search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "batteries"

    • கிராமசபை கட்டிடத்தில் பேட்டரிகள் திருடப்பட்டது.
    • ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் கொடிக்குளம் ஊராட்சி செயலர் ஜெகநாதன் புகார் செய்தார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ளது கொடிக்குளம். இங்கு ஊராட்சிக்கு சொந்தமான கிராம சபை கூட்ட அரங்கம் உள்ளது.

    இந்த கட்டிடத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த 3 யு.பி.எஸ். பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் கொடிக்குளம் ஊராட்சி செயலர் ஜெகநாதன் புகார் செய்தார். அதன் பேரில் ஒத்தக்க டை இன்ஸ்பெ க்டர் சுகுமாறன், சிறப்பு சப்-இன்ஸ்பெ க்டர் பாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பேட்டரிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.

    • சுப்பையா அங்குள்ள சாலையில் தனது டிராக்டரை நிறுத்தி இருந்தார்.
    • திருட்டு குறித்து சப் -இன்ஸ்பெக்டர் பால் விசாரணை நடத்தி வந்தார்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து இந்திரா நகரை சேர்ந்தவர் சுப்பையா. விவசாயி.

    பேட்டரி திருட்டு

    இவர் அங்குள்ள சாலையில் தனது டிராக்டரை நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்த போது டிராக்டரில் உள்ள ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர்.

    அதேபோல் கயத்தார் வணிகவளாகத்தில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர் தனக்கு சொந்தமான ஜே.சி.பி., மற்றும் டிராக்டரை வழக்கம் போல் அந்த இடத்தில் நிறுத்தி இருந்தார். அதில் இருந்த பேட்டரிகளும் திருட்டு போனதாக கயத்தாறு போலீஸ் நிலையத்தில் செய்தனர்.

    2 வாலிபர்கள் கைது

    இது குறித்து சப் -இன்ஸ்பெக்டர் பால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அய்யனார்ஊத்து கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அக்ரி கணேஷ்குமார் (வயது 21), அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி (23) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் கயத்தார் வட்டார பகுதியில் 7 பேட்டரிகளையும், கழுகுமலை பகுதியில் 16, இடங்களில் பேட்டரி களையும் திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உமா சங்கரை கைது செய்தனர்.
    • அவரிடமிருந்து பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த சுல்தான் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (34). அரிசி மண்டி உரிமையாளர். இவர் சம்பவத்தன்று தனது கடையின் முன்பு தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.

    பின்னர் வாகனத்தை வந்து பார்த்தபோது அதில் பேட்டரியை மர்ம நபர் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து பிரபு புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    இதேப்போல் அதே பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (50).டெம்போவை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். சம்பத் தன்று இவரது டெம்போவில் மர்ம நபர் யாரோ பேட்டரியை திருடி விட்டார்.

    இது குறித்தி காந்தி புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் புளியம்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் புளியம்பட்டி டானாபுதூர் நால் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் என்கிற உமா சங்கர் (47) என தெரிய வந்தது. இவர் தற்போது சத்தியமங்கலம் அடுத்த மலையடி புதூர், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வருவதும் இரண்டு வாகனங்களின் பேட்டரியை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உமா சங்கரை கைது செய்தனர். அவரிடமிருந்து பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டது.

    பெரம்பலூரில் லாரி, டிராக்டர்களில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான 12 பேட்டரிகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மினி லாரி ஓட்டுனர் உரிமையாளர்கள் சங்கத்தின் மினி லாரிகள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலக்கரை ஸ்டாண்டில் நிறுத்தப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் டிரைவர்கள் தங்களது லாரிகளை பாலக்கரை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று காலையில் வந்து பார்த்த போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 7 லாரிகளில் பேட்டரிகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மர்ம நபர்கள் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் பேட்டரிகளை கழற்றி திருடி சென்றது தெரியவந்தது. இதில் ரஞ்சித்குமார் என்பவரின் லாரியில் பேட்டரியை திருடிய மர்ம நபர்கள் டீசல் டேங்கை திறந்து, அதில் இருந்த 200 லிட்டர் டீசலையும் திருடி சென்றுள்ளனர்.

    இதேபோல் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஆவின் பால்பண்ணையில் ஒப்பந்த முறையில் இயக்கப்படும் 2 லாரிகளில் பேட்டரி மற்றும் டீசலையும், ஒரு லாரியில் பேட்டரியையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் பாஸ்கர் என்பவர் நடத்தி வரும் டிராக்டர் பழுது பார்க்கும் பட்டறையில் நின்று கொண்டிருந்த 2 டிராக்டர்களின் பேட்டரி களையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இது சம்பந்தமாக டிராக்டர், லாரிகளின் உரிமையாளர்கள் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் புகார் மனு கொடுத்தனர். அதில், லாரிகளில் பேட்டரி, டீசலையும், டிராக்டர்களில் பேட்டரியையும் திருடிய மர்ம நபர்களை உடனடியாக கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஒரே நாளில் 10 லாரிகள், 2 டிராக்டர்களின் பேட்டரிகள் திருடப்பட்டுள்ளதால், அதில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், அவர்கள் திட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருடப்பட்ட 12 பேட்டரிகளின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என்று டிராக்டர், லாரிகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் நான்கு ரோடு அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது. 
    மதுரையில் செல்போன் டவரில் பேட்டரிகள் திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து அழகர் கோவில் செல்லும் வழியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த டவரில் செல்போன் சிக்னலுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சக்தி வாய்ந்த 15 பேட்டரிகள் திடீரென காணவில்லை. இதன் மதிப்பு ரூ.80 ஆயிரம் ஆகும்.

    இதுதொடர்பாக அங்கிருந்த பாதுகாவலர் ரவிச்சந்திரன் மேலவளவு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தஞ்சாவூர் பள்ளி அக்ரகாரத்தைச் சேர்ந்த தியாகராஜன் (வயது 52), ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த செல்வமூர்த்தி (17) ஆகியோர் இந்த பேட்டரிகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×