search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Billing"

    • எக்ஸ் வலைதள பக்கத்தில் மின்கட்டணம் செலுத்தியது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
    • மெழுகுவர்த்திகளுக்கு மாறி விடலாம் என்று நினைக்கிறேன்.

    அரியானா மாநிலத்தின் குருகுராம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்வீர்சிங். இவர் செயலி ஒன்றில் இணை நிறுவனராக பணியாற்றி வருகிறார். இவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மின்கட்டணம் செலுத்தியது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

    அதில், கடந்த 2 மாதங்களில் மொத்தமாக ரூ.45 ஆயிரத்து 491 ரூபாய் செலுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு மின் கட்டணம் செலுத்தியதற்கான ஸ்கிரின்ஷாட்டையும் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார். அதனுடன், அதிக மின் கட்டண உயர்வு காரணமாக மெழுகுவர்த்திகளுக்கு மாறி விடலாம் என்று நினைக்கிறேன் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

    அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பதிவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள் எப்படி இவ்வளவு கட்டணம் வந்தது என கேள்வி எழுப்பி உள்ளனர். சில பயனர்கள் தங்கள் வீடுகளுக்கும் அதிகப்படியான மின் கட்டணம் செலுத்துவது குறித்து பதிவிட்டு வருகின்றனர். 

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபர மேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கையை மாதந்தோ றும் எண்ணுவது வழக்கம். அதன்படி அறநிலையத் துறை உதவி ஆணையர் மேல்மலையனூர ஜீவானந்தம், விழுப்புரம் துணை ஆணையர் சிவலி ங்கம், செஞ்சி ஆய்வர் சங்கீதா, அறங்காவலர் குழுத் தலைவர் செந்தி ல்குமார் பூசாரி, ஆகியோ ர் முன்னிலையில் உ ண்டியல்கள் திறந்து எண்ண ப்பட்டன.

    இதில் 27 லட்சத்து ஆயிரத்து 917 ரூபாய் ரொக்கமும், 70 கிராம் தங்க நகைகளும், 240 கிராம் வெள்ளிப் பொருட்களும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள், இந்தியன் வங்கி ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • இதை உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள 2 கோடியே 37 லட்சம் மின் நுகர்வோர்கள் பாதிக்கப்படக்கூடிய வகையில் தி.மு.க. அரசு கடந்த செப்டம்பரில் மின் கட்டணத்தை உயர்த்தியது.

    தமிழகத்தில் 50 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ ஒரு கோடி பேர் வேலை செய்கின்றனர். கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வர முடியாமல் இருக்கும் நிலையில், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, தி.மு.க. அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர் போராட்டங்களை நடத்தினார். இந்த நிலையில் தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்சுவது போல் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள அனுமதியின்பேரில் அடுத்த மாதம் முதல் மின்கட்ட ணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.மின் கட்டணத்தை உயர்த்தி 9 மாதங்களே ஆன நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்த தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது. எதிர் கட்சியாக இருந்தபோது உயர்த்தாத மின் கட்ட ணத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். ஆனால் இன்று அவரது ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்துகிறார். இது நியாயமா? என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது மத்திய அரசு அழுத்தம் கொடுத்தும் நிதிசுமை இருந்த போதும் மின் கட்டணத்தை உயர்த்த வில்லை. அதனால் இந்த மின் கட்டணத்தை உயர்வு என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது இதை உடனடியாக கைவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் தள்ளுவண்டி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
    • சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை

    அழகர்கோவில் சித்திரை திருவிழா சிறப்புடன் நடைபெற்று முடிவடைந்தது. சித்திரை திருவிழா புறப்பாட்டின் போது கள்ளழகருடன் மதுரை சென்று வந்த தற்காலிக தள்ளுவண்டி உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவில் செயல் அலுவலர் ராமசாமி, இருக்கன்குடி மாரியம்மன் கோவில், செயல் அலுவலர் கருணாகரன், இந்து சமய அறநிலையத்துறை வடக்கு மண்டல ஆய்வாளர் கர்ணன் மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள், பக்தர்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது
    • , சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்காபக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.


    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது.  இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்க ளும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும், பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இறுதியில்(டிசம்பர் மாதம்) இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற இருப்பதால், கடந்த வாரம் 16-ந் தேதி உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது.

    இதில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். வாரம் இரு நாட்கள் என 4 நாட்கள் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. முடிவில், ரூ.2 கோடியே 7 லட்சம் பணமும், 150 கிராம் தங்கம், 1.5 கிலோ வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, உண்டியலில் கிடைக்க ப்பெற்ற காணிக்கை மற்றும் பணம் உரிய பாதுகாப்புடன் கோவில் நிர்வாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

    • அபிராமம் பகுதியில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • தனிநபர்கள் ஒரு மின் இணைப்பு எண்ணுக்கு ஆதாரை இணைக்க ரூ.50, ரூ.100, ரூ.150 என்று பாமர மக்களிடம் பணத்தை பறிக்கின்றனர்.

    அபிராமம்

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க டிசம்பர் 31-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    இதை சாதகமாக பயன்படுத்தி ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் உள்ள தனியார் கணினி மையங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் பாமர மக்களிடம் அடாவடி வசூல் செய்வதாக கூறப்படுகிறது.

    மின் இணைப்பு எண்ணு டன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின்கட்டணம் செலுத்த முடியும் என்றும், 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என்றும் பொதுமக்களை குழப்பி வருகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி தனியார் கணினி மையங்கள் வைத்துள்ள வர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கூடுதலாக பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், அபிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, இதை சாதகமாக பயன்படுத்தி அபிராமத்தில் உள்ள கணினி மையம் வைத்துள்ள தனிநபர்கள் ஒரு மின் இணைப்பு எண்ணுக்கு ஆதாரை இணைக்க ரூ.50, ரூ.100, ரூ.150 என்று பாமர மக்களிடம் பணத்தை பறிக்கின்றனர்.

    இதை கண்காணித்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.
    • போலீசார் தீவிர ரோந்து சென்று குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து திருவாதவூர் செல்லும் சாலையில் மில்கேட் அருகே முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. அந்தப்பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விஷேச நாட்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது உண்டு.

    சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தார். பின்னர் கோவில் வளாகத்தில் இருந்த 2 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். மறுநாள் கோவிலுக்கு வந்த பூசாரி உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் மேலூர் போலீசில் புகார் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜெய கஜேந்திரன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் உண்டியல் அருகே நின்று பணத்தை திருடும் காட்சி பதிவாகி உள்ளது. அதை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக இந்தப்பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே போலீசார் தீவிர ரோந்து சென்று குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×