search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bangladeshi"

    • எந்தவிதமான ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருப்பது தெரியவந்தது.
    • சென்னை புழல் சிறையில் அடைக்க அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணர் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கள்ளக்கிணர் மேற்கு தெருவில் இளவரசன் என்பவரது வீட்டில் தங்கி இருந்த வங்கதேசம், டாக்கா நகரைச் சேர்ந்த முகமது சபோலா என்பவரது மகள் சுமி என்கிற லீமா பேகம்(வயது 20) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவர் எந்தவிதமான ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை புழல் சிறையில் அடைக்க அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்து அளித்த தகவல்களின் அடிப்படையில் வங்காளதேச தீவிரவாதியை ஆமதாபாத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். #Bangladeshi
    ஆமதாபாத்:

    வங்காளதேசத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளில், அன்சாருல்லா பங்ளா குழுவும் ஒன்று. இந்த இயக்கத்துடன் தொடர்புடைய அசோம் சம்சு ஷேக் என்கிற பக்கிர் (வயது 52), கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு தப்பி ஓடினார். இது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    அப்போது தீவிரவாதி பக்கிர், குஜராத் மாநிலம் பரூச்சில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரது நடமாட்டம் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்து அளித்த தகவல்களின் அடிப்படையில் நேற்று ஆமதாபாத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போது, பக்கிர் கடந்த 15 ஆண்டுகளாக குஜராத்தில் தலைமறைவாக வசித்து வந்ததும், இந்திய முகவரியில் ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்ததும் தெரிய வந்தது. பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடைய அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    வங்காளதேசத்தை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சுவை மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 நபர்கள் சுட்டுக் கொலை செய்தனர். #Bangladesh #ShahzahanBachchu
    டாக்கா:

    வங்காளதேசத்தை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் ஷாஜகான் பாச்சு (வயது 60). இவர் பிஷாகா புராக்காசோனி என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். மதசார்பற்ற கொள்கைகள் பற்றி துணிச்சலுடன் தனது கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

    இவர் நேற்று முன்தினம் தனது பூர்வீக கிராமமான ககால்டியில் இருந்தார். அங்கு அவர் நோன்பு திறப்புக்கு முன்பாக ஒரு மருந்துக்கடைக்கு, தனது நண்பர்களை சந்திப்பதற்காக சென்று இருந்தார்.

    அப்போது அங்கே 2 மோட்டார் சைக்கிள்களில் 5 நபர்கள் வந்தனர். அவர்கள் ஷாஜகான் பாச்சு இருந்து கொண்டிருந்த மருந்துக்கடையின் மீது கச்சா வெடிகுண்டுகளை வீசினார்கள். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து அவர்கள் மருந்துக்கடையில் இருந்த ஷாஜகான் பாச்சுவை தரதரவென்று வெளியே இழுத்து வந்தனர். அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிவிட்டு அங்கு இருந்து தப்பினர்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணம் ஆனார்.

    இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. மதசார்பற்ற கொள்கைக்கு அவர் ஆதரவாக பேசி வந்ததால் பல முறை அவருக்கு மத அடிப்படைவாத அமைப்புகளிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த பயங்கரவாத தடுப்பு போலீஸ் படையினர் அங்கு விரைந்து, ஷாஜகான் பாச்சு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட ஷாஜகான் பாச்சு, வங்காளதேச கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆவார்.

    வங்காளதேசத்தில் மதசார்பின்மைக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள், எழுதுகிறவர்கள், வலைத்தள பதிவாளர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.  #Bangladesh #ShahzahanBachchu #tamilnews 
    ×