என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ayya vaikundar"

    • விழா நாட்களில் தினமும் அய்யாவுக்கு பணிவிடை வழங்குதல் நடக்கிறது.
    • 25-ந்தேதி திருக்கல்யாண ஏடுவாசிப்பு நடக்கிறது.

    சரல் நாராயணசாமி கோவிலில் கார்த்திகை திருவிழா மற்றும் திரு ஏடுவாசிப்பு விழா இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு அய்யாவின் பக்தி பாடல்கள், காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, 9 மணிக்கு துவயல் தவசு, மாலை 5 மணிக்கு திருஏடுவாசிப்பு, இரவு 9.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலையில் அய்யாவுக்கு பணிவிடை, மாலையில் திருஏடுவாசிப்பு, இரவு அய்யாவுக்கு பணிவிடை, தர்மம் வழங்குதல் நடக்கிறது. 25-ந்தேதி இரவு 9 மணிக்கு திருக்கல்யாண ஏடுவாசிப்பு, இரவு 11 மணிக்கு பணிவிடை, 11.30 மணிக்கு இனிமம் வழங்குதல், 27-ந்தேதி பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, மதியம் 1 மணிக்கு அன்னதர்மம், இரவு 11 மணிக்கு நாராயணசாமி அலங்கார வாகனத்தில் பவனி வருதல், சிங்காரி மேளம், வாணவேடிக்கை ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை சரல் நாராயணசாமி மற்றும் சிவசுடலைமாடசாமி கோவில்களின் ஊர் நிர்வாக கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.

    • 25-ந்தேதி திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது
    • 27-ந்தேதி பட்டாபிஷேக திருவிழா நடைபெறுகிறது.

    சாமிதோப்பு அருகே கரம்பவிளையில் ஆதிபரன் அரசம்பதி உள்ளது. இங்கு அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருஏடுவாசிப்பு 28-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.

    கொடியேற்றத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு சரவிளக்கு பணிவிடையும், கொடி பட்டம் வலம் வருதல், கொடியேற்றமும் நடைபெற்றது.

    விழா நாட்களில் அதிகாலை 4 மணிக்கு சரவிளக்கு பணிவிடை, பகல் உச்சிப்பணிவிடை, மாலை 4 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 8.30 மணிக்கு தர்ம சிறப்புகளோடு நிறைவுபெறும். மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நாளை காலை 7 மணிக்கு அன்னபால் தர்மம், 8 மணி முதல் 11.30 மணி வரை திருஏட்டு பலன் அருள்வாக்கு சட்டம், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் அதைத்தொடர்ந்து தொட்டில் வாகன பவனியும், மதியம் 1 மணிக்கு அன்னதர்மம், மாலை 4.30 மணிக்கு திருஏடு வாசிப்பும், இரவு 8.30 மணிக்கு அன்னதர்மமும் நடக்கிறது.

    25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது. 26-ந் தேதி (சனிக்கிழமை) உலக சக்திகள் ஆதிபரனுக்குள் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடக்கிறது. 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேக திருவிழா நடைபெறுகிறது, 28-ந்தேதி (திங்கட்கிழமை) கொடி இறக்கம் மற்றும் இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை அரசம்பதி தர்மசாலை ஸ்ரீகுருமண்டலம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • திருவிழா நாளை தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது.
    • 18-ந்தேதி திருஏடு வாசிப்பு நிறைவு நிகழ்ச்சி நடைபெறும்.

    நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் கார்த்திகை திருஏடு வாசிப்பு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு பணிவிடை, மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சி படிப்பு, மாலை 6 மணிக்கு பணிவிடை, திருஏடு வாசிப்பும், இரவு 8 மணிக்கு இனிமம் வழங்குதல் போன்றவை நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் காற்றாடித்தட்டை சேர்ந்த டி.ராஜா, நங்கூரான்பிலாவிளையை சேர்ந்த பிரபா, மேலஉடையப்பன்குடியிருப்பை சேர்ந்த பி.பாலகிருஷ்ணன், உடையப்பன்குடியிருப்பை சேர்ந்த எஸ். நாராயணமணி ஆகியோர் திருஏடு வாசிக்கிறார்கள். அகிலத்திரட்டு பாராயண பேருரையை புதூரை சேர்ந்த நாஞ்சில் சி. அசோகன் நிகழ்த்துகிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, திருஏடு வாசிப்பு, இனிமம் வழங்குதல் போன்றவை நடக்கிறது. 16-ந் தேதி அய்யாவின் வாகனபவனியும், திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், 18-ந் தேதி திருஏடு வாசிப்பு நிறைவு நிகழ்ச்சியும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் எம்.தங்க கிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்துள்ளனர்.

    • திருவிழா இன்று தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது.
    • 16-ந்தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடக்கிறது.

    சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி வரை நடக்கிறது. இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை, மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலை 4 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை போன்றவை நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஏடு வாசிப்பு தொடங்கப்பட்டு சாமிதோப்பு தலைமைப்பதி தலைமைகுரு பால ஜனாதிபதி விளக்கவுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு வாகன பவனி நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலையில் பணிவிடை, மதியம் உச்சி படிப்பும், மாலையில் ஏடு வாசிப்பு, இரவில் வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது. விழாவில் 16-ந் தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு, அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து வைகுண்டசாமிக்கு பக்தர்கள் திருக்கல்யாண சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி, இனிமம் வழங்குதல் போன்றவையும், 18-ந் தேதி திருஏடு வாசிப்பு, அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் ஆகியவையும் நடைபெறும்.

    • இந்த விழா தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.
    • வருகிற 16-ந்தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடக்கிறது.

    சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னுடைய பக்தர்களுக்கும் அகிலத்திரட்டு நூல் மூலம் கூறிய கருத்துகளை திருஏடாக வாசிப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலை 4 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து 5 மணிக்கு ஏடு வாசிப்பும் தொடங்கப்பட்டது.

    சாமிதோப்பு தலைமைப்பதி தலைமை குரு பால ஜனாதிபதி விளக்கவுரையாற்றினார். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்ல வடிவு, ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    பின்னர் இரவு 8 மணிக்கு வாகன பவனி நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பணிவிடை, மதியம் உச்சி படிப்பும், மாலையில் ஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது.

    15-ம் நாள் விழாவான வருகிற 16-ந் தேதி திருக்கல்யாண ஏடு வாசிப்பு, அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, தொடர்ந்து வைகுண்டசாமிக்கு பக்தர்கள் திருக்கல்யாண சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி, இனிமம் வழங்கு நிகழ்ச்சி, 18-ந் தேதி ஏடு வாசிப்பு, அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது.

    • 23-ந்தேதி திருகல்யாண ஏடுவாசிப்பு நடக்கிறது.
    • 25-ந் தேதி பட்டாபிஷேகம் நடைபெறும்.

    மேலசங்கரன்குழியில் நாராயணசாமி கோவில், முத்தாரம்மன் கோவில் உள்ளன. இங்கு நாராயணசாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை மற்றும் வருடாந்திர திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

    இன்று காலை 6 மணிக்கு புதிய கொடிமரம் நாட்டுதல், 6.30 மணிக்கு இனிமம் வழங்குதல், மாலை 6 மணிக்கு சாமிக்கு பணிவிடை, இரவு 7 மணிக்கு ஆன்மிக உரை ஆகியவை நடக்கிறது. நிகழ்ச்சியில் ஊர் தலைவர் மிக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்குகிறார். ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் முன்னிலை வகிக்கிறார். அரசம்பதி சிவச்சந்திரன் ஆன்மிக உரை நிகழ்த்துகிறார். இரவு 9.30 மணிக்கு அன்னதர்மம் நடைபெறும்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு சாமிக்கு பணிவிடை, இரவு 7 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 9 மணிக்கு அன்னதர்மம் ஆகியவை நடைபெறும். ஆன்மிக உரையை எள்ளுவிளை குட்டி கிருபானந்தவாரியார் பிள்ளையார் நயினார் நிகழ்த்துகிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சாமிக்கு பணிவிடை, அன்னதர்மம், பட்டிமன்றம் போன்றவை நடைபெறும். விழாவில் வருகிற 9-ந் தேதி இரவு 7 மணிக்கு மின்னொளி கபடி பேட்டி நடக்கிறது. போட்டியை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். வருகிற 11-ந் தேதி இரவு 7 மணிக்கு மாவட்ட அளவிலான மின்னொளி சிலம்பாட்ட ேபாட்டி நடைபெறும். 12-ந் தேதி தேவார திருவாசக பஜனை, 15-ந் தேதி இரவு 8 மணிக்கு நவீன வில்லிசை ஆகியவை நடைபெறும்.

    16-ந் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றம், மாலை 5 மணிக்கு சாமிக்கு பணிவிடை, 5.30 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 9 மணிக்கு அன்னதானம் போன்றவை நடைபெறும். தொடர்ந்து 17-ந் ேததி முதல் 25-ந் தேதி வரை சாமிக்கு பணிவிடை, திருஏடு வாசிப்பு, அன்னதானம் வழங்குதல் போன்றவை நடைபெறும்.

    23-ந் தேதி இரவு 8 மணிக்கு மாபெரும் அன்னதானமும், 8.30 மணிக்கு திருகல்யாண ஏடுவாசிப்பும், 25-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருஏடு வாசிப்பு பட்டாபிஷேகமும் நடைபெறும்.

    26-ந் தேதி மாலை 3 மணிக்கு சாமி கோவிலில் பவனி வருதல், இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 30-ந் தேதி காலை 10 மணிக்கு கீதா பாராயணம், இரவு 8.30 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு சாமி அலங்கார வாகனத்தில் பவனி வருதல் ஆகியவையும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • 23-ந் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 25-ந்தேதி பட்டாபிஷேகம் நடக்கிறது.

    திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் நேற்று திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கியது. இத்திருவிழா வருகிற 25-ந் தேதி வரை 17 நாட்கள் நடக்கிறது. திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தொடங்கி வைத்தார். பின்னர் வைகுண்ட மகாராஜன் குழுவினர் திருஏடு வாசித்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 15-ம்திருநாளன்று (23-ந் தேதி) மாலை 3 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி நடக்கிறது.

    வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி நடக்கிறது.

    நிகழ்ச்சியில், திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் வேலவன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை செயலாளர் பொன்னுத்துரை, இணை தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வின், நிர்வாக குழு உறுப்பினர் தனசேகரன், உறுப்பினர்கள் வினோத், கண்ணன், சிவாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அய்யா வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை நடை பெற்றது.
    • திரளான அய்யாவழி பக்தா்கள் பங்கேற்றனா்.

    அகிலத்திரட்டு அம்மானை, அய்யா வழி பக்தா்களின் புனித நூலாகும்.அய்யா வைகுண்டசுவாமி இந்த அகிலத் திரட்டு அம்மானை நூலை அருளிய நாள் காா்த்திகை மாதம் 27ஆம் தேதி ஆகும்.

    இந்த நாளை அய்யாவழி பக்தா்கள் ஒவ்வொரு வருட மும் அகிலத்திரட்டு உதய தினமாகக் கொண்டாடி வருகின்றனா். அந்த வகையில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் அகிலத் திரட்டு உதய தின விழா இன்று காலை கொண்டாடப்பட்டது.

    அதிகாலை 5 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு தொடர்ந்து பணிவிடைகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு பொதுமக்கள் கொண்டு வந்த அகிலத் திரட்டு அம்மானை நூலை பள்ளியறையில் வைத்து சிறப்பு பணிவுடன் நடைபெற்றன.

    இந்நிகழ்ச்சிக்கு குரு. பால ஜனாதிபதி தலைமை வகித்தாா். குரு பால லோகாதிபதி, அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளை பொதுச் செயலாளர் கிருஷ்ண மணி, பொருளாளர் பால்மணி, இணைச் செயலாளர் ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    அய்யா அருளிய அகிலத் திரட்டு அம்மானை சுவடி களை கைகளில் ஏந்திய அய்யா வழி பக்தா்கள் தலைமைப் பதி மற்றும் பள்ளி அறையை சுற்றி வந்து அகிலத்திரட்டு அம்மானை நூலை பள்ளி அறையில் வைத்து வழிபட்டனா். பின்னா் அய்யா வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை நடை பெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியா குமரி, திரு நெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த திரளான அய்யாவழி பக்தா்கள் பங்கேற்றனா்.

    • திருவிழா கடந்த 2-ம்தேதி தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.
    • திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு திருவிழா நடைபெற்றது.

    சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலை மைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அய்யா வைகுண்டசாமி தன்னு டைய சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் அகிலத்தி ரட்டு அம்மானை நூல் மூலம் கூறிய கருத்துக்களை திருஏடாக வாசிப்பது வழக்கம். இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறுகிறது.

    15-ம் நாளான நேற்று 16-ந் தேதி திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு திருநடை திறப்பு, காலை 6 மணிக்கு பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு ஆகியவை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மலர் அலங்காரத்துடன் வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து இரவு 9-மணிக்கு பக்தர்களுக்கு திருக்கல்யாண பிச்சை வழங்கப்பட்டது.11மணிக்கு திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு துவங்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருக்கல்யாண திரு விழாவையொட்டி தலைமை பதி முன்பு மற்றும் பதியின் உள்பிரகாரங்களில், பள்ளியறையில் அலங்கார தோரணங்கள் அமைக்கபட்டிருந்தன.அய்யா வழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பலகாரங்கள், பழங்கள், இனிப்பு வகைகள் போன்றவற்றை சுருள்களாக வைத்து வழிபட்டனர்.

    சாமிதோப்பு தலை மைப்பதி குரு பால ஜனாதிபதி பாராயணவுரையாற்றினார். திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு நிறைவடைந்தவுடன் அய்யா வைகுண்ட சாமி பச்சை பல்லாக்கில் எழுந்தருளி பதி சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    விழாவில் பள்ளியறை பணிவிடைகளை குரு பால லோகாதிபதி முன்னிலையில் குருமார்கள் பையன் கிருஷ்ண நாம மணி, பையன் செல்லவடிவு, வழக்கறிஞர் ஜனா யுகேந்த், டாக்டர் ஜனா வைகுந்த்,நேம்ரிஸ் ஆகியோர் செய்திருந்தனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பும், மாலை ஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி, அன்னதர்மம் ஆகியவை நடைபெறுகிறது. விழாவின் இறுதி நாளான நாளை 18-ந் தேதி அய்யா வைகுண்டசாமிக்கு பட்டாபிஷேக மணி மகுட சூட்டு விழா நடைபெறுகிறது.

    இதனையொட்டி காலை சிறப்பு பணிவிடையும் மதியம் உச்சிப்படிப்பும் மாலை 4 மணிக்கு பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பும் நடைபெறுகிறது. திரு ஏடு வாசிப்பு திருவிழாவில் நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை உட்பட கேரளா,மும்பை மாநிலங்களில் இருந்தும் திரளான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். திருவிழா நாட்களில் தலைமை பதிவளாகத்தில் காலை மதியம் இரவு நேரங்களில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    • திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது.
    • ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் பதிக்கு வந்தனர்.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் தலைமைபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. விழாவில் தினமும் மாலையில் திருஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி போன்றவை நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அய்யா வைகுண்ட சாமிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று மாலையில் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, அன்னதானம் போன்றவை நடந்தன. நிகழ்ச்சியில் தலைமைபதி குரு பால. ஜனாதிபதி அகிலத்திரட்டு பாராயண விளக்கவுரையாற்றினார். குருமார்கள் பால. லோகாதிபதி, ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நேற்று மார்கழி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் குமரி, சென்னை, நெல்லை, தூத்துகுடி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் பதிக்கு வந்தனர்.

    அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கினர்.

    • ஜனவரி 6-ந்தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது.
    • 8-ந்தேதி பட்டாபிஷேக திரு ஏடுவாசிப்பு நடக்கிறது.

    புத்தளம் பொருத்தட்டுவிளையில் உள்ள அய்யா வைகுண்ட பதியில் மார்கழி திருஏடு வாசிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜனவரி 8-ந்தேதி வரை நடக்கிறது. நாளை அதிகாலை 5 மணிக்கு பணிவிடை. உகப்பெருக்கு, பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 5.30 மணிக்கு திருஏடுவாசிப்பு, இரவு 9 மணிக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது.

    ஜனவரி 6-ந்தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, பகல் 12 மணிக்கு அன்னதர்மம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண ஏடுவாசிப்பு, 8 மணிக்கு அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் எழுந்தருளி பதிவலமும், திருதேர் வீதிஉலாவும், 10 மணிக்கு அன்னதர்மமும் நடக்கிறது. 8-ந்தேதி மாலை 5 மணிக்கு பட்டாபிஷேக திரு ஏடுவாசிப்பு நடைபெறுகிறது.

    • திருஏடு வாசிப்பு திருவிழா 7 நாட்கள் நடைபெற்றது.
    • அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளினார்.

    திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெற்றது. விழா காலங்களில் தினசரி மாலை 3 மணிக்கு திருஏடு வாசிப்பு நடந்தது. கடந்த 23-ந்தேதி திருக்கல்யாணம் நடந்தது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் மாலையில் சிகர நிகழ்ச்சியான பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு திருவிழா நடந்தது. இதனை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள்சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தொடங்கி வைத்தார். பின்னர் வைகுண்ட மகராஜன்மற்றும் ஆனந்த் குழுவினர் பட்டாபிஷேக திருஏடு வாசித்தனர். இரவில் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி, பதியை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவில் பலர் கலந்து கொண்டனர்.

    ×