என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "AUSvSA"
- தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது அரையிறுதி கொல்கத்தாவில் நடைபெற்றது.
- இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.
இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 2-வது அரையிறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
2-வது அரையிறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 212 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆஸ்திரேலியா 47.2 ஓவரில் 217 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டம் நடைபெற்ற ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. மேலும் மந்தமாக இருந்தது. ரன்கள் அடிக்க மிகவும் சிரமமாக இருந்தது. லீக் ஆட்டங்களில் எல்லாம் ரன்கள் குவிக்கும் வகையில் ஆடுகளம் தயார் செய்துவிட்டு, முக்கிய அரையிறுதிக்கு ஆட்டத்திற்கு இப்படி ஆடுகளம் தயார் செய்யலாமா? என விமர்சிக்கப்பட்டது.
அதேபோல் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி ஆடுகளமும் மோசமாக இருந்தது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததும் இந்தியா முதலில் பேட்டிங் செய்த அதிக ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்லோ பிட்ச் என்பதால் பந்து சரியாக பேட்டிற்கு வரவில்லை. இதனால் ரன்கள் எடுப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் இந்தியா 240 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இரவு நேரத்தில் லைட் ஒளியின் கீழ் ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகச் சிறந்த அளவில் ஒத்துழைத்தது. 47 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அதன்பின் சிறப்பாக விளையாடினார்கள்.
முதல் 10 ஓவருக்குப்பின் பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. பந்து டர்ன் ஆகவில்லை. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களால் ஜொலிக்க முடியவில்லை.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பிசிசிஐ தோல்விக்கான காரணம் குறித்து அறிக்கை கேட்ட நிலையில், ஆடுகளம் எதிர்பார்த்த அளவில் சுழற்பந்து திரும்புவதற்கு ஒத்துழைக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் 2-வது அரையிறுதி , இறுதிப் போட்டி நடைபெற்ற ஆடுகளங்கள் சாரசரி என ஐசிசி மதிப்பிட்டுள்ளது.
- லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை தென்ஆப்பிரிக்கா வீழ்த்தியிருக்கிறது.
- ஆஸ்திரேலியா கடைசி ஏழு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் 2-வது அரையிறுதி ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இந்தியாவை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும்.
தென்ஆப்பிரிக்கா இந்தத் தொடரில் அபாரமாக விளையாடி வருகிறது. இந்தியா, நெதர்லாந்து அணிகளிடம் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. ஏழு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங்கில் டி காக், மார்கிராம், வான் டெர் டுசன், கிளாசன், மில்லர் வலு சேர்க்கின்றனர். டி காக் களத்தில் நின்று விட்டால் அவரை கட்டுப்படுத்துவது கடினம். இந்த உலகக் கோப்பையுடன் அவர் ஓய்வு பெற இருப்பதால் அணிக்கு எதாவது செய்து விட்டு செல்ல வேண்டும் என நினைப்பார். டி காக் 4 சதங்களும், வான் டெர் டுசன் 2 சதமும், மார்கிராம், கிளாசன் தலா ஒரு சதமும் அடித்துள்ளனர்.
பந்து வீச்சில் ரபாடா, யான்சன், நிகிடி என முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் மகாராஜா, ஷாம்சி உள்ளனர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நம்பிக்கையுடன் களம் காண்பார்கள்.
ஆஸ்திரேலியா தொடர்ந்து இரண்டு தோல்வியை சந்தித்த பின், ஏழு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியில் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகிய பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். லாபஸ்சேன், சுமித் சதம் அடிக்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்களது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினால் பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்துவது கடினம். வார்னர், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 சதங்களும், டிராவிஸ் ஹெட் ஒரு சதமும் அடித்துள்ளனர்.
பந்து வீச்சில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் வேகப்பந்து வீச்சில் அசத்துவார்கள். புதுப்பந்தில் ஸ்டார் மாயாஜாலம் காட்டுவார். அதில் தென்ஆப்பிரிக்கா சிக்கினால் அவ்வளவுதான். சுழற்பந்து வீச்சில் ஆடம் ஜாம்பாதான். இவர் 22 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதனால் தென்ஆப்பிரிக்காவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக திகழ்வார்கள்.
இதனால் இரு பெரிய அணிகள் மோத இருப்பதால் போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.
- ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்து சாதனை.
- பலமுறை தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடவில்லை.
உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது அரையிறுதி ஆட்டம் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 18.3 ஓவரில் 91 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பின் மேக்ஸ்வெல் தனி ஒருவரால் அணியை வெற்றி பெற வைத்தார்.
விளைாடும்போது அவருக்கு அடிக்கடி தசைப்பிடிப்பு (cramps) ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்தார். இதன்காரணமாக ஆஸ்திரேலியாவின் கடைசி லீக் ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.
இந்த நிலையில், நாளைய அரையிறுதி போட்டி குறித்து கம்மின்ஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் "மேக்ஸ்வெல் விளையாட தயாராக உள்ளார். நேற்று அவருக்கு சற்று வலி இருந்தது. அவருக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? என தெரிந்து கொள்ள பலமுறை ஸ்கேன் எடுத்தோம். அதிர்ஷ்டவசமாக எல்லாம் சரியாக அமைந்துள்ளது. நாளை டாஸ் சுண்டும்போது ஆடும் லெவன் அறிவிக்கப்படும்" என்றார்.
- தென்ஆப்பிரிக்கா முதல் போட்டியில் இலங்கையை வென்றிருந்தது
- ஆஸ்திரேலியா இந்தியாவிடம் தோல்வியடைந்து இருந்தது
13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அகமதாபாத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ரவுண்ட் ராபின் முறையில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
நேற்றுடன் 8 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகியவை புள்ளி எதுவும் பெறவில்லை.
டெல்லியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
உலக கோப்பை போட்டியின் 10-வது லீக் ஆட்டம் லக்னோவில் நாளை (12-ந்தேதி) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா- கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
தென் ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 102 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அந்த அணி 428 ரன் குவித்து சாதனை படைத்தது. குயின்டன் டி காக், வான்டர் டூசன் உள்ளிட்ட 3 வீரர்கள் சதம் அடித்தனர். மார்க்ராம் அதிவேகத்தில் (49 பந்து) சதம் அடித்து சாதனை படைத்தார்.
தென் ஆப்பிரிக்க அணி உலக கோப்பை தொடருக்கு முன்பு தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும். ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது.
ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. இந்தப் போட்டியில் அந்த அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. சுமித், வார்னர் மட்டுமே நன்றாக பேட்டிங் செய்தனர். அதே நேரத்தில் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்து ஆஸ்திரேலியா முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். உலக கோப்பையின் சிறந்த போட்டிகளில் ஒன்றாக இருக்கும்.
+3
- முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் விக்கெட் 6 இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது.
- தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீராங்கனை லாரா வால்வார்ட் பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் குவித்தார்.
கேப் டவுன்:
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று தென்ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் விக்கெட் 6 இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய பெர்த் மூனே 53 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசான் கேப், ஷப்னிம் இஸ்மாயில் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீராங்கனை லாரா வால்வார்ட், ஆஸ்திரேலிய பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் குவித்தார். மறுமுனையில் டாஸ்மின் பிரிட்ஸ் 10 ரன்கள், மரிசான் கேப் 11 ரன், கேப்டன் சுனே லஸ் 2 ரன் என விரைவில் விக்கெட்டை இழந்தனர். அதிரடி காட்டிய லாரா வால்வார்ட் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அவரது விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அவரைத் தொடர்ந்து சோல் டிரையான் 25 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அனெக் போஸ்ச் 1 ரன் மட்டுமே அடித்தார். கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவை என்ற நிலையில், 7 ரன்களே எடுத்தது. கடைசி வரை போராடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் மகளிர் டி20 உலகக் கோப்பையை 6 முறை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.
+2
- பெர்த் மூனே 53 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசான் கேப், ஷப்னிம் இஸ்மாயில் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
கேப் டவுன்:
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று தென்ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லேனிங் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
துவக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி, பெர்த் மூனே களமிறங்கினர். ஹீலி 18 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பெர்த் மூனே- கார்ட்னர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தது. அதிரடி காட்டிய கார்ட்னர் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 29 ரன்னில் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் மூனே அரை சதம் கடந்து தனது அதிரடியை தொடர்ந்தார்.
கிரேஸ் ஹாரிஸ், கேப்டன் மெக் லேனிங் தலா 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். எலிஸ் பெர்ரி 7 ரன்னிலும், ஜார்ஜியா ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் விக்கெட் 6 இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. பெர்த் மூனே 53 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசான் கேப், ஷப்னிம் இஸ்மாயில் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.
இன்றைய ஆட்டத்தைப் பொருத்தவரை தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சில் சிறப்பாக இருந்தது. ஆனால் பெர்த் மூனேவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
- காலை முதலே மழை பெய்ததால் போட்டியை தொடங்க முடியவில்லை.
- 2-ம் நாள் முடிவில் 131 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 475 ரன்கள் குவித்தது.
சிட்னி:
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக் கிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நேற்றைய 2-ம் நாள் முடிவில் 131 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 475 ரன்கள் குவித்தது. ஸ்டீவன் சுமித், கவாஜா சதம் அடித்தனர்.
கவாஜா 195 ரன்னுடனும், ரென்ஷா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. காலை முதலே மழை பெய்ததால் போட்டியை தொடங்க முடியவில்லை.
முதல் 2 செஷன்களும் மழையால் பாதிக்கப்பட்டது. அதன் பின்னரும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் 3-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.
- உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் சுமித் ஆகியோர் சிறப்பாக ஆடி சதம் அடித்தனர்.
- ஹெட் அரைசதம் அடித்து 70 ரன்களில் வெளியேறினார்.
சிட்னி:
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது.
உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் சுமித் ஆகியோர் சிறப்பாக ஆடி சதம் அடித்தனர். சுமித் 104 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த டிரேவிஸ் ஹெட் கவாஜாவுடன் இனைந்து சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து ஆடிய ஹெட் அரைசதம் அடித்து 70 ரன்களில் வெளியேறினார்.
மறுபுறம் கவாஜா நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். 2வது ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 195 ரன்களும் , ரென்ஷா 5 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
- இந்த போட்டியின் போது லபுகேசன் மைதானத்தில் இருந்து லைட்டர் கேட்டார்.
- சிகரெட் மற்றும் லைட்டர் கேட்பதுபோன்று சைகை இருந்ததால் பலரது கவனத்தை ஈர்த்தது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மார்னஸ் லாபுசாக்னே 79 ரன்கள் எடுத்த நிலையில் நோர்க்யா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல் நாள் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 47 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 0 ரன்னிலும் கவாஜா 54 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
Marnus Labuschagne repaired his helmet with a lighter ?#AUSvSA #CricketTwitter pic.twitter.com/orql0cSQHW
— CricWick (@CricWick) January 4, 2023
இந்த போட்டியின் போது லபுகேசன் மைதானத்தில் இருந்து புகைப்பிடிப்பது போல சைகை காட்டி லைட்டர் கேட்டார். இதை கவனித்த வர்ணனையாளர்கள் சிரித்தபடி கமெண்ட் செய்தனர்.
அவர் ஹெல்மெட் சரிபார்ப்பதற்காக அதை கேட்டார். ஆனால் இது சிகரெட் மற்றும் லைட்டர் கேட்பதுபோன்று சைகை இருந்ததால் பலரது கவனத்தை ஈர்த்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 47 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது.
- நாளைய ஆட்டம் அரை மணி நேரம் முன்னதாக தொடங்கப்படும் என நடுவர்கள் தெரிவித்தனர்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த தொடக்க டெஸ்டில் 2-வது நாளிலேயே தென்ஆப்பிரிக்காவை சுருட்டிய ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி ஆஸ்திரேலியா அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கவாஜா- டேவிட் வார்னர் களமிறங்கினர். வார்னர் 10 ரன் எடுத்திருந்த போட்டி நோர்க்யா பந்து வீச்சில் அவுட் ஆனார். இதனையடுத்து கவாஜா - மார்னஸ் லாபுசாக்னே ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் அரை சதம் அடித்தனர்.
இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடி வந்த மார்னஸ் லாபுசாக்னே 79 ரன்கள் எடுத்த நிலையில் நோர்க்யா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஸ்மித் களமிறங்கினார். அப்போது வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ஆனால் வெளிச்சத்தில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால் முதல் நாள் ஆட்டம் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். நாளைய ஆட்டம் அரை மணி நேரம் முன்னதாக தொடங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 47 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 0 ரன்னிலும் கவாஜா 54 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
- விரலில் ஏற்பட்ட காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் விலகியுள்ளனர்.
- அவர்களுக்கு பதிலாக ஹேசில்வுட், ஆஷ்டன் அகர் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த தொடக்க டெஸ்டில் 2-வது நாளிலேயே தென்ஆப்பிரிக்காவை சுருட்டிய ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
உள்ளூர் சூழலில் வலுவாக உள்ள ஆஸ்திரேலியா இந்த டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
விரலில் ஏற்பட்ட காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஹேசில்வுட், ஆஷ்டன் அகர் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது. சிட்னி ஆடுகளம் ஓரளவு சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதாலும், அடுத்து வரும் இந்திய டெஸ்ட் தொடரை மனதில் கொண்டும் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகரை பயன்படுத்த ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதே சமயம் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் லான்ஸ் மோரிஸ் பெயரும் பரிசீலிக்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில் 78.57 சதவீத புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கும் ஆஸ்திரேலியா இந்த டெஸ்லும் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டி வாய்ப்பை உறுதி செய்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. தென்ஆப்பிரிக்க அணிக்கு கடந்த ஆண்டு மிகவும் மோசமானதாக அமைந்தது.
இன்னிங்சில் 9 முறை 200 ரன்னுக்குள் சுருண்டது. அண்மை காலமாக தென்ஆப்பிரிக்காவின் பேட்டிங் படுசொதப்பலாக உள்ளது. இந்த டெஸ்டிலும் பேட்ஸ்மேன்கள் கேப்டன் டீன் எல்கர், பவுமா, சாரல் எர்வீ உள்ளிட்டோர் கைகொடுக்காவிட்டால், சரிவில் இருந்து மீள்வது கடினம் தான். மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் டி புருன் தாயகம் திரும்பி விட்டார். அவருக்கு பதிலாக வான்டெர் டஸன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 50 சதவீத புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ள தென்ஆப்பிரிக்க அணி, இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க இந்த டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கும் வேட்கையுடன் வியூகங்களை தீட்டும் தென்ஆப்பிரிக்காவின் முயற்சி சிட்னியில் பலன் தருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வானிலையை பொறுத்தவரை சிட்னியில் முதல் 4 நாட்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் மழை குறுக்கிடலாம் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த மைதானம் ஆஸ்திரேலியாவுக்கு ராசியானது. கடைசியாக விளையாடிய 21 டெஸ்டுகளில் ஒன்றில் மட்டுமே தோற்று இருக்கிறது. தென்ஆப்பிரிக்க அணி இங்கு 11 டெஸ்டுகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 8-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது. அந்த ஒரு வெற்றி 1994-ம் ஆண்டு கிடைத்தது ஆகும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் அகர், கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லயன், ஸ்காட் போலன்ட், ஹேசில்வுட் அல்லது லான்ஸ் மோரிஸ்.
தென்ஆப்பிரிக்கா: சாரல் எர்வீ, டீன் எல்கர் (கேப்டன்), பவுமா, வான்டெர் டஸன் அல்லது ஹென்ரிச் கிளாசென், கயா ஜோன்டா, கைல் வெரைன், மார்கோ ஜேன்சன், கேஷவ் மகராஜ், ககிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா, இங்கிடி அல்லது சிமோன் ஹர்மெர்.
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- தென் ஆப்பிரிக்க வீரர் தனது மனைவியின் முதல் பிரசவத்துக்காக சிட்னி டெஸ்டில் இருந்து விலகி உள்ளார்.
- சிட்னி டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக வான் டெர் டசன் அல்லது விக்கெட் கீப்பர் ஹென்றிச் கிளாசன் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 4-ம் தேதி சிட்னி மைதானத்தில் தொடங்கவுள்ளது.
சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் டி பிரைன் தனது மனைவியின் முதல் பிரசவத்துக்காக சிட்னி டெஸ்டில் இருந்து விலகி உள்ளார்.
இதையடுத்து சிட்னி டெஸ்ட் போட்டியில் டி பிரைனுக்கு பதிலாக வான் டெர் டசன் அல்லது விக்கெட் கீப்பர் ஹென்றிச் கிளாசன் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்