search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண் காப்போம் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
    X

    மண் காப்போம் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

    • 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்றும், நாளையும் நடக்கிறது
    • கார்த்திகேயன் எம்.எல்.ஏ.பேரணியை தொடங்கி வைத்தார்

    வேலூர்:

    உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தின் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் டிசம்பர் மாதம் இன்றும், நாளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக வேலூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வேலூர் கோட்டையிலிருந்து நேற்று தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு வேலூர் ஈஷா மைய ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    தன்னார்வலர்கள் மணிவண்ணன், சிவசங்கரன், உமா சந்திரன், சதீஷ், குணசீலன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர் . சைக்கிள் பேரணி வேலூர் கோட்டையில் இருந்து கிரீன் சர்க்கிள் சென்று அங்கிருந்து அண்ணா சாலை வழியாக அண்ணா நகரில் உள்ள ஈஷா மையத்தை அடைந்தது.

    மண் வள பாதுகாப்பு குறித்து சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மண் காப்போம் என்ற சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கத்தை தொடங்கி உள்ளார்.

    மார்ச் மாதம் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது மோட்டார்சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், உள்ளிட்ட பல ஐரோப்ப நாடுகளுக்கு பயணித்துள்ளார்.

    Next Story
    ×