என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bharathiyar"
- யாது மாகி நின்றாய் - காளீ! எங்கும் நீநி றைந்தாய்
- சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும் சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும்
பாரதியார் சென்னை, பிராட்வேயில் பணிபுரிந்தபோது அருகிலுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோவிலுக்கு வருகை தருவது வழக்கமாக இருந்தது
அப்போது காளிகாம்பாள் முன் மெய்மறந்து நின்று பல பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள், `யாதுமாகி நின்றாய் காளீ' என்னும் இப்பாடல் குறிப்பிடத்தக்கது.
காளி ஸ்தோத்திரம்
யாது மாகி நின்றாய் - காளீ!
எங்கும் நீநி றைந்தாய்
தீது நன்மை யெல்லாம் - நின்றவன்
செயல்க ளன்றி யில்லை
போதும் இங்கு மாந்தர் - வாழும்
பொய்மை வாழ்க்கை யெல்லாம்
ஆதி சக்தி, தாயே! - என்மீ
தருள் புரிந்து காப்பாய்!
எந்த நாளும் நின்மேல் - தாயே!
இசைகள் பாடி வாழ்வேன்;
கந்தனைப் பயந்தாய் - தாயே
கருணை வெள்ள மானாய்!
மந்தமாரு தத்தில் - வானில்
மலையி னுச்சி மீதில்
சிந்தை யெங்கு செல்லும் - அங்குன்
செம்மை தோன்று மன்றோ!
கர்ம யோக மொன்றே - உலகில்
காக்கு மென்னும் வேதம்
தர்மநீதி சிறிதும் - அங்கே
தவற லென்ப தின்றி
மர்ம மான பொருளாம் - நின்றன்
மலரடிக் கண் நெஞ்சம்
செம்மையுற்று நாளும் - சேர்ந்தே
தேசு கூட வேண்டும்.
என்ற னுள்ள வெளியில் - ஞானத்
திரவி யேற வேண்டும்;
குன்ற மொத்த தோளும் - மேருக்
கோல மொத்த வடிவும்
நன்றை நாடு முனமு - நீயெந்
நாளு மீதல் வேண்டும்;
ஒன்றைவிட்டு மற்றோர் - துயரில்
உழலும் நெஞ்சம் வேண்டா
வான கத்தி னொளியைக் - கண்டே
மன மகிழ்ச்சி பொங்கி
யானெ தற்கும் அஞ்சேன் - ஆகி
எந்த நாளும் வாழ்வேன்;
ஞான மொத்த தம்மா! - உவமை
நானு ரைக்கொ னாதாம்!
வான கத்தி னொளியின் - அழகை
வாழ்த்து மாறி யாதோ?
ஞாயி றென்ற கோளம் - தருமோர்
நல்ல பெரொ ளிக்கே
தேய மீதோர் உவமை - எவரே
தேடியோத வல்லார்?
வாயி னிக்கும் அம்மா - அழகாம்
மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத்தால் - ஆங்கே
நெஞ்சி ளக்க மெய்தும்
காளி மீது நெஞ்சம் - என்றும்
கலந்து நிற்க வேண்டும்;
வேளை யத்த விறலும் - பாரில்
வேந்த ரேத்து புகழும்
யாளி யத்த வலியும் - என்றும்
இன்பம் நிற்கும் மனமும்
வாழி யீதல் வேண்டும் - அன்னாய்!
வாழ்க நின்றன் அருளே.
சக்தி சக்தி என்றால் துன்பம் தானே தீரும்
சக்தி சக்தி என்றால் இன்பம் தானே சேரும்
சக்தி சக்தி என்றால் செல்வம் தானே ஊறும்
சக்தி சக்தி என்றால் கல்வி தானே தேறும்
என்ற பாரதியார் வாக்கிற்கிணங்க சக்தி சக்தி என்று சொல்லி சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.
ஸ்ரீ காளிகாம்பாள் துதி -பொன்மணி வைரமுத்து
ஓம்காளி ஓம் காளி ஓம் காளி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
(ஓம் காளி ஓம்காளி)
உலகையாளும் ஓங்காரி ஓம் காளி ஓம்
உனதுபாதம் வேண்டும் வேண்டும் ஓம் சக்தி ஓம்
திசைகளெங்கும் நடனமாடும் ஓம் காளி ஓம்
தீயசக்தி மாயவேண்டும் ஓம் சக்தி ஓம்
(ஓம் காளி ஓம் காளி)
கரியமேனி கொண்டதாயே ஓம் காளி ஓம்
கண்திறந்து பார்க்கவேண்டும் ஓம் சக்தி ஓம்
அரியகாட்சி உந்தன்காட்சி ஓம் காளி ஓம்
அண்டமெங்கும் உந்தன் ஆட்சி ஓம் சக்தி ஓம்
(ஓம் காளி ஓம் காளி)
ஜதிகளிட்டு ஆடுகின்ற ஓம் காளி ஓம்
ஜயமளித்து பயமொழிக்கும் ஓம் சக்தி ஓம்
தகதகத்து ஆடுகின்ற ஓம் காளி ஓம்
பகைமுடித்து வரமளிக்கும் ஓம் சக்தி ஓம்
(ஓம் காளி ஓம் காளி)
பத்ரகாளி ருத்ரகாளி ஓம் காளி ஓம்
பக்தருக்கு சாந்தகாளி ஓம் சக்தி ஓம்
சத்யகாளி நித்யகாளி ஓம் காளி ஓம்
சக்தியூட்டி முக்திகாட்டு ஓம் சக்திஓம்
(ஓம் காளி ஓம் காளி)
வேண்டுதலை சொல்லுங்கள் -கவிக்குயில் விசாலி மனோகர்
விளக்கேற்றி வைக்கையிலே வீடுதேடி வந்தவளே
வீடுவந்து சௌந்தர்யம் கோடி கோடி தந்தவளே
உனக்கென்ற ஈடுஇணை உலகினிலே இல்லையடி
ஒருகோடி பிறப்பெனிலும் உனக்கே நான் பிள்ளையடி
யார்தடுத்த போதிலும்உன் சக்தியது குறைவதில்லை
போர்மூளும் போதிலும் நின் பக்கபலம் மறைவதில்லை
ஆதிசக்தி அன்னையிடம் அருள்கூர்ந்து வேண்டியபின்
பாதிமனம் தேவையில்லை பார்த்தருளுவாள் காளிகாம்பாள்
என்னவரம் வேண்டுமென்று இப்பொழுதே கேட்டுவிட்டாள்
முழுமனதாய் வழங்குதற்கு முன்வருவாள் காளிகாம்பாள்
சென்னபுரி வாழுகின்ற காளியிடம் வேண்டுதலை
ஓரிருநாள் சொல்லுங்கள், ஒருகோடி வெல்லுங்கள்.
- விழாவானது 29-ந் தேதி முதல் ஆகஸ்டு 31-ந் தேதி வரை நடக்கிறது.
- வேலூர் சிப்பாய் கழகம் பற்றிய குறும்படம் இடம் பெற்றது.
வடவள்ளி
பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கடந்த 29-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. விழா ஆகஸ்டு 31-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் ஒரு பகுதியாக சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை கவுரவிக்கும் பொருட்டு, பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி தன்னார்வலர்களுக்கு, வேலூர் சிப்பாய் கழகம் பற்றிய குறும்படம் மற்றும் பி. எஸ். குமாரசாமி ராசா பற்றிய சுவரொட்டி விளக்க காட்சியும் இடம் பெற்றது. அவர்களது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவினை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் காளிராஜ், வேலூர் சிப்பாய் கழகத்தில் பங்காற்றிய வீரர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பதிவாளர் முருகவேல், ரூபா குணசீலன், ஆட்சி குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மணிமேகலை, வசந்த், ஆசிரியர் சங்க தலைவர் மஞ்சு புஷ்பா ஆகியோர் பங்கேற்றனர்.
சுவரொட்டி விளக்க காட்சியில் பாரதியார் பல்கலைக்கழக தன்னார்வலர்கள் நாகராஜ், பவதாரணி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். எம்.ஜி.ஆர் கல்லூரி அருண் பிரகாஷ், யாழினி ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றனர். பி.எஸ். ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி தன்னார்வலர்கள் சுருதி, ஜானகி ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அண்ணாதுரை செய்திருந்தார்.
- நூலக கட்டிடத்தில் பாரதியார்- செல்லம்மாள் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.
- சேவாலயா நிறுவனர் முரளிதரன் தலைமை தாங்கினார்.
கடையம்:
கடையத்தில் வருகிற 27-ந் தேதி ( திங்கட்கிழமை ) பாரதியார்-செல்லம்மாள் திருமண நாளையொட்டி கடையம் நடுத்தெருவில் அமைந்துள்ள நூலக கட்டிடத்தில் பாரதியார்- செல்லம்மாள் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.
நூலகம் சேவாலயாவின் செல்லம்மாள் பாரதி கற்றல் மையம் ஆகியவற்றின் திறப்புவிழாவும் நடைபெற உள்ளது . அதற்கான முன்னேற் பாடு நிகழ்ச்சியாக நூலகத்தில் உள்ள மேடையில் இன்று செல்லம்மாள்- பாரதியாரின் சிலை அமர்த்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு சேவாலயா நிறுவனர் முரளிதரன் தலைமை தாங்கினார்.
தெற்கு கடையம் பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி ராமதுரை, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கல்யாணி சிவகாமி நாதன், ஓய்வு பெற்ற ஆசிரியர் நீலகண்டன் தெற்கு கடையம் கவுன்சிலர் மாரி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கோபால், நூலகர் மீனாட்சிசுந்தரம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முகம், முன்னாள் கவுன்சிலர் புவனேஸ்வரி, கடையம் பாலன், அமர் சேவா சங்க ஆசிரியர் சண்முகம் வேல்முருகன் மற்றும் சேவாலயா கிங்ஸ்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.சேவாலயா ஒருங்கிணைப்பாளர் சங்கிலிபூதத்தார் நன்றி கூறினார்.
கவிதையிலே இருந்த நாட்டம், பள்ளிப் படிப்பிலே இல்லை. எப்போதும் எதுகையும் மோனையுமாகவே அவர் வலம் வந்து கொண்டிருந்தார். பழமை வயலிலே புரட்சி நீர்பாய்ச்சி புதுமைகளை அறுவடை செய்தவர். வாழுகிற காலமும், வளர்கின்ற சூழ்நிலையுமே ஒரு மனிதனை கவிஞனாக உருமாற்றம் செய்கிறது என்பதற்கு உதாரண புருஷன் பாரதிதான்.
‘பாரதி, நீ நினைத்தவுடனே பாட்டெழுதும் வரகவியாமே! காளமேகமாமே! எங்கே ஒரு கவிதை சொல்லு’ என்று ஆசிரியர் கேட்க, “மேகம், விரும்பி தானாகப் பொழியுமே தவிர அது மற்றவர்களின் உத்தரவுக்கெல்லாம் பொழியாது” என்று பாரதி பதிலுரைத்தார். ஆசிரியரோ வாயடைத்துப்போனார்.
பாரதி மேல் இருந்த பொறாமையால் காந்திமதி நாதன் என்பவர், ‘பாரதி சின்னப்பயல் என்ற ஈற்றடியை’ கொடுத்து பாடச்சொன்னார். பாரதி அதன் உள்நோக்கத்தை புரிந்துகொண்டார். உடனே, ‘காரிருள் உள்ளத்தான் காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப்பயல்’ என்று பாடி எல்லோரையும் வியக்கவைத்தார்.
ஆனாலும், அந்தப் பாராட்டில் பாரதி மகிழ்வுறவில்லை. மாறாக காந்திமதி நாதனைப் புண்படச் செய்துவிட்டோமோ என்று வருத்தம் கொண்டார். பிறகு, ‘காந்திமதி நாதற்கு பாரதி சின்னப்பயல்’ என்று மாற்றிப்பாடி, இப்போதும் எல்லோரின் பாராட்டைப் பெற்றார் பாரதி. இத்தகைய மாண்புக்கும் மாட்சிக்கும் உடையவராய் பாரதி திகழ்ந்தார்.
பாரதியின் தமிழ்ப்புலமைக்குப் பக்கத்தில் நிற்பதற்கே யாருக்கும் தைரியமில்லை என்ற நிலை உருவானது. எட்டயபுரத்து அரசவைப் புலவர்களுக்கு மத்தியில் பெற்ற ‘பாரதி’ எனும் பட்டம் அவருக்கு கம்பீரத்தையும் கவுரவத்தையும் கொடுத்தது.
ஒரு கவிதையை நாம் படிக்கும்போது இத்தகைய கவிதையை இதுவரை எவரும் எழுதவில்லை என்ற எண்ணம் வரவேண்டும். அதுதான் கவிஞனின் வெற்றி. கடலைக் கலக்கி, மலையைத் தகர்த்து சீறிப்பாய்ந்துவரும் சண்டமாருதப்புயலாக பாரதியின் ஒவ்வொரு கவிதையும் புறப்பட்டன. சொற் புதிது, சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது என புதிது புதிதாய் அவை வலம் வந்தன.
அக்கினிக் குஞ்சு என்பது அளவிலே சிறியது. அது ஒரே ஒரு தீப்பொறிதான். அதன் மகத்தான சக்தி ஆங்கிலேயர்களின் ஆதிக்க காட்டை எரித்து சாம்பலாக்கும் வல்லமை உடையது என்பதை குறியீடாக வைத்துத்தான்,
‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’ என்ற கவிதையைக் கொளுத்திப் போட்டார் பாரதி. எனது கவிதை ஒரு தீப்பொறிதான். அது பற்றிக் கொண்டால் உனது ராஜ்யம், பூஜ்யம் ஆகிவிடும் என்று ஆங்கிலேயர்களுக்கு விடுத்த எச்சரிக்கை உள்ளே தீபந்தமாக இருந்தது என்பதே உண்மை.
ஏனோ தானோ என்று எந்த ஒரு சொல்லையும் பாரதி பயன்படுத்தியதே இல்லை. கேட்டாலே கிறுகிறுத்துப் போகும் அளவுக்கு பாட்டாலே சொல்லி அடித்தவர் அவர். ‘தேடு, கல்வியிலாத ஊரை தீக்கிரையாக்கு’, ‘மாதர்தமை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’, ‘இது பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வா. கதிரை வைத்திழந்தான், அண்ணன் கையை எரித்திடுவோம்’, ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என பாரதியின் ஒவ்வொரு கவிதையிலும் அனல் பறந்தது.
வீட்டிலே கடுமையான அரிசிப் பஞ்சம். அன்றைய உணவுக்காக தனது மனைவி செல்லம்மா வாங்கி வைத்திருந்த அரிசியை அள்ளி வீசி காக்கை, குருவிகள் அவற்றைக் கொத்தித்தின்னும் அழகைப் பார்த்து குதூகலித்தவர் பாரதி. ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்று பாடியவராயிற்றே அப்படித்தானே இருப்பார். வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளியில்லாத மனித ஜாதி பாரதி.
நாட்டுக்கும், இனக்கேட்டுக்கும், பெண்ணடிமை வீட்டுக்கும், விடுதலை வேண்டி பாரதியின் கவிதை வாள் சுழன்றது. அன்றாடச் சோற்றுக்காக பிறரை அண்டிப் பிழைக்கிறவனாக, பின்னர் மாண்டுபோகிற சாதாரண மனிதனாக என்னை நினைத்துவிட்டாயோ என்று பராசக்திக்கே கேள்விகளை தொடுத்தவர் பாரதி.
‘தெய்வம் பலப்பல சொல்லி-பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று
இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்’ என்ற பாரதியின் வரிகள் இன்றைய அரசியல்வாதிகள் நினைவுகொள்ள வேண்டிய வைர வரிகள். பயம் என்ற வார்த்தை பாரதியின் அகராதியிலே இல்லை. திருவனந்தபுரம் மிருக காட்சி சாலையில் சிங்கத்தின் அருகிலே சென்று ‘விலங்கரசனே கவியரசன் வந்திருக்கேன்’ என்று உறவாடிய போதும் சரி, மதம் பிடித்த யானை என்று தெரிந்தும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையிடம் அச்சமின்றி சென்ற போதும் சரி, பாரதியிடம் எள்ளளவும் பயம் இருந்ததில்லை.
தமிழ்மொழி மீது பாரதிக்கு இருந்த பற்றும், பாசமும், காதலும், வெறும் சொல்லில் அடங்காது. பன்மொழி அறிஞராய்த் திகழ்ந்த பாரதியின் ஞானச்செறுக்கிற்கு தலை வணங்குவோம். இன்னும் பல்லாண்டு அவன் வாழ்திருந்தால் மண்ணைத் தொட்ட பாரதியின் படைப்புகள் உயரத்தால் விண்ணைத் தொட்டிருக்கும். தமிழ் அன்னையின் மணிமகுடத்துக்கு இன்னும் ஆயிரம் பல்லாயிரம் வைரங்கள் கிடைத்திருக்கும்.
முன்னூறு வருடங்களில் எழுதி முடிக்க வேண்டிய கவிதைகளை முப்பத்தி ஒன்பது வயதுக்குள்ளே எழுதி முடித்த இமாலயக் கவிஞன் பாரதி, 11-9-1921 அன்று மரணத்தை தழுவினார்.
பாரதி உயிரோடிருந்தபோது நாம் கொண்டாடவில்லை. அவர் பசி போக்க எவரும் முன்வரவில்லை. துன்பத்திலும் துயரத்திலும் பங்கு கொள்ளவில்லை. தன்னாலே கையூன்றி எவரின் தயவின்றி, முன்னாலே வந்த அந்த மகாகவியின் மரணத்தின்போது, பின்னாலே நடந்து போனவர்கள் எண்ணிக்கையை எண்ணினால் கண்களில் கண்ணீர் கசிகிறது.
‘பாரதி’, சின்னச்சாமி பெற்றெடுத்த ‘பெரியசாமி’. அந்த எட்டயபுரத்து எரிமலையை என்றும் நம் நினைவில் வைத்து போற்றுவோம். ஓங்குக பாரதியின் புகழ்!
இன்று (செப்டம்பர் 11-ந்தேதி) பாரதியின் நினைவு தினம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்