என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "attempt murder"
- அமிர்தலெட்சுமியும், சரண்யாவும் பொது நல்லியில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தனர்.
- காயமடைந்த சரண்யா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்தி பாட்டை சேர்ந்த பால கிருஷ்ணன் மனைவி அமிர்தலெட்சுமி (வயது 47). நேற்று இவரும், இவரது மகள் சரண்யாவும் (27) அங்குள்ள பொது நல்லியில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கும், அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி செல்வ குமாரிக்கும் (44) தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமாரியின் மகன் நாகராஜன் (29) சரண்யா மீது மோட்டார்சைக்கிளை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் அமிர்த லெட்சுமி, சரண்யா ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டவும் முயற்சி செய்துள்ளார். இதில் காயமடைந்த சரண்யா சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி மூலைக்கரைப் பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ மற்றும் போலீசார் செல்வகுமாரி, அவரது மகன் நாகராஜன் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்முறை சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி நாகராஜனை கைது செய்தனர். அவரது தாயார் செல்வகுமாரியை தேடி வருகின்றனர்.
- தோட்டத்தை அபகரிக்கும் நோக்கில் தம்பி இருந்து வந்துள்ளார்.
- தலை மற்றும் மார்பில் வெட்டி கொலைமிரட்டல் விடுத்தார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் காமயக்கவுண்டன்பட்டி கிழக்கு ரதவீதியை சேர்ந்த இளங்கோவன் மகன் ராஜேஸ்க ண்ணன்(35). இவரது தம்பி இளவரசன் (வயது 30). இவர்கள் 2 பேரும் தங்கள் பூர்வீக நிலத்தில் ஒன்றாக விவசாயம் செய்து வந்தனர்.
ஆனால் இந்த தோட்டத்தை அபகரிக்கும் நோக்கில் இளவரசன் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று ராஜேஸ்கண்ணன் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த இளவரசன் தோட்டத்தில் தனக்கு மட்டுமே பங்கு உள்ளது எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் ராஜேஸ்கண்ணனை தலை மற்றும் மார்பில் வெட்டி கொலைமிரட்டல் விடுத்தார்.
படுகாயம் அடைந்த ராஜேஸ்கண்ணன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் இளவரசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தாளமுத்துநகர் மெயின்ரோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
- இவர் மீது கொலை வழக்கு உள்பட 17 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தாளமுத்துநகர் மெயின்ரோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர் கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம், அகஸ்தேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த செல்வமுருகன் என்ற செல்வம் (வயது 34) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்வம் மீது ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் தாளமுத்துநகர், திருச்செந்தூர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை வழக்கு உட்பட 4 வழக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நேசமணிநகர், தெற்கு தாமரைக்குளம், ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், மெஞ்ஞானபுரம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 10 வழக்குகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், வேலூர் மாவட்டத்தில் வேலூர் கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் மற்றும் கோவை மாவட்டத்தில் ஆனைமலை காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு என மொத்தம் 17 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- தனது குழந்தை களை பார்ப்பதற்காக வாலிபர் தனது மாமனார் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது
- கத்தியால் குத்தியதில் அவர் பலத்த காயமடைந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அய்யங்கோ ட்டையைச் சேர்ந்தவர் பழனிக்குமரன் (வயது 42). விவசாயி. இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 6 மாத த்துக்கு முன்பு மலர்விழி நிலக்கோட்டை அணைப்ப ட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இன்று தனது குழந்தை களை பார்ப்பதற்காக பழனி குமரன் தனது மாமனார் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பழனிக்குமரனின் மாமனார் பாண்டி கத்தியால் அவரை பல இடங்களில் குத்தினார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகராறை தடுத்து நிறுத்தி காயமடைந்த பழனிக்கு மரனை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது குறித்து விளாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
திண்டுக்கல் மேட்டுப்ப ட்டியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 25). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை அங்குள்ள கல்லறை தோட்டம் அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் கத்தியால் சுரேசை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
படுகாயமடைந்த சுரேஷ் திண்டுக்கல் அரசு ஆஸ்ப த்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே ஆர்.வி.எஸ். கல்லூரி விடுதியில் தங்கி வேலை பார்த்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். இது போன்ற கத்திக்குத்து சம்பவங்கள் திண்டுக்கல் நகரில் அடிக்கடி நடந்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
- பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடா்பாக சதாம் உசேன் நண்பா்கள் வெட்டிக்கொலை செய்ய முயன்றனா்.
- பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
திருப்பூர் :
திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சதாம் உசேன். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடா்பாக அவரது நண்பா்கள் 5 போ் சோ்ந்து கடந்த மே 27 ந்தேதி வெட்டிக்கொலை செய்ய முயன்றனா்.இது குறித்து திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் சதாம் உசேன் புகாா் அளித்தாா்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் அஜ்மீா் காஜா (39), உதயகுமாா் (21), முகமது ஹக்கீம் (39), ரியாஸ் (20), அப்துல் சமத் ஆகிய 5 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் அஜ்மீா் காஜா, முகமது ஹக்கீம், ரியாஸ் ஆகியோா் மீது அனுப்பா்பாளையம், சென்னை மாதவரம், மங்கலம், 15 வேலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.இதையடுத்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டாா்.இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் திருமுருகன்பூண்டி காவல் துறையினா் நேரில் வழங்கினா்.
அரும்பாக்கம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தேவி (வயது36) இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாட்டால் ரமேஷ் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை தேவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த ரமேஷ் மனைவி தேவியுடன் தகராறில் ஈடுபட்டார். திடீரென ரமேஷ் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தேவியை வெட்டினார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது ரமேஷ்- தேவி இருவரும் மயங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். ரமேசின் கையும் அறுக்கப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தினர் வருவதை கண்டதும் ரமேசும் தனது கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்து இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அரும்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய ரமேஷ், தேவியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் தேவி சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று காலை வீட்டுக்கு வந்த ரமேஷ் ஆதார் கார்டு கேட்டுமனைவி தேவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஏற்பட்ட மோதலில் தேவி மீது மிளகாய் பொடி தூவி கத்தியால் வெட்டியது விசாரணையில் தெரிய வந்தது. #tamilnews
களியக்காவிளையை அடுத்த மரியகிரி தெங்கு விளையை சேர்ந்தவர் சர்ஜின் (வயது28). வேன் டிரைவரான சர்ஜின் கேரளாவுக்குச் சென்று அங்கு டிரைவராக பணியாற்றி வந்தார்.
அப்போது அவருக்கும் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த பிபிதா(27) என்ற பெண்ணுக்கும், பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2010-ம் ஆண்டு இவர்கள் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் சொந்த ஊரான தெங்குவிளையில் சர்ஜின் குடும்பம் நடத்தி வந்தார். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஏஞ்சல் சானியா என்ற குழந்தை உள்ளது.
சமீப காலமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கணவர் சர்ஜின் வேறு பெண்களுடனும் பேசிப் பழகுவதாக பிபிதாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அவர் கணவரிடம் கேட்டு அவரிடம் தகராறு செய்து வந்தார். அவரது உறவினர்கள் கணவன், மனைவியை சமாதானப்படுத்தி குடும்பம் நடத்த வைத்தனர்.
இந்த நிலையில் சர்ஜினின் தாயாரும், குழந்தை ஏஞ்சல் சானியாவும் கேரளாவில் ஒரு புதுமனை புகுவிழாவிற்கு சென்றுவிட்டனர்.
நேற்று நள்ளிரவு சர்ஜினின் வீட்டில் இருந்து அவரது அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் சர்ஜின் அலறியபடி கிடந்தார். அருகில் கையில் இரும்பு கம்பியுடன் அவரது மனைவி பிபிதா நின்று கொண்டிருந்தார்.
நள்ளிரவில் பிபிதா இரும்பு கம்பியால் கணவரின் தலையில் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொல்ல முயற்சி செய்தது தெரியவந்தது. கணவரின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இந்த செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.
பொதுமக்களை பார்த்ததும் பிபிதா வீட்டில் இருந்து இரும்பு கம்பியுடன் வெளியில் ஓடினார். பிறகு வீட்டின் மாடியில் ஏறி நின்று கொண்டார். உடனே அவர் தப்பி சென்றுவிடாதபடி பொதுமக்கள் அவரது வீட்டை சுற்றி நின்றுகொண்டு அவரை சிறை பிடித்தனர். இது பற்றி களியாக்காவிளை போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
மேலும் ரத்த வெள்ளத்தில் கிடந்த சர்ஜினை காப்பாற்றி பாறசாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது விடிய, விடிய பொதுமக்களால் சிறைவைக்கப்பட்ட பிபிதாவை போலீசார் மீட்டு போலீஸ்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கணவர் சர்ஜினுக்கு அடிக்கடி செல்போனில் அழைப்பு வரும். அவரும் போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருப்பார். அவருக்கு பல பெண்களிடம் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டதால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அவரை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டதாக பிபிதா தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து பிபிதாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.#tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்