என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Basavaraj Bommai"

    • மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்ட கர்நாடகா ரத்னா விருதை அவரது மனைவி அஸ்வினி பெற்றுக் கொண்டார்.
    • இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர். வழங்கினர்.

    கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.


    விருது பெற்ற புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினி

    மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இந்த விருதை வழங்குவதற்காக, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து ரஜினிகாந்த் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் இன்று பெங்களூர் சென்றார். இதையடுத்து நடிகர் புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்ட கர்நாடகா ரத்னா விருதை அவரது மனைவி அஸ்வினி பெற்றுக் கொண்டார். இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் வழங்கினர்.


    பசவராஜ் பொம்மை - ரஜினிகாந்த்

    இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "மாபெரும் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். அவர்கள் எங்கள் அழைப்பிற்கு பதிலளித்து புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடகா ரத்னா' விருதை வழங்குவதற்காக கர்நாடகாவிற்கு வந்து கன்னடத்தில் பேசி கன்னடத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு என் நன்றி" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • கன்னடம், மொழியாக அல்லாமல் நமது வாழ்க்கையாக இருக்க வேண்டும்.
    • கன்னடம் நமது தாய்மொழி மட்டுமின்றி தேசிய மொழியும் கூட.

    பெங்களூரு :

    கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா விழா கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அத்துடன் கன்னட கொடியையும் ஏற்றினார். அதைத்தொடர்ந்து அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் அவர் உரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    கன்னடம் நமது தாய்மொழி மட்டுமின்றி தேசிய மொழியும் கூட. கர்நாடகத்தில் அனைத்து துறைகளிலும் கன்னட மொழி பயன்பாட்டை கட்டாயமாக்க வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேற்றப்படும். கன்னடத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்கப்படும்.

    கன்னடத்திற்காகவே வாழ வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்க வேண்டும். கன்னடம் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும். கர்நாடகத்தில் அடுத்த 3, 4 ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    ரூ.7 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகள் வந்தால் கர்நாடகம் வளர்ச்சி அடையும். கன்னடம், மொழியாக அல்லாமல் நமது வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

    கர்நாடகத்தில் ஒரே ஆண்டில் 8 ஆயிரம் பள்ளி கட்டிட வகுப்பறைகளை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். 1956-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் உருவானது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இவ்வாறு வகுப்பறை கட்டிடங்களை கட்டினால் பள்ளி கட்டிடங்களுக்கு பற்றாக்குறை இருக்காது. 'விவேகா' என்ற பெயரில் நாங்கள் பள்ளி கட்டிடங்களை கட்டுகிறோம்.

    கர்நாடகத்தில் அரசு துறைகளில் 2½ லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த காலியிடங்கள் நிரப்பப்படும். நடப்பாண்டில் 1 லட்சம் காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த காலியிடங்கள் நிரப்பும்போது கன்னடர்களுக்கு வேலை கிடைக்கும். கர்நாடகத்தில் நாளை (இன்று) உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதன் மூலம் சுமார் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

    கர்நாடகத்தில் 10 வேளாண் மண்டலங்கள் உள்ளன. இந்த ஆண்டு மழை அதிகமாக பெய்து அணை, ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். வறட்சி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அடுத்த 3, 4 ஆண்டுகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. வீடுகளை இழந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

    கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் அறிவுசார் அடிப்படையிலான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆராய்ச்சியில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. அதனால் கர்நாடகம் அறிவுசார் மாநிலம் ஆகும். நமது மண்ணில் ஞானம், உழைப்பு, உழைப்புக்கு மரியாதை உள்ளது.

    விவசாய வித்யா திட்டத்தின் கீழ் விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 6 லட்சம் குழந்தைகளுக்கு இந்த உதவித்தொகையை வழங்கியுள்ளோம். 5 லட்சம் பெண்களுக்கு சுயதொழில் செய்வதற்கு உதவி செய்யும் திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். கிராமப்புற இளைஞர்களுக்கு சுயதொழில் செய்ய உதவி செய்கிறோம்.

    நாட்டிலேயே அதிக ஞானபீட விருதுகளை பெற்ற மாநிலம் கர்நாடகம்.உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றவற்றால் நாம் பல்வேறு புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

    நமது கலாசாரம் சிறப்பானது. கன்னட கொடியை எல்லா துறைகளிலும் பறக்க விட வேண்டும். நல்ல கல்வி, சுகாதாரம், வேலை, தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் அடிப்படை வசதிகளை கொண்ட எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டியது அவசியம். அவ்வாறு செய்தால் உலகிலேயே கர்நாடகம் சிறந்த மாநிலமாக திகழும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    விழாவில் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கன்னட மொழி மீது உணர்வு பூர்வமாக பற்றை வெளிப்படுத்தும் பாடல்களுக்கு பள்ளி குழந்தைகள் நடனமாடினர். இந்த விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    • தொழில்நுட்பம், பொருளாதாரம் என்று எல்லா துறைகளிலும் கர்நாடகம் முன்னணியில் உள்ளது.
    • வெற்றியை நோக்கி தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

    பெங்களூரு :

    பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை கடந்த 16-ந் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி பெங்களூரு அரண்மனை மைதானத்தில் மாநாடு நிறைவு விழா நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதிலும், புத்தொழில் நிறுவனங்களை கவருவதிலும் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. பெங்களூருவை தாண்டி மாநிலத்தின் பிற பகுதிகளில் தொழில் தொடங்க வேண்டும். அவ்வாறு செய்தால் பெங்களூருவை போல் பிற மாவட்டங்களும் வளர்ச்சி அடையும். விவசாயம், தொழில்நுட்பம், பொருளாதாரம் என்று எல்லா துறைகளிலும் கர்நாடகம் முன்னணியில் உள்ளது.

    கர்நாடகத்தில் அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் என்ஜினீயர்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நவீன தொழில்நுட்பத்தை மனித சமூகத்தின் நன்மைக்காக, நல்ல சமூகத்தை உருவாக்குவதற்காக பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு மனிதரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தோல்வியை கண்டு துவளாமல் வெற்றியை நோக்கி தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

    தொழில்முனைவோர் தங்களின் துறைகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த மாநாட்டின் நோக்கம் வெற்றி பெறும். பல்வேறு ஆராய்ச்சிகள் தனி நபர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தொழில்நுட்ப மாநாட்டை அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டு வெற்றிகரமானதாக ஆக்கியுள்ளோம். தொழில்நுட்பத்துடன் சிந்தனைகள் சேர்ந்துள்ளன. பெங்களூரு என்றால் தங்கமான நகரம். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த பெங்களூரு நாட்டின் பொருளாதாரத்தின் தலைநகரமாக மாறும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

    இந்த விழாவில் மத்திய தொழில்துறை மந்திரி பியூஸ்கோயல், அறிவியல், தகவல், உயிரி தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வத் நாராயண், தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்பு, மாநில காவல்துறையுடன் இணைந்து விசாரிக்கிறது.
    • இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ள நெட்வொர்க், முறியடிக்கப்படும்.

    பல்லாரி:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று ஆட்டோவில் இருந்து மர்ம பொருள் வெடித்து சிதறிய சம்பவத்தில் காயமடைந்த பயணி மற்றும் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில வெடிகுண்டை வெடிக்க செய்ய டெட்டனேட்டர், கம்பிகள் மற்றும் பேட்டரிகள் பொருத்தப்பட்ட குக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் காயமடைந்த பயணி போலி ஆதார் அட்டை, போலியான முகவரி, போலியான பெயர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி கோவையில் இருந்து சிம் கார்டு வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக உதகை அருகே உள்ள குந்தசப்பை கிராமத்தைச் சேர்ந்த நபரிடம் கர்நாடகா போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்நிலையில் மங்களூரு சம்பவத்தில் பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பல்லாரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    முதற்கட்ட தகவல்களின்படி, வெடித்த பொருள் எல்இடி இணைக்கப்பட்ட கருவி என தெரிய வந்துள்ளது. சம்ப இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரும், அதை எடுத்துச் சென்ற நபரின் பெயரும் வெவ்வேறானது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

    சந்தேகப்படும் நபரிடம் டூப்ளிகேட் ஆதார் அட்டை இருந்தது. அதில் ஹூப்ளி முகவரி இருந்தது. இது ஒரு பயங்கரவாதச் செயல், கோயம்புத்தூர் மற்றும் வேறு இடங்களுக்கும் அவர் பயணம் செய்துள்ளது, பயங்கரவாதத் தொடர்பைத் தெளிவாகக் காட்டுகின்றன. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் புலனாய்வுப் பணியகம் (ஐபி) அதிகாரிகளும், மாநில காவல்துறையுடன் இணைந்து இந்த வழக்கை விசாரிக்கிறது..

    தேசிய புலனாய்வு அமைப்பின் 4 பேர் கொண்ட குழு, சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையுடன் ஒருங்கிணைத்து செயல்படுகிறது. சந்தேகப்படும் நபர் மருத்துவமனையில் உள்ளார். அவர் சுயநினைவு திரும்பிய பிறகு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணையில் மேலும் விவரங்கள் தெரியவரும்.

    இந்த சம்பவத்தில் பரந்த நெட்வொர்க் உள்ளது, அது முறியடிக்கப்படும். தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணையில் உண்மை தெரிய வரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், மங்களூரு சம்பவத்தை தொடர்ந்து கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதிகள் மற்றும் கர்நாடகாவில் முதல் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையான ஆனைகட்டி வரை வாகனச் சோதனையை போலீஸார் தீவிரப் படுத்தியுள்ளனர்.

    ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் அதிக மக்கள் கூடும் இடங்களில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுபவர்களின் உடமைகள் சோதனை செய்யப்படுகின்றன. மங்களூருவில் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • ஆடு மேய்ப்பவர்களின் நலனுக்காக ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இளைஞர்களுக்கு சுயதொழில் செய்ய அரசு உதவி செய்கிறது.

    பெங்களூரு :

    சித்ரதுர்கா மாவட்டம் இரியூரில் பா.ஜனதா ஜனசங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஆடு மேய்ப்பவர்களின் நலனுக்காக ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நெசவாளர்கள், மீனவர்களின் குழந்தைகளுக்கு வித்யாநிதி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெண் திறன் திட்டத்தின் கீழ் 5 லட்சம் பெண்களுக்கு வேலை, சுவாமி விவேகானந்தா யுவசக்தி திட்டத்தின் கீழ் 5 லட்சம் இளைஞர்களுக்கு சுயதொழில் செய்ய அரசு உதவி செய்கிறது.

    தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். விவசாயத்திற்கு நீர், இளைஞர்களுக்கு வேலை மற்றும் மக்களுக்கு சுயமரியாதை வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுப்பது தான் அரசின் நோக்கம். நாங்கள் 7 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். பத்ரா மேலணை திட்டம் தேசிய திட்டமாக விரைவில் மத்திய அரசால் அறிவிக்கப்பட உள்ளது.

    இதற்கு ரூ.16 ஆயிரம் கோடி நிதி உதவி கிடைக்கும். நாங்கள் கல்விக்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறோம். ஒரே ஆண்டில் 8 ஆயிரம் பள்ளி கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. 100 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுகின்றன. வாணிவிலாஸ் சாகர் அணை கால்வாய்களை தரம் உயர்த்த ரூ.738 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் கால்வாய்கள் நவீன மயமாக்கப்படும். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் நீர் கிடைக்கும். இந்த அணை பகுதியில் அழகான பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பத்ரா மேலணை திட்டத்தில் இந்த அணைக்கு ஆண்டுக்கு 5 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் வழங்கப்படும்.

    சித்ரதுர்காவில் 1,000 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். இதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இந்த பகுதி மக்களின் பொருளாதாரம் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். இந்த தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் வருகிற ஜனவரி மாதம் தொடங்கும். நாட்டில் ஊழலை ஆரம்பித்ததே காங்கிரஸ் தான். லோக்அயுக்தா அமைப்பை மூடிவிட்டு ஊழல் தடுப்பு படையை தொடங்கினர்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

    • இது 2012-ம் ஆண்டில் நடந்த பிரச்சினை.
    • எந்த கிராமங்களும் கர்நாடகத்துடன் செல்லாது.

    மும்பை :

    மகாராஷ்டிரா எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டம் கர்நாடக மாநில ஆட்சி எல்கையில் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள 80-க்கும் மேற்பட்ட மராத்தி மொழி பேசும் கிராமங்களை தங்களது மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

    இந்தநிலையில் எல்லை பிரச்சினை தொடர்பான வழக்கில் சட்ட குழுவை ஒருங்கிணைக்க மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் சம்புராஜ் தேசாய் ஆகியோரை மகாராஷ்டிரா அரசு நேற்று முன்தினம் நியமித்தது.

    இதேபோல எல்லை பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சில தகவல்களை எடுத்து வைத்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    மகாராஷ்டிராவில் உள்ள ஜாட் தாலுகாவில் கடும் வறட்சி மற்றும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது அங்குள்ள கிராமங்களை கர்நாடகத்துடன் இணைக்க வேண்டும் என்று அந்த கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றின. அப்போது கர்நாடக அரசு தலையிட்டு அந்த கிராமங்களுக்கு குடிநீர் வழங்க முன்வந்தது. இது குறித்து நாங்கள் இப்போதும் பரிசீலித்து வருகிறோம்.

    மேலும் மகாராஷ்டிராவில் உள்ள கன்னட பள்ளிகளுக்கு சிறப்பு மானியம் வழங்கவும், மாநிலத்தை ஒன்றிணைக்க போராடிய அம்மாநிலத்தில் உள்ள கன்னடர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் எனது அரசு முடிவு செய்துள்ளது.

    எல்லை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும்போது அதை எதிர்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த மூத்த வக்கீல்கள் கொண்ட ஒரு வல்லமைமிக்க சட்ட குழு உருவாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடக முதல்-மந்திரிக்கு நேற்று பதிலடி கொடுக்கும் வகையில் மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    எங்களது சாங்கிலி மாவட்டத்தில் உள்ள சில கிராம பஞ்சாயத்துகள் தான் கர்நாடக முதல்-மந்திரி கூறியதுபோல தீர்மானங்கள் நிறைவேற்றின. இது 2012-ம் ஆண்டில் நடந்த பிரச்சினை. தற்போது எந்த பஞ்சாயத்தும் அதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. எந்த கிராமங்களும் கர்நாடகத்துடன் செல்லாது. அந்த கிராமங்களின் தண்ணீர் திட்டத்தை நிறைவேற்றப்போகிறோம். கொரோனா மற்றும் உத்தவ் தாக்கரே அரசால் இந்த தண்ணீர் திட்டம் தாமதமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்-மந்திரி ஷிண்டே கட்சியை சேர்ந்த சம்புராஜ் தேசாய் கூறியதாவது:-

    கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சில ஆபத்தான கருத்துகளை முன் வைத்துள்ளார். இதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. எனக்கு கிடைத்த தகவலின்படி, சாங்கிலியில் உள்ள ஜாட் தாலுகாவின் வறண்ட பகுதிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழக்குவதற்கான திட்டத்தை மாநில அரசு ஏற்கனவே அனுமதித்துள்ளது. சுமார் ரூ.1,200 கோடியிலான இந்த திட்டம் குறித்து தொழில்நுட்ப ஆய்வு நடந்து வருகிறது. இதன்மூலம் அந்த கிராமங்களுக்கு கண்டிப்பாக மகாராஷ்டிராவில் இருந்து தண்ணீர் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதன் மூலம் எல்லைப்பிரச்சினையில் மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    • மகாராஷ்டிர வாகனங்கள் மீது கர்நாடகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
    • மகாராஷ்டிர துணை முதல்வர் பட்னாவிஸ், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் அதிருப்தி தெரிவித்தார்.

    மும்பை:

    கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் இடையே எல்லை பிரச்சினை மீண்டும் பூதாகரமாகி உள்ளது.

    கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் ஹிரேபாக்வாடி சுங்கச்சாவடி அருகில் கர்நாடக அமைப்பினர் மகாராஷ்டிரா மாநில வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி இரு மாநிலங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கர்நாடக அரசைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன.

    இந்நிலையில், கர்நாடகாவில் மகாராஷ்டிர வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு துணை முதல் மந்திரி பட்னாவிஸ், கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை போனில் தொடர்பு கொண்டு அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக துணை முதல்மந்திரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், தேவேந்திர பட்னாவிஸ், கர்நாடக முதல் - மந்திரி பசவராஜ் பொம்மையை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் ஹிரேபாக்வாடி தொடர்பாக பசவராஜ் பொம்மையிடம் அதிருப்தியை தெரிவித்தார். அதற்கு கர்நாடக முதல் மந்திரி சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகத்துக்கு வரும் வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் பட்னாவிசிடம் உறுதி அளித்தார் என தெரிவித்தனர்.

    • பா.ஜனதா அரசை மக்கள் 40 சதவீத கமிஷன் அரசு என்று மக்களே சொல்கிறார்கள்.
    • லஞ்ச அரசு என்று விதான சவுதா சுவர்கள் கூறுகின்றன.

    பெங்களூரு :

    கொப்பலில் நேற்று காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-

    1991-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் கொப்பல் தொகுதியில் போட்டியிட்டேன். அப்போது ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதால் அப்போது நான் தோல்வி அடைந்தேன். அதில் தோல்வி அடைந்ததால் எனக்கு பயன் ஏற்பட்டது. அதனால் தான் நான் முதல்-மந்திரி ஆனேன். கொப்பலில் பேசிய பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கர்நாடகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி நடப்பதாக கூறியுள்ளார்.

    ஆனால் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு கொள்ளை அடிப்பதை தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை. தங்களது இரட்டை என்ஜின் அரசு என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். ஆனால் கொப்பல் நீரேற்று திட்டத்தை செயல்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்ததா?. மராட்டியத்திலும் பா.ஜனதா அரசு தான் உள்ளது. அந்த அரசிடம் இதுபற்றி பேசாதது ஏன்?.

    இந்த பா.ஜனதா அரசை மக்கள் 40 சதவீத கமிஷன் அரசு என்று மக்களே சொல்கிறார்கள். இது லஞ்ச அரசு என்று விதான சவுதா சுவர்கள் கூறுகின்றன. பணி நியமனங்கள், பணி இடமாற்றங்கள் என அனைத்திலும் லஞ்சம் வாங்கப்படுகிறது. பெலகாவியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல், 40 சதவீத கமிஷன் விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மந்திரி ஈசுவரப்பா பதவியை ராஜினாமா செய்தார்.

    நான் முதல்-மந்திரியாக இருந்தபோது அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு தலா 7 கிலோ இலவச அரிசி வழங்கினேன். அதை பா.ஜனதா அரசு 5 கிலோவாக குறைந்துவிட்டது. எனது ஆட்சியில் 15 லட்சம் வீடுகளை ஏழை மக்களுக்கு கட்டி கொடுத்தேன். கல்யாண-கர்நாடக பகுதியின் வளர்ச்சிக்கு இந்த அரசு எதையும் செய்யவில்லை.

    நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, அங்கு அரசு துறைகளில் 35 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பினோம். அந்த பகுதிக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் சிறப்பு அந்தஸ்தை பெற்று கொடுத்தோம். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் இந்த கல்யாண கர்நாடக பகுதிக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜனதா மக்களுக்கு 600 வாக்குறுதிகளை அளித்தது.

    அதில் இதுவரை 25 வாக்குறுதிகள் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பா.ஜனதாவில் பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். சொல்வது போல் பசவராஜ் பொம்மை செயல்படுகிறார். பிரதமர் மோடியின் முன்பு அவர் கைகட்டி நிற்கிறார்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    • பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது சுலபம்.
    • காங்கிரஸ் கட்சியால் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வர முடியாது.

    பெங்களூரு :

    தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    சட்டசபை தேர்தலில் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று காங்கிரசுக்கு நன்கு தெரியும். மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க காங்கிரஸ் கட்சியினர் தயாராகி விட்டனர். ஒரு திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்த சாத்தியமில்லை என்று தெரிந்திருந்தும், மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை காங்கிரசார் கொடுத்து வருகின்றனர். அதிகாரத்திற்கு வந்தால் தானே, அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற சாத்தியமாக முடியும்.

    ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், காங்கிரசார் கொடுக்கும் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். ஏனெனில் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது சுலபம். அதனை நிறைவேற்றுவது என்பது மிகவும் கடினம். பெண்களுக்காக தனியாக திட்டங்களை வகுத்து, வாக்குறுதிகளை அளித்து வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். கண்டிப்பாக காங்கிரஸ் கட்சியால் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வர முடியாது.

    ஏற்கனவே கர்நாடக மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்க தயாராகி விட்டனர். பிரியங்கா காந்தி பெங்களூருவுக்கு வந்துள்ளார். தான் தலைவி என்ற பெயரில் பெங்களூருவில் கூட்டத்தில் அவர் பங்கேற்றிருக்கிறார். அவர் பங்கேற்று இருக்கும் கூட்டத்திற்கு வைத்திருக்கும் தலைப்பே வேடிக்கையாக உள்ளது. 'நான் தலைவி' என்று புகைப்படத்தை வைத்து கொண்டு, தன்னை தானே பிரியங்கா காந்தி அறிவித்து கொண்டு இருக்கிறார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் இல்லை என்பது தெளிவாகிறது.

    நான் தலைவி என்று பிரியங்கா காந்தி தனக்கு தானே அறிவித்து கொண்டாலும், அவரை தலைவியாக ஏற்றுக் கொள்ள கர்நாடக மாநில பெண்கள் தயாராக இல்லை. பா.ஜனதா ஆட்சியில் ஸ்ரீசக்தி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு பல்வேறு உதவிகளை அரசு வழங்கி வருகிறது. ஸ்ரீசக்தி திட்டத்திற்கு கர்நாடக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
    • காங்கிரஸ் கட்சியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    பெங்களூரு:

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பிரதமர் மோடி நாளை(இன்று) கர்நாடகம் வருகிறார். கலபுரகி, யாதகிரியில் நடைபெறும் 2 நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பேசுகிறார். நாராயணபுரா இடது கால்வாய் நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. அதை அவர் தொடங்கி வைக்கிறார்.

    இந்த திட்டத்தை மத்திய-மாநில அரசுகள் இணைந்து செய்து முடித்துள்ளன. இதை பிரதமர் மோடி தொடங்கி வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் வரும் காலத்தில் இதுபோன்ற திட்டங்களை இன்னும் அதிகளவில் மேற்கொள்ள ஊக்கம் அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாரா, லம்பானி இன மக்கள் வசிக்கும் பகுதிகளை வருவாய் கிராமங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இது சமூக ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய திட்டம் ஆகும்.

    நாடோடிகளான அந்த மக்களுக்கு இந்த திட்டம் நிரந்தர வாழ்வியலை ஏற்படுத்தி கொடுக்கும். அவர்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பை கொடுக்கும். இத்தகைய திட்டங்களால் கர்நாடகத்திற்கு நல்லது நடக்கும். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் தகவல் தெரிவிப்பதாக எங்கள் கட்சி மேலிட தலைவர்கள் கூறியுள்ளனர்.

    பி.கே.ஹரிபிரசாத் கூறிய தரம் தாழ்ந்த கருத்துக்கு நான் பதிலளிக்க மாட்டேன். இது தான் அவருக்கு எனது பதில் ஆகும். காங்கிரஸ் கட்சியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதனால் பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களை திசை திருப்ப காங்கிரஸ் முயற்சி செய்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, இதை ஏன் அவர்கள் செய்யவில்லை.

    ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றவில்லை. அதனால் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று எந்த உறுதியும் இல்லை. காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகிறோம். நாங்கள் சொன்னபடி நடந்து கொள்கிறோம்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • பிரதமர் மோடி மீண்டும் 2024-ம் ஆண்டு பிரதமராவது உறுதி.
    • காங்கிரசார் வாய்க்கு வந்ததுபோல் பேசக்கூடாது.

    சிக்கமகளூரு:

    சிக்கமகளூருவில் ஒவ்வொரு ஆண்டும் சிக்கமகளூரு திருவிழா நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான சிக்கமகளூரு திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. அதையடுத்து கடந்த 19-ந் தேதி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன. நேற்று முன்தினம் 2-வது நாள் நிகழ்ச்சிகள் நடந்தன.

    சிக்கமகளூரு டவுனில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்தில் அமைந்திருக்கும் சந்திரதிரிகோண மண்டபத்தில் நடந்த கலை நிகழ்ச்சியை மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி,முருகன் ஆகியோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர். பின்னர் விழாவில் மத்திய மந்திரி முருகன் பேசியபோது கூறியதாவது:-

    ஒரே பாரதம், ஒரே தாய். நாம் அனைவரும் ஒரே பாரத தாயின் குழந்தைகள் ஆவோம். அந்த வகையில் காசியில் தமிழ்ச்சங்கத்தின் மூலம் பிரதமர் மோடி யாகம் நடத்தினார். அப்போது மக்களிடையேயான ஒற்றுமை, உறவு குறித்து பேசினார். நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இனியும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

    கர்நாடகத்தில் ஸ்ரீரங்கப்பட்டணாவில் ரங்கநாதர் உள்ளார். தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் உள்ளார். இரண்டும் ஒரே கடவுள்தான். காவிரி நீரை அண்ணன் - தம்பி போல் பங்கிட்டு விவசாயம் செய்து வருகிறோம். அந்த ஒற்றுமை உணர்வுடன் நாம் வாழ்வது பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். அவர் தனது உரை முழுவதையும் தமிழிலேயே பேசினார்.

    அதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    உலக அளவில் இந்தியா 5-வது வளர்ந்து வரும் நாடாக உள்ளது. இங்கிலாந்தைவிட இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்ததில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி மீண்டும் 2024-ம் ஆண்டு பிரதமராவது உறுதி.

    சூரியனும், சந்திரனும் உதயம் ஆவது எவ்வளவு உண்மையோ, அதேபோல் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி. கர்நாடக சட்டமன்ற தேர்தலை தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலேயே சந்திப்போம். மீண்டும் அவரே முதல்-மந்திரி ஆவார். காங்கிரசார் வாய்க்கு வந்ததுபோல் பேசக்கூடாது. ராகுல் காந்தி, சித்தராமையா போன்றோர் தங்கள் மனதுக்கு தோன்றியதை எல்லாம் பேசுவது தவறு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தேர்தலை அனைவரும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும்.
    • நாங்கள் எங்களின் பலத்தின் அடிப்படையில் வெற்றி பெறுவோம்.

    துமகூரு :

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வோம் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். அப்படி என்றால் முதல்-மந்திரி மட்டுமல்ல, அவரது தலைமையிலான குழு மற்றும் கட்சி என்று அர்த்தம். நாங்கள் அனைவரும் சேர்ந்து வெற்றி பெற முயற்சி செய்வோம். தேர்தலை அனைவரும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும். நாங்கள் இன்று (நேற்று) முதல் விஜய சங்கல்ப யாத்திரையை தொடங்குகிறோம். இதன் மூலம் வீடு வீடாக சென்று மத்திய-மாநில அரசுகளின் சாதனைகளை மக்களுக்கு தெரிவிப்போம்.

    நாங்கள் எங்களின் பலத்தின் அடிப்படையில் வெற்றி பெறுவோம். காங்கிரசை தோற்கடிக்க அதே கட்சி தலைவர் ஒருவருக்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரூ.500 கோடி பேரம் பேசியதாக காங்கிரஸ் கட்சியே குற்றம்சாட்டியுள்ளது. இதுபற்றி அக்கட்சியினர் தான் பதில் கூற வேண்டும். இதுகுறித்து நான் பேச ஒன்றும் இல்லை. இந்த விவகாரத்தை மூடிமறைக்க காங்கிரசார் முயற்சி செய்வதாக தெரிகிறது. பா.ஜனதா 130 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    ×