என் மலர்
நீங்கள் தேடியது "Bank loan"
- மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து சிறப்பு கடன் முகாமை நடத்தி வருகிறது.
- வீடு பெறும் பயனாளிகள் பங்கேற்று கடன் கேட்டு விண்ணப்பித்தனர். வங்கி அதிகாரிகள் பரிசீலித்தனர்.
திருப்பூர்:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் (டி.என்.யு.எச்.டி.பி.,) வீடு பெற, பயனாளிகள் தங்கள் பங்களிப்பாக 10 சதவீத தொகை செலுத்த வேண்டும்.பயனாளிகள் பங்களிப்பு தொகையை வங்கி கடனாக பெற்று செலுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து சிறப்பு கடன் முகாமை நடத்தி வருகிறது.
கனரா, இந்தியன் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., - எச்.டி.எப்.சி., வங்கிகள் சார்பில் தனித்தனியே முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இந்தியன் வங்கி சார்பில் கடன் முகாம் நடத்தப்பட்டது.வீடு பெறும் பயனாளிகள் பங்கேற்று கடன் கேட்டு விண்ணப்பித்தனர். வங்கி அதிகாரிகள் பரிசீலித்தனர்.2 நாள் முகாமில் தகுதியுள்ள 78 பயனாளிகளுக்கு கடன் பெறுவதற்கான முதல்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட பயனாளிகள் 437 பேருக்கு மொத்தம் 2.90 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முகாம் நடத்தப்பட்டு பயனாளிகளுக்கு கடன் வழங்கப்படும் என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் தெரிவித்தார்.
- மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 37 மனுக்கள், அடிப்படை வசதிகோரி 5 மனுக்கள் என மொத்தம் 175 மனுக்கள் பெறப்பட்டன.
- மாணவனுக்கு ரூ.23,000-க்கான காசோலையை தாய் சித்ராவிடம் கலெக்டர் வழங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 40 மனுக்களும், வேலைவாய்ப்புகோரி 30 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை கோரி 38 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 25 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 37 மனுக்களும், அடிப்படை வசதிகோரி 5 மனுக்களும், மொத்தம் 175 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வானதிராஜபுரத்தை சேர்ந்த ஜெயவசந்தன் கல்வி உதவி கேட்டு, கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்திருந்தார்.
மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு வாரக் காலத்திற்குள் அம்மாணவனுக்கு மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியில் இருந்து ரூ.23,000-க்கான காசோலையினை அவரின் தாயார்சித்ரா விடம் கலெக்டர் லலிதா வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி ஆணையர் கலால் அர.நரேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்பாலாஜி மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
- 7ஆண்டுக்கு முன் கோவை தனியார் வங்கி கிளையில் வீட்டு கடன் வாங்கி இருந்தார்.
- ரத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூரை சேர்ந்தவர் மாணிக்கம்( வயது 47) . தனியார் வங்கி ஊழியர். இவர் கடந்த 7ஆண்டுக்கு முன் கோவை தனியார் வங்கி கிளையில் வீட்டு கடன் வாங்கி இருந்தார். இதற்கான மாத தவணை கடந்த மாதமாக சில செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அந்த வங்கி கிளை சார்பில் தவணை தொகையை வசூல் செய்ய நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவர் மாணிக்கத்தின் வீட்டுக்கு வந்துள்ளார். அவருடன் வாக்கு வாதம் செய்து தகராறில் ஈடுபட்ட மாணிக்கம் கட்டையால் அவரது தலையில் தாக்கினார். இதில் தலையில் ரத்த காயம் அடைந்த நிலையில் சிவராமகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சிவராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மாணிக்கத்தை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் வருகிற 28-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசார பணிகளில் பல்வேறு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று நடந்த பிரசார பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்பொழுது, கரையான்களை ஒழிக்க நச்சு மருந்தினை நாம் பயன்படுத்துகிறோம்.
நாட்டில் ஊழலை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கசப்பு மருந்து போன்று பயன்படுத்தினேன். தங்களது படுக்கை அடியில், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மக்கள் பணம் பதுக்கி வைத்தனர். அவர்கள் இன்று ஒவ்வொரு பணத்திற்கும் வரி கட்டி வருகின்றனர். இந்த பணத்தினை சாதாரண மக்களுக்கான சரியான திட்டங்களுக்கு நாம் பயன்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு முன் கடன் தள்ளுபடி வாக்குறுதியை காங்கிரஸ் அளித்தது. ஆனால் அதற்கு பதிலாக விவசாயிகளை சிறைக்கு அனுப்ப தயாராகி கொண்டு இருக்கிறது.
எனது அரசு விவசாயிகளின் வருவாயை வருகிற 2022ம் ஆண்டிற்குள் இரட்டிப்படைய செய்ய வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
பிரதான் மந்திரி யோஜானா திட்டத்தின்கீழ் எந்தவித உத்திரவாதமும் இல்லாமல் இதுவரை 14 கோடி மக்களுக்கு வங்கி கடன் அளிக்கப்பட்டுள்ளது எனவும் மோடி குறிப்பிட்டார். #PMModi #Modi #Assemblyelection

மதுரை கரிமேடு பாரதியார் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி காந்தி மீனாட்சி (வயது24). இவரும், ஆரப்பாளையம் கருப்பைதோப்பு பகுதியை சேர்ந்த சக்திவேல் மனைவி அனுசுயாவும் தோழிகள்.
இந்த நிலையில் தனக்கு பணம் தேவைப்படுவதாக காந்திமீனாட்சி தெரிவித்தார். அப்போது பொன்னகரத்தைச் சேர்ந்த கணேசன் (25) என்பவர் சொசைட்டி மூலம் கடன் பெற்று தருவார். ரூ.20 ஆயிரம் கொடுத்தால் ரூ.5 லட்சம் வரை கிடைக்கும் என அனுசுயா தெரிவித்துள்ளார்.
அதன்படி காந்திமீனாட்சி ரூ.15 ஆயிரம் கொடுத்தார். மேலும் அவருக்கு தெரிந்த பெண்கள் 15 பேரிடம் தலா ரூ.20 ஆயிரம் பெற்று கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட கணேசன் கடன் எதுவும் பெற்றுத்தரவில்லை.
இதுகுறித்து போலீசில் காந்திமீனாட்சி புகார் செய்தார். அதில் கணேசன் ரூ.3½ லட்சம் மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தார். போலீசார் விசாரணை நடத்தி கணேசன், அவரது தாயார் கண்ணம்மாள் (49) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தமைறைவான சக்திவேல், அவரது மனைவி அனுசுயா ஆகியோரை தேடி வருகின்றனர்.
சர்வேயர் காலனி ஸ்ரீராம் கார்டன் பகுதியைச் சேர்ந்த அன்புச்செல்வன் (23) மாடு வாங்க திட்டமிட்டார். இதற்காக தனது 33 பவுன் நகையை உலகனேரியை சேர்ந்த சரவணன் (36) என்பவரிடம் கொடுத்து அதனை பணமாக்கி மாடு வாங்கி தரும்படி கூறினாராம்.
நகையை பெற்றுக் கொண்ட சரவணன் திடீரென மாயமாகி விட்டார். அவரை தேடி கண்டுபிடித்து நகையை கேட்டபோது அவதூறாக பேசியதாக போலீசில் அன்புச்செல்வன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (34). இவர் தனக்கு சொந்தமான 34 பவுன் நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரத்தை வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்பவரிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறி உள்ளார்.
சிறிது காலம் கழித்து நகை-பணத்தை திருப்பிக் கேட்டபோது மணிகண்டன் இழுத்தடித்துள்ளார். இது குறித்து தெற்குவாசல் போலீசில் ராமமூர்த்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அவரது மனைவி செல்வி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
கும்பகோணம்:
தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு மத்திய- மாநில அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ 2500 வழங்க வேண்டும், கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு அரசு அறிவித்தபடி கடனை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி டெல்டாவை விவசாய பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும், டெல்டாவை பாலைவனமாக்கும் எண்ணை நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
விருதுநகரை சேர்ந்தவர் வெயில்முத்து (வயது 37). இவர் விருதுநகரில் வேல்முருகன் (61) என்பவர் நடத்திவரும் பருப்பு மில்லில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஜூலை மாதம் தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-
ஒரு ஆண்டுக்கு முன்பு என்னையும், என்னோடு கூலி வேலை பார்க்கும் விருதுநகரை சேர்ந்த காளியப்பன், மாரியப்பன், தங்கமாரி, காளிதாஸ், கணேசன் ஆகியோரை பருப்பு மில் உரிமையாளர் வேல்முருகன், அவருடைய அக்கா மகன் செண்பகன் (56), செண்பகனின் மகள் இந்துமதி (28) ஆகியோர் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேரவேண்டும் என்று கூறி தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு அழைத்து வந்தனர். அங்கு பல பத்திரங்களில் கையொப்பம் வாங்கினார்கள்.
இந்நிலையில் நான் ரூ.37 லட்சத்து 46 ஆயிரம் கடன் பெற்றுள்ளதாகவும், அதற்கு வட்டியுடன் ரூ.40 லட்சத்து 14 ஆயிரத்து 865 கட்ட வேண்டும் என்றும் எனக்கு வங்கியில் இருந்து கடிதம் வந்தது. இதுகுறித்து வங்கி கிளை மேலாளரிடம் கேட்டபோது, தானிய சேமிப்பு கிட்டங்கியில் நான் நவதானியம் இருப்பு வைத்ததன் பேரில் கடன் பெற்றுள்ளதாகவும், தற்போது கிட்டங்கியில் நவதானியம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதேபோல், மில்லில் வேலைபார்க்கும் பலரின் பெயரில் கடன் வாங்கி மோசடி நடந்துள்ளது. மில்லின் உரிமையாளர் வேல்முருகன், அவருடைய உறவினர்கள் செண்பகன், இந்துமதி ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வேல்முருகன், செண்பகன், இந்துமதி ஆகிய 3 பேர் மீதும் ஜூலை மாதம் 30-ந் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இந்த வழக்கில் செண்பகன், வேல்முருகன் ஆகிய 2 பேரையும் கடந்த மாதம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும் இந்த மோசடியில் இந்துமதியின் கணவர் விமல்குமார், மில்லில் கணக்காளராக வேலை பார்க்கும் கலைச்செல்வி (54), இடைத்தரகர்கள் சோலைராஜ், சன்னாசி (35) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மில்லில் கூலி வேலை பார்க்கும் தொழிலாளர்களை ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேரவேண்டும் என்று கூறி வங்கிக்கு அழைத்துச்சென்று, அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் பெயரில் கடன் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
மேலும், வங்கியின் நெருக்கடிக்கு பயந்தும், கடன் சுமையை அறிந்த பயத்திலும், மனஉளைச்சலிலும் விருதுநகர் பகுதியை சேர்ந்த சுமார் 15 பேர் கடந்த 6 மாதங்களில் இறந்துள்ளதாகவும், சிலர் வங்கிக்கு பயந்து தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெயரில் பெரியகுளம், தேனி, ஜெயமங்கலம், நிலக்கோட்டை, விருதுநகர் பகுதிகளில் உள்ள வங்கிகளில் கடன்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரின் பெயரிலும் ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை கடன் வாங்கி, சுமார் ரூ.200 கோடி மோசடி நடந்துள்ளது.
வங்கியில் இருந்து நோட்டீஸ் சென்ற பிறகே பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் பெற்றுள்ள விவரம் தெரியவந்துள்ளது. கிட்டங்கிகளில் சுமார் 71 டன் தானியங்கள் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாக சான்றிதழ் பெற்று கடன் வாங்கி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் பலர் புகார் கொடுக்கவில்லை.
இந்த மோசடிக்கு வங்கி அதிகாரிகளின் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வங்கி அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #MoneyCheating
தபால் வங்கி சேவையை நாடு முழுவதும் இன்று துவக்கி வைத்த பிரதமர் மோடி, இந்தியாவில் வாராக்கடன்கள் அனைத்தும் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு வரை 18 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே கடனாக அளிக்கப்பட்டு இருந்ததாகவும், அடுத்த 6 ஆண்டுகளில் 52 லட்சம் கோடியாக உயர்ந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பணம் மீண்டும் வராது என்று தெரிந்தே வங்கி ஊழியர்கள் ஆட்சியில் இருந்த அந்த குடும்பத்தின் உத்தரவுக்கு கீழ்படிந்ததாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகுதான் நாட்டின் பொருளாதாரத்தை காங்கிரஸ் கண்ணிவெடி மீது நிறுத்தி விட்டு சென்றதை நாங்கள் உணர்ந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், பா.ஜ.க.வின் இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து வங்கி கடன்களும் முறையாக விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi #Congress
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை மற்றும் வேளாண்மை துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு பித்தளை குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.
அப்போது அவர்கள், ‘‘பித்தளை பாத்திரங்களை அடமானமாக வைத்து வங்கிகளில் கடன் வழங்க வேண்டும்’’ என்று கோஷமிட்டப்படி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கக்கரை சுகுமாரனை மட்டும் அனுப்பி கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுக்க போலீசார் அனுமதித்தனர்.
இதையடுத்து அவர் கலெக்டர் அண்ணா துரையை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதன்பிறகு கக்கரை சுகுமாரன் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக அரசிடம் பாசனத்துக்கு தண்ணீர் விடக்கோரி டெல்டா விவசாயிகள் கெஞ்சி போராடியும் தண்ணீர் விடவில்லை. தற்போது கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக மேட்டூருக்கு உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
காவிரியில் தண்ணீர் திறந்து விட்டும் டெல்டா விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. டெல்டா பகுதிகளில் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. ஆறு, வாய்க்கால், குளங்கள் வறண்டு கிடக்கிறது. இதற்கு காரணமாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமி பதவி விலக வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் பல இடங்களில் கரை உடைப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 100 டி.எம்.சி.க்கும் மேலான தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது.
தற்போது டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் பாயாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்து புதிதாக பயிர்கடன் வழங்க வேண்டும்.
இதற்காக பித்தளை பாத்திரங்களை அடமானமாக கலெக்டரிடம் ஒப்படைக்கவே வந்தோம். ஆனால் போலீசார் எங்களை தடுத்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சட்டசபையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி பதில் அளித்து பேசியதைத் தொடர்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடம்; வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் வணிகவரி அலுவலகம் கட்டப்படும். மதுரை ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக் கட்டிடத்தில் மூன்று மின்தூக்கிகள் நிறுவப்படும்.
பட்டுக்கோட்டை பதிவு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தில் புதிய ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம் கட்டப்படும். தென்காசி பதிவு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகம் கட்டப்படும்.
வங்கி கடனுக்காக சொத்துகளை பிணயமாக வைத்து பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டண உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும். கடனுக்காக சொத்துகளின் மூல ஆவணங்களை வங்கியில் ஒப்படைத்து உடன்படிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன.
அந்த உடன்படிக்கைகளுக்கு மூன்றுமாத காலத்திற்குட்பட்டு அல்லது அதற்கு மேற்பட்டு என இரண்டுவித முத்திரைத் தீர்வை விதிக்கப்படுகிறது. அந்த முத்திரை தீர்வை மற்றும் பதிவுக் கட்டணத்திற்கு செலுத்தப்பட வேண்டிய அதிகபட்ச முத்திரை தீர்வை ரூ.30 ஆயிரமாகவும், பதிவு கட்டணம் ரூ.6 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார். #TNAssembly
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
ஊரகப் பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளின் சமையலறை மற்றும் குளியலறைகளிலிருந்து வெளியேறும் திரவக் கழிவு நீர், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க, தனிநபர் உறிஞ்சு குழிகளும், ஊரகப் பகுதிகளில், ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்ற குடிநீர் அமைப்புகளை சுற்றி கழிவு நீர் தேங்காமல் தடுத்திட சமுதாய உறிஞ்சு குழிகள் என மொத்தம் 2 லட்சத்து 500 உறிஞ்சு குழிகள் 168 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதனால் கழிவு நீர் வடிகட்டப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.
ஊரகப் பகுதிகளில் நடப்பாண்டில், 8 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 1,000 அங்கன்வாடி மையங்கள், 87 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
பழமையான மற்றும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்களுக்குப் பதிலாக, நடப்பாண்டில் தலா 17 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 500 புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், 88 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும்.
பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம்-1ஐ தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தியதைத் தொடர்ந்து, பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் 11-னை செயல்படுத்த 201718ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இத்திட்டத்தின்கீழ், நடப்பாண்டில், 192 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 287 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும். மேலும், 10 உயர்மட்டப் பாலங்கள் கட்டப்படும்.
பல்வேறு வகையான சாலைகளை ஒரே திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 1,200 கோடி ரூபாய் செலவில் 5,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும்.
ஊரகப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் ஆழ்துளை கிணறுகள் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. உப்பு அல்லது கடின தன்மை மற்றும் குடிநீரில் காணப்படும் இதர குறைகளை சீர் செய்து, பாதுகாக்கப்பட்ட குடிநீரினை மக்களுக்கு வழங்க நடப்பாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குக்கிராமங்களில், எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அருகாமையில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கும், அடர்த்தியான மற்றும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய கிராம ஊராட்சிகளுக்கும், தெருவில் வைக்கும் 60,000 குப்பைத் தொட்டிகள் தலா 25,000 ரூபாய் மதிப்பில், 150 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
ஊரகப் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்துள்ளதால், இவ்வீடுகளை பராமரிப்பு செய்து தரக் கோரி மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும், பொது மக்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் தொடர்ந்து வருவதை ஒட்டி, பழுதடைந்த நிலையில் உள்ள 45,594 வீடுகளை ஒரு வீட்டிற்கு 50,000 ரூபாய் வீதம் மொத்தம் 227 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்யப்படும். இதற்கான தொகை மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.
கடந்த 7 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 41,180 கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. 201718ஆம் ஆண்டில் விதி எண் 110ன் கீழ் 7,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, அதனை விஞ்சி 8,332 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கி, 119 சதவீதம் சாதனை எய்தப்பட்டது. அம்மா வழியில் செயல்படும் அம்மாவின் அரசால், மகளிர் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் 11,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள 135 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (சென்னை தவிர) 35 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பாதாள சாக்கடைத் திட்டம் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும், 3 மாநகராட்சிகள், 25 நகராட்சிகளில் பாதாள சாக்கடை பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு மாற்று ஏற்பாடாக, கசடுக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை செயல்படுத்த முடிவெடுத்து 51 நகராட்சிகள் மற்றும் 59 பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் 49 நகரங்களில் கசடுக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் 217 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டங்களில் குழாய்கள் பதித்தல் மற்றும் மழையினால் சேதமடைந்த சாலைகளை மறு சீரமைக்கும் பொருட்டு, நடப்பாண்டில் 1,350 கிலோ மீட்டர் நீளத்திற்கு 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பேரூராட்சிப் பகுதிகளில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை மேம்பாட்டுப் பணிகள் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்பதை இப்பேரவைக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNAssembly #TNCM #EdappadiPalanisamy