களில் வரிசையை ஒழுங்குபடுத்தவும், ஒரே நேரத்தில் ஒருவரை மட்டும் உள்ளே அனுமதிக்கவும் ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வங்கிகள் மேல்முறையீடு செய்தன. அசாம் ஐகோர்ட்டு உத்தரவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    இந்நிலையில், நேற்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வங்கிகள் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:-

    அசாம் மாநிலத்தில் சுமார் 4 ஆயிரம் ஏ.டி.எம்.கள் உள்ளன. அனைத்து ஏ.டி.எம்.களிலும் 24 மணி நேரமும் காவலாளிகளை நியமிப்பது நடைமுறை சாத்தியமற்றது. உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அசாம் ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்தனர். ஏ.டி.எம்.களில் 24 மணி நேரமும் காவலாளிகளை நிறுத்த தேவையில்லை என்று கூறினர்.

    • கோபாலன் இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் வசிப்பவர் கோபாலன் (வயது70). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி தன்னுடைய சேமிப்பு கணக்கில் வைத்துள்ள பணத்தை தேன்கனிக்கோட்டை ஒசூர் சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்ற போது 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் பணம் எடுத்து தருவதாக கூறி ஏ.டி.எம். கார்டை வாங்கியுள்ளார்.

    ஆனால் பணம் வர வில்லை என கூறி வேறு ஒரு கார்டை கொடுத்து அனுப்பி உள்ளார். அவர் சென்ற பின் கோபாலன் கார்டை பயன்படுத்தி ரூ.18,300 பணம் எடுத்து உள்ளார். தன்னுடைய செல்போனுக்கு தகவல் வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த கோபாலன் இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், கண்ணன், தனிபரிவு தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர் ஏ.டி.எம். மில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த வாலிபரின் உருவத்தை வைத்து தேடி வந்தனர்.

    தொடர்ந்து தேன்கனிக்கோட்டை பகுதியில் இதே போல் புகார்கள் வந்து உள்ளது. இந்நிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தேன்கனிக்கோட்டை-ஒசூர் சாலையில் உள்ள ஏ.டி.எம். அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்து வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

    அப்போது அஞ்செட்டி அருகே உள்ள எருமுத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் (20) என்பதும், 10-ம் வகுப்பு படித்து விட்டு, ஓட்டலில் சர்வர் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 20 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.58 ஆயிரம் பணம் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இது குறித்து தேனிகனிக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் ஸ்ரீதர் கடந்த 1 வருடங்களாக பணம் எடுக்க வரும் வயதான நபர்களை குறி வைத்து அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து தன்னிடம் உள்ள போலி ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் நுழைத்து அவர்கள் கூறும் பாஸ் வேர்டை அடித்து பணம் வரவில்லை என கூறி அனுப்பி விட்டு, பின்னர் அவர்கள் கொடுத்த அசல் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுத்து திருடியதாகவும், மேலும் திருடிய பணத்தை சூதாடியும், ஒரு மோட்டர் சைக்கிளையும் வாங்கியதாக ஸ்ரீதர் வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் ஸ்ரீதர் இது போன்று பலரிடம் மோசடியில் ஈடுப்பட்டுள்ளாரா?

    தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • EPFO 3.0-க்கு பிறகு பி.எஃப் நடைமுறைகள் வங்கிச்சேவைகளை போல் மாறும்.
    • வேலையில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு ஓய்வூதிய பணம் மிகப்பெரிய அளவில் பயன்படுகிறது.

    ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை வருங்கால வைப்பு நிதியாக பிடிக்கப்படும். தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யும் தொகை எவ்வளவோ, அவ்வளவு தொகை நிறுவனமும் செலுத்தும். இதற்கு மத்திய அரசு குறிப்பிட்ட வட்டி வழங்கும்.

    வேலையில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு இது மிகப்பெரிய அளவில் உதவும். தற்போது புதிய பென்சன் திட்டத்தின்படி நிறுவனம் அளிக்கும் பங்கீட்டில் மிகப்பெரிய தொகை பென்சனுக்காக பிடித்தம் செய்யப்படுகிறது.

    நேற்று தெலுங்கானா மாநிலத்தில் EPFO அலுவலக வளாகத்தை மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.

    அதன்பின்பு பேசிய அவர், "விரைவில் , EPFO 3.0 வரவுள்ளது. அதன்பின்பு பி.எஃப் நடைமுறைகள் வங்கிச்சேவைகளை போல் மாறும். இப்போதும் நீங்கள் உங்கள் பி.எஃப் பணத்தை எடுக்க EPFO அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. EPFO 3.0 அப்டேட்டிற்கு பிறகு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த வங்கியின் ATM-களில் இருந்து உங்கள் பி.எஃப் ஓய்வூதிய பணத்தை பெறும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் EPFO 3.O திட்டத்தின் கீழ் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

    கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் தவறவிட்ட ரூ.10 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த கல்லூரி பேராசிரியரின் நேர்மையை அனைவரும் பாராட்டினர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் ஆயிக்குளம் ரோட்டில் தனியார் வங்கி ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக தனியார் கல்லூரி பேராசிரியர் செந்தில் வேலன் என்பவர் நேற்று இரவு சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.10 ஆயிரத்தை யாரோ எடுக்காமல் விட்டு சென்று விட்டது தெரியவந்தது. பணம் தாமதமாக வந்ததால் அவர் கவனிக்காமல் சென்று இருக்கலாம் என்று கருதிய செந்தில் வேலன் ஏ.டி.எம். சென்டரில் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமாரிடம் ஒப்படைத்தார்.

    அதனை பெற்று கொண்ட இன்ஸ்பெக்டர் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் ஏ.டி.எம். அறையில் உள்ள கேமிராவையும், எந்திரத்தையும் ஆய்வு செய்து உரியவரிடம் பணம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும் பணத்தை நேர்மையுடன் ஒப்படைத்த பேராசிரியருக்கு பாராட்டு தெரிவித்தார். பேராசிரியர் செந்தில் வேலன் ஆடுதுறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருவதுடன் பகுதி நேரம் சாலையோர ஓட்டலில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×