search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avati"

    • 500-க்குமேற்ப்பட்டோர் தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
    • ஜாதி சான்றிதழ் கொடுப்பதற்கான அறிகு றியே இல்லாமல் இருக்கிறது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சுமார் 171மலை கிராமங்களில் 75ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். கல்வராயன் மலையில் 8ஆயித்துக்கு மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் உயர்நிலை, மேல்நிலை, மற்றும் கல்லூரிக்கல்வி பயில சுமார் 500-க்குமேற்ப்பட்டோர் மலைவாழ் சாதி சான்றிதழ் கேட்டு கல்வராயன்மலை தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து 3 மாதங்களுக்கு மேலாகியும் வருவாய் துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதால் உயர்கல்வி பயில முடியாமல் அரசு நலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ -மாணவிகள் அவதிஅடைந்துள்ளனர்.

    முன்பெல்லாம் சாதி சான்று கேட்டு விண்ண ப்பித்தால் 3 மாதத்திற்கு ஒருமுறை வருவாய் துறையி னர் மலைவாழ் மக்களிடம் நேரடியாக விசாரணை செய்து அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவார்கள். ஆனால் தற்போது சுமார் 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் சாதி சான்றிதழ் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ண ப்பித்தும் இதுவரை நேரடி விசாரணைக்கு அல்லது ஜாதி சான்றிதழ் கொடுப்பதற்கான அறிகு றியே இல்லாமல் இருக்கிறது. ஆகையால் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 மின்மாற்றியில் ஒன்று கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு பழுதாகி செயல்படாமல் உள்ளது.
    • மாற்று லைன் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தில் மெயின் ரோடு பகுதியில் 200 கேவிஏ மின் திறன் கொண்ட 2 மின் மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி மூலம் 20-க்கும் மேற்பட்ட விவசாய பம்பு செட்டுகள் மூலம் விவசாய பயிர்களுக்கு மின்சாரம் செல்கின்றது. மேலும் யாதவர் வீதி, வாணியர் வீதி, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் மின்சாரம் செல்கின்றது.

    இந்த 2 மின்மாற்றியில் ஒன்று கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு பழுதாகி செயல்படாமல் உள்ளது. இன்று வரை இந்த மின் மாற்றியை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யாத தால் விவசாயிகள், பொது மக்கள் மின்சாரம் பற்றாக் குறையால் அவதிப்பட்டு வருகின்றனர். மாற்று லைன் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் மின்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் மின் விளக்கு, மின்விசிறி, வீட்டு உப யோகப் பொருட்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். மின்மாற்றி யை சரி செய்வ தற்கு அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இன்று அதிகாலை பண்ருட்டியில் வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.
    • பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் வீட்டுக்குள் முடங்கினர்/

    கடலூர்:

    தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதன் பின்னர் மார்ச் மாதம் கோடை காலம் தொடங்கும். இதற்கு இடைப்பட்ட காலமான ஜனவரி, பிப்ரவாி மாதங்களில் குளிரும், பனிப்பொழிவும் நிலவும். இந்த நிலையில் வழக்கம் போல வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் வரை பெய்து ஓய்ந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியது. அதன் பின்னர் வளிமண்டல சுழற்சி காரணமாக அடிக்கடி மழையும் பெய்து வந்தது. தமிழகத்தை பொறுத்தவரை தை மாதத்தில் இருந்து பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும்.  கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம் பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருந்தாலும் மதியம் அடிக்கக்கூடிய வெயில் இதமானதாக இருக்கிறது  ஆனால் இன்று அதிகாலை பண்ருட்டியில் வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பண்ருட்டியில் இருந்து நெய்வேலி, வடலூர் ,கும்பகோணம், தஞ்சை செல்லும் சாலை, பண்ருட்டி -சென்னைசாலை, பண்ருட்டி-கடலூர்சாலை, பண்ருட்டி சேலம் சாலை, பண்ருட்டி - அரசூர் சாலைகளில் அதிக அளவு பனிமூட்டம் காணப்பட்டது.இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியும், குறைந்த வேகத்தில் சென்றதையும் காண முடிந்தது. பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் வீட்டுக்குள் முடங்கினர். குளிர்ச்சியான சீதோஷன நிலையால் வீடுகளில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் உறைநிலைக்கு சென்றதுனிப்பொழிவு குறையும் காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் வீடுகளில் இரவு நேரத்தில் பொதுமக்கள் மின்விசிறி பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.  மேலும் பகல் நேரம் தவிர காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் வெளியே வரும்போது குழந்தைகள், பெண்கள் உள்பட பெரும்பாலானோர் சுவெட்டர், குல்லா போன்ற குளிர்தடுப்பு ஆடைகளை அணிந்து கொண்டே வெளியே வருகின்றனர். இந்த ஆண்டு வெயில், மழை, பனிப்பொழிவு என மாறி, மாறி வருவதால் பலர் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பண்ருட்டி பகுதியில் இன்று பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது  இதனால் அதிகாலையில் பாதசாரிகள் நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் சிரமப்பட்டனர். கார்கள், வேன்கள், லாரிகள்,பஸ்கள் மிகுந்த சிரமத்துடன் பயணத்தை தொடர்ந்தனர்  ெரயில் நிலைய வளாகம் பனிப்பொழிவால் நிரம்பிருந்தது. காலையில் வந்த எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ெரயில்கள் கடும் பனிமூட்டத்துக்கு இடையே ரெயில் நிலையத்துக்குள் வந்து சென்றன. இதேபோல் சிதம்பரத்திலும் இன்று அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரம் தெரியாத வகையில் பனிப்பொழிவு காணப்பட்டது.புவனகிரி பகுதியிலும் பனிப்பொழிவு அதிகளவில் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன.

    • நடந்து செல்லும் பொது மக்கள் சாலைகளில் நீண்ட நாட்களாக உள்ள பள்ளத்தால் முகம் சுழித்து மன வேதனைஅடைகின்றனர்.
    • வாகன ஓட்டிகளுக்கு நோய்வாய் ஏற்படும் வாய்ப்பு அளவுக்கு அதிகமாக உள்ளது

    கடலூர்:

    தமிழகத்தில் 108 வைணவ தலங்களில் முதன்மையான திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் உள்ளது. இதுதவிர திருப்பாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோவிலும் இங்கு உள்ளது.இப்படிப்பட்ட அற்புத ஸ்தலங்களால் அமையப் பெற்றது கடலூர் மாவட்டம். மேலும் கடலூர் மாநகராட்சியாக மாற்றப்பட்டு பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகள் அதிகாரி களால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.   மேலும் கடலூரில் சில்வர் பீச், பெரிய மால் எண்ணிலடங்காத சிறிய மற்றும் பெரிய அளவிலான விலை குறைந்த விலை அதிகமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வேறு எந்த பகுதியை காட்டிலும் கடலூர் மாவட்டம் முதன்மையாக உள்ளது. மேலும் விழுப்புரம், திண்டிவனம், சென்னை, திருவண்ணாமலை, விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடலூர் மாவட்டம் வழியாகத்தான் செல்ல முடியும். மேலும் கடலூர் துறைமுக பகுதி, தேவனாம்பட்டினம் பல்வேறு மீனவ குடும்பங்க ளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

    இப்படிப்பட்ட பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்தில் சாலைகளில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்கள் சாலைகளில் நீண்ட நாட்களாக உள்ள பள்ளத்தால் முகம் சுழித்து மன வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக கடலூரில் இருந்து முதுநகர் மற்றும் கடலூரில் இருந்து புதுவை மாநிலத்திற்கு செல்லக்கூடிய சாலை மிக மோசமாக நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலை மிகவும் சேதம் அடைந்து பெரும் பள்ளங்களாக உள்ளதால் அதில் செல்லக்கூடிய வாகனங்களால் சிறிது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.  மேலும் சாலையிலிருந்து வரும் புகையினால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நோய்வாய் ஏற்படும் வாய்ப்பு அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த சாலையில் ஏற்படும் பள்ளத்தினால் வாகனங்களும் பெரிதும் சேதமடைகிறது  நீண்ட நாட்களாக சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது பொதுமக்கள் மத்தியில் வேதனை அளிக்கிறது. எனவே அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்தி சாலைகளில் உள்ள குண்டு குழியுமாக உள்ள பெரிய பள்ளங்களை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுகின்றனர்.

    • கீழக்கரை இஸ்லாமியா பள்ளி சாலை பாதாள பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது.
    • இதனால் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். கீழக்கரை தெற்கு தெரு பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமியா பள்ளி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து செல்கின்றனர்.

    தொழுகைக்காக ஏராளமான மக்கள் பள்ளிவாசல் வந்து செல்கின்றனர்.நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக செல்கிறது, இந்த நிலையில் ஜும்மா பள்ளிவாசல் செல்லும் வழியில் உள்ள சாலை பள்ளங்களுடன் சகதி நிறைந்த தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைகின்றனர்.

    கீழக்கரை நகராட்சிக்கு புதிய சாலை அமைக்கும் பணிக்காக அரசு பல்வேறு நிதிகள் ஒதுக்கீடு செய்த நிலையிலும் முக்கியமான சாலை நீண்ட நாட்களாக மோசமான நிலையில் காட்சியளித்து, எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது இந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையில் இந்த பகுதியில் தரமான முறையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×