search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Axar patel"

    • அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    • ஷிவம் டுபே ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.

    இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஷிவம் டுபே ஆகியோர் இடம் பிடித்தனர்.

    இலங்கை அணியின் பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அவிஷ்கா பெர்னாண்டோ 1 ரன் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 14 ரன்னிலும், சதீரா சமரவிக்ரமா 8 ரன்னிலும், சரித் அசலங்கா 14 ரன்னிலும் வெளியேறினார்.

    ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் பதும் நிசாங்கா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்னில் வெளியேறினார்.

    நிசாங்கா ஆட்டமிழக்கும்போது இலங்கை அணி 26.3 ஓவரில் 101 ரன்கள் எடுத்திருந்தது. 7-வது வீரராக களம் இறங்கிய துனித் வெலாலகே அரைசதம் அடிக்க இலங்கை அணி 200 ரன்களை தாண்டியது. இறுதியாக 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. வெலாலகே 65 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். முகமது சிராஜ், ஷிவம் டுபே, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
    • கடைசி ஓவரில் டேவிட் மில்லர் அடித்த பந்தை சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்தது திருப்புமுனையாக அமைந்தது.

    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில் டேவிட் மில்லர் அடித்த பந்தை சூர்யகுமார் யாதவ் கேட்ச் பிடித்தது திருப்புமுனையாக அமைந்தது.

    இந்நிலையில், டேவிட் மில்லர் கேட்சை பிடித்ததும் எல்லோரும் சூர்யகுமாரிடம் லைஐ டச் செய்தீர்களா என கேட்டோம் என்றார் அக்சர் படேல்.

    இதுதொடர்பாக அக்சர் படேல் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

    நான் மிட் விக்கெட்டில் இருந்தேன். மில்லர் பந்தை அடிக்கும்போது இது சிக்சருக்குப் போய்விட்டது என நினைத்தேன்.

    ஆனால் சூர்யா கேட்சை பிடித்ததும், எல்லோரும் அவரிடம் கேட்டார்கள் கயிற்றைத் தொட்டீர்களா? என. சூர்யா பாய்க்கு கூட உறுதியாக தெரியவில்லை. முதலில் ஆம், நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் எனக்கூறிய அவர், சில நொடிகளில் எனக்கு உறுதியாக தெரியவில்லை என்றார்.

    ரீப்ளேயைப் பார்த்தபோது 99 சதவீதம் பேர் உலகக் கோப்பையை வென்றோம் என நினைத்தோம்.

    அது நெருக்கடியான நிலையில் பிடிக்கப்பட்ட கேட்ச். அப்போது அவர் தனது சமநிலையை தக்கவைத்த விதம் ஆச்சரியமாக இருந்தது என தெரிவித்தார்.

    • இந்தியா 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றது.
    • இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே முக்கிய பங்காற்றினர்.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 17 ஆண்டு கழித்து உலகக் கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே முக்கிய பங்காற்றினர்.

    இறுதிப்போட்டியில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா அணி தடுமாறியபோது 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய அக்சர் படேல் 31 பந்தில் 47 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் 4-வது இடத்தில் களமிறங்கியது குறித்து அக்சர் படேல் சமீபத்திய அளித்த பேட்டியில் கூறியதாவது:

    போட்டியின் ஆரம்பத்திலேயே 3 விக்கெட் விழுந்ததும் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தன்னை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அனுப்பினர்.

    ரிஷப் பண்ட் அவுட்டானபோது என்னுடைய பின்புறத்தில் நின்று கொண்டிருந்த ரோகித் பாய் பேட்டிங் செய்யத் தயாராகுமாறு சொன்னார்.

    அடுத்த சில நிமிடங்களில் என்னிடம் ஓடி வந்த சஹால், பயிற்சியாளர் ராகுல் பாய் பேட்டிங் செய்வதற்கு தயாராகுமாறு சொன்னதாக சொன்னார். அப்போது எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை. ஏனெனில் 2 விக்கெட் விழுந்த பின்பும் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் சூரியகுமாரும் அவுட்டானார்.

    எதைப் பற்றியும் யோசிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அப்போது களத்திற்குச் சென்ற என்னிடம் "எதற்காகவும் பதறாமல் பந்தை பார்த்து அடி" என ஹர்திக் பாண்ட்யா குஜராத்தி மொழியில் சொன்னார். அது என்னுடன் ஒட்டிக்கொண்டது. அதன்பின் நான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தேன். அது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது என தெரிவித்தார்.

    • ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள்.
    • அதனால் அக்சர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவை பயன்படுத்தலாம்.

    ரோகித் சர்மா தலைமையில் நடப்பு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியானது லீக் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

    இதையடுத்து இந்திய அணி நாளை மறுநாள் (ஜூன் 20) நடைபெறும் தங்களுடைய முதல் சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி அக்ஸர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவை பயன்படுத்த வேண்டும் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் ஃபிளெமிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    அமெரிக்காவில் உள்ள மைதானக்களைப் போல் அல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் உள்ள மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் அதிகம் இருக்கும். எனவே இந்திய அணி குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டு வர வேண்டும். ஒரே மாதிரியான வீரர்களை அணியில் வைத்துக்கொண்டு இந்தியா வீணடிக்காது என்று நினைக்கிறேன்.

    ஏனெனில் ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள். அதனால் அக்சர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவை பயன்படுத்தலாம். ஜடேஜா எப்பொழுதுமே ஆடுகளத்தின் தன்மையை புரிந்து கொண்டு எதிரணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட கூடியவர். எனவே அவரை இந்திய அணி சிறப்பாக கையாளும்.

    இவ்வாறு பிளெமிங் கூறினார்.

    • ஆர்சிபி அணிக்கு எதிரான நாளைய போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • முக்கியமான போட்டியில் ரிஷப் பந்த் விளையாடாமல் இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 62-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

    இந்த போட்டி இரு அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மிகவும் மிக்கியமான போட்டி என்பதால் வெற்றிகாக இரு அணிகளும் கடுமையாக போராடுவார்கள்.

    இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு நாளை நடைபெறும் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நாளைய போட்டியில் யார் அணியை வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் நாளைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை நட்சத்திர ஆல் ரவுண்டர் அக்சர் படேல் வழிநடத்துவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இருப்பினும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான போட்டியில் ரிஷப் பந்த் விளையாடாமல் இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    • யாராவது ஒருவர் களம் இறங்கிய சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், அதை அக்சார் பட்டேலால் செய்ய முடியும்.
    • பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என மூன்று துறைகளிலும் பிரமாண்ட வீரர்.

    டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் யார் யாரெல்லாம் இடம் பெற வேண்டும் என கிரிக்கெட் நிபுணர்கள், முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்துகளை வலியுறுத்தி வருகின்றனர்.

    அந்த அடிப்படையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியும் தனது கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-

    நிச்சயமாக அக்சார் பட்டேல் அணியில் இடம் பெற வேண்டும். என்னை பொருத்தவரைக்கும் ரிஷப் பண்ட், அக்சார் பட்டேல் என இருவரும் டி20-க்கான இந்தியா அணியில் நிச்சயமாக இடம்பெற வேண்டும். டி20 போட்டியில் ரோகித் சர்மா, யாராவது ஒருவர் 8-வது இடத்தில் களம் இறங்கி 15 முதல் 20 ரன்கள் அடிக்க வேண்டும் என நினைத்தால், அந்த பணியை அக்சார் பட்டேல் செய்வார். அவருக்கு யாராவது ஒருவர் களம் இறங்கிய சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், அதை அக்சார் பட்டேலால் செய்ய முடியும்.

    அதுதான் ஜடேஜா மற்றும் அக்சார் பட்டேலுக்கு சாதகமாகும். அவர்கள் அவரும் திறமையானவர்கள். மற்றும் இந்திய அணிக்காக பரிசு. பந்தை அடிக்கக் கூடிய திறன் இருக்க வேண்டும். டி20 கிரிக்கெட்டில் டெக்னிக்கிற்கு தேவையான நேரம் தேவையில்லை. போட்டிக்கான அடிப்படை இருக்க வேண்டும். அது அக்சாரிடம் உள்ளது.

    டெஸ்ட் போட்டியில் அவரது பேட்டிங்கை பார்த்தீர்கள் என்றால், டர்னிங் ஆடுகளத்தில் நெருக்கடியின் கீழ் ரன்கள் அடித்திருப்பார். பேட்டிங் செய்யும் திறன் அவரிடம் உள்ளது. டி20-யில் அடித்து விளையாட வேண்டியது அவசியம். டி20-யில் அவரை சற்று முன்னதாக களம் இறக்கி செட்டில் ஆக கொஞ்சம் டைம் கொடுத்தால், அதன்பின் அவரால் அடித்து விளையாட முடியும்.

    பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என மூன்று துறைகளிலும் பிரமாண்ட வீரர். டி20 கிரிக்கெட்டிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் உள்ளது.

    இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

    • டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார்.
    • இந்திய வீரர்களில் கெய்க்வாட் 9-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர்களான அக்சர் படேல் மற்றும் ஜெய்ஸ்வால் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.

    டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால், தனது சிறந்த தரநிலையான 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்ற இந்திய வீரர்களில் கெய்க்வாட் 9-வது இடத்தில் உள்ளார்.

    டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 4 இடங்களில் மாற்றமின்றி அதே வீரர்களே தொடருகின்றனர். ஆனால் 5-வது இடத்தில் இருந்த இந்திய வீரரான ரவி பிஷ்னோயை பின்னுக்கு தள்ளி சக நாட்டவரான அக்சர் படேல் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    • ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு அறையில் ஒரு பட்டியல் குறித்த புகைப்படம் வைரலானது.
    • அந்த பட்டியலில் 3 இந்திய வீரர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது.

    மெல்போர்ன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த் நகரில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது.

    டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு அறையில் ஒரு பட்டியல் குறித்த புகைப்படம் வைரலானது. அதில் தலைசிறந்த சுழற்பந்து ஆல்ரவுண்டர்கள் பட்டியல் இருந்தது. அதில் ஷகிப் அல் ஹசன், டிராவிஸ் ஹெட், சமித் பாட்டீல், ரிச்சி பெனாட், டேனியல் வெட்டோரி மற்றும் சர் கேரி சோபர்ஸ் போன்ற சில பெயர்கள் பட்டியலில் இருந்தது.

    இந்த பட்டியலில் அஸ்வின், அக்சர் படேல், 3 இந்திய வீரர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    • ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார்.
    • உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி வீரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் அக்ஷர் படேல் இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்த நிலையில் வெளியே வந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களிடம் செல்பி எடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்தார். இதனால், ஐபிஎல், ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. அவர் தற்போது குணமடைந்து வருகிறார்.

    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவர் காயம் அடைந்ததையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டார்.

    • உலகக்கோப்பைக்கான இந்திய அணி தரமான வீரர்களால் நிரம்பி உள்ளது.
    • ஆனால் யசுவேந்திர சாகல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    மும்பை:

    உலகக்கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி வருகிற 5-ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவர் காயம் அடைந்ததையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். அக்சர் பட்டேலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்தநிலையில் இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கு பதில் யசுவேந்திர சாகலை சேர்த்திருக்க வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பைக்கான இந்திய அணி தரமான வீரர்களால் நிரம்பி உள்ளது. ஆனால் யசுவேந்திர சாகல் அல்லது வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருக்க வேண்டும். எனது தனிப்பட்ட முறையில் இந்திய அணி யுஸ்வேந்திர சாகலை தவறவிட்டு விட்டதாக உணர்கிறேன். அந்த அணியில் இல்லாத ஒரே அம்சம் ஒரு லெக் ஸ்பின்னர் ஆகும் என்று நினைக்கிறேன்.

    சாகலை தேர்வு செய்யவில்லையென்றால் வாஷிங்டன் சுந்தரை அணியில் பார்க்க நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் அணிக்கு அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் தேவைப்பட்டிருக்கலாம். இதனால்தான் அஸ்வினை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஜாகிர்கான் எங்களுக்காக செய்ததை போலவே பும்ரா ஒரு மேட்ச் வின்னராக இருப்பார். 300 அல்லது 350-க்கு மேல் நீங்கள் குவித்த பிறகு வெற்றி பெறும் நாட்கள் இருக்கும். ஆனால் 250 மற்றும் 260 ரன்கள் எடுக்கும் போது பும்ரா போன்ற பந்து வீச்சாளர்கள் தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவது எளிதாக இருக்காது.
    • டியூக் பால்களை அதிகமாக பயன்படுத்தினால் மட்டுமே அந்த பந்தின் தன்மையை அறிந்துகொள்ள முடியும்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இதற்கான இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியில் டியூக் பந்துகளே பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் போதே நாங்கள் டியூக் பந்துகளில் பயிற்சியை தொடங்கிவிட்டதாக இந்திய வீரர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இந்திய வீரர் அக்சர் படேல் கூறியதாவது:-

    வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவது எளிதாக இருக்காது. அதேபோல் தான் எஸ்ஜி பந்துகளில் வீசிவிட்டு டியூக் பந்துகளில் பந்துவீசுவதும் எளிதள்ள. அதிக நேரம் ஸ்விங் ஆகும் தன்மை உடைய டியூக் பால்களை வைத்து ஐபிஎல் தொடரின் போதே பயிற்சியை தொடங்கிவிட்டோம். இதற்காகவே டியூக் பால்களை அதிகளவில் ஆர்டர் செய்து பயிற்சியை மேற்கொண்டோம்.

    ஏனென்றால் டியூக் பால்களை அதிகமாக பயன்படுத்தினால் மட்டுமே, அந்த பந்தின் தன்மையை அறிந்துகொள்ள முடியும். இங்கிலாந்தில் ஆட்டம் நடப்பதால், லைன் மற்றும் லெந்தில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறோம்.

    இங்கிலாந்தில் வேகப்பந்துவீச்சே அதிகமாக எடுபடும் என்பதால், அணியில் ஒரு ஸ்பின்னருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். எனக்கு வாய்ப்பு கிடைப்பது பற்றி கவலைப்படாமல் பயிற்சியில் தீவிரமாக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக மோசமான தொடக்கத்துடன் தொடங்கிய பல அணிகள் வீறு கொண்டு மீண்டு வந்திருக்கின்றன.
    • அடுத்தடுத்த ஆட்டங்களில் ஜெயிக்க வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய குறிக்கோள்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் மோதுகின்றன.

    குஜராத் டைட்டன்ஸ் முதலிடத்திலும், டெல்லி அணி கடைசி இடத்திலும் உள்ளன.

    இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் பிரவீண் அம்ரே குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக மோசமான தொடக்கத்துடன் தொடங்கிய பல அணிகள் வீறு கொண்டு மீண்டு வந்திருக்கின்றன. அதுதான் இந்த ஐபிஎல் போட்டியின் மேஜிக் ஆகும். எந்த அணி வேண்டுமானாலும் எந்த அணியையும் தோற்கடிக்கும்.

    அதனால், நாம் நன்றாக விளையாட வேண்டியது அவசியம். நமது பெஸ்ட்டை கொடுக்க வேண்டும். குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம் சவாலானதாக இருக்கும். ஆனால், ஐபிஎல் கிரிக்கெட்டில் என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது.

    அடுத்தடுத்த ஆட்டங்களில் ஜெயிக்க வேண்டும் என்பதே எங்களின் தற்போதைய குறிக்கோள். நடந்து முடிந்ததை நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் நிகழ்காலத்தில் நடக்க வேண்டியதை பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். மிடில் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்த யோசனையில் ஈடுபட்டிருக்கிறோம். டெத் ஓவர்களிலும் நாங்கள் பேட்டிங்கை மேம்படுத்த வேண்டியது இருக்கிறது.

    அதையும் நாங்கள் கருத்தில் கொண்டிருக்கிறோம்.

    டெல்லி அணியின் துணை கேப்டன் அக்சர் படேலுக்கு ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை உள்ளது. ஆட்டத்தை ஜெயித்து கொடுக்க அவரது பங்களிப்பு நிச்சயம் தேவை.

    அவர் சிக்சர்களை இந்த சீசனில் அதிகம் அடித்திருக்கிறார். அவரை முதலில் களமிறக்காமல், கடைசியாக இறக்க சில நேரங்களில் முடிவு செய்வோம். ஏனென்றால் அவரை சிறந்த ஃபினிஷர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×