என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bicycle rally"
- இயற்கை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் ஏரிச்சாலையில் நடைபெற்றது.
- இயற்கை பாதுகாப்புக்கான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சைக்கிளில் ஏந்தியவாறு ஏரிச்சாலையில் உற்சாகமாக வலம் வந்தனர்.
கொடைக்கானல்:
உலக இயற்கை பாதுகாப்பு நாளையொட்டி இயற்கை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் ஏரிச்சாலையில் நடைபெற்றது.
பேரணியை பல்கலைக்கழக திவாளர் ஷீலா, தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் கிளாரா தேன்மொழி, ரோட்டரி சங்க தலைவர் மதன்குமார், செயலாளர் அக்பர் ஷேட், முதன்மை விருந்தினர் டி.எஸ்.பி. மதுமதி ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இயற்கை பாதுகாப்புக்கான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சைக்கிளில் ஏந்தியவாறு ஏரிச்சாலையில் உற்சாகமாக வலம் வந்தனர்.
- 200 கிலோமீட்டர் தூரம் சென்றனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டில், குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. செங்கல்பட்டு பாலாறு லயன் சங்கம் சார்பில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை வரை 200 கிலோமீட்டர் தூரம் சென்னையில் இருந்து வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், வழியாக திருவண்ணாமலை, வரை குழந்தைகள் புற்றுநோய் குறித்து சைக்கிள் பேரணி வந்தது.
சேத்துப்பட்டு 4 முனை சந்திப்பில் சேத்துப்பட்டு எவர்கிரீன் லயன் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் சேத்துப்பட்டு அரிமா சங்கத் தலைவர் ஜவகர், செயலாளர் நாசர்தீன், பொருளாளர் விஜயராகவன், உறுப்பினர்கள் வினோத், கிரிராஜன், கார்த்திகேயன், தங்கராஜ், வெங்கடேசன், பாபு, ஆரணி எவர்கிரீன் டயட் சங்க செங்கல்பட்டு பாலாறு அரிமா சங்க தலைவர் பாண்டியன், செயலாளர் வீரராகவன், பொருளாளர் தாமரைச்செல்வன், பொறுப்பாளர்கள், அம்சவல்லி, கௌதம், பெருமாள், உள்பட கலந்து கொண்டனர்.
முன்னதாக குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். பின்னர் சைக்கிள் பேரணி தேவிகாபுரம் வழியாக போளூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்றது.
- 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்றும், நாளையும் நடக்கிறது
- கார்த்திகேயன் எம்.எல்.ஏ.பேரணியை தொடங்கி வைத்தார்
வேலூர்:
உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தின் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் டிசம்பர் மாதம் இன்றும், நாளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வேலூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வேலூர் கோட்டையிலிருந்து நேற்று தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வேலூர் ஈஷா மைய ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
தன்னார்வலர்கள் மணிவண்ணன், சிவசங்கரன், உமா சந்திரன், சதீஷ், குணசீலன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர் . சைக்கிள் பேரணி வேலூர் கோட்டையில் இருந்து கிரீன் சர்க்கிள் சென்று அங்கிருந்து அண்ணா சாலை வழியாக அண்ணா நகரில் உள்ள ஈஷா மையத்தை அடைந்தது.
மண் வள பாதுகாப்பு குறித்து சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மண் காப்போம் என்ற சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கத்தை தொடங்கி உள்ளார்.
மார்ச் மாதம் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது மோட்டார்சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், உள்ளிட்ட பல ஐரோப்ப நாடுகளுக்கு பயணித்துள்ளார்.
- உடல் ஆரோக்கியம் குறித்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- தேவதாஸ் மருத்துவமனை இயக்குனர் சதீஷ் தேவதாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி சார்பில் சைக்கிள் பயணத்தால் ஏற்படும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடந்தது. திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளத்தில் இருந்து கண்டு குளம் வரை 6 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிள் பயணம் நடந்தது. இதில் மாணவ-மாணவிகளும், மற்ற பள்ளி மாணவர்கள், பெற்றோர்களும் பங்கேற்றனர். தேவதாஸ் மருத்துவமனை இயக்குனர் சதீஷ் தேவதாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தாளாளர் மதிவாணன், ஷாலினி முன்னிலை வகித்தனர். முதல்வர் கீதா ராணி, அகாடமி இயக்குனர் சத்யா, உடற் கல்வி ஆசிரியர் முத்தையா ஆகியோர் பள்ளி மாணவர்களுடன் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் கண்டு குளத்தில் உள்ள பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்களுக்கு நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.
- 200க்கும் மேற்பட்ட சைக்கிள் ரைடர்கள் கலந்து கொண்டு 30 கிலோமீட்டர் வரை சைக்கிளில் பேரணியாகச் சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
திருப்பூர்:
சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28ந்தேதி முதல் ஆகஸ்ட் 10ந்தேதி வரை 44வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது . செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் நிர்வாகம் ,திருப்பூர் ரைடர்ஸ் கிளப் மற்றும் இந்தியன் யங் அமைப்பு சார்பில் திருப்பூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த சைக்கிள் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட சைக்கிள் ரைடர்கள் கலந்து கொண்டு 30 கிலோமீட்டர் வரை சைக்கிளில் பேரணியாகச் சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- மருதுபாண்டியர் கல்லூரி, பாரத் கல்லூரி, மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சார்ந்த சுமார் 100 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அதிகாரி அந்தோணிஅதிர்ஷ்டராஜ் மற்றும் தஞ்சாவூர் நகர போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்.
தஞ்சாவூர்:
உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து ஐ.டி.ஐ மைதானம் வரை மிதிவண்டி பேரணி நடைபெற்றது.
இதனை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்செல்வம் கொடியசைத்து துவங்கி வைத்தார். விழாவில் பாரதிதாசன் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபிரபா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அதிகாரி அந்தோணிஅதிர்ஷ்டராஜ் மற்றும் தஞ்சாவூர் நகர போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்.
பேரணியில் தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி, பாரத் கல்லூரி, மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சார்ந்த சுமார் 100 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடு–களை தஞ்சாவூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு அலுவலரும் மருதுபாண்டியர் கல்லூரி பேராசிரியருமான சந்தோஷ்குமார், பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள்கணேஷ், முருகானந்தம், ராமச்சந்திரன்ஆகியோர் செய்திருந்தனர்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில், 3-வது கட்டமாக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி மாவட்டத்தில் கடந்த 24-ந் தேதி ஆரணியில் தொடங்கியது.இந்த பேரணியில் அ.தி.மு.க.தொண்டர்கள் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று அரசின் சாதனையை விளக்கினர்.
அதன் தொடர்ச்சியாக செய்யாறு தொகுதியில் நேற்று காலை 10 மணி அளவில் வீரம்பாக்கம் கிராமத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தூசி மோகன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், வி.ஏழுமலை எம்.பி., ஒன்றியக்குழு தலைவர் கோமதிரகு, ஜெ.பேரவை செயலாளர் திருமூலன், வெம்பாக்கம் ஒன்றிய துணை செயலாளர் ராஜூ,
செய்யார் முன்னாள் தொகுதி செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி மஞ்சுளா ராஜ்மோகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோழவரம் இளங்கோவன் ஆகியோர் தொண்டர்களுடன் தேத்துறை, ஆக்கூர், கூழமந்தல், மாங்கால், அழிஞ்சல்பட்டு, பெரும்புலிமேடு, பல்லி, பெருங்களத்தூர், புளியரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று, செய்யாறு நகரில் லோகநாதன் தெரு, பஸ் நிலையம், ஆரணி கூட்ரோடு வழியாக வடதண்டலம், அருகாவூர், தண்டரை, பெரும்பள்ளம், சேராம்பட்டு வழியாக ஆரணிக்கு சென்றனர்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர பேரவை செயலாளர் கே.வெங்கடேசன், எம்.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்