என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bag"

    • பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்வதற்காக, கழிவறை வாசலில் பையை வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். பிரின்ஸ்மணி திரும்பி வந்து பார்த்தபோது, வைத்த இடத்தில் பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • அவருடைய பை மற்றும் அதிலிருந்த ரூ.1000-த்தை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றதால், செய்வதறியாது திகைத்த பிரின்ஸ் மணி பள்ளப்பட்டி போலீசில் இதுகுறித்து புகார் செய்தார்.

    சேலம்:

    கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை அருகே உள்ள விளங்கமுறி பகுதியைச் சேர்ந்தவர் பிரின்ஸ் மணி (வயது 30). இவர் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்வதற்காக, கழிவறை வாசலில் பையை வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். பிரின்ஸ்மணி திரும்பி வந்து பார்த்தபோது, வைத்த இடத்தில் பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவருடைய பை மற்றும் அதிலிருந்த ரூ.1000-த்தை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றதால், செய்வதறியாது திகைத்த பிரின்ஸ் மணி பள்ளப்பட்டி போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பையை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

    • ரூ 2 லட்சம் மதிப்புள்ள பையை பெண் ஆன்மிக சொற்பொழிவாளர் ஜெய கிஷோரி வைத்திருந்தது சர்ச்சையானது.
    • கிருஷ்ணர் கூட அர்ஜுனிடம் எல்லாவற்றையும் துறந்துவிட்டு சந்நியாசி ஆக வேண்டும் என்று சொல்லவில்லை.

    29 வயதான பெண் ஆன்மிக சொற்பொழிவாளர் ஜெய கிஷோரி விமான நிலையத்தில் இருக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் அவர் வைத்திருக்கும் ஒரு பையின் விலை 2 லட்சம் என்று நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

    உலகப் பற்றுகளைத் துறக்க வேண்டும், தோல் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று சொற்பொழிவாற்றும் ஜெய கிஷோரி, தோல் பொருட்களால் உருவாக்கப்பட்ட விலை உயர்ந்த பையை பயன்படுத்தியுள்ளார் என்று நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்தனர்.

    நெட்டிசன்களின் இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்த ஜெய கிஷோரி, "நான் ஒன்றும் துறவி இல்லை நானும் மற்றவர்களைப் போல சாதாரணமான நபர் தான். நான் ஒரு சாதாரண பெண், நான் ஒரு சாதாரண வீட்டில் வாழ்கிறேன், நான் என் குடும்பத்துடன் வாழ்கிறேன்.. நான் இளைஞர்களிடம் இதையே சொல்கிறேன், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும். உங்கள் குடும்பத்தை நல்வழிப்படுத்துங்கள் மற்றும் உங்கள் கனவுகளை நிறைவேற்றுங்கள்

    நான் பயன்படுத்திய பை தோல் பொருட்களால் செய்யப்பட்டது இல்லை. உலக ஆசையை கைவிடும்படி நான் ஒருபோதும் மக்களிடம் கூறவில்லை. பகவான் கிருஷ்ணர் கூட அர்ஜுனிடம் எல்லாவற்றையும் துறந்துவிட்டு சந்நியாசி ஆக வேண்டும் என்று சொல்லவில்லை. அவர் உங்கள் 'கர்மாவை' தொடர்ந்து செய்யும்படி சொல்கிறார்..

    ஆன்மிகம் என்பது உங்களுக்கு எதுவும் சொந்தமில்லை என்று அர்த்தமல்ல. எதுவுமே உங்களுக்கு சொந்தமில்லை என்பதே இதன் உண்மையான அர்த்தம். உங்கள் மீதும் உங்கள் மனம் மீதும் எதற்கும் அதிகாரம் இல்லை. அதுதான் உண்மையான ஆன்மீகம்" என்று தெரிவித்தார்.

    • ஒரு தாயும், அவரது மகளும் கைப்பை வாங்குவதற்காக ஒரு கடைக்கு செல்கிறார்கள்.
    • சில பயனர்கள், தனது ஆடம்பரத்தை காட்டுவதற்காக இவ்வளவு பெரிய தொகைக்கு கைப்பை வாங்குகிறார்கள் என பதிவிட்டனர்.

    மும்பை:

    சில பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது தாங்கள் கொண்டு செல்லும் கைப்பைகள் கூட தங்களின் ஆடையின் நிறத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். சில பெண்கள் இதற்காக அதிக விலை கொண்ட மற்றும் பெரிய நிறுவனங்களின் கைப்பைகளையும் விரும்பி வாங்குகிறார்கள்.

    அந்த வகையில் மும்பையை சேர்ந்த ஒரு இளம்பெண் லிப்ஸ்டிக் எடுத்து செல்வதற்காக ரூ.27 லட்சம் மதிப்புள்ள கைப்பையை வாங்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், ஒரு தாயும், அவரது மகளும் கைப்பை வாங்குவதற்காக ஒரு கடைக்கு செல்கிறார்கள். அங்கு கடை உரிமையாளர் அவர்களிடம் பிரபல ஹெர்ம்ஸ் கெல்லி நிறுவனத்தின் வெள்ளை, கருப்பு, பழுப்பு மற்றும் நீல நிறங்களில் பல பைகளை காட்டுகிறார். ஒவ்வொன்றையும் பற்றி தாயும், மகளும் விளக்கமாக கேட்கிறார்கள். அப்போது அங்கிருக்கும் ஒரு பெரிய பையை தேர்வு செய்ய தனது மகளிடம் தாய் பரிந்துரைக்கிறார்.

    அப்போது அவரது மகள் ரூ.27 லட்சம் மதிப்புள்ள சிறிய அளவிலான ஒரு பையை தேர்வு செய்து தனது விருப்பத்தை தாயிடம் வெளிப்படுத்துகிறார். மேலும் வரவிருக்கும் தேனிலவின் போது தனது லிப்ஸ்டிக்கை எடுத்து செல்வதற்கு இந்த பை கச்சிதமாக இருப்பதாகவும், ஸ்டைலாக உள்ளதாகவும் அவர் கூறியதோடு வெள்ளை நிற பையை அவர் தேர்ந்தெடுப்பது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

    சில பயனர்கள், தனது ஆடம்பரத்தை காட்டுவதற்காக இவ்வளவு பெரிய தொகைக்கு கைப்பை வாங்குகிறார்கள் என பதிவிட்டனர். ஒரு பயனர், நான் பல ஆண்டுகளாக ஹெர்ம்ஸ் பர்கினை பார்த்து வருகிறேன். ஆனால் இது எனது பட்ஜெட்டில் இல்லை என பதிவிட்டார்.



    ஈரோடு ரெயில்வே காலனியில் இன்று காலை மர்ம ‘பேக்’ ஒன்று கிடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே காலனியில் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ரெயில்வே மிஸ்ட் ஸ்கூல் அருகே கருப்பு கலர் டிராவல் ’பேக்’ ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. இதை பார்த்து அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் அதில் ஏதாவது மர்ம பொருட்கள் இருக்குமோ என பயந்தனர்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கும் சூரம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ‘பேக்’கை திறந்து அதில் உள்ள பொருட்களை சோதனையிட்டனர்.

    அப்போது அந்தப் ‘பேக்’குக்குள் தினேஷ் குமார் ராமமூர்த்தி நகர், ஈரோடு என்று எழுதப்பட்ட அடையாள அட்டை இருந்தது. மேலும் கணேஷ் ஈரோடு என்ற பெயரும் இருந்தது. இதையடுத்து அந்த அடையாள அட்டையில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போலீசார் பேசினர்.

    அப்போது அந்த பேக் ஈரோடு ஜோசியர் கணேஷ் உடையது என்பது தெரியவந்தது. கணேஷ் சென்னைக்கு கூரியர் பார்சல் அனுப்புவதற்காக தினேஷ்குமார் என்பவரிடம் இந்த பேக்கை கொடுத்துள்ளார்.

    அவர் பார்சல் அனுப்பு வதற்காக ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்த போது அந்த பேக்கை மர்ம நபர் யாரோ திருடிச் சென்று விட்டனர். இது குறித்து அவர் ஈரோடு ரெயில்வே நிலையபோலீசில் புகார் கொடுத்து சென்று விட்டார்.

    இந்நிலையில்தான் அந்த பேக் இன்று காலை ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள ரெயில்வே மிஸ்டு ஸ்கூல் அருகே கிடந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் அந்த ‘பேக்’கை கணேஷிடம் ஒப்படைத்தனர், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    ×