search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BBL"

    • ஜிங்க் பெய்ல்ஸ் எனப்படும் பந்து படும் போது மின்விளக்குகளால் எரியக்கூடிய ஸ்டெம்ப்கள் ஆஸ்திரேலியா வாரியத்தால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன.
    • பிக்பேஷ் தொடரில் எலக்ட்ரா எனப்படும் மேம்படுத்தப்பட்ட மின்விளக்குகளால் எரியக்கூடிய புதிய ஸ்டெம்ப்புகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    நவீன யுகத்தில் கிரிக்கெட்டில் நடுவர்கள் கொடுக்கும் தீர்ப்பை மறுபரிசலனை செய்யக்கூடிய டிஆர்எஸ் தற்போது மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. மேலும் ஸ்னிக்கோ மீட்டர் முதல் லேட்டஸ்ட்டாக ஐசிசி அறிமுகப்படுத்திய டைமர் வரை கிரிக்கெட்டில் முடிவுகளை துல்லியமாக வழங்குவதற்காக தற்போது ஏராளமான டெக்னாலஜிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வரிசையில் தற்போது எலக்ட்ரா ஸ்டெம்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்த வகையில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற பிக்பேஷ் தொடரில் ஜிங்க் பெய்ல்ஸ் எனப்படும் பந்து படும் போது மின்விளக்குகளால் எரியக்கூடிய ஸ்டெம்புகள் ஆஸ்திரேலியா வாரியத்தால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. ரசிகர்களை கவர்வதற்காகவும் பந்து ஸ்டெம்பு மீது படுவதை நன்றாக அறிவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    அது நல்ல வரவேற்பை பெற்றதால் ஐசிசியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 2014 முதல் தற்போது அனைத்து வகையான போட்டிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பேஷ் தொடரில் எலக்ட்ரா எனப்படும் மேம்படுத்தப்பட்ட மின்விளக்குகளால் எரியக்கூடிய புதிய ஸ்டெம்புகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 5 வெவ்வேறு நிகழ்வுகளின் போது 5 வெவ்வேறு வகையான மின் விளக்குகள் எரிந்து சிக்னல் கொடுக்கும்.

    முதலாவதாக இந்த ஸ்டம்பில் பந்து படும் போது சிவப்பு மற்றும் நெருப்பு நிறத்திலான வண்ணத்தில் எரிந்து சிக்னல் கொடுக்கும். 2-வதாக பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடிக்கும் போது இந்த ஸ்டெம்புகள் பச்சை, ஊதா போன்ற பல்வேறு நிறங்களில் வண்ண வண்ணமாக மாறி மாறி எரிந்து சிக்னல் கொடுக்கும். 3-வதாக பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் அடிக்கும் போது இந்த ஸ்டெம்ப்களில் அதே போன்ற வண்ணங்கள் மேலும் கீழுமாக சென்று சிக்னல் கொடுக்கும்.

    அதை விட 4-வதாக பவுலர்கள் வெள்ளைக் கோட்டுக்கு வெளியே காலை வைத்து நோபால் வீசும் போது இந்த ஸ்டெம்புகள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மேலும் கீழுமாக சென்று உடனடியாக சிக்னல் கொடுக்கும். பந்து வீச்சாளர்கள் நோபால் வீசுவதை கண்டறிய இந்த ஸ்டெம்ப்புகள் சென்சார்களை பயன்படுத்தி நோ-பால் வீசுவதை கண்டறிந்து உடனடியாக மின்விளக்குகளால் எரிவதுடன் மைதான ஒலிபெருக்கியில் சிக்னலையும் ஏற்படுத்தும்.

    அதனால் அம்பயர்களை விட துல்லியமாக செயல்படக்கூடிய இந்த ஸ்டெம்புகள் ஓவர்களுக்கு இடையே ஊதா, நீல வண்ணத்தில் எரிந்து சிக்னல் கொடுக்கும். அப்படி 5 சிறப்புகளைக் கொண்டுள்ள இந்த ஸ்டெம்புகள் மைதானத்தில் தூரத்தில் அமர்ந்து பார்க்கும் ரசிகர்களை கவர்வதற்காகவும் என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்வதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெற்றியடையும் பட்சத்தில் விரைவில் சர்வதேச கிரிக்கெட்டிலும் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிக்பாஷ் தொடரில் சிட்னி சிக்சர் அணிக்காக டாம் கரண் விளையாடி வருகிறார்.
    • பிக்பாஷ் தொடர் டிசம்பர் 7-ந் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியாவில் நடப்பு ஆண்டுக்கான பிக்பாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டிசம்பர் 7-ந் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிட்னி சிக்சர் அணியில் இடம் பிடித்த டாம் கரண் அடுத்த வரும் 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    லான்செஸ்டனில் டிசம்பர் 11 அன்று ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக சிட்னி சிக்ஸர்ஸ் மோதியது இந்த போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்ட டாம் கரண் நடுவருடன் மோதலில் ஈடுபட்டார்.

    போட்டிக்கு முன் பவுலிங் ரன் அப்பிற்காக டாம் கரண் அளவு மேற்கொண்டார். அப்போது ரன் அப் செய்ய முயன்றார். இதனை பார்த்த நடுவர் ஆடுகளத்தின் அந்தப் பகுதியைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்ட போதிலும், மற்றொரு பயிற்சி ரன்-அப்பிற்காக கரண் எதிர் முனைக்குச் சென்றார்.

    ஆடுகளத்தை நோக்கி ரன் அப் செய்த தயாராக இருந்த டாம் கரணை தடுப்பதற்காக ஸ்டம்புகளுக்கு அருகில் நடுவர் நின்றார். இதை பார்த்த கரண் நடுவரை விலகிச் செல்லும்படி சைகை செய்தார். அதற்கு நடுவர் இதில் பயிற்சி செய்ய கூடாது. அதற்கு பக்கத்தில் செய்யுமாறு கூறினார். இதனை ஏற்றுக்கொள்ளாத கரன், அவரை நோக்கி ரன் அப் செய்து அவர் மீது மோதுவது போல ஓடி வந்து தள்ளி சென்றார்.

    இதனால் ஆஸ்திரேலியா நடத்தை விதிகளின் கீழ் "நிலை 3" குற்றத்திற்காக அவர் குற்றம் சாட்டப்பட்டார். இந்த நிலையில் நேற்று 4 போட்டிகளில் விளையாட அவருக்கு தடை அறிவிப்பு வெளியானது.

    இவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஓராண்டு தடைபெற்றுள்ள வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் பிக் பாஷ் லீக்கில் விளையாட இயலாது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார். #Warner #Smith
    ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய வழக்கில் ஓராண்டு தடைபெற்றுள்ளனர். இதனால் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டது.

    தற்போது ஆஸ்திரேலியாவின் கீழ்மட்ட போட்டிகளிலும், வெளிநாட்டு லீக் தொடர்களிலும் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடைக்குப்பின் முதன் முறையாக இருவரும் கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 லீக் தொடரில் பங்கேற்றார்கள்.



    ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் பலர் இருவரையும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் பிக் பாஷ் டி20 லீக் தொடரின் தலைவர் கிம் மெக்கோனி ‘‘ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தடை ஆஸ்திரேலியா தேசிய அணிக்கும், கிளப் லெவல் ஆன தொடருக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் வரும டிசம்பர் மாதம் தொடங்கும் 2018-19 சீசனில் விளையாட வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் வீரர்கள் வருடத்திற்கு இரண்டு டி20 லீக் தொடரில் விளையாடும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய முடிவு எடுத்துள்ளது. #PAK #PCB
    டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட்டாக மாற்றமைடைந்து, தற்போது டி20 கிரிக்கெட்டாக விளையாடப்பட்டு வருகிறது. டி20 கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு ஏற்பட்டதால், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரை தொடங்கியது. இதற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அத்துடன் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் சம்பளமாக வழங்கப்பட்டது.

    இதனால் சர்வதேச அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டினார். ஐபிஎல்-ஐ தொடர்ந்து முன்னணி கிரிக்கெட் வாரியங்கள் டி20 லீக் தொடர்களை நடத்தின.

    ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவதில்லை. அதேபோல் இந்திய வீரர்கள் மற்ற தொடர்களில் பங்கேற்பதில்லை. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா வீரர்கள் பல்வேறு டி20 லீக்கில் ஆடுகிறார்கள்.

    பாகிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், வங்காள தேச பிரீமியர் லீக் போன்றவற்றில் விளையாடுகிறார்கள். மற்ற கிரிக்கெட் வாரியம் நடத்தும் டி20 லீக்கில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் (NOC) வாங்க வேண்டும். தற்போது தடையில்லா சான்றிதழ் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.



    புதிய மாற்றத்தின்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள் வருடத்திற்கு இரண்டு டி20 லீக்கில்தான் விளையாட முடியும். அதற்கு மேல் விளையாட முடியாது.

    பாகிஸ்தான் வீரர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவார்கள். இதை தவிர்த்து மேலும் என்றில்தான விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்கள் தொழில்முறையாக சம்பளம் குறைவு. இந்நிலையில் இந்த கட்டுப்பட்டால் மேலும் அவர்களது வருமானம் தடைபெற வாய்ப்புள்ளது.

    வேலைப்பளு அதிகம், காயம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
    ×