search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attempting"

    • தினேஷ்(வயது30) தனியார் பேக்கரியில் கேசியராக பணிபுரிந்து வருகிறார்.
    • நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இருவர் திருட முயன்றனர். இதனைக் கண்ட தினேஷ், கூச்சலிட்டார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(வயது30). இவர் அங்குள்ள தனியார் பேக்கரியில் கேசியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இருவர் திருட முயன்றனர்.

    இதனைக் கண்ட தினேஷ், கூச்சலிட்டார். உடனே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து 2 பேரையும் கையும், களவுமாக பிடித்தனர். இருவரையும் வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தினேஷ் இது குறித்து புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்கள் வாழப்பாடியை அடுத்த செக்கடிப்பட்டியைச் சேர்ந்த கண்ணதாசன் (28). பாலமணிகண்டன், (20). என்பதும், இருவரும் லாரி டிரைவர்கள் என்றும் தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    திருவேங்கடம் அருகே உள்ள சின்னகாளாம் பட்டியில் உள்ள காளியம்மன்கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சங்கரன்கோவில்:

    திருவேங்கடம் அருகே உள்ள சின்னகாளாம் பட்டியில் உள்ள காளியம்மன்கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. அதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வெளியூரிலிருந்து அங்கு வந்து தங்கியிருந்து விழாவை கொண்டாடி வருகின்றனர். 

    இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் கோவில் உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு சென்று பார்த்த போது 2 பேர் உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரிக்கும் போது அவர்கள் மதுரை அழகர்நகர் பகுதியை சேர்ந்த பூவரசன் (21), மற்றும் அதே ஊரை சேர்ந்த ராஜதுரை (22) என தெரியவந்தது.  

    அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் சம்பவம் பற்றி ஊர் நாட்டாண்மை பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த திருவேங்கடம் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
    மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சிலர் கள்ளத்தனமாக படகு மூலம் தப்பி செல்ல இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் மண்டபம் கடற்கரை பகுதியை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அய்யனார் கோவில் கடற்கரை அருகே 3 பேர் படகில் ஏறுவதற்காக வந்து கொண்டிருந்தனர். கியூ பிரிவு போலீசார் அந்த 3 பேரையும் மடக்கி பிடித்து தீவிரமாக விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி முகாமை சேர்ந்த ராஜன் (வயது 33), அவருடைய மனைவி ரூபா என்கிற அனு (22), மண்டபம் முகாமை சேர்ந்த நிஷாந்தன் (26) என்று தெரிய வந்தது.

    இவர்களில் ராஜன் தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் நடந்துள்ள திருட்டு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என்பதும், இவர் திருடி கொண்டு வரும் நகைகளை அடகு வைத்து பணம் பெற்று கொடுப்பது ரூபா என்றும் கூறப்படுகிறது. நிஷாந்தன் மீது ராமநாதபுரம் பகுதியில் நகை திருடியதாக வழக்கு உள்ளது தெரிய வந்துள்ளது.

    திருட்டு சம்பந்தப்பட்ட பல வழக்குகள் உள்ளதால் போலீசாருக்கு பயந்தே 3 பேரும் கள்ளத்தனமாக படகில் இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டம் தீட்டி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து, 3 பேரையும் கைது செய்த கியூ பிரிவு போலீசார், அவர்களை இலங்கைக்கு அழைத்துச் செல்ல முயன்ற ஏஜெண்டு யார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் மறியலுக்கு முயன்ற 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    உச்சநீதிமன்ற தீர்ப்பானது ஆதிதிராவிடர்- பழங்குடியினர் வன்கொடுமைகள் (எஸ்.சி, எஸ்.டி.) தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் உள்ளது. எனவே வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தை வலுப்படுத்தி அவசர சட்டம் இயற்ற வேண்டும். இதனை அரசியல் சாசனம் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் ஆதிதிராவிட- பழங்குடியின மக்களுக்கு ஆலய வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உண்மை நிலையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திரவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ரெயிலை மறிப்பதற்காக அரியலூர் கல்லூரி சாலையில் இருந்து அரியலூர் ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.

    அப்போது அங்கு ரெயில் நிலைய நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில், அரியலூர் போலீசார் இரும்பு தடுப்புவேலிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் ரெயிலை மறிப்பதற்காக மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியபடி வந்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதில் 12 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட 110 பேரையும் போலீசார் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் மாலையில் விடுவித்தனர். 
    ×