என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Betel leaf"
- ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
- தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.
பொள்ளாச்சி:
தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வா கம், தேர்தல் பிரிவினர் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டு வருகிறது.
பஸ் நிலையங்கள், மக்கள் அதிகமாக கூடக் கூடிய இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு செல்பி ஸ்பாட் வைத்து விழிப்புணர்வு, வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வீடியோவும் ஒளிபரப்பப்படுகிறது.
மேலும் ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியில் திருமணத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து அழைப்பது போன்று தேர்தல் தினத்தன்று வாக்களிக்க வருமாறு, அதிகாரிகள் அழைத்து வருகின்றனர்.
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தல்களில் சில இடங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குப்பதிவு இருந்துள்ளது.
அந்த இடங்களை கண்டறிந்து, அங்கு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, தேர்தல் அதிகாரிகள், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை வைத்து, தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.
பொள்ளாச்சி சப்-கலெக்டரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கேத்ரின் சரண்யா தலைமையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கி தேர்தலில் வாக்களிக்க அழைத்தனர். மேலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எரிவாயு சிலிண்டர், பஸ் நிலையம், ரெயில் நிலையம், உணவு விடுதி ஆகியவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஓட்டி வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வெள்ளக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலையை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
- இப்பகுதியில் குளிர்பதன கிடங்கு எதுவும் இல்லை
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளான, நொய்யல், மரவாபாளையம், புங்கோடை ,சேமங்கி, கோம்புப்பாளையம், நத்தமேட்டுப் பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், பாலத்துறை, நன்செய் புகளூர், கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலையை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது புகளூர் பகுதியில் ஆள் பற்றாக்குறை, வெற்றிலையில் நோய் தாக்குதல், போதிய தண்ணீர் இன்மை என்ற பல்தொவேறு காரணங்களால் வெற்றிலை விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதனால் அப்பகுதியில் வெற்றிலை விவசாயம் குறைந்து வருகிறது.
இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் வெற்றிலையின் விலை சரிவைச் சந்தித்துள்ளது.வெள்ளக்கொடி வெற்றிலை 104 கவுளிகள் கொண்ட ஒரு கட்டு வெற்றிலை ரூ. 7,000-க்கு விற்பனையானது. அதேபோல் கற்பூரி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு கட்டு ரூ.3000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
வெற்றிலை விவசாயத்தில் ஈரப் புள்ளி என்கின்ற நோய் தாக்கல் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. பத்து நாளுக்கு ஒரு முறை ஏக்கர் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாய் செலவு செய்து மருந்து அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விற்பனை குறைந்துள்ளதால் சில இடங்களில் வெற்றிலை கொடிக்காலிலேயே அறுவடை செய்யாமல் விடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அறுவடை செய்யப்பட்ட வெற்றிலையை பாதுகாக்க இப்பகுதியில் குளிர்பதன கிடங்கு எதுவும் இல்லை. பலமுறை வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை வைத்தும் இதுவரை குளிர்பதன கிடங்கு கட்டுவதற்கான நடவடிக்கை இல்லை என்று இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிப்பதோடு, கிடங்கு கட்டித்தர அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க வெற்றிலை பாக்கு வைத்து செல்லூர் ராஜூ அழைப்பிதழ் கொடுத்தார்.
- தொண்டர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி மாநாட்டில் உற்சாகமாக பங்கேற்க அழைப்பி தழ்களை வழங்கி வருகிறார்.
மதுரை
மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு வருகிற 20-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான தொண்டர்களை மாநாட்டில் பங்கேற்க செய்யும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்றி வருகி றார்கள்.
மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் அ.தி.மு.க. தொண்டர்களை மாநாட்டில் திரளாக பங்கேற்க செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை சர்வ சமய பிரார்த்தனைகள் செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.
இன்று காமராஜர் சாலை பகுதியில் உள்ள கோவிலில் அழைப்பிதழ்களை வைத்து சாமி கும்பிட்ட செல்லூர் ராஜூ, அந்த பகுதியில் வீதி வீதியாக சென்று பொது மக்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ்களை வழங்கி னார். அப்போது வியாபா ரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு வெற்றி லை பாக்குடன் அழைப்பி தழை வைத்து கொடுத்து மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அ.தி.மு.க. நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம். எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, குமார், சோலை ராஜா, கலைச் செல்வம், சண்முகவள்ளி மற்றும் முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் மாநாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார். பொது மக்களுக்கு மரக்கன்று களை வழங்கி மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்து வரும் ஆர்.பி. உதயகுமார் மதுரை புறநகர் மாவட்டத்தில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை மாநாட்டிற்கு அழைத்துவர திட்டமிட்டு தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நல உதவிகளை வழங்கி மாநாட்டில் பங்கேற்க செய்யும் வகையில் அவர் அழைப்பு விடுத்து வருகிறார். மேலும் இருசக்கர வாகனங்கள், கார்களில் அ.தி.மு.க. மாநாட்டின் லோகோவை ஒட்டியும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கிழக்கு மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி மாநாட்டில் உற்சாகமாக பங்கேற்க அழைப்பி தழ்களை வழங்கி வருகிறார்.
மதுரை மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான தொண்டர்களை பங்கேற்க செய்யும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தீவிரப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மாநாட்டிற்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் தலைமைகழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தமிழக முழுவதும் கட்சி தொண்டர்களை சந்தித்து மாநாட்டில் பங்கேற்க அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார்கள்.
- கற்பூர வெற்றிலை என்பது கற்பூர மணத்துடன் சற்று காரம் அதிகமாக இருக்கும்.
- வயிற்றுப்பொருமல், அஜிரணக்கோளாறுகளை நீக்கக்கூடியது.
உடுமலை :
உடுமலை, மடத்துக்குளம் மற்றும் கரைவழிப்பகுதிகளில் குறிப்பாக கணியூர்ப் பகுதிகளில் வெற்றிலைக்கொடி விவசாயம் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வந்துள்ளது. கணியூரில் கடந்த நூற்றாண்டுகளுக்கும் முன்பு வரையிலும் பயிர் செய்யப்பட்டு வந்த வெற்றிலைகொடியில் குறிப்பாக சர்க்கரை வெற்றிலை, கற்பூர வெற்றிலை , கம்மாறு வெற்றிலை. இதில் கற்பூர வெற்றிலை என்பது கற்பூர மணத்துடன் சற்று காரம் அதிகமாக இருக்கும். கம்மாறு வெற்றிலை என்பது காரத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மென்று தின்னக்கூடியது. வயிற்றுப்பொருமல், அஜிரணக்கோளாறுகளை நீக்கக்கூடியது. சாப்பிட்டவுடன் நம் முன்னோர்கள் வெற்றிலை போடச்சொன்னதும் இதுவே காரணம். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் , சுவாசப்பிரச்சினைகள், இருமல், சளி போன்றவற்றிற்கும் வெற்றிலை ஒரு மருந்தாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர்.
கிராமப்பகுதிகளில் முதலில் திருமண அழைப்பு மற்றும் நல்ல காரியங்கள் அனைத்திற்கும் வெற்றிலை பாக்கு வைத்தே விருந்துக்கு அழைப்பர். கட்டாயம் விருந்து முடிந்தவுடன் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து விடுவர். அனைவரும் எடுத்துக்கொள்ளும் வகையில் நிரம்ப நிரம்ப வெற்றிலை பாக்கு சுண்ணாம்புடன் ஒரு தட்டில் வைத்து வழங்குவர்.
கற்பூர வெற்றிலை, சர்க்கரை வெற்றிலை தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளம் பெருக நல்ல மருந்தாகவும் நம் முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர். வெற்றிலை போட்டு நன்றாக நாக்கு சிவந்தால் அஜிரணம் நீங்குவதும், இதனால் அன்பு, பாசம் அதிகமாகும் என்று வட்டார வழக்கில் கூறுவதும் உண்டு. இன்று கரைவழியில் முப்போகம் நெல்விளைச்சலும் இல்லை. வெற்றிலை கொடி விவசாயமும் இல்லை. கணியூர் வெற்றிலை என்பது கோவை, மதுரை போன்ற பெரிய பெரிய ஊர்களிலிருந்து வந்து கணியூரில் தங்கி வாங்கிச்சென்ற காலங்களும் உண்டு.
மேலும் கணியூர்ப் பகுதியில் விளைந்த சர்க்கரை வெற்றிலை, கற்பூர வெற்றிலை வெளிமாநிலங்களுக்கும் மேலை நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆனதாகவும் இங்கிருக்கும் வயதான பெரியோர்கள் கூறுகின்றனர்.சுமார் 40, 50 வருடங்களுக்கு முன்பு வரை கணியூர் முதன்மைச்சாலையில் தற்போதிருக்கும் ஐ.ஓ.பி., வங்கி வளாகத்தில் உள்ள (பசுமடத்தில்) வெற்றிலை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் நின்று வாங்கிச்சென்றுள்ளனர்.ஒரு சில நாட்களில் பெரிய அளவிற்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தக் கூட்டத்தைப் பார்ப்பதற்காகவே வேடிக்கை பார்த்ததாகவும் தற்போது வயது முதிர்ந்த பெருமக்கள் தெரிவிக்கின்றனர்.
கரைவழி நாட்டில் நெல் மட்டுமல்லாது வெற்றிலை கொடி விவசாயம் சிறப்பாக இருந்ததையும் தற்போது அதுமிகவும் அருகி வருவதையும் நாம் நம் கண் முன்னே பார்த்து வருகின்றோம்.கரைவழிநாட்டு விவசாயம் குறித்தும் கரை வழிநாடு குறித்தும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்