என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bid"
- சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
- 6 பேரை தவிர மீதமுள்ளவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம், வள்ளிமலை அடுத்த மேல்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இன்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாக:-
மேல்பாடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி நாகதேவி ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.
கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஏல சீட்டில் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் என மொத்தம் 40 பேர் பணம் செலுத்தினோம்.
இதில் 6 பேரை தவிர மீதமுள்ளவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டனர். ஆனால் எங்கள் 6 பேருக்கு மட்டும் பணத்தை தராமல் அவர்கள் ஏமாற்றி வருகின்றனர்.
இது குறித்து கேட்டால் அவர்கள் மிரட்டுகின்றனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
- வியாழக்கிழமை தோறும் இ - நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடந்து
- கூடுதல் விலை, உடனடி தொகை உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை:
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வியாழக்கிழமை தோறும் இ - நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. இந்த வாரம் நடந்த ஏலத்தில் 11 விவசாயிகள், 65 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.70.10க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.69க்கும் விற்பனையானது.
விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் இ - நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடக்கிறது. கூடுதல் விலை, உடனடி தொகை உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு 94880 00163,94439 62834 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ - நாம் வாயிலாக மட்டை உரித்த தேங்காய் மற்றும் பாக்கு மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்தில் 112 தேங்காய் மூட்டைகள் வந்தன. தேங்காய் கிலோ 22.70 - 24.30 ரூபாயக்கு சென்றது. இதில் 19 விவசாயிகள் , 4 வியாபாரிகள் பங்கேற்றனர்.தொடர்ந்து இரண்டு பாக்கு மூட்டைகள் ஏலம் விடப்பட்டது. அதில் பாக்கு கிலோ அதிகபட்ச விலையாக, 350 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 170 ரூபாய்க்கும் விற்பனையானது.
மொத்தம் இரண்டு வியாபாரிகள், இரண்டு விவசாயிகள் பங்கேற்றனர். இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தெரிவித்தார்.
- மறைமுக ஏலத்தில் ரூ.6.64 லட்சத்துக்கு நிலக்கடலை வா்த்தகம் நடைபெற்றது.
- முதல் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,400 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது.
அவினாசி:
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.6.64 லட்சத்துக்கு நிலக்கடலை வா்த்தகம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு வரத்து குறைந்ததால் 215 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. குவிண்டாலுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,400 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6.64 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு மறைமுக ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் காங்கயம் பகுதியைச் சோ்ந்த 2 விவசாயிகள் 44 மூட்டைகள் (2,238 கிலோ) தேங்காய்ப் பருப்புகளை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.56 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.
இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.70க்கும், குறைந்தபட்சமாக ரூ.50க்கும், சராசரியாக ரூ.60க்கும் ஏலம் போனது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.
- மஞ்சள் ஏலம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
- ரூ 2.கோடியே 30 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6113 முதல் ரூ.7533 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.5584 முதல் ரூ.6443 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10312 முதல் ரூ.11699 வரையிலும் மொத்தம் 6000 மூட்டைகள் தொகை ரூ 2.கோடியே 30 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- குறிப்பிட்ட விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்து டோக்கன் வழங்கப்படும்.
- ஏலத்தை நிறுத்தவோ, தள்ளி வைக்கவோ துணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சையை அடுத்த ஈச்சங்கோட்டையில் உள்ள கால்நடை பெருக்கு பண்ணையில் கழிவு செய்யப்பட்ட பொலி காளைகள் 18 வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி மணி முதல் மதியம் 1 மணி வரை பண்ணை வளாகத்தில் ஏலமிடப்படுகிறது.
இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் டேவணித்தொகை ரூ.30 ஆயிரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் துணை இயக்குனர், கால்நடை உயிரின பெருக்கு பண்ணை, ஈச்சங்கோட்டை என்ற பெயருக்கு வரைவோலை எடுத்து அவற்றுடன் ரேஷன்கார்டு, ஆதார்கார்டு நகல் ஆகியவற்றுடன் வருகிற 16-ந் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் கொடுத்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும்.
வங்கி வரைவோலையில் குறிப்பிட்ட விண்ணப்ப தாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்து டோக்கன் வழங்கப்படும்.
16-ந்தேதி மாலை 5 மணிக்கு பிறகு ஏலத்தில் கலந்து கொள்ள பதிவுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது. ஏலம் முடிந்தவுடன் ஏலம் எடுத்த ஏலதாரர்கள் ஏலம் கோரிய முழு தொகைகையும் ரொக்கமாக செலுத்த வேண்டும்.
குடிபோதையில் இருப்பவர்கள் ஏலத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள முடியாது.
தவிர்க்க இயலாத காரணங்களால் ஏலத்தை நிறுத்தவோ, தள்ளி வைக்கவோ துணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கலெக்டர் விடுத்துள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், தஞ்சை மாவட்டம் நடுவூரில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் 186 எண்ணிக்கையிலான பலன்தரும் மரங்களான முந்திரி மரங்களின் மகசூலினை 2023-2024 ஆகிய ஒரு ஆண்டிற்கான அனுபவம் செய்வதற்கான பொது ஏலம் வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடுவூரில் உள்ள கால்நடை பண்ணையில் நடைபெற உள்ளது.
ஏலம் அரசு விதிமுறைகளின்படி நடைபெறும்.
ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வைப்புத்தொகையாக ரூ.10 ஆயிரத்துக்கு, தேசியமாயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலை, துணைஇயக்குனர், மாவடட கால்நடை பண்ணை, நடுவூர் என்ற பெயரில் எடுக்க வேண்டும்.
ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் பெயர் மற்றும் முகவரி தகவலுக்காக போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும். ஏல முன்வைப்புத்தொகை செலுத்தியவர்கள் மட்டுமே பண்ணைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
வரைவோலை 23-ந்தேதி காலை 20.20 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பெறப்படும்.
ஏலம் எடுத்தவர்கள் முழுத்தொகையையும் உடனே செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
- மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் வரும் 3-ந் தேதி பிற்பகல் 3 மணிக்குள் உரிய முகவரிக்கு வந்து சேர வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை தானியங்கி பொறியாளரின் செயல்முறை ஆணையின்படி கீழ்காணும் அரசு வாகனங்கள் கழிவு செய்யப்பட்டு பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரின் கட்டுப்பாட்டில் உள்ள பாபநாசம் வட்ட அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5000-க்க்கு காப்புத்தொகையினை மாவட்ட ஆட்சியர் தஞ்சாவூர் பெயரிலும், தஞ்சாவூர் மாவட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலரது (நகரம்) தஞ்சாவூர் அரசு சேவை இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5,000 ற்கான காப்புத்தொகையினை குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் தஞ்சாவூர் (நகரம்) பெயரிலும் எடுக்க வேண்டும்.தஞ்சாவூர் மாவட்ட குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகத்தில் (ஊரகம்) நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ5,000-க்கான காப்புத்தொகையினை தஞ்சாவூர் குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் (ஊரகம்) பெயரிலும்,
ஒரத்தநாடு குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5,000/ ற்கான காப்புத்தொகையினை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (ஓரத்தநாடு) பெயரிலும், தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை ரோடு, உழவர் சந்தை அருகில் உள்ள மாவட்டத்தொழில் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.10.000 ற்கான காப்புத்தொகையினை பொது மேலாளர் மாவட்டத் தொழில் மையம் தஞ்சாவூர் பெயரிலும், எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.5000-க்கான காப்புத்தொகையினை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தஞ்சாவூர்,பெயரிலும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்திற்கு ரூ.10.000-க்கான காப்புத் தொகையினை மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தஞ்சாவூர் பெயரிலும் ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் விலைப்புள்ளியுடன் வங்கி வரைவோலை மூலம் செலுத்த வேண்டும். மூடி முத்திரையிடப்பட்ட விலைப்புள்ளிகள் வரும் 3-ந் தேதி பிற்பகல் 3 மணிக்குள் உரிய முகவரிக்கு வந்து சேர வேண்டும்.
ஆர்வமுள்ள நபர்கள் வாகனத்தை நேரில் பார்வையிட்டு வாகனம் இருக்குமிடத்தில் உள்ள நிலைக்கு விலைப்புள்ளி அளிக்கலாம். விலைப்புள்ளிகள் 3-ந் தேதி பிற்பகல் 4 மணிக்கு வருகை புரிந்துள்ள ஏலதாரர்கள் முன்னிலையில் தொடர்புடைய அலுலகங்க ளில் தொடர்புடைய அலு வலர்களால் திறக்கப்படும்.
உறையின் மீதுஎந்த வாக னத்திற்கான விலைப்புள்ளி என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவேண்டும். ஏல அறிவிப்பு நாள் மற்றும் தேரத்தினை மாற்றி அமைத்திட மாவட்ட கலெக்டருக்கு முழு அதிகாரம் உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்