என் மலர்
நீங்கள் தேடியது "Australian magazine"
- முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
- முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140, லபுஸ்ஷேன் 72, சாம் கோன்ஸ்டஸ் 60 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
முன்னதாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக 19 வயதான இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் அறிமுகமாகினார். அவர் மீது விராட் கோலி மோதலில் ஈடுபட்டார். அதற்காக ஐசிசி அவருக்கு 20% போட்டி சம்பளத்தை அபராதமாகவும் விதித்தது.
இந்நிலையில், தங்களுடைய நாட்டைச் சேர்ந்த இளம் வீரரை வேண்டுமென்றே இடித்து தள்ளிய விராட் கோலியை மேற்கு ஆஸ்திரேலியா பத்திரிகை முகப்பு பக்கத்தில் கோமாளியை போல் சித்தரித்து மோசமாக விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.
இதில் 51 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை ஜெய்ஸ்வால் - விராட் கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. 82 ரன்கள் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். ஜெய்ஸ்வால் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே விராட் கோலியும் ஆப் சைடு வந்த பந்தை அடிக்க முற்பட்டு அவுட் ஆகி வெளியேறினார்.
இந்நிலையில், விராட் கோலியை கிண்டலடித்து மேற்கு ஆஸ்திரேலியா பத்திரிகை மற்றொரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதற்கு "கர்மா: கோமாளி கோலியின் மோசமான நாள்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
விராட் கோலி 36 ரன்களில் ஆட்டமிழந்ததையும் சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வாலை ரன் அவுட் செய்ததன் மூலமாகவும் கோலிக்கு இது ஒரு மோசமான நாளாக அமைந்தது என்று அந்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The back page of tomorrow's The West Australian. ????????@TheWestSport @westaustralian pic.twitter.com/MrE7H7E2ul
— Jakeb Waddell (@JakebWaddell) December 27, 2024
- விராட் கோலியை கோமாளியை போல் சித்தரித்து ஆஸ்திரேலியா பத்திரிக்கை மோசமாக விமர்சித்துள்ளது.
- ஆஸ்திரேலியர்கள் பந்தை சேதப்படுத்தியதை விட விராட் கோலி செய்தது மோசமில்லை.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று மெல்போனில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140, லபுஸ்ஷேன் 72, சாம் கோன்ஸ்டஸ் 60 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
முன்னதாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக 19 வயதான இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் அறிமுகமாகினார். அவர் மீது விராட் கோலி மோதலில் ஈடுப்பட்டார். அதற்காக ஐசிசி அவருக்கு 20% போட்டி சம்பளத்தை அபராதமாகவும் விதித்தது.
இந்நிலையில் தங்களுடைய நாட்டைச் சேர்ந்த இளம் வீரரை வேண்டுமென்றே இடித்து தள்ளிய விராட் கோலியை மேற்கு ஆஸ்திரேலியா பத்திரிக்கை முகப்பு பக்கத்தில் கோமாளியை போல் சித்தரித்து மோசமாக விமர்சித்துள்ளது.
அதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் காலம் காலமாக சீட்டிங் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழும் நீங்கள் விராட் கோலியை இப்படி சித்தரிப்பதற்கு தகுதியற்றவர்கள் என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
குறிப்பாக 2018-ம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஃபான்கிராப்ட் ஆகியோர் உப்பு காகிதத்தை வைத்து பந்தை சேதப்படுத்தினார்கள். அப்படி குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்காக பந்தை சேதப்படுத்திய அவர்களுக்கு ஆஸ்திரேலிய வாரியமே தடை விதித்தது.
மறுபுறம் இங்கே தம்முடைய அணிக்கு பின்னடைவை கொடுத்த வீரர் மீது தைரியமாக விராட் கோலி நேருக்கு நேராக மோதினார். அப்படி தன்னுடைய தாய் நாட்டுக்காக விராட் கோலி அவ்வாறு செய்ததை நியாயப்படுத்த முடியாது என்பது உண்மையாகும். ஆனால் கோமாளி என்ற சித்தரிக்கும் அளவுக்கு விராட் கோலி எதுவும் தவறாக செய்யவில்லை என்பது நிதர்சனமாகும்.
மேலும் தடை முடிந்து ஓராண்டுக்கு பிறகு வந்த ஸ்மித்தை இந்திய ரசிகர்கள் கலாய்த்தனர், அப்போது பேட்டிங் செய்து கொண்டிருடிருந்த கோலி ஸ்மித்தை கலாய்க்க வேண்டாம். அவருக்கு ஆதரவு தெரிவியுங்கள் என கைதட்டி உற்சாகப்படுத்துங்கள் எனவும் சைகை காட்டுவார். இதற்கு ஸ்மித் நன்றி தெரிவிக்கும் வகையில் விராட் கோலியிடம் கைகுலுக்கி விட்டு செல்வார்.
இந்த சம்பவங்கள் குறித்து பெரிய அளவில் பேசாத ஆஸ்திரேலிய பத்திரிக்கை, எப்போது கோலி சிக்குவார் என்பது போல காத்திருந்து செய்தது போல் உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக ஆஸ்திரேலியர்கள் பந்தை சேதப்படுத்தியதை விட விராட் கோலி செய்தது மோசமில்லை என்று இந்திய ரசிகர்கள் அந்த பத்திரிக்கைக்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.