என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "AV Velu"
- விஜய் வசந்த், அமைச்சர் எ.வ. வேலுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
- மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அமைக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அம்மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் அவர் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலுவை நேரில் சந்தித்து கன்னியாகுமரி மாவட்டம் விரிகோடு பகுதியில் அமைய இருக்கும் ரெயில்வே மேம்பாலத்தை அந்த பகுதி மக்களின் கருத்தைக் கேட்டு அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்
மேலும் ஊரை ஒதுக்கி மேம்பாலம் கட்டும் திட்டத்தை கை விட வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன்.
- பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
- நேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
சென்னை:
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்களும், பவுர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தும் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வகையில் பெருந்திட்ட வரைவின் கீழ் ரூ.36.41 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், 2024 - 2025-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்ட மன்ற மானியக் கோரிக்கையின்போது, "திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலின் கிரிவலப் பாதையில் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.23 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்" எனவும், "கோவிலில் பக்தர்களின் வசதிக்காக புதியதாக பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்" எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புகளை நிறைவேற்றிடும் வகையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் அரசுக்கு சொந்தமாக 15 இடங்களில் கழிவறைகள் மற்றும் குளியலறைகள் ஏற்படுத்துதல் மற்றும் 2 இடங்களில் 7 பக்தர்கள் இளைப்பாறும் கூடங்கள் அமைத்தல், ரூ.50 கோடி மதிப்பீட்டில் பக்தர் கள் தங்கும் விடுதி – 2 அமைத்தல் போன்றவை குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி விளக்கப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், "திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நாம் நல்லமுறையில் செய்து தந்திட வேண்டும்.
கிரி வலப்பாதையில் அமைக்கப்படும் கழிவறைகள் மற்றும் குளியலறைகளின் உயரம் சுமார் 13 அடி உயரம் கொண்டதாகவும், நல்ல காற்றோட்டத்துடன் சர்வதேச தரத்தில் அமைக்கப்படுவதோடு, அதற்கான அணுகு சாலை கலை நயத்துடன் செம்மையாக அமைக்கப்பட வேண்டும்.
பக்தர்கள் தங்கும் விடுதியானது நீருற்றுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டதாக இருந்திட வேண்டும். இதுகுறித்த விரிவான திட்ட அறிக்கையினை உடனடியாக தயார் செய்து பணிகளை விரைவுபடுத்திட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் சுகுமார், ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் பெரியசாமி, கோவில் இணை ஆணையர், செயல் அலுவலர் ஜோதி, அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
- சென்னை கலைவாணர் அரங்கில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
- 'கலைஞர் எனும் தாய்' எனும் புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' என்கிற புத்தக வெளியீடு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் .
இந்த புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், "எ.வ.வேலு என்றால் எதிலும் வல்லவர் மட்டுமல்ல, எழுத்திலும் வல்லவர்"என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், " இந்த நூலை எழுத உந்து சக்தியாக இருந்தது கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி" என்றார்.
புத்தகத்தை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், "
முதலமைச்சரின் கையில் புத்தகத்தை பெற்றது பெருமை அளிக்கிறது. கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
கருணாநிதி என்று கூறினால், சினிமா, இலக்கியம், அரசியல். கலைஞர் எனும் தாய் என்ற நூல் காவியமாக அமைந்துள்ளது.
தமிழினத்திற்காக தொடர்ந்து போராடிய தலைவர் கருணாநிதி. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு ஆலமரம். கருணாநிதி மறைவுக்கு பிறகு, அவரது புகழ் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக கையாண்டவர் கலைஞர். தற்போது அலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளன. பிறர் | மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது.
பேச்சு, செயலில் தனக்கான பாணியை உருவாக்கியவர் அமைச்சர் உதயநிதி. அறிவார்ந்தவர்கள் சபையில் பேசாமல் இருப்பது தான் நல்லது. ஆனால் தற்போது பேசி தான் ஆக வேண்டும்.
கலைஞர் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. உலகில் எந்த தலைவருக்கும் இவ்வளவு சிறப்பாக விழா கொண்டாடியது கிடையாது.
எதை பேச வேண்டும் என்பதைவிட, எதை பேசக் கூடாது என்பது முக்கியமானது. முதலமைச்சர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மிகப் பெரிய வெற்றி.
ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம். அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். பள்ளியில் புதிய மாணவர்களை விட, பழைய மாணவர்களை சமாளிப்பது கடினம்.
திமுகவில் பழைய தலைவர்களை சிறப்பாக சமாளித்து விருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். படப்பிடிப்பிற்காக திருவண்ணாமலை சென்ற என்னை சிறப்பாக கவனித்தார் எ.வ.வேலு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாய்க்கு நிகர் தலைவர் முத்தமிழறிஞர் அவர்களின் சிறப்புகளை பேசும் "கலைஞர் எனும் தாய்" நூலினை வெளியிட்டார் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்! pic.twitter.com/Mj5gnkruCI
— DMK (@arivalayam) August 24, 2024
- பதவியேற்ற 22 திமுக எம்.பிக்களில் 13 எம்.பி.க்கள் வாழ்க உதயநிதி என்று கோஷமிட்டனர்.
- வாழ்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க” என 3 திமுக எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
நேற்று பிரதமர் மோடி மற்றும் 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். இன்று 2-வது நாளாக பதவி பிரமாணம் நடைபெற்று வருகிறது.
தமிழக எம்.பி.க்கள் வரிசையாக இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டனர். திமுக எம்.பிக்கள் பலரும் இன்று மக்களவையில் பதவியேற்றபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டதோடு, வாழ்க உதயநிதி என்றும் கோஷமிட்டனர்.
அதாவது இன்று பதவியேற்ற 22 திமுக எம்.பிக்களில் 13 எம்.பி.க்கள் வாழ்க உதயநிதி என்று கோஷமிட்டனர்.
கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்க பாண்டியன், கலாநிதி வீராசாமி, தருமபுரி எம்.பி ஆ மணி, பெரம்பலூர் எம்.பி அருண் நேரு, தேனி எம்.பி. தங்க தமிழ்செல்வன் ஆகியோரைத் தவிர பிற திமுக எம்.பிக்கள் அமைச்சர் உதயநிதியின் பெயரைக் குறிப்பிட்டனர்.
மேலும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி மலையரசன், ஆரணி எம்.பி தரணிவேந்தன், திருவண்ணாமலை எம்.பி சி.என்.அண்ணாதுரை ஆகியோர் இன்று மக்களவையில் பதவியேற்றபோது, "வாழ்க பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வாழ்க" என கோஷமிட்டனர்.
கடைசியாக பதவியேற்ற தென்காசி திமுக எம்.பி ராணி, வாழ்க கனிமொழி, வாழ்க அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் என கோஷமிட்டார்.
கடந்த காலங்களில் அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் 'அம்மா வாழ்க' என கோஷமிட்டதற்கு திமுக தலைவர்கள் விமர்சனம் செய்துள்ள நிலையில், இப்போது திமுக எம்.பிக்கள் பலரும் உதயநிதி வாழ்க என கோஷமிடுவது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
திமுகவின் முக்கிய எம்.பி.யான தயாநிதி மாறன் கூட உதயநிதி வாழ்க என கோஷமிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்றைய தினம் “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில்” நடைபெறும் ஊழல்களையும், மின்வெட்டை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் சொல்ல நினைத்து, “தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை” என்றும் “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் ஊழலே நடக்கவில்லை” என்றும் “இலைச் சோற்றுக்குள் இமய மலையை” திணித்து மறைக்க முயன்ற மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
“தமிழ்நாடு மின்வெட்டை நோக்கிச் செல்கிறது” என்று ஒரு ஆங்கில நாளிதழிலேயே செய்தி வெளிவந்துள்ளது. ஆகவே மின்வெட்டு என்பதை மக்கள் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள் என்பது அக்மார்க் உண்மை.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி, அதில் உள்ள ஊழல் எல்லாம் தமிழக சட்டமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள சி.ஏ.ஜி. அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
மின் கொள்முதல் ஊழல் பற்றி சென்னை உயர் நீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ப்பட்டு அதுவும் மின் வாரியத்தில் பணியாற்றியவரே ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று வழக்குப் போட்டாரே அதுவும் அமைச்சருக்கு தெரியாதா?
ஆகவே தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் ஒரு அமைச்சர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தன் பக்கத்தில் அமர்த்தி வைத்துக் கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து “அரசியல் பேட்டியை” கொடுப்பதும், அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் கூட அமர்ந்து “ஊழலை மறைக்கும்” பேட்டிக்கு துணை போக வைப்பதும் பொறுப்புள்ள ஒரு அமைச்சரின் செயலா என்பதை முதலில் மின்துறை அமைச்சர் யோசிக்க வேண்டும்.
அதை விடுத்து எங்கள் கழகத் தலைவர் கொடுத்த ஆதாரமிக்க அறிக்கை பற்றியும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிர்வாக அலங்கோலம் பற்றியும் “கேலி” செய்யும் விதத்தில் பேட்டியளிப்பது அமைச்சர் இன்னும் பொதுவாழ்வில் தன்னை பண்படுத்திக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
ஊழலிலும், நிர்வாக சீர்கேட்டிலும், கடும் நிதி நெருக்கடியிலும் மூழ்கிக் கிடக்கும் மின் பகிர்மானக்கழகத்தை முடிந்தால் அமைச்சர் தங்கமணி சீரமைக்க நடவடிக்கை எடுக்கட்டும். அதை விடுத்து கற்பனைக் குதிரைகளை பறக்க விட்டு, ஊழல் கறையைப் போக்க முயற்சிப்பது வீண் வேலை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு எ.வ.வேலு கூறியுள்ளார். #DMK #AVVelu #TNMinister #Thangamani
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கருணாநிதியின் சமாதியை மலர்களால் விதவிதமாக அலங்கரித்தும் வைத்துள்ளனர்.
கருணாநிதியின் மீது அளவற்ற பாசம் கொண்ட கட்சிக்காரர்கள் பலர், தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு நேற்று தனது ஆதரவாளர்களுடன் சென்று கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது பஜனை மெட்டில் கருணாநிதியை புகழ்ந்து பாடல்கள் பாடினார். எங்கள் தலைவா தங்கத் தலைவா... அன்பு தலைவா என்று பாடிய பாடல்களுக்கு ஏற்ப இசைக்கருவிகளும் இசைக்கப்பட்டன.
இதற்காக ஆர்மோனிய பெட்டி, மிருதங்கம் கஞ்சரா, தாளம், கட்டை போன்ற 50-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளுடன் நிர்வாகிகளை அங்கு அழைத்து வந்திருந்தார்.
நினைவிடத்தை சுற்றி அமர்ந்து கொண்டு இசை இசைக்க எ.வ.வேலு அழகாக கருணாநிதியை புகழ்ந்து பஜனை பாடினார்.
சுமார் 1 மணி நேரம் பாடிய இவரது பாடல்கள் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.
இதுபற்றி எ.வ.வேலுவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
தலைவர் கலைஞருக்கு இசை மீது அதிக நாட்டம் உண்டு. இசையை மிகவும் ரசிப்பார். எனவே இவரது புகழை இசை மூலம் வெளிப்படுத்தி பாடினோம். தலைவரை புகழ்ந்தும் பஜனை பாடினோம்.
வைஷ்ணவ கோவில்களில் நிறைய ஆராதனை, பஜனை பாடல்கள் பாடுவதை பார்த்திருக்கிறேன். அதே போல் தலைவருக்கும் பஜனை பாடல்கள் பாடி எங்கள் அன்பை வெளிப்படுத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுமார் 1 மணி நேரம் 10-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் பிச்சாண்டி கிரி, அம்பேத்கர் மற்றும் ஸ்ரீதர் உள்பட ஏராளமானோர் இடம் பெற்றிருந்தனர். #DMK #Karunanidhi #AVVelu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்