என் மலர்
நீங்கள் தேடியது "BANGLE"
- கர்ப்பிணிகளுக்கு வளையல் காப்பு அணிவிக்கப்பட்டு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
- பெண்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்மாபேட்டை:
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
அம்மாபேட்டை ஒன்றி யக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். வட்டார ஒருங்கி ணைப்பாளர் பரணிகா அனைவரையும் வரவேற்றார்.
ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணிசுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கூத்தரசன், அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
இதில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் காப்பு அணிவிக்கப்பட்டு சீர்வரிசை பொருள்களுடன் ஐந்து வகையான உணவுகள் பறிமாறப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ராதிகா, மெலட்டூர் பேரூராட்சி தலைவர் இலக்கியாபட்டாபிராமன், ஒப்பந்ததாரர் சண் சரவணன் மற்றும் ஏராளமான பெண்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பரமத்திவேலூர், சேந்தமங்கலம், மோகனூர், ராசிபுரம் ஆகிய ஊருக்கு செல்லக்கூடிய டவுன் பஸ் நிறுத்தும் இடத்தில், நிழல் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.
- இந்த நிழல் கூடத்தில் பயணிகள் இருக்கைகள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பெண்கள் வளையல் கடைகள் வைத்துக் கொண்டு பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர்டிஸ் .
நாமக்கல்:
லாரி தொழில் மற்றும் முட்டை உற்பத்தியில் நாமக்கல் முதலிடம் வகிக்கிறது. இதனால் தினமும் நாமக்கல்லுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.
நாமக்கல் பஸ் நிலையத்தி லிருந்து மதுரை, கும்பகோணம், திருச்சி, கோவை, ஓசூர், சேலம் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும். இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்க வசதியாக நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பரமத்திவேலூர், சேந்தமங்கலம், மோகனூர், ராசிபுரம் ஆகிய ஊருக்கு செல்லக்கூடிய டவுன் பஸ் நிறுத்தும் இடத்தில், நிழல் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழல் கூடத்தில் பயணிகள் இருக்கைகள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பெண்கள் வளையல் கடைகள் வைத்துக் கொண்டு பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர். இதனை போலீசாரும், அதிகாரிகளும் இதுவரை கண்டு கொள்ளவில்லை.
இதனால் பயணிகள் தினமும் தற்போது அடிக்கும் வெயிலில் தவித்து வருகி றார்கள். இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பஸ் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- வல்லத்தில் புகழ்பெற்ற யோக நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது.
- ஆண்டாள் நாச்சியாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே உள்ள வல்லத்தில் புகழ்பெற்ற யோக நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வளையல்களாலான சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாளை தரிசனம் செய்தனர்.
- 36 ஊராட்சிகளில் இருந்து 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி.
- கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கல்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் ஒன்றியத்தைச் சேர்ந்த 36 ஊராட்சிகளில் இருந்து 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயராஜ பவுலின் கலந்து கொண்டு வளையல் அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கி கர்ப்பக் காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகர்மன்ற தலைவா்புகழேந்தி, வர்த்தக சங்க தலைவா் தென்னரசு , தி.மு.க வேதாரண்யம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சதாசிவம், மேற்கு ஒன்றியச் செயலாளர் உதயம் முருகையன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் சித்ரா வரவேற்று நன்றி கூறினார். இதில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
- பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.
- ஐந்து வகை உணவுகள் வாழை இலை போட்டு பந்தி பறிமாறப்பட்டது.
நாகப்பட்டினம்:
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைக்காப்பு விழா நடைப்பெற்றது.
இதில் வேளாங்கண்ணி, திருப்பூண்டி பூவை தேடி, கீழையூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100- க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்துக் கொண்டனர்.
தமிழ் பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துக் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை தட்டினை வழங்கினர்.
மேலும் புளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், எழுமிச்சை சாதம், இனிப்பு பொங்கல் என ஐந்து வகை உணவு வகைகளை வாழை இலை போட்டு பந்தி பறிமாறப்பட்டது.
மேலும் கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்களை அங்கன் வாடி பணியாளர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு செய்து கொடுத்தனர்.
உறவுகளால் வீட்டில் வளைகாப்பு செய்திருந்தாலும் ஒரே இடத்தில் இப்படி எல்லோருக்கும் வளைகாப்பு செய்து, சீர்வரிசை வழங்கி, விழா எடுப்பது மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் பெத்த மகளை போல பாவித்து வளைகாப்பு செய்ததை எங்களால் மறக்க முடியாது என்றும் கர்ப்பிணி பெண்கள் உற்சாகம் பொங்க தெரிவித்தனர்.
- பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி வளையல்களை காணிக்கையாக வழங்கினர்.
- 10 ஆயிரத்து 8 வளையல்கள் மாலையாக கோர்க்கப்பட்டு காளியம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள வடக்கு பொய்கைநல்லூர் எல்லை ரோடு பகுதியில் நந்தவன காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்தே தினமும் அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி வளையல்களை காணிக்கையாக வழங்கினர்.
இதில் 10 ஆயிரத்து 8 வளையல்கள் மாலையாக கோர்க்கப்பட்டு காளியம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பஞ்சமுக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக 11 வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டுதரிசனம் செய்தனர்.
- அம்மனுக்கு வளையல் அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது
- ஐந்து வகை சாதம் வழங்கப்பட்டது
கரூர்:
கிருஷ்ணராயபுரம் மஞ்ச மேடு பகுதியில் அமைந்துள்ள எல்லையம்மன் கோவிலில் இன்று ஆடிப்பூரம் முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது. கோவிலுக்கு வந்திருந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் சுமங்கலி பெண்களுக்கு வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வளையல்கள் அணிந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் வளைகாப்பு முன்னிட்டு ஐந்து வகை சாதம் வழங்கப்பட்டது. முன்னதாக எல்லையம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அர்ச்சனைகள் ஆராதனைகள் வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.