என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Balathiripurasundari"
- நிறைய பிரபலங்கள் ஸ்ரீபாலாவை கண்ட மாத்திரத்தில் கண்ணீர் ததும்ப நின்றுள்ளனர்.
- உள்ளம் உருகச் செய்யும் இந்த அற்புதங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
காஞ்சி மகாப்பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1945ம் ஆண்டு பல்லக்கு ஒட்டகம்,
குதிரைகள், சேவகர்கள், யானைகள் என சகல பரிவாரங்களும் புடைசூழ நெமிலிக்கு வந்தார்.
மூன்று நாட்கள் அவர் அம்பாளின் பீடத்திலே தங்கி ஆனந்தமடைந்தார்.
அந்த பசுமையான நிகழ்ச்சி எல்லோர் மனதிலும் சுவையாகப் பதிந்து விட்டது.
வைத்த விழி வாங்காமல் நெமிலி ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியின் பேரழகைப் பருகிய ஸ்ரீ திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
"இந்த பாலா திரிபுர சுந்தரி பீடத்திலே எல்லா தெய்வங்களையும் ஒருசேரக் காண்கிறேன்" என மெய்மறந்து கூறினார்.
மயிலை குருஜி ஸ்ரீ சுந்தர ராம சுவாமிகள் "எனது குருநாதர் வள்ளிமலை சுவாமிகளுக்கு பாலா திரிபுர சுந்தரிதான் இஷ்ட தெய்வம்.
இந்த பாலாவைப் பார்க்கும்போது எனது குருநாதரைக் காண்கிறேன்" எனக் குதூகலம் பொங்கக் கூறினார்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பரம ஹம்ச புவனேஸ்வரி சுவாமிகள் ஒவ்வொரு ஆண்டும் "பாலா திரிபுர சுந்தரி ஹோமம்,
ஸ்ரீவித்யா ஹோமம், ஸ்ரீ புவனேஸ்வரி ஹோமம்" என பல ஹோமங்களைப் புரிந்து நெமிலி ஸ்ரீபாலாவின்
திவ்ய தரிசனத்திலே மனம் களித்து நின்று மந்திரகோஷம் புரிந்தார்.
காளிகாம்பாள் தேவஸ்தான ஸ்ரீ சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் தமது சகதர்மிணியின் பிரார்த்தனைக்கு இரங்கி
தமது இரண்டு மகள்களின் திருமணத்தை அன்னை நெமிலி ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி முடித்து வைத்தாள்
என்பதை அறிந்து நன்றியாக அந்த அன்னையின் சன்னிதியிலே 'த்ரிசதி'யை முழங்கி
அன்னையின் பீடத்திலே ஆனந்தக் கண்ணீர் வடித்து நின்றார்.
ஸ்ரீ சாம்ப மூர்த்தி சிவாச்சார்யாருடன் வந்த திருவேற்காடு ஸ்ரீ ராமதாச சுவாமிகள் அன்னையின் அருளில் திளைத்து மனமெல்லாம் மகிழ்ந்து நின்றார்.
கொடுவிலார்பட்டி ஸ்ரீ சச்சிதானந்த ஆசிரமம் ஸ்ரீ பரஞ்சோதி சுவாமிகள் அன்னையின் சன்னதியிலே
தீபாராதனைக் காட்சியைக் கண்டவுடன் குலுங்கிக் குலுங்கி அழுது அம்பாளின் சன்னதியிலே உளமுருகிப் போனார்.
நிறைய பிரபலங்கள் ஸ்ரீபாலாவை கண்ட மாத்திரத்தில் கண்ணீர் ததும்ப நின்றுள்ளனர்.
இப்படி அந்த சன்னிதியிலே எத்தனையோ அற்புதங்கள் நடந்துள்ளன!
"எனது ஊமைப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும்" என்று வேண்டிய பாடகர் அமரர் கே.வீரமணியின் குறையினை நீக்கினாள்.
"எனது பையனுக்குத் திருமணம் தள்ளிப் போகிறது. கண் திறந்து பாரம்மா பாலா" என வேண்டிக் கொண்ட குன்னக்குடி வைத்தியநாதனுக்கு பாலா அருள்புரிந்தாள்.
"எனக்கு ஒரு திரைப்படம் கூட இல்லையே பாலா! நான் 45 நாட்களாக ஒருவித வேலையுமின்றி இருப்பதும் சரியா? தாயே! நீதானே என்னைக் காக்க வேண்டும்"
என்று முறையிட்ட இசையமைப்பாளர் சந்திரபோஸ் வாழ்க்கையிலே அன்னை புரிந்த விளையாட்டு அற்புதமானது.
இசைமணி பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜனை தனது பீடத்திலே பல ஆண்டுகளாகப் பாட வைத்த பாலா,
ஒரு குறிப்பு தந்து அவர்களது மறைவை உணர வைத்த ஒரு பெரிய அதிசய நிகழ்ச்சியினை ஏற்படுத்தினாள்.
உள்ளம் உருக செய்யும் இந்த அற்புதங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
- அன்னதானம் என்பது பாலா பீடத்தில் மிக முக்கியமான ஒன்று.
- இந்த விஷயங்கள் பாடலாக மாறிய போது இன்னும் சுவையாக உருமாறின.
அன்னதானம் என்பது பாலா பீடத்தில் மிக முக்கியமான ஒன்று.
நவராத்திரியின் ஒன்பது நாளும் பாலா பீடத்தில் அன்னதானம் ஒரு புறமும்,
அமுதகானம் ஒரு புறமும் நடந்து கொண்டே இருக்கும்.
இந்த விஷயங்கள் பாடலாக மாறிய போது இன்னும் சுவையாக உருமாறின.
அன்னதானம் அமுதகானம் அனைத்தும் இங்கே தானடி!
இவ்விடம் போல் இவ்வுலகில் வேறு இடம் ஏதடி?
உனக்கெனவே ஓர் இடமும் இவ்வுலகில் ஏதுடி?
நெமிலி மட்டும் உன்னிடமாய் ஆன மாயம் என்னடி!
உள்ளம் எனும் கோவிலிலே உள்ள தெய்வம் நீயடி
உன்னை நம்பி நாங்கள் வந்தோம் எம்மைக் கொஞ்சம் பாரடி!
எனவே பாலா பீடத்துக்கு செல்லும்போது அன்னதானத்துக்காக தாராளமாக நிதி உதவி செய்யுங்கள்.
அன்னதானத்துக்கு உதவுவது அளவற்ற நன்மைகளை கொண்டு வரும்.
- பாலாவின் விசேஷ படங்கள் இரண்டு ஒன்று பக்திக்கு. ஒன்று சக்திக்கு.
- பாலாவைப் பற்றி பேசுதல் லட்சம் புண்ணியம்.
பாலாவின் விசேஷ படங்கள் இரண்டு ஒன்று பக்திக்கு. ஒன்று சக்திக்கு.
பச்சை நிற படம் பூஜை அறைக்கு. சிகப்பு (அக்னி) நிற படம் சமையல் அறைக்கு.
உன் வீடு தேடி ஆசையோடு வந்திருக்கிறேன்.
உன் சமையல் அறையில் நீ எதை செய்தாலும் எனக்கு செய்வதாக நினைத்துக் கொண்டு என்னையே பார்த்து
ஆசையோடு செய்து வா! உன் வீட்டில் அந்த தோஷம், இந்த தோஷம் மற்றும் எந்த தோஷம் இருந்தாலும்
அதை சந்தோஷமாக மாற்றி உன் குடும்பத்தை மட்டுமல்ல, வருகின்ற வம்சத்தையே நான் பார்த்துக் கொள்கிறேன்
என்ற அன்னை பாலாவின் அற்புத வாக்கு., அது தான் அனைவர்க்கும் வேத வாக்கு.
பாலாவைப் பற்றி பேசுதல் லட்சம் புண்ணியம்.
எழுதுதல் கோடி புண்ணியம். அதுவும் பாலா பேனாவைக் கொண்டு எழுதினால் பல கோடி புண்ணியம்.
பாலா பீடத்தில் கிடைக்கும் பேனாவும், சாக்லெட்டும் அவ்வளவு விசேஷம்.
- பாலா பூஜை செய்த தம்பதிகள் பாலாவின் விசேஷ படங்களை வாங்கி சென்றால் பல மடங்கு விசேஷம்.
- இதன் மூலம் குழந்தை இல்லாதவர்கள் குழந்தைப்பேறு அடையலாம்.
ஸ்ரீ பாலா தம்பதி பூஜை என்பது வருகின்ற எல்லா தலைமுறைகளும் எந்த வித குறைகளும், குழப்பமும்
இன்றி நன்றாக இருக்க வேண்டிய தம்பதிகள் செய்யும் எளிய பூஜை.
அன்புக் கணவர் அன்னை பாலாவின் அஷ்டோத்திர மந்திரங்களைக் கூறி வர, அன்பு மனைவி பாலாவுக்கு ஆசையோடு
குங்கும அர்ச்சனை செய்து, பாலா ஸ்ரீ சக்கர பிரசாதமோடு, பாலா டாலர்கள் மற்றும் பாலா சிடி ஒன்றை பெற்று செல்லலாம்.
இதன் மூலம் குழந்தை இல்லாதவர்கள் குழந்தைப்பேறு அடையலாம்.
முன்பதிவு ஏதுமின்றி பாலாவின் பீடத்திற்குள் நுழைந்த பதினைந்து நிமிடத்திற்குள் பூஜை செய்த பிரசாதங்களை பெற்றுக் கொள்ளலாம்.
பாலா பூஜை செய்த தம்பதிகள் பாலாவின் விசேஷ படங்களை வாங்கி சென்றால் பல மடங்கு விசேஷம்.
- பாலா இஷ்ட சித்தி பூஜை என்பது இளைய தலைமுறையினருக்கான ஒரு எளிய பூஜை.
- அற்புதமான டாலர் மற்றும் சிடி ஒன்றையும் பெற்று சென்று சாதிக்க நினைத்ததை சாதிக்கலாம்.
பாலா இஷ்ட சித்தி பூஜை என்பது இளைய தலைமுறையினருக்கான ஒரு எளிய பூஜை.
இளைய தலைமுறையினர் தாங்கள் வேண்டும் உயர் கல்வியோ, நல்ல வேலை வாய்ப்போ, இல்ல திருமணமோ,
மற்றும் நினைத்த நல்ல செயல்கள் யாவும் உடனடியாக ஈடேற அன்னை பாலாவுக்கு
அஷ்டோத்திர குங்கும அர்ச்சனை செய்து நாளைய வெற்றிக்கு அட்வான்சாக அன்னை பாலா தரும்
அற்புதமான டாலர் மற்றும் சிடி ஒன்றையும் பெற்று சென்று சாதிக்க நினைத்ததை சாதித்து முடிக்கலாம்.
நல்ல வேலையில் சேர்ந்து, திருமணம் முடிந்தவுடன் தம்பதி சமேதராக மீண்டும் பாலா பீடத்திற்கு வந்து பாலா தம்பதி பூஜை செய்யலாம்.
- உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை உரிமையுடன் அவளிடம் கேளுங்கள்.
- இது கோவில் அல்ல.. பாலாவின் இல்லம்.
பாலா பீடத்தில் பேரம் பேசாதீர்கள்.
அதாவது உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை உரிமையுடன் அவளிடம் கேளுங்கள்.
பேரம் பேசாதீர்கள். "காஞ்சி காமாட்சியாக, மதுரை மீனாட்சியாக இருப்பதெல்லாமே பாலா தான்.
இது கோவில் அல்ல.. பாலாவின் இல்லம்.
யாரும் நினைத்த மாத்திரத்தில் இங்கு வந்து இவளை எளிதில் பார்த்துவிட முடியாது.
ஆனால், யாரைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாளோ அவர்களை அவளே நேரம் கொடுத்து அழைப்பாள்.
அப்படி அவளால் அழைக்கப்படுகிறவர்கள் இங்கு வந்து வைக்கும் வேண்டுதல்களை அவள் நிறைவேற்றிக் கொடுப்பாள்.
எக்காரணம் கொண்டும் என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றித் தந்தால்,
'நான் உனக்கு இதைச் செய்கிறேன்' என்று வேண்டிக்கொள்ளாதீர்கள்.
ஏனென்றால் பாலா யாரிடமும் யாசகம் கேட்க மாட்டாள்.
அதனால்தான் இங்கே உண்டியல்கூட வைப்பதில்லை" என்கிறார் ஸ்ரீபாலா பீடாதிபதி நெமிலி எழில்மணி.
- குழந்தைகள் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி பாலாவின் டாலரை யார் வேண்டுமானாலும் அணியலாம்.
- செல்லுமிடமெல்லாம் நீங்காத துணையாக அன்னை பாலாவின் டாலர் உறுதுணையாக இருக்கும்.
ஸ்ரீ பாலா டாலர் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது பாலாவின் செல்லக் குழந்தைகள் தான்.
ஒரு கறுப்புக் கயிற்றில் வெள்ளி முலாம் பூசிய அந்த பாலா டாலரை அணிந்து கொண்டு அவர்கள் வலம் வரும் அழகே அழகு.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி பாலாவின் டாலரை யார் வேண்டுமானாலும் அணியலாம்.
செல்லுமிடமெல்லாம் நீங்காத ஒரு துணையாக அன்னை பாலாவின் டாலர் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
கழுத்திலே கறுப்புக் கயிற்றிலே பாலா டாலரும், கையிலே பாலா பாராயண புத்தகமும்
இருந்தால் போதும், கடுந்துயரும் காணாமல் போகும்.
- அனைத்தையும் கொடுக்கும் அற்புத ஸ்ரீ சக்கரம் பாலா பீடத்திற்கு வந்தால் மட்டுமே கிடைக்கும்.
- கோடி கோடியாக கொடுத்தாலும் ஸ்ரீ பாலாவின் ஸ்ரீ சக்கரம் உங்களைத் தேடிவராது.
ஸ்ரீபாலா ஸ்ரீசக்கரம் நினைத்ததை நிறைவேற்றும் நிகரில்லாத ஸ்ரீ சக்கரமாக விஸ்வரூபம் எடுத்து
பாலாவின் பக்தர்களுக்கு பலகோடி பெறும் பலன் கோடி தரும் ஸ்ரீ சக்கரமாக உருவெடுத்துள்ளது.
என் பெயர்தான் மந்திரம், என் திருவடி தான் எந்திரம். அதாவது ஸ்ரீ சக்கரம் என்று பாலா கவசம் கூறுகிறது.
அப்படிப்பட்ட பாலாவின் திருவடிகள் உங்கள் வீட்டிலிருந்தால் பிறகேது குறை நினைத்ததை அளித்து நிம்மதி கொடுத்து
அனைத்தையும் கொடுக்கும் அற்புத ஸ்ரீ சக்கரம் பாலா பீடத்திற்கு வந்தால் மட்டுமே கிடைக்கும்.
கோடி கோடியாக கொடுத்தாலும் ஸ்ரீ பாலாவின் ஸ்ரீ சக்கரம் உங்களைத் தேடிவராது.
அப்படிப்பட்ட மிகவும் விசேஷமான பாலா ஸ்ரீ சக்கரமோடு சேர்த்து ஸ்ரீ பாலா டாலர் தரப்படுவது மிகவும் விசேஷமானது.
- ஸ்ரீ பாலா குங்குமம், மகாதிருக்குங்கும பிரசாதம் எனப்படுகிறது.
- நோய் நொடி யாவையையும் நொடியிலே நீக்கும்.
ஸ்ரீ பாலா குங்குமம், மகாதிருக்குங்கும பிரசாதம் எனப்படுகிறது.
பாலாவின் பல கோடி பெறும் குங்கும பிரசாதம் ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்க முடியாத ஒரு வரப்பிரசாதமாகும்.
அன்னை பாலாவின் அரிய குங்கும பிரசாதம் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
நோய் நொடி யாவையையும் நொடியிலே நீக்கும்.
பாலாவின் மஹா திருக்குங்கும பிரசாதம் இளமைப் பருவம் முதல் முதுமைப்பருவம் வரை எல்லா பருவத்திலும்
எல்லா கால கட்டத்திலும் துணை நிற்கும், துயர் நீக்கும், ஓர் உன்னத பிரசாதம்.
அப்படிப்பட்ட பாலாவின் குங்கும பிரசாதத்தை ஸ்ரீ பாலாவின் ஸ்ரீ சக்கரமோடு சேர்த்துப் பெற்றுக்கொண்டால் இன்னும் விசேஷம்.
1945ம் ஆண்டில் அன்னையை தரிசிக்க வந்த ஸ்ரீ காஞ்சிப் பெரியவாள் ஜெகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்,
"ஒரு தனிப்பட்ட குடும்பத்தினர் தாம் வழிபட அமைத்துக் கொண்ட இல்லமாயினும் அனைவருக்கும் தாயின் அருள்
கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் ஜாதிமத பேதமின்றி அனைவரையும் வரவேற்று அன்னையின் அழகை
அனைவரும் தரிசிக்க வைக்கும் பரந்த மனப்பான்மையை அந்த தெய்வீக ஆன்மீகப் பணியை மனக்குளிரப்
போற்றுகிறேன்" என்று பாராட்டினார்.
- உலகத்து தெய்வ உருவங்களில் சிறிய உருவம் கொண்டு விளங்குவது நெமிலி பாலா மட்டும்தான்
- அளவற்ற சக்தியை பெற்ற மையப்புள்ளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கையில் ஜெப மாலை, மற்றொரு கையில் புத்தகம் கொண்டு காட்சி தருவது பாலா திரிபுரசுந்தரியின் தோற்றம் ஆகும்.
உலகத்து தெய்வ உருவங்களில் சிறிய உருவம் கொண்டு விளங்குவது நெமிலி பாலா மட்டும்தான்.
சுண்டு விரல் அளவில் ஒளி வீசும் அமைப்பில் அன்னையானவள் காட்சி தருகின்றாள்.
சித்தர்களும், ஞானிகளும் போற்றும் தெய்வம் இவள். தெய்வங்களே சீராட்டும் குழந்தை இவள்.
அளவற்ற சக்தியை பெற்ற மையப்புள்ளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னையானவள் கோவிலில் குடிகொள்ளாமல், அடியாரின் வீட்டை தேர்வு செய்து குடி கொண்டு
அருளாட்சி செய்து வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.