search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bank strike"

    • கடந்த 5-ந்தேதி மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • 10-ந்தேதி டெல்லியில் தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    சென்னை :

    அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:-

    வங்கி கிளைகளில் எங்கு கூடுதல் ஊழியர்கள் உள்ளார்களோ அவர்களை ஊழியர் பற்றாக்குறை உள்ள வங்கி கிளைகளுக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம் அனைத்து கிளைகளிலும் சமமான ஊழியர்கள் இருப்பர். ஆனால், சில வங்கிகள் இந்த ஒப்பந்தத்தை மீறி ஊழியர்களை ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு பணியிட மாற்றம் செய்கிறது. ஒரு வங்கியில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது தொழிலாளர் சட்டத்தை மீறும் செயலாகும்.

    சில வங்கிகள் பல்வேறு பணிகளுக்கு அயல்பணி நடவடிக்கை, பொதுமக்களிடம் வைப்புத்தொகை வசூலிக்கும் பணியில் ஈடுபட்ட 240 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததுடன் அவர்களுக்கான எவ்வித இழப்பீட்டையும் வழங்கவில்லை.

    இதற்கு தீர்வு காணும் வகையில் வேலைநிறுத்தம் செய்வதற்காக வங்கி ஊழியர் சங்கம் சார்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டதையடுத்து கடந்த 5-ந் தேதி மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பின்னர், 10-ந் தேதி டெல்லியில் தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வங்கிகளின் நிர்வாக தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதற்கிடையே, தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையரின் கோரிக்கையை ஏற்று இன்று (நேற்று) வங்கிககள் கூட்டமைப்புடன் மீண்டும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஏற்கனவே திட்டமிட்டப்படி வரும் 19-ந் தேதி நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்கி ஊழியர்கள் பிரச்சினைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன.
    • இந்த வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது.

    அவுரங்காபாத்

    அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தேவிதாஸ் துல்ஜபுர்கார் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கின்றன. இருதரப்பும் கலந்து முடிவு எடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டன.

    இருதரப்பு தீர்வு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் மீறி வருகின்றன. மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளையும் வங்கி நிர்வாகங்கள் கடைபிடிப்பது இல்லை. நிர்வாகம்-பணியாளர் உறவை அலட்சியப்படுத்துகின்றன.

    பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா, பெடரல் வங்கி, சோனாலி வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளின் நிர்வாகங்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், வங்கி ஊழியர்களிடையே பரவலாக கலக்கம் ஏற்பட்டுள்ளது.

    ஆகவே, அனைத்து வங்கிகளிலும் உள்ள அகில இந்திய வங்கி பணியாளர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், வருகிற 19-ந் தேதி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இந்த வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தொழிலாளர் விரோத போக்கு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8, 9 ஆகிய 2 நாட்கள் வங்கிகள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது. #BankStrike #Strike
    புதுடெல்லி:

    தொழிலாளர் விரோத போக்கு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக மத்திய வங்கி ஊழியர் சங்கங்களான ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் வருகிற 8, 9 ஆகிய 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

    இந்த நிலையில் இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தற்போது அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு இந்தியா ஆகிய 2 வங்கி ஊழியர்கள் சங்கமும் ஆதரவு அளித்து உள்ளது. #BankStrike #Strike 
    விடுமுறை முடிந்து வங்கிப் பணிகள் இன்று மீண்டும் துவங்கும் நிலையில், குறிப்பிட்ட சில வங்கிகளின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #BankStrike
    சென்னை:

    வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை (21-12-2018) அன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து 2-வது சனிக்கிழமை, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து விடுமுறைகள் வந்ததால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.  விடுமுறைகள் முடிந்து வங்கிப் பணிகள் இன்று மீண்டும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 முன்னணி வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய அமைப்பு இன்று வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளது.

    பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகளை ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


     
    தொடர் விடுமுறை காரணமாக முடங்கிப்போன வங்கிப் பணிகள் இன்று துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், வங்கிச்சேவை பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். #BankStrike

    வங்கிகள் இணைப்பைக் கண்டித்து வருகிற 26-ந்தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று 9 வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.#BankStrike

    சென்னை:

    பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளதற்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதை கண்டித்து கடந்த 21-ந்தேதி வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடபட்டனர். இதனால் வங்கி சேவை, பண பரிமாற்றம் பாதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் 9 அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ஊழியர்களை கொண்ட சங்கங்கள் நாடு முழுவதும் வருகிற 26-ந்தேதி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.

    இப்போராட்டத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். இதனால் வங்கி பணி பரிமாற்றம் மற்றும் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும்.

    இதுபற்றி வங்க ஊழியர்களின் ஐக்கிய கூட்டமைப்பு கூறும்போது, “அனைத்து வங்கிகளையும் இணைத்து மிகப்பெரிய வங்கியை உருவாக்க மத்திய அரசு விரும்புகிறது. பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைத்தாலும் உலகில் முதல் 10 இடத்துக்குள் வர முடியாது.

    இதனால் வங்கிகளின் பல்வேறு கிளைகள் மூடப்பட்டு வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்று கூறி உள்ளது. #BankStrike

    அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பின்படி, வங்கி அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாலும், தொடர்ந்து விடுமுறை வருவதாலும் வங்கிப் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. #BankStrike
    சென்னை:

    வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி அதிகாரிகளின் 4 சங்கங்கள் சமர்ப்பித்துள்ள கோரிக்கைகளின்படி சம்பள உயர்வுக்கு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனம் விடுத்துள்ள அழைப்பின்படி நடக்கும் இந்த வேலை நிறுத்தத்தால் வங்கிப்பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தனியார் வங்கிச் சேவைகள் வழக்கம் போல கிடைக்கும்.

    22-ந் தேதி 2-வது சனிக்கிழமை என்பதால் அன்று வங்கிகள் விடுமுறை. 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்துமஸ் விடுமுறை. எனவே இடையில் ஒரு நாள் (24-ந் தேதி) தவிர, 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர்ந்து வங்கி அலுவல்கள் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. 



    26-ந் தேதி புதன்கிழமையன்று வேலைநிறுத்தம் செய்ய 9 முன்னணி வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. எனவே அன்றும் வங்கிச்சேவை பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. #BankStrike

    வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 24-ந் தேதி தவிர 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர்ந்து வங்கி அலுவல்கள் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. #BankStrike
    ஐதராபாத்:

    வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வங்கி அதிகாரிகளின் 4 சங்கங்கள் சமர்ப்பித்துள்ள கோரிக்கைகளின்படி சம்பள பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் வங்கிகள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

    22-ந் தேதி 2-வது சனிக்கிழமை என்பதால் அன்று வங்கிகள் விடுமுறை. 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கிறிஸ்துமஸ் விடுமுறை. எனவே இடையில் ஒரு நாள் (24-ந் தேதி) தவிர 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர்ந்து வங்கி அலுவல்கள் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. #BankStrike
    3 வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் 26-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. #BankWorkersStrike

    சென்னை:

    தேனா வங்கி, பரோடா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைத்து ஒரு புதிய பெரிய வங்கியை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    மத்திய அரசின் வங்கி இணைப்பு கொள்கையை எதிர்த்து வருகிற 26-ந்தேதி ஒரு நாள் அடையாள எதிர்ப்பு வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறியதாவது:-

    வங்கிகள் இணைப்பு முடிவு தேவையற்றது. ஏழை-எளிய மக்களுக்கு சேவை செய்ய பெரிய வங்கிகள் தேவையில்லை. உலகளவில் செயல்பட்ட பெரிய வங்கிகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன. சாதாரண ஏழை மக்களின் சேமிப்பு வைப்புகளை பெற்றுக் கொண்டு செயல்படும் இந்திய வங்கிகள் மேலை நாட்டு பெரிய வங்கிகள் போல சிக்கி கொள்ளக் கூடாது.

    சாதாரண சேமிப்பை வைத்து ஏழை மக்களுக்கு விவசாயத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் கடன் வழங்கும் திறமையான வங்கிகளை தொடங்குவது தான் அவசியம்.

    வங்கிகள் இணைப்பின் மூலம் நூற்றுக்கணக்கான கிளைகளை மூடும் நிலை உள்ளது. ஒரு புறம் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘‘ஜந்தன் யோஜனா’’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து விட்டு மறுபுறம் வங்கி இணைப்பு என்ற பெயரில் கிளைகளை மூடும் திட்டத்தை அறிவிப்பது ஏற்புடையது அல்ல. மேலும் வங்கிகள் போன்ற பொதுத்துறை மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மூடும் நடவடிக்கையால் வேலை வாய்ப்பு குறையும். எனவே இந்த முடிவு பொது மக்களுக்கும், இளைஞர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் உகந்தது அல்ல.

    வங்கிகளை விரிவுபடுத்தும் அவசியம் இருக்கின்ற போது அவற்றை இணைப்பது தவறான கொள்கை. அதுமட்டுமின்றி பெரும் முதலாளிகள் திருப்பி செலுத்தாத வாராக்கடன்களை வசூலிப்பதே வங்கிகளின் தலையாய கடமையாகும்.

    அதனை விடுத்து வங்கி இணைப்பு கொள்கையில் ஆர்வம் காட்டுவது அடிப்படை பிரச்சினையில் இருந்து விலகி நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதாக அமைந்துள்ளது.

    எனவே வங்கி இணைப்பு கொள்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி 26-ந்தேதி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அதன் காரணமாக வங்கி பணிகள் முழுமையாக பாதிக்கப்படும். வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் என 10 லட்சம் பேர் இதில் பங்கேற்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #BankWorkersStrike

    3 வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்து உள்ளது. #BankStrike #December26 #BankMerger
    ஐதராபாத்:

    தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்து உள்ளது.

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளான மும்பையை மையமாக கொண்டு இயங்கும் தேனா வங்கி, பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும் விஜயா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளை ஒன்றாக இணைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதன்மூலம் உருவாக்கப்படும் புதிய வங்கி குஜராத்தை மையமாக கொண்டு இயங்குவதுடன், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி ஆகியவற்றுக்கு பிறகு 3-வது பெரிய வங்கியாக இருக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.

    மத்திய அரசின் இந்த முடிவுக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக மேற்படி வங்கிகள் இணைப்புக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

    அதன்படி வருகிற 26-ந்தேதி நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் நேற்று அறிவித்து உள்ளது. மும்பையில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. இந்த அமைப்பில் 9 தொழிற்சங்கங்கள் அங்கம் வகித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரான வெங்கடாச்சலம், இந்த தகவலை நேற்று வெளியிட்டார். மேற்படி வங்கிகளை இணைப்பதில் மத்திய அரசும், அந்த வங்கிகளும் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதால் இந்த வேலை நிறுத்த முடிவை மேற்கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த வேலை நிறுத்தத்தில் வங்கிகளின் 9 தொழிற்சங்கங்களும் பங்கேற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

    இதைப்போல மத்திய அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கைகள் மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து தேசிய தொழிற்சங்க மாநாடு சார்பில் அடுத்த மாதம் (ஜனவரி) 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திலும் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம் பங்கேற்கும் எனவும் அவர் கூறினார்.  #BankStrike #December26 #BankMerger
    வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 80 லட்சம் காசோலை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது. #Bankstrike

    புதுடெல்லி:

    சம்பள உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 21 பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளை சேர்ந்த 10 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பணபரிவர்த்தை முடங்கியது.

    இந்நிலையில், 2 நாட்கள் நடத்தப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சுமார் 80 லட்சம் காசோலை பரிவர்த்தனை முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

    இந்த இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் வெற்றி பெற்றதாகவும், இதன் காரணமாக சுமார் 80 லட்சம் காசோலை பரிவர்த்தனை முடங்கியதாகவும் வங்கிகள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பிரச்சனையை முழுமையாக சரிசெய்ய இன்னும் ஒரு வாரம் வரை எடுக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த போராட்டத்தினால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பண பரிவர்த்தனை முடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. #Bankstrike
    9 சங்கங்களை சேர்ந்த தலைமை அமைப்பான வங்கி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் வரும் 30, 31 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. #BankStrike
    சிம்லா:

    வங்கி பணியாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கத்தின் தாமதம் மற்றும் அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து வரும் 30, 31 தேதிகளில்  வேலைநிறுத்தம் நடத்த தீர்மானிக்கப்பட்டதாக வங்கி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஐக்கிய கூட்டமைப்பின் இமாச்சலப்பிரதேசம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரேம் வெர்மா தெரிவித்துள்ளார்.

    இந்திய வங்கிகள் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட 2 சதவீத சம்பள உயர்வும்,  சில வங்கிகளில் மூன்றாம் படிநிலை பணியாளர்கள் வரைதான் அளிக்கப்படுகிறது. இதை கண்டித்தும் எங்கள் அமைப்புக்கு உட்பட்ட 9 சங்கங்களின் சார்பாக இந்த போராட்டம் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.#BankStrike
    ×