என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BJD"
- பிஜு ஜனதா தளத்தின் மாநிலங்களவை எம்.பி. சுஜித் குமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
- கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் கட்சி மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்தவர் சுஜித் குமார். இவரை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டார்.
கட்சி விரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சுஜித்குமார், மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரிடம் கொடுத்தார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மாநிலங்களவை செயலகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், எம்.பி. பதவியை ராஜினாமா செய்த சுஜித்குமார் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
- இந்த முறை பிஜு ஜனதா தளம் எம்.பி.க்கள் பிரச்சனையை மட்டுமே பேசப்போவதில்லை.
- பாஜக தலைமையிலான அரசு ஒடிசா மாநில நலத்தை புறக்கணித்தால், போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
மக்களவை தேர்தலில் ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. சட்டசபை தேர்தலிலும் தோல்வியை சந்தித்தது. அந்த கட்சிக்கு 9 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளனர்.
இந்திய நாடாளுமன்றம் மக்களவை இன்று கூடியது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பதவி ஏற்று வருகின்றனர். ஜூன் 27-ந்தேதி மாநிலங்களவை கூட இருக்கிறது. இந்த நிலையில் நவீன் பட்நாயக் தனது கட்சி மாநிலங்களவை எம்.பி.க்களை சந்தித்து ஆலோசனை வழங்கினார். அப்போது மாநில நலன் குறித்து மாநிலங்களவையில் கடுமையான வகையில் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அக்கட்சிக்கான மாநிலங்களவை எம்.பி. தலைவர் சஸ்மித் பத்ரா கூறியதாவது:-
இந்த முறை பிஜு ஜனதா தளம் எம்.பி.க்கள் பிரச்சனையை மட்டுமே பேசப்போவதில்லை. பாஜக தலைமையிலான அரசு ஒடிசா மாநில நலத்தை புறக்கணித்தால், போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளாக நிலக்கடி சுரங்க ராயல்டி ஒடிசாவுக்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அந்த ராயல்டி கிடைக்கும் வகையில் கோரிக்கை வைப்போம். இதன் காரணமாக எங்கள் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமையான பங்கு குறைக்கப்பட்டு மக்கள் இழப்பை சந்தித்து உள்ளனர்.
பாஜகவுக்கு ஆதரவு கிடையாது. நாங்கள் எதிர்க்கட்சிகள் மட்டுமே ஒடிசா மாநிலத்திற்கான நலனை காப்பாற்றுவதற்கான எந்த எல்லை வரையும் செல்வோம். பாஜகவுக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. ஒடிசாவின் நலம் புறக்கணிக்கப்பட்டால் கடுமையான வகையில் எதிர்க்க வேண்டும் என நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாஜகவும் பிஜு ஜனதா தளமும் தனித்தனியாக போட்டியிட்டு வந்தாலும் பாஜகவுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்தது. தற்போது பாஜக கடுமையாக விமர்சனம் செய்து ஒடிசாவில் ஆட்சியை பிடித்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளது.
- பதவியேற்பின்போது ஒடிசா சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
- முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ள லஷ்மண் பக் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைகட்டி பட்நாயக்கிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் அம்மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்தது. 24 வருடமாக ஒடிசாவில் ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 147 இடங்களில் 78 இடங்களை பாஜகவும் 51 இடங்களை பிஜு ஜனதா தளமும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 14 இடங்களிலும், சிபிஎம் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர்த்து 3 சுயேட்ச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஒடிசாவின் புதிய முதல்வராக பாஜகவின் மோகன் சரண் மாஜி நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த முறை பதிவியேற்பவர்களில் 82 பேர் முதல் முறையாக எம்.எல்.ஏக்களாக பதியேற்பவர்கள் ஆவர்.
சட்டமன்றத் தேர்தலில் கன்டாபாஞ்சி மற்றும் கின்ஜிலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கின்ஜிலியில் வெற்றி பெற்ற நிலையில் கன்டாபாஞ்சில் பாஜக வேட்பாளர் லக்ஷ்மன் பக் என்பவரிடம் 16,334 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் பதவியேற்பின்போது ஒடிசா சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
அதாவது, நவீன் பட்நாயக் கின்ஜிலியின் எம்.எல்.ஏ வாக மேடையில் பதிவேற்றபின் இறங்கி நடந்து வரும்போது கன்டாபாஞ்சில் அவரை தோற்கடித்து முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ள லஷ்மண் பக் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைகட்டி பட்நாயக்கிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
உடனே பட்நாயக் ' ஓ நீங்கள் தான் என்னை தோற்கடித்தீர்கள்' என்று கூறியபடி அவரிடம் நலம் விசாரித்துவிட்டு அங்கிருந்து அகன்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஆயுத எழுத்து' படத்தில் பழம்பெரும் அரசியல்வாதியாக இருக்கும் பாரதிராஜாவும் முதல்முறையாக சட்டமன்றத்துக்கு வரும் சூர்யாவும் கிளைமாக்சில் சந்தித்து பேசும் காட்சியை தற்போது ஒடிசா சட்டமன்றத்தில் நடந்த சம்பவம் பிரதி செய்வதாக அமைத்துள்ளது என நெட்டிசன்கள் அபிப்பிராயப்படுகின்றனர். முன்னதாக நவீன் பட்நாயக் பதியேற்க சட்டமன்றத்துக்குள் வரும்போது பாஜகவினர் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
- நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
- நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் வி.கே.பாண்டியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. அங்கு இரு தேர்தலிலும் பிஜு ஜனதா தளம் கட்சி படுதோல்வி அடைந்தது. சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.
இதற்கிடையே, நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை என்று இந்த சர்ச்சைகளுக்கு ஒடிசா மாநில முன்னாள் முதல் மந்திரி நவீன் பட்நாயக் முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும் பேசிய அவர், "எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள். கடந்த 10 ஆண்டாக பல துறைகளில் வி.கே.பாண்டியன் சிறப்பாக பணியாற்றி உள்ளார். வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது.
நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் வி.கே.பாண்டியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வி.கே.பாண்டியன் கடும் உழைப்பாளி.கடந்த இரண்டு புயல் காலங்களிலும், கொரோனா காலத்திலும் அவர் செய்த சேவை மகத்தானது" என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, வி.கே. பாண்டியன் வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், "நவீன் பட்நாயக்கிற்கு உதவவே நான் அரசியலுக்கு வந்தேன். பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு என்மீதான விமர்சனங்கள் காரணமாக இருந்திருந்தால் தொண்டர்கள் அனைவரிடம் மன்னிப்பு கோருகிறேன். தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன்" என்று அவர் அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், சமீபத்தில் அரசு பொறுப்பை உதறிவிட்டு நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான தலைவராக பிஜு ஜனதா தளம் கட்சியில் வி.கே.பாண்டியன் உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
- எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள் என நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. அங்கு இரு தேர்தலிலும் பிஜு ஜனதா தளம் கட்சி படுதோல்வி அடைந்தது. சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.
இதற்கிடையே, நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநில முன்னாள் முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள்.
கடந்த 10 ஆண்டாக பல துறைகளில் வி.கே.பாண்டியன் சிறப்பாக பணியாற்றி உள்ளார். வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது.
நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் வி.கே.பாண்டியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வி.கே.பாண்டியன் கடும் உழைப்பாளி.
கடந்த இரண்டு புயல் காலங்களிலும், கொரோனா காலத்திலும் அவர் செய்த சேவை மகத்தானது.
தேர்தலில் மக்களின் முடிவை பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். ஜனநாயக நாட்டில் வெற்றி அல்லது தோல்வி என்பது மக்களின் கையில் உள்ளது. எனது உடல்நிலை சீராக உள்ளது. கடும் வெயிலும் ஒரு மாதமாக தேர்தல் பிரசாரம் செய்தேன் என தெரிவித்தார்.
ஒடிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியன், சமீபத்தில் அரசு பொறுப்பை உதறிவிட்டு நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒடிசாவில் 21 மக்களவை தொகுதியில் 17-ல் பா.ஜனதா வெற்றி பெறும்.
- 147 சட்டமன்ற இடங்களில் 75-ல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம்.
மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா இன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள பத்ராக் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சந்த்பாலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அமித் ஷா கூறியதாவது:-
ஜூன 4-ந்தேதி வரும்போது, நவீன் பாவு நீண்ட காலத்திற்கு முதல்வராக இருக்க முடியாது. அவர் முன்னாள் முதல்வராவார். பா.ஜனதா 21 இடங்களில் 17 மக்களவை தொகுதிகளில் வெற்றிபெறும். 147 சட்டமன்ற இடங்களில் 75-ல் பெற்றி பெற்று ஒடிசாவில் ஆட்சி அமைக்கும்.
தற்போது ஒடிசா இளைஞர்கள் அடுத்த மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்கிறார்கள். பா.ஜனதா ஆட்சி அமைத்த பிறகு, நாங்கள் தொழிற்சாலைகளை உருவாக்குவோம். அதன்பிறகு இளைஞர்கள் வேலைத்தேடி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படாது.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- ஒடிசாவில் நடைபெற்ற முதல் மூன்று கட்ட தேர்தலில் பா.ஜனதா ஏறக்குறைய மெஜாரிட்டியை பெற்றுள்ளது.
- பா.ஜனதா அரசு ஜூன் 10-ந்தேதி பதவி ஏற்கும். நவீன் பட்நாயக்கிற்கு வலது கையாக திகழும் 5T சேர்மன் வி.கே. பாண்டியனை தமிழ்நாட்டிற்கு அனுப்புவோம்.
ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும், மக்களவை தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. அங்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை மூன்று கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 4வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் ஒடிசாவில் ஜூன் 10-ந்தேதி பா.ஜனதா பதவி ஏற்கும். ஜூன் 11-ந்தேதி நாங்கள் பி.கே. பாண்டியனை தமிழ்நாட்டிற்கு அனுப்புவோம் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-
என்னுடைய கணிப்பின்படி, ஒடிசாவில் நடைபெற்ற முதல் மூன்று கட்ட தேர்தலில் பா.ஜனதா ஏறக்குறைய மெஜாரிட்டியை பெற்றுள்ளது. ஆட்சியமைக்க இன்னும் ஒருசில இடங்கள்தான் தேவை. ஜூன் 1-ந்தேதி அதுவும் நிரப்பப்படும்.
பா.ஜனதா அரசு ஜூன் 10-ந்தேதி பதவி ஏற்கும். நவீன் பட்நாயக்கிற்கு வலது கையாக திகழும் 5T சேர்மன் வி.கே. பாண்டியனை தமிழ்நாட்டிற்கு அனுப்புவோம்.
இன்று, ஒடிசா இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் வெளி மாநிலத்திற்கு புலம்பெயர்ந்து செல்கிறார்கள். மற்றொரு பக்கம் ஒரு லட்சம் அரசு வேலைகள் காலியாக உள்ளது. ஒடிசா இளைஞர்கள் உள்ளூர் தொழிற்சாலைகளில் வேலை செய்யவில்லை. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஒரு வருடத்திற்குள் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும்.
பிஜு ஜனதா தளத்தின் 5T-ல் ஒரு T-ன் அர்த்தம் டீம் ஒர்க். ஒடிசாவில் ஏதாவது டீம் ஒர்க் நடைபெறுகிறதா?. தேர்வான எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள், மந்திரிகள் அவர்களுடைய அதிகாரத்தை செயல்படுத்த முடியவில்லை. அங்கு ஒரே ஒரு டீம்தான் உள்ளது. பாண்டியன் மற்றும் பாண்டியன் மனைவிக்கு இடையிலான ஒரு T. அது தமிழ்நாட்டை குறிக்கும்.
ஒடிசாவில் கேபினட் அமைச்சர்கள் அல்லது எந்த அதிகாரிகளும் அதிகாரத்தை பெறவில்லை. பாண்டியன் மற்றும் பாண்டியன் மனைவி ஆகிய இரண்டு பேரும் அனைத்து அதிகாரத்தையும் கொண்டுள்ளனர். நவீன் பட்நாயக்கை பாண்டியன் பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர். ஒடிசா மக்களின் மரியாதை பெற அவர் அதில் இருந்து வெளியே வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
- முஸ்லீம் வாக்கு வங்கிக்காக இந்தியா கூட்டணி முஜ்ரா நடனம் ஆடுவதாக பீகாரில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
- வெயிலில் அலைந்து உரைகளை ஆற்றுவது அவரது மூளையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
முஸ்லீம் வாக்கு வங்கிக்காக இந்தியா கூட்டணி முஜ்ரா நடனம் ஆடுவதாக பீகாரில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
பீகாரில் பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற பேரணிகளில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "எஸ்.சி, எஸ்.டி ஓபிசி மக்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றை முஸ்லிம்களுக்குத் வழங்கும் இந்தியா கூட்டணியில் திட்டங்களை நான் முறியடிப்பேன். அவர்கள் அடிமைகளாக இருந்துகொண்டு தங்கள் வாக்கு வங்கியை தக்கவைக்க 'முஜ்ரா' நடனம் ஆடுகின்றனர் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமரின் கருத்துக்கு கட்டணம் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில், "இன்று, பிரதமரின் வாயிலிருந்து 'முஜ்ரா' என்ற வார்த்தையை நான் கேட்டேன். மோடிஜி, இது என்ன மனநிலை? நீங்கள் ஏன் ஏதாவது மருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது? அமித் ஷாவும், ஜேபி நட்டாவும் அவருக்கு உடனடியாக மோடிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். வெயிலில் அலைந்து உரைகளை ஆற்றுவது அவரது மூளையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலேவும் மோடியின் கருத்துக்கு கண்டம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், அந்த மனிதர் (மோடி) இப்போது 'முஜ்ரா' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு வந்துள்ளார். 10 வருட விளம்பரத்தால் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தில் மறைந்திருந்த மோடி தனது உண்மையான சுயரூபத்தை காட்டத் தொடங்கியுள்ளார். அவர் பயன்படுத்தியது மலிவான மொழி குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ஜேடி கட்சி எம்.பி மனோஜ் ஜா கூறுகையில், நேற்று வரை அவருடன் (மோடி) கருத்து வேறுபாடு இருந்தபோதிலும் நாங்கள் இப்போது அவரைப் பற்றி கவலைப்படுகிறோம். 'மட்டன், 'மங்களசூத்ரா', 'முஜ்ரா', இதுதான் ஒரு பிரதமர் பேசக்கூடிய மொழியா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
சிவசேனா காட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, பிரதமரின் உரையின் வீடியோ கிளிப்பைப் பகிரும்போது, "மோடி ஜி விரைவில் குணமடையுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இஸ்லாமிய பாரம்பரிய நடனமாக இருந்த முஜ்ரா காலப்போக்கில் மாறி, தற்போது கலியாட்டங்களுக்காக மாறுபட்ட வகையில் நடந்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- ஒடிசாவின் பூரி நகரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உள்துறை மந்திரி பங்கேற்றார்.
- தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா என கேள்வி எழுப்பினார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தின் பூரி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தத் தேர்தல் மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்குவதற்கான தேர்தல். இந்தத் தேர்தல் ஜெகந்நாதரின் பெருமையையும் சுயமரியாதையையும் மீண்டும் நிலைநாட்டுவதற்கான தேர்தல்.
நாட்டிலேயே மிகவும் வளமான, கனிம வளம் நிறைந்த மாநிலமாக ஒடிசா இருப்பினும் மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். மக்களின் ஏழ்மையைப் போக்க வேண்டுமானால் பிரதமர் மோடிக்கு வாக்களித்து அவரை மீண்டும் பிரதமராக்க வேண்டும்.
நவீன் பட்நாயக்குக்கு நீங்கள் 25 ஆண்டுகள் கொடுத்தீர்கள். 25 ஆண்டு கால அவரது ஆட்சியில் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு என அனைத்தும் தடம் புரண்டுள்ளன. நவீன் பாபுவின் அரசு போலி அரசு.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்குகிறார். நவீன் பாபு, அதன் மீது தனது ஸ்டிக்கரை ஒட்டி ஏழைகளுக்கு வழங்குகிறார்.
தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி ஒடிசாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் 2 ஆண்டுகளில் ரூ.50,000 வழங்கப்படும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும். மீனவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும். 1.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்.
ஒடிசா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க 75 இடங்களில் பா.ஜ.க.வை வெற்றிபெறச் செய்ய வேண்டும். ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி அமைக்க முடியுமா? ஒடிசாவின் முதல் மந்திரியாக வரக்கூடியவர், ஒடியா மண்ணைச் சேர்ந்தவராகவும், ஒடியா மொழி பேசக் கூடியவராகவும் இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
- ஒடிசாவின் பழமையான அடையாளங்களில் ஒன்றான புகழ் பெற்ற 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜகநாதர் ஆலயம் உள்ளது.
- கட்டாக்கில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் தமிழ்நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவின் பழமையான அடையாளங்களில் ஒன்றான புகழ் பெற்ற 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜகநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கருவூல புதையல் அறை என்று அழைக்கப்படும் ரத்ன பண்டர் உள்ளது. ரத்னா பண்டர் பல நூற்றாண்டுகளாகப் பக்தர்கள் மற்றும் முன்னாள் மன்னர்களால் வழங்கப்பட்ட தெய்வங்களின் விலைமதிப்பற்ற ஆபரணங்களை உள்ளன.
இது கடைசியாக ஜூலை 14, 1985 இல் திறக்கப்பட்டது. இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டில், அறையைத் திறக்குமாறு ஒடிசா உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் அறையின் சாவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை, கடந்த 6 ஆண்டுகளாக அறையின் சாவி கிடைக்காதது மாநிலம் அளவில் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது.
இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக நேற்று (மே 20) ஒடிசா சென்ற பிரதமர் நரேந்திர மோடி பூரி ஜெகநாதர் கோவிலில் வழிபாடு செய்தார். பின்னர் கட்டாக்கில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் தமிழ்நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
அங்கு நடைபெற்ற பேரணியில் மோடி பேசுகையில், "முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜேடி ஆட்சியில் பூரி ஜெகநாதர் கோவில் பாதுகாப்பாக இல்லை. கடந்த 6 ஆண்டுகளாக ரத்ன பண்டர்(கருவூல அறை) சாவிகள் காணாமல் போய்விட்டன. ரத்ன பண்டரின் காணாமல் போன சாவிகள் பற்றி ஒடிசா முழுவதும் அறிய விரும்புகிறது, ஆனால் பிஜேடி அதை மூடி மறைகிறது.
பிஜேடியின் மௌனம் இந்த விவகாரத்தில் மக்களின் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. ரத்ன பண்டரின் சாவி தமிழகத்துக்கு சென்றுவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். அதைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பியது யார்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், பிஜேடியின் முக்கிய தேர்தல் வியூகதை வகுப்பவருமான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியனை மறைமுகமாக மோடி குறிப்பிட்டுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். வி.கே.பாண்டியனை விமர்சிக்க பொதுப்படையாக 'தமிழ்நாடு' என குறிப்பிட்டு மோடி மீண்டும் வெறுப்புப் பேச்சில் ஈடுபட்டுள்ளார் என்று கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஒடிசாவில் பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
- ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சிக்காலம் ஜூன் 4-ந்தேதியுடன் காலாவதியாகிவிடும்- பிரதமர் மோடி
- நவீன் பட்நாயக் ஜூன் 9-ந்தேதி 6-வது முறையாக ஒடிசா மாநில முதல்வராக பதவி ஏற்பார்- வி.கே. பாண்டியன்
ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்வராக இருந்து வருகிறார். ஒடிசாவில் பா.ஜனதாவும், பிஜு ஜனதா தளம் கட்சியும் இணைந்து போட்டியிடுவதாக இருந்தது. தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நிலவியதால் தனித்து போட்யிடுகின்றன.
ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி இரண்டு முறை ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். பெர்ஹாம்பூர் மற்றும் நபரங்பூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும்போது, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சிக்காலம் ஜூன் 4-ந்தேதியுடன் காலாவதியாகிவிடும்" என்றார்.
ஜூன் 4-ந்தேதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அன்றைய தினம்தான் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவும் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதை வைத்துதான் பிரதமர் மோடி அவ்வாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக நவீன் பட்நாயக்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் "பா.ஜனதா நீண்ட நாட்களாக பகல் கனவு காண்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே. பாண்டியனிடம், இந்த முறை ஒடிசாவில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் எனக் கூறுகிறதே? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு வி.கே. பாண்டியன் கூறுகையில் "நவீன் பட்நாயக் ஜூன் 9-ந்தேதி காலை 11.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள் 6-வது முறையாக ஒடிசா மாநில முதல்வராக பதவி ஏற்பார்" என்றார்.
- ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைமையில் நவீன் பட்நாயக் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
- பிஜு ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அரிந்தம் ராய் கூறியுள்ளார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி நவீன் பட்நாயக் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகுவதாகவும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் விலகுவதாகவும் அரிந்தம் ராய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அரிந்தம் ராய் அக்கட்சியின் நிறூவனரான நவீன் பட்நாயக்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் திடீரென அக்கட்சியில் இருந்து விலகியிருப்பது ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்